ஒரு சீரியஸ் பதிவு போட்டா பின்னாடியே ஒரு மொக்கை போடனுமே.
தாணாவிலிருந்து அம்பர்னாத், லோக்கல் வண்டியில் வந்துகொண்டி
ருக்கும்போது லேடீஸ் கம்பார்ட்மெண்டில் நிறைய குட்டி, குட்டி பொருட்
கள் விற்கும் சேல்ஸ்மேன், உமன் வருவார்கள். வீட்டு உபயோக பொருட்கள்
கடைகளில் கூட கிடைக்காது, அவ்வளவு வெரைட்டிகள். லேடீசுக்கு காது
தோடுகள், வளையல்கள், மாலைகள், ப்ளாஸ்டிக்கிலும் மெட்டலிலும் பல
வெரைட்டிகள் இருக்கும். விலையும் மிக, மிக, மலிவு. ஆரம்ப விலையே 5- ரூபாதான்.இப்ப எல்லாமே யூஸ் &;த்ரோ கலாச்சாரம்தானே. நல்ல வியாபாரம் ஆகும்.
குஜராத்திக்காரர்கள் பெரிய அலுமினிய டப்பாக்களில் சமோசா, டோக்ளா, டேப்ளாஎன்று வித, விதமாக ஸ்னாக்ஸும் சூடாக கொண்டு வருவா. வேலையில் இருந்துகளைத்துப்போயி, பசியுடன் வருபவர்களுக்கு மிகவும் தேவையாகவும் இருக்கும்.
லோக்கல் வண்டி அனுபவம் மிகவும் ரசனை மிக்கதாக இருக்கும்.(எனக்குமட்டும்)தினசரி கூட்டத்தில் போய் வருபவர்களுக்குத்தானே அதிலுள்ள கஷ்டங்கள் தெரியும்.வண்டி கல்யாண் தாண்டியதும், அடுத்து விட்டல் வாடின்னு ஒரு ஸ்டேஷன் வந்தது.
எண்ட்ரன்ஸ் கிட்ட நிறைய தமிழ் பூக்காரிகள் பூ மாலை கட்டிக்கொண்டு உக்கார்ந்திருந்தனர் எல்லாருமே ஜோபர்பட்டி வாலான்னு சொல்லும் குடிசை வாசிகள் தான்.அதில். ஒரு பத்து வயது பையன் அழுக்கு, கிழிந்த ட்ராயரும், கிழிச சட்டையும்போட்டுன்டு விளையாடிக்கொண்டிருந்தான். தன் அம்மாவிடம் ஏன் ஆத்தா, விட்டல்னு ஆம்புளைப்புள்ளை பேரா, பொம்புளைப்புள்ளைப்பேரான்னு கேட்டான். அவ அம்மா, ஏடா நீ கிருக்கனா?
பொட்டைப்புள்ளைக்கு யாரானும் விட்டல்னு பேரு வப்பாங்களாடா? என்றாள்.
உடனே அந்த புத்தி சாலி வாண்டு போ ஆத்தா, அப்ப இந்த ரயில்வேகாரந்தான் கிருக்கன்.விட்டல் ஆம்புள்ளைப்பேருன்னா, இந்தஸ்டேஷனுக்கு விட்டல் வாடான்னுதானே பேருவச்சிருக்கனும். ஏன் விட்டல் வாடின்னு பேர் வச்சாங்க்ன்னு கேக்குது.
அடுத்து 5 வயது பேரனுக்கு கதை சொல்லும்பாது, காக்கா, தாகத்தால தவிக்கும்போது, ஒருஜாடில கீழ கொஞ்சூண்டு தண்ணி இருந்தது, பக்கத்ல உள்ள கற்களைப்பொறுக்கி ஜாடில
போட்டுது, தண்ணி மேல வந்துது, காக்கா குடிச்சுட்டு பறந்து போச்சுன்னு சொன்னேன்.கொஞ்ச நேரம் யோசனை பண்ணிட்டு, பாட்டி,காக்கா கஷ்டப்பட்டு ஓரொரு கல்லா பொறுக்கிஏன்போடனும்? பக்கத்ல உள்ள ஜூஸ்கடைல போயி ஒரு ஸ்ட்ரா கொண்டுவந்தா ஈசியா
தண்ணிகுடிக்கலாமே. டி.வி. ஆட் லகூட அப்படித்தானே காட்டினான்னு கேக்கரான்.
அடுத்து அவனுக்கு கஜேந்த்ர மோட்சம் கதை சொன்னேன். யானை தண்ணீல இறங்கினோடனமுதலை அதோடு காலை பிடிச்சுடுத்து, யானை ஆதி மூலமேன்னு ஸ்வாமியை ஹெல்ப்புக்குகூப்பிட்டது என்ரேன்.ஏன், பாட்டி, யானை எவ்வளவு பெரிய அனிமல். முதலை யானையைவிடசின்ன அனிமல்தானே? அதுவும் யானையோட ஒரு காலைத்தானே முதலை பிடிச்சுது.பாக்கிமூணுகால் ஃப்ரீயாத்தானே இருக்கு, அந்த கால்களால முதலையை ஒரு கிக் விட்டா முதலைஓடியே போயிடும் தானே? எதுக்கு ஸ்வாமியை அனாவசியமா டிஸ்டர்ப் பண்ணனும்? என்று
கேக்கரான். அவனுக்கு ஏதானும் பதிலைச்சொல்லி சம்மளிக்க நாம நிறையா படிக்கனும். அப்படிஇல்லை, யானைக்கு தரையில் பலம் ஜாஸ்தி, முதலைக்கு தண்ணில பலம் ஜாஸ்தின்னு என்னமோசொல்லி சமாளித்தேன்.
ஐயப்பா கோவிலுக்கு கூட்டினு போனேன். கோவில்லேந்து வீடு வந்ததும் திரும்ப கேள்வி ஆரம்பம்.பாட்டி, எல்லா உம்மாச்சியும் நின்னுண்டு, இல்லனா உக்காந்துண்டுதானே ப்ளெஸ்ஸிங்க் பண்ணுவா.ஐயப்பா மட்டும் ஏன், யாரோ பனிஷ்மெண்ட் கொடுத்ததுபோல முட்டிக்கால் போட்டு உக்காந்திருக்கா?
இதுக்கு என்ன பதில் சொன்னா சரியா இருக்கும். யோகால இது ஒரு ஆசனம் என்று சமாளித்தேன்.
Tweet | |||||
31 comments:
Me the First
ஒரு டூர் போன மாதிரியே இருக்கு..
கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்...
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html
http://sakthistudycentre.blogspot.com/2011/01/2.html
thank you sakthi.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க அம்மா ..
நல்ல பதிவு ...
// லோக்கல் வண்டி அனுபவம் மிகவும் ரசனை மிக்கதாக இருக்கும்.(எனக்குமட்டும்) //
அதனால்தான் ஒரு நல்ல ரசனையுள்ள அம்மா (பதிவர்) எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.
நல்ல பகிர்வும்மா. என் மகள் கூட காக்கா ஒரு குட்டி ஏணியை பானைக்குள் இறக்கி தண்ணீர் குடித்திருக்கலாமே என்பாள்.
உங்களோட சேர்ந்து நானும் பயணீத்தேன்
நல்ல அனுபவம்..
இந்தமாதிரி நெறைய கேள்விகளும், பதில்களும் எழுதுங்க..
எங்களுக்கு பயன்படும்.. குழந்தைகளோட கேள்விகள் அப்படி இருக்கு..
சமயத்தில் குழந்தைகள் குரு பீடம் ஏறிக் கொள்ளும்! நம்மால் தான் சமாளிக்க இயலாது!
சமாளிஃபிகேஷன் அருமை.நல்ல பகிர்வு ,ரசித்தேன்.
ஹஹாஹ் இந்தக் காலத்து குழந்தைகளுக்கு பதில் சொல்ல முடியாது
நல்லவேளை திவ்யா இந்தக் கேள்வி எல்லாம் கேட்கலை
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அரசன்
தேங்க்யூ மாணிக்கம்.
கோவை2தில்லி எல்லா குழந்தைகளுமே வெரி, வெரி ஸ்மார்ட்தான்
ஆமி நான் போகும் இடம் எல்லாம் கூடவே வாங்க. மஜா வரும்.
ஆமாம், மாதவன் குழந்தைகள் கேக்கும் கேள்விகளை சமாளிக்கவே முடியறதில்லைதான்
ராம மூர்த்தி, ரொம்பகரெக்டா சொன்னிங்க.
ஆஸியா, வருகைக்கு நன்றிம்மா.
கார்த்தி, ரொம்ப சந்தோஷப்படாதீங்க. அவ்ளுக்கு இப்பதானே மூணு வயசாரது. இன்மேலதான் கேள்வி கேக்கவே ஆரம்பிக்கப்போரா.அப்ப தெரியும்.
குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி புரியவைப்பதே ஒரு பெரிய கலை.
நல்ல பகிர்வுக்கு நன்றிம்மா!!
அவ்வை, முருகன் பேசிய கதை போல உள்ளது அம்மா.
//இதுக்கு என்ன பதில் சொன்னா சரியா இருக்கும்.//
அஹ்ஹஹா...ஹா...ஹா...!
ரொம்ப நல்லா இருந்தது...!
எனக்கும் மும்பை லோகல் ரயில் பயணம் பரிச்சயம் தான்...! அதுவும் நீங்கள் பகிர்ந்த ரூட் தான்...! டிட்வாலா-தாதர்...! இப்போது நினைத்தால் மலைப்பா இருக்கு, அந்த கூட்டத்துல மூன்று வருஷங்கள் எப்படி பயணித்தோம்'ன்னு.
குழந்தைங்க கேள்வி ஞாயமானதே...!!
நமக்கு பதில் தெரியல...அது தான் உண்மை...!
ஆனால் பிற்பாடு குழந்தைகள் இவ்வாறு கேள்வி கேட்பதை நம்முடைய சுடு வார்த்தைகளால் நிறுத்தி விடுகிறோம்..! நாம் நிறுத்துவது அவர்கள் கேள்வியை மாத்திரமல்ல...கேள்வித்திறனையும்தான்...!
வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பிரபு அப்படியா சொல்ரீங்க.?
சதீஷ், அதனாலதான் குழந்தைகள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு கூடியமானவரை யோசித்து சரியான பதிலகள் தேடிச்சொல்லிடுவேன்.
நல்ல அனுபவம்
குழந்தைகளிடம் இருந்து கற்பதற்கு நிறைய உண்டு
ஆமா யாதவன் இப்ப குழந்தைகள் எல்லாருமே வெரி, வெரி ஸ்மார்ட்டா இருக்காங்க.
நொறுக்ஸ் நல்லா ருசிகரமா இருக்கு லஷ்மிம்மா! உங்க பேரன் நல்ல புத்திசாலி! :)
மஹி, வருகைக்கு நன்றிம்மா.என்எபேரன் மட்டுமில்லை இந்தக்கால வாண்டுக்கள் எல்லாருமே வெரி, வெரி ஸ்மார்ட் தான்.
லஷ்மி அக்கா உங்கல் லோக்கல் வண்டி அனுபவம் மிகவும் நல்ல இருக்கு,
இந்த காலத்தில் குழந்தைகள் எல்லாம் படுசுட்டி, கேள்வி மெலே கேள்வி தான்
ஆகா வண்டியில் காது தோடு, டோக்ளா, சமோசா அதுவும் சுட சுட ,
ம்ம்ம்
ஜலீலாகமல் வருகைக்கு நன்றிம்மா, நீங்க லோக்கல் வண்டில போனதே இல்லையா? நான் சொல்லி இருப்பது மிகவும் கம்மிதான்.
Post a Comment