அதுஒரு தீபாவளி நாள். (35 வருடங்கள் முன்.) என்புகுந்த வீட்டில் கணவர்
மாமியார், மாமனார் மூவருக்குமே காஃபி குடிக்கும் பழக்கம் மிக, மிக அதிகம்.
அதுவும் பில்டர்காஃபிதான் வேனும். அதனால வீட்ல எந்த நேரமும் டிகாஷன்,
பால் ரெடியா இருந்துகொண்டே இருக்கும். காலை5 மணிக்கு பால்வாங்கி வந்ததும் எல்லாருக்கும் ஃப்ரெஷ்ஷா முதல்காஃபி. பிறகு குளித்து வந்ததும் காலை டிபனுடன்ஒருகாஃபி.11மணிக்கு ஒருத்டவை. மத்யான சாப்பாட்டுக்கு தட்டுவைக்கும்போது டம்ளரில் தண்ணீருக்குபதில் காஃபிதான்.திரும்ப 3 மணிக்குஒருதடவை.7மணிக்குஒருதடவை, இரவு சாப்பாட்டுடனும் ஒருகாஃபி என்று தண்ணீருக்குபதில் காஃபியாகவேகுடிக்கும் இவர்களின் பழ்க்கம் எனக்கு ரொம்பவே வேடிக்கையா இருந்தது.
பிற்ந்தவீட்டில் நான்காஃபியே குடிக்காமல் வளர்ந்தவள்.இவர்கள் என்னைக்கேலி பேசுவார்கள். காஃபி பிடிக்காம ஒரு பொண்ணா? அது எப்படி பிடிக்காமப்போகும்?என்றெல்லாம் என்னைக்கேலி செய்வார்கள். நமக்காக அவர்கள் பழக்கத்தை ஏன்மாத்தனும் என்று அவர்கள் எப்ப கேட்டாலும் கலந்து கொடுத்துவிடுவேன். அன்றுஅந்த தீபாவளி தினத்தன்று வழக்கம்போல அதிகாலை கங்கா ஸ்னானம் எல்லாம்முடிந்து,பட்சணங்கள்,இட்லி,சட்னி, காஃபி முடிந்து சமையல் வேலைகளைத்தொடங்கினேன். அன்று 4,5 ஃப்ரெண்ட்ஸ்களை சாப்பாட்டுக்கு கூப்பிட்டிருந்தார். நாங்க
வீட்ல 9 பேர், விருந்தாளிங்க 6பேர். மொத்தம் 15-பேருக்கு சமையல் பண்ண வேண்டிஇருந்தது. அப்பல்லாம் இப்பமாதிரி, மிக்சி, க்ரைண்டர்,ஃப்ரிட்ஜ் என்கிர வசதிகள் எல்லாம்இருந்ததில்லை. அம்மியும், ஆட்டுக்கல்லும்தான். கேஸ் அடுப்பும் வாங்கி இருக்கலை.
கெரசின் ஸ்டவ் தான். இப்பவாவது பரவால்லை. 60-வது வருஷம் கல்யாணமாகி வந்தப்போகுமுட்டி,கரி அடுப்புதான் சமையல். அதுக்கு கெரசின் ஸ்டவ் பரவால்லை.தீபாவளிப்பண்டிகை ஆதலால் வடை, பாயசம், பொரியல்,கூட்டு, அவியல்,சாம்பார், ரசம்பொரிச்ச அப்பளம் என்று விஸ்தார சமையல்.கணவர் குழந்தைகளைக்கூட்டிக்கொண்டுகோவில், ஃப்ரெண்ட்ஸ்வீடு போயிட்டுவரேன்னு போயிட்டார். மாமனார் இல்லை.மாமியார்ஒருவேலையும் பண்ண்மாட்டாங்க. கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம்.எப்பவும் படுத்துண்டேதான்இருப்பாங்க. அப்பப்போ லஷ்மி காஃபி தாயேன்னு குரல் கொடுத்துண்டே இருப்பா. நானும்
அலுத்துக்காம சலிச்சுக்காம கேக்கும்போதெல்லாம் காஃபி கொடுத்துக்கொண்டே இருப்பேன்.காலை ஹெவி ப்ரேக் ஃபாஸ்ட் ஆயிடுத்து, லஞ்சும் ஹெவியாதான் இருக்கும். 11 மனிக்குகாஃபி கொடுத்துட்டு சமையல் வேலைகளில் பிசி ஆயிட்டேன்.
அன்னிக்கு மாமியார் 12 மணிக்கு திரும்பவும் காஃபி கேட்டா. இன்னிக்கு சாப்பாடு பலம்மா இருக்கு இல்லியா சமையல் ஆச்சு, நீங்க முதல்ல சாப்பிடுங்கோ. அவர்கள் எல்லாம் வரதுக்குநேரமாகும்.உங்களுக்குபசி தாங்காதுன்னு சொல்லி இலைபோட்டு சாப்பாடு பரிமாறினேன்.
சரின்னு சாப்பிட உக்காந்தாங்க. நல்லா ரசிச்சு சாப்பிட்டாங்க. லஷ்மி இன்னம்கொஞ்சம் போடுஇன்னம்கொஞ்சம் போடுன்னு கேட்டூட்டே நிறையாவேசாப்பிட்டாங்க. போதும்னே சொல்லமாட்றா.15 பேருக்கு பண்ணிவச்ச சாப்பாடு அனேகமா எல்லாமே காலி. எனக்கோ ஆச்ச்ர்யம், பயம் எல்லாம்எப்படி இவ்வளவு சாப்பிடறா.இப்படி எல்லாம் எப்பவுமே சாப்பிடமாட்டாளே. இன்னிக்கு என்னாச்சுபோறும்மா எழுந்துகை அலம்ப போங்கோன்னு சொன்னாலும் எழுந்துக்கவேமாட்றா.
எல்லா சாப்பாடும் காலி ஆனதும் தான் சரி நீ சொல்றாய் எழுந்துக்கரேன்.என்று அரைமனதாக எழுந்துபோய் கைகழுவினா. எனக்கு திரும்ப சமையல் பண்ணனுமே,என்றுமலைப்பாக இருந்தது.
எல்லாரும் வர நேரமும் ஆச்சென்னு பரபரப்பா இருந்தது. லஷ்மி காஃபி எங்கன்னு? மாமியாரின்குரல் என்னை விரட்டியது. அம்மா இன்னிக்கு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டிருக்கேள். கொஞ்சம்தீபாவளி மருந்து(லேகியம்) தரேன். இப்ப காஃபி வேண்டாம்மான்னு சொன்னேன். அதெல்லாம் எனக்குத்
தெரியாது. இப்ப காஃபி தருவியா மாட்டியான்னு கோவமா கேட்டாங்க. அம்மா, ப்ளீஸ் கொஞ்சம்சொன்னா கேளுங்கோ. நீங்க எப்பக்கேட்டாலும் தந்திருக்கேனா இல்லியா? இப்பவேணாம்மான்னு சொன்னேன்.
அப்பதான் என் கணவர் குழந்தைகளுடன் வீட்டிற்குள் நுழைந்தார். என்ன சத்தம், அம்மாவை என்ன சொல்ராய்னுஎன்னிடம் கேக்கவும் விஷயத்தை சொன்னேன். சரி இப்பகாஃபி கொடுக்காதே பாக்கலாம்னு சொன்னார்.
ஐயோ, சீனு, வயத்தை ரொம்ப வலிக்கரதுடான்னு, மாமியார் ரொம்ப வலியுடன் கத்தவும் இருவருமேபயந்துபோயி, பக்கத்து தெருவில் இருக்கும் டாகடரை கூட்டிவந்தோம். டாக்டர் செக் பண்ணினார்.
அதுவரை வயத்துவலின்னு சத்தம்போட்டுக்கொண்டிருந்த மாமியார் லஷ்மி காஃபி தாடின்னு கெஞ்சவேஆரம்பிச்சுட்டா.அதன்பிறகு எதுவுமே பேச்சே இல்லாம அமைதி ஆயிட்டா.
டாக்டர் ரொம்ப அனுபவசாலியானவர். பல்ஸ் செக் பண்ணிட்டு பெரிய குண்டைத்தூக்கி போட்டார். சீனு அம்மாவுக்கு கடைசி நேரம் நெருங்கிடுத்து,ஒரொருபார்ட்டா அடங்கிவரது. இப்பகாலிலுணர்ச்சி
போயாச்சு, இப்ப கையில் உணர்ச்சி போயாச்சினு படிப்படியா அவள் அடங்கினதை நம்பமுடியாமல்கண்முன்னால் பார்த்துண்டே இருக்கும்போதே கண் வழியா பட்டுனு ப்ராணன் போச்சு. எங்களாலஅப்பவும் அம்மா போயிட்டானு நம்பவே முடியலை. டாக்டரிடம் சொன்னோம் இன்னிக்கு அளவுக்கு அதிகமா சாப்பீட்டா.அது ஏன் டாக்டர்? என்றோம்.
ஆமாம்மா, மரண, பசி, மரண தாகம்னு சொல்வா. கடசி நேரத்ல இப்படிஎல்லாம் சூசகமா காட்டிக் கொடுக்கும். சரி அமதியாதானே போயிருக்கா. மேற்கொண்டு ஆகவேண்டியதைப்பருங்கன்னுடாக்டர் கிளம்பி போனார். அப்பரம் எல்லாம் நடக்கவேண்டியதுபடி நடந்தது. 13- ம் நாள் காரியம்
அன்று வாத்தியார் அம்மாவோட கடைசி ஆசைன்னு ஏதானும் இருக்கா, சாப்பிட ஆசையா ஏதானும்கேட்டாளா? என்றார். எனக்கு அப்பதான் தாங்க முடியாம அழுகை வந்தது. அவகேக்கும்போதெல்லாம்
காஃபி கொடுதுட்டு கடசி நேரம் கேட்டும் கூட கொடுக்காபோயிட்டேனேன்னு துக்கமா வந்தது. இப்பக்கூட அந்த உறுத்தல் இருந்துண்டேதான் இருக்கு.
இப்ப வீட்டுக்கு யாரு வந்தாலும் முதல்ல பில்டர் காஃபி கொடுத்துட்டுதான் பாக்கி விஷயங்களே பேசுவோம். தீபாவளி அன்று அவங்க போனதால நாங்க தீபாவளி கொண்டாடவேமாட்டோம்.
Tweet | |||||
48 comments:
நெகிழ்வான பதிவு.
தட்டச்சில் வாக்கியங்கள் மாறி மாறி வந்துள்ளன, தயவு செய்து முடிந்தால் சரி cheyyungal
ராம்ஜி வருகைக்கு நன்றி. கவனித்து சரி செய்கிரேன்.
ஓ :(
லக்ஷ்மிம்மா ஒரு உதவி இந்த அடர்ந்த நிற பின்புலத்தை மாற்றமுடியுமா..
கண்ணுக்கு கஷ்டமா இருக்கே..
முத்து லட்சுமி எப்படி மாத்தனும் சொல்லுங்க . மாத்திடரேன்.
லக்ஷ்மி மேடம்,
காப்பி குடுக்கவில்லை என்றாலும், வயிறு நிறைய ருசியாக உணவிட்டிருக்கிறீர்கள். அதுவே அவர்களுக்கு அமிர்தம்.
அப்படித்தான் நம்மை சமாதானப்படுத்திக்கனும்.
லெட்சுமிம்மா
சுவாரசியம் குறையாம சொல்லிட்டீங்க....
கடைசில ரொம்ப உணர்வுபூர்வமா இருந்துச்சு....
தேங்க்யூ ஆமி.
மனதை தொட்ட பதிவு.
பழைய நினைவலைகள் அருமையாக
எழுதி இருக்கீங்கம்மா. வாழ்த்துக்கள்.
ரொம்பவே நெகிழ்வான பதிவு. என் அப்பா மறைந்தபோதும் இது போன்ற 'பண்ணியிருக்கலாமே' என்ற உறுத்தல்கள் எனக்கும் உண்டு. இன்னமும் அவற்றை நினைத்தால் மிக கஷ்டமாக உள்ளது!
தங்களின் தாய்மைக்கு வணக்கம். மனிதர்களை நேசிக்கும் மாண்பு தங்களிடம் மிக அதிகம் போலும்.
இப்போதெல்லாம் எவரும் எவர்மீதும் இத்தனை வாஞ்சை கொள்வதில்லை. நாம் கொண்டாலும் நமக்கு மிஞ்சுவது எம்மாற்றமும் அசட்டு பட்டமும். சரி, தங்கள் பதிவின் தலைப்பே தங்களின் நிறைவான வாழ்வை காட்டுகிறது.
உங்கள் தளத்தை படித்து அமைதியும் ஆனந்தமும் அடைகிறேன். இதில் உள்ள நிறைவான தாய்மை உணர்வை என்னால் அனுபவிக்க முடிகிறது. நானும் ஒரு பில்டர் காப்பி பைத்தியம் தான். ஆன்னால் வயது, உடல் நலம் கருதி கட்டுப்பாடுடன் இருக்கிறேன். தங்களை அம்மா என்று அன்புடன் அழை ஆசை.
மிக மிக நெகிழ்வான பதிவுமா. ஒரு சில நிகழ்சிகள் நம் வாழ்வில் மறக்க இயலாது. இதுவும் அப்படிப்பட்டது
படிக்கும்போது ரொம்ப நெகிழ்வாக இருந்தது அம்மா,
தொடர்ந்து இதுபோன்று எழுதுங்கள்
பதிவு நெகிழ வைத்தது.
// காஃபி கொடுதுட்டு கடசி நேரம் கேட்டும் கூட கொடுக்காபோயிட்டேனேன்னு துக்கமா வந்தது.//
Touching..
இதுக்கு ஒரே பதில், இந்த பாடல்தான்...
'குறையொன்றுமில்லை.. மறை மூர்த்தி கண்ணா..'
// இப்ப வீட்டுக்கு யாரு வந்தாலும் முதல்ல பில்டர் காஃபி கொடுத்துட்டுதான் பாக்கி விஷயங்களே பேசுவோம். தீபாவளி அன்று அவங்க போனதால நாங்க தீபாவளி கொண்டாடவேமாட்டோம். //
என்ன சொல்லுறதுன்னே தெரியலை..
இருந்தாலும்.. சின்னக் குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக தீபாவளி கொண்டாடலாமே.. ஊரில் மற்றவர்களின் வீடுகளில் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதைப் பார்த்து, குழந்தைகள் ஏங்கிப் போகுமே..
நெகிழ்ச்சியான பதிவு. காஃபி நிறைய பேருக்கு பிடித்த ஒரு பானம். உங்களைப் போல பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். என் மனைவி பிறந்ததிலிருந்து இது வரை காஃபி குடித்ததில்லை!
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
ஆயிஷா வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா.
பந்து, உணமைதான் சில நேரங்களில் நாம் அறியாமலே சில விஷயங்கள் நம்மை ப்புறட்டிப்போட்டு விடுகின்ரன.
மாணிக்கம் எந்தக்குழந்தையாவது தன் அம்மாவிடம் அம்மா என்று அழைக்கலாமான்னு பர்மிஷன் கேட்டுட்டா அழைக்கராங்க. நான் உங்க எல்லாருக்குமே நல்ல அம்மாவா இருக்கனும்னுதான் நினைக்கரேன். ஒருவர்மேல அன்பு, பாசம் காட்டுவதில் ஏன் கஞ்ச்த்தனம் காட்டனும். என் அனுபவங்கள் என்னை இப்படில்லாம் எழுத வைக்கிரது.
ஆமா, கார்த்திக். முதல்ல இந்த பதிவு எழ்தனுமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சேன். பதிவு படிக்கும் யாரையும் டிஸ்டர்ப் பண்ணிடக்கூடாது இல்லியா?
என் எண்ணங்களுக்கும் இதுபோல பதிவு எழுதுவதுதான் வடிகாலாக இருக்கு.
இவ்வளவு வயசுக்கு எவ்வளவு அனுபவங்கள். சந்தோஷம், துக்கம், காமெடி என்று கலந்து கட்டிதான் இருக்கு. உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்வதால எனக்கும் மனசே ரிலாக்ஸ் ஆகுது,
மானவன் இதுபோல சோக சம்பவமாகவே எழுதினா யாருமே என்பக்கம் திரும்பிக்கூட பாக்க மாட்டீங்க. அதனால எல்லா உணர்வுகளையும் கலந்து கட்டி எழுதிண்டு வரேன்.
மாதவன் நீங்க சொல்வதும் சரிதான். ரெண்டு பக்கமும் யொசிக்கனும். இப்ப பசங்கல்லாம் பெரியவங்க ஆகி அவங்க அவங்க வீட்ல அமர்க்களமா, ஆனன்தமா எல்லா பண்டிகைகளும் கொண்டாடி வருகிரார்கள்.
வெங்கட், எனக்கும் காஃபி சின்ன வயசிலேந்தே பிடிக்காமப்போச்சு. ஆனா பாருங்க, காஃபி பிரியர்கள் மத்தியில் என் வாழ்க்கை ஆரம்பமாச்சு.
ஆமா பிரபு, எல்லாருமே அப்படித்தான் சொல்ரீங்க.
ஒரு நாளைக்கு 7 முறை காபியா?
சிகப்பு பின்புலத்தை மாத்தினது நல்லாயிருக்கு. நிறைய பேர் காபி, டீக்கு இப்படி அடிமையாகி விடுகிறார்கள்.நெகிழ்ச்சியான பதிவு.
என் மகன்கள் இருவருக்கும் காபி, டீ நான் பழக்கவில்லை.
அமுதா, குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களையே கத்துக்கொடுத்துருக்கீங்க. காஃபி குடிப்பது தப்பில்லைதான் அளவோட இருக்கனும்.
ப்ளாக் பின் புல சிகப்பு கண்ணை உறுத்துவதாக ஒரு தோழி சொன்னாங்க.
அதான் உடனே மாத்திட்டேன். இப்ப ஓ. கே வா?
ரொம்பவே பாரமா இருந்ததுங்க படிச்சு முடிக்கும் போது:(
நெகிழ்வான பதிவு.பக்கத்த வீட்டில் நடக்கர மாதிரியே இருக்கு..
நாக சுப்ரமணியன் வருகைக்கு நன்றி.
சாரிங்க.
சக்தி வருகைக்கு நன்றி. எனக்கு இப்படி பாமரத்தனமாதான் எழுத வருது.
நன்றி நன்றி பின்புல நிறத்தை மாற்றியதற்கு ..:)
எதுக்கும்மா நன்றில்லாம்.
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
எங்க போயிட்டிங்க சார். திடீர்னு நம்ம பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.
http://www.youtube.com/watch?v=zX3kFK7S87w
இதிலிருந்து dasvidaniya-vin அடுத்த பாகங்களையும் பார்க்கலாம்
நாகசுப்ரமனியன் நன்றி.
நான் காப்பி பைத்தியம். நள்ளிரவு எழுப்பி குடுத்தாலும் குடிப்பேன். என் மனைவிக்கு காப்பி டீ இரண்டுமே பிடிக்காது. அப்படிதான் அமையும்.
//பதிவு படிக்கும் யாரையும் டிஸ்டர்ப் பண்ணிடக்கூடாது இல்லியா?/
அப்படி எல்லாம் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்
ஆமா, கார்த்தி, நம்ம தமிழ்க்கார்ரால காபி பிடிக்காதவங்க ரொம்பவே கம்மிதான். அதில் நங்களும்.
இது பதிவு மாதுரி தெரியலைமா... ஏதோ நீங்கள் எங்களை மரத்தடியில் உட்க்கார வைத்து பாடம் நடத்துற மாதுரி தெரியுது,நான் ஏழாம் கிளாசு படிக்கும் போது ருக்மணி டீச்சர் பாடம் நடத்துகிற ஒரு பீலிங் தெரியுது எனக்கு.
தொடர்ந்து எழுதுங்கள்.
அ ந் நியன் வருகைக்கு நன்றி. நீங்க கொடுக்கும் ஒவ்வொரு பின்னூட்டமும் மிக சுவாரஸ்யத்துடன் இருