Google+ Followers

Pages

Wednesday, December 12, 2012

சிங்கப்பூர் 8

அடுத்த நாள் திங்க  கிழமை, மகன் ஆபீசிலேந்து வந்ததும்  வெளில கிளம்புன்னான்.எல்லா இடங்களிலும் சனி ஞாயிறுகளில் கூட்டம் நிறையா இருக்கும் நாம வீக் டேஸ் ல போனா கூட்டம் இருக்காது. ஸோ இன்னிக்கு சிங்கப்பூர்ஃப்ளையர்   போலாம்னான். நாங்க இருக்கும் இடத்லேந்து ரொம்ப
                                 
தள்ளிதான் இருந்தது. ட்ரைன், பஸ் எல்லாம் வேனாம் டாக்சிலயே போலாம்னான்.20- நிமிஷம் ஆச்சு அங்க போயிச் சேர. வழில பெரிய டன்னல் வழியா டாக்சி போனப்போ ரொம்ப நல்லா இருந்தது. அந்த ஃப்ளையர்
                                           
இருக்கும் இடம் நிக்கொல் ஹைவேன்னு சொல்ரா. சுற்றிவர கலாங்க் ரிவர்னு
                             
ஒரு நீர் நிலை இருக்கு. கொஞ்ச நேரம் அங்க உக்காந்து வேடிக்கை பாத்தோம். அதுக்கு எதிர் திசைல ஒரு த்யேட்டர் டோம் ஷேப்ல இருந்தது. அதில் எதானும்
லைவ் ஷோ நடந்துகிட்டே இருக்குமாம். மரினா பே  ஸாண்ட்ன்னு
                           
பிரும்மண்டமா ஒரு ஹோட்டலும் இருக்கு.எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு உள்ள போயி டிக்கட் எடுக்க போனோம்.
                                         
வயசானவங்களுக்கு,குழந்தைகளுக்கு கன்ஸஷன் டிக்கட் தராங்க.சீனியர் சிட்டிசன்னு என்னபாத்ததுமே டிக்கெட் தந்தாங்க எந்த ஐ,டி, ப்ரூபும் கேக்கலே.
வயசானவங்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல பாதுகாப்பு கொடுத்து கவனிச்சுக்கராங்க. இது ரொம்ப நல்ல விஷயம் இல்லியா?
சிங்கப்பூரின் மிகப்பெரிய டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் இந்த ஃப்ளையர். ராட்சச
                           
ஜயண்ட் வீல் சைசுல இருக்கு. காப்ஸ்யூல் சைசுக்கு கூண்டு கூண்டா 100-கூண்டுகளுக்கு மேலே இருக்கும்போல இருக்கு. மிக மிக மெதுவாக மூவ் ஆகிட்டே இருக்கு.
                                     
 நாங்களும் உள்ள போனோம். நகருவதே தெரியாம சுத்துது. மேலே போகுதுன்னு தெரியவே இல்லே. பக்கத்ல இருக்கும் பில்டிங்குகள் ரோட்டில் போகும் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சின்ன சைசில் மாறும் போது தான் மேலெ போயிகிட்டு இருக்கோம்னு தெரியுது.ஒரு கூண்டுக்குள்ள சுமாரா 20-பேரிலிருந்து 25-பேரு வரைக்கும் அலவ் பன்ராங்க. எல்லாரும் கையில் காமெரா சகிதம் கிளிக்கிட்டே இருந்தாங்க. சூப்பர் அழகு. மேலே இருந்து

                   
சிங்கப்பூரின் அழகைக்காண அவ்வளவு நல்லா இருந்தது.டூரிஸ்டுகளை வரவழைக்க நிறையவே பாடு படராங்க. நல்லா இருட்டாயிட்டு. ரோடில் போகும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் அந்த நேரம் பாக்க எப்படி இருந்தது தெரியுமா ரோடு பூராவும் யாரோ வைரமும், வைடூரியமும்
  மாணிக்கமும் வாரி இறைத்திருப்பதைப்போல ஒரே ஒளி வெள்ளம்தான்.கலாங்க் ரிவரில் ஃபெர்ரி போட்டுகள் ஓடிகிட்டே இருக்கு.
ஒவ்வொரு விஷயத்தையும் கவனம் எடுத்து மிகச்சிறப்பாக செய்திருக்காங்க.இப்படி அரை மணி நேரம் சுத்தி காட்டுராங்க.

38 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையாய் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்து பகிர்ந்திருக்கிறீகள் அம்மா ..

Asiya Omar said...

ரிலாக்ஸ்டாக இப்படி ரசித்துப் பார்க்க வேண்டிய ஊர் லஷ்மீமா.நல்ல பகிர்வு.

Mahi said...

சுடச் சுடப் பதிவு போட்டு தாக்கறீங்க போங்க! :)
நல்லா இருக்கு சிங்கப்பூர் ஃப்ளையரும் உங்க எழுத்தும் லஷ்மிம்மா!

வடுவூர் குமார் said...

பல புதிய கட்டிடங்கள் வந்திருப்பது படங்களில் இருந்து தெரிகிறது.இந்த Flyer கட்டணம் ஆரம்ப காலங்களில் மிகவும் அதிகமாக உணரப்பட்டது.

ஸாதிகா said...

சிங்கை போய் நல்லா பொறுமையா படம் எடுத்து பகிநர்ந்துகொண்டு இருக்கீங்க லக்ஷ்மிம்மா.கட்டுரையும் சுவாரஸ்யமாக போய்க்கொண்டுள்ளது.தொடருஙக்ள்.

கோமதி அரசு said...

10 நாட்களாய் ஊரில் இல்லை. உங்கள் சிங்கப்பூர் அனுபவங்களை சேர்த்து வைத்து படிக்கிறேன். எல்லாம் அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.
படங்கள் எல்லாம் பார்ப்பது நாங்களும் அதை பார்ப்பது போலவே உள்ளது.

இளமதி said...

நீங்கள் ரஸித்ததை படங்களுடன் அருமையாய் எழுத்துக்களிலும் தரும்போது நாங்களும் போய்ப் பார்க்கணும்னு தோன்றுகிறது...

துளசி கோபால் said...

அருமை. நல்லா விவரிச்சு இருக்கீங்க.

அந்த வைரமும் வைடூரியமும் !!!! ஆஹா.....

நான் ஸேண்ட்ஸ் மாடிக்குமட்டும் போய் வந்தேன்:(

சேக்கனா M. நிஜாம் said...

அருமை... அருமை...

புதியவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டக்கூடிய பயணத்தொடர !

தொடர வாழ்த்துகள்...

கோவை2தில்லி said...

சிறப்பான பகிர்வு. தொடருங்கள் அம்மா.

கோவி.கண்ணன் said...

எங்க ஊருக்கு பற்ரிய பதிவுகள் சிறப்பு, 7 பகுதியையும் ஒரு மூச்சில் படித்தேன்.

பாராட்டுகள், எங்க வீடு செங்காங்கிலிருந்த்து பக்கம் பாசரிஸ்.

athira said...

ஆஹா சூப்பர்.. நீங்களும் வரவர இன்னும் அழகாக வாறீங்க லக்ஸ்மி அக்கா...

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. பகிர்வு சுவாரஸ்யம். தொடருங்கள்.

Rajalakshmi Narayanan said...

Mami unkaloda 8 singapore payana katturai padichrn ellaralum lvvalavu atumaya sollamudiyathu unkalukku kadavul kudutha varaprasatham meanmelum thodarattum vakzhthukkal

Rajalakshmi Narayanan said...

Mami unkal8 singapore payana katturai pathen
Romba arumaya irunthathu nera pesaramathiriye
Ezhuthi irukkel unkal payanam thodarattum
Vazhthkkal

Lakshmi said...

இராஜ ராஜெஸ்வரி வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

ஆஸியா ஆமா பார்க்க நிறைய இடங்கள் இருக்கு எனக்கு நேரம்தான் கம்மி அடுத்தவாரம் கிளம்பி பாம்பே போயிடுவே.

Lakshmi said...

மஹி வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

Lakshmi said...

வடுவூர் குமார் இப்பவும்ஃப்ளையர் கட்டணம் அதிகமாக்கிட்டேதான் போறாங்க. ஆனாலும் கூட்டம் குறையவே மாட்டெங்குது

Lakshmi said...

ஸாதிகா ரசனைக்கு நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

இளமதி வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

துளசி கோபால் எனக்கு ஸேண்ட்சுக்கு போக டைம் கிடைக்கலே.

Lakshmi said...

சேக்கனா.எம். நிஜாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவி கண்ணன் நீங்களும் இங்கதானா.ஆஹா எத்தனை பேரு இங்க இருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.

Lakshmi said...

அதிரா எல்லாரும் பதிவு நல்லா இருக்குனு சொல்ராங்க நீ நான் நல்லா இருக்கேன்னு சொல்ரியே? ஹ ஹ ஹ

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாமி உங்களை இங்க பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அடிக்கடி வாங்கோ

துளசி கோபால் said...

நேரம் இருந்தால் இங்கே பாருங்க

http://thulasidhalam.blogspot.co.nz/2011/10/blog-post_31.html

Lakshmi said...

துளசி கோபால் போயி பார்க்கிரேம்மா.

அமைதிச்சாரல் said...

செலவில்லாம சிங்கப்பூரைச் சுத்திக்காமிச்சதுக்கு நன்றி லக்ஷ்மிம்மா.

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றிம்மா

மாதேவி said...

பயணம் சிறப்பு. தொடருங்கள்.

rajalakshmi paramasivam said...

லஷ்மி அம்மா,

சிங்கப்பூரை சுற்றிப் பார்த்த அனுபவம் எனக்கும் கிடைத்தது.போட்டோஸ்உடன்
பதிவு இருந்தது, நன்கு விளங்க வைத்தது.giant wheel போட்டோவுடன் போட்டிருந்தது அருமை.
பகிர்விற்கு நன்றி.

ராஜி.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

ராஜலஷ்மி பரமசிவம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

Nandini Sree said...

உங்கள் பயண கட்டுரை மிகவும் அருமை..எழுத்தாளர்கள் சுபா எழுதும் “கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம்” உங்களை, உங்களுக்குள்ளேயே பயணப்பட வைக்கும்...http://manam.online/Konjam-Punidham-Konjam-Manidham-3

என்னை ஆதரிப்பவர்கள் . .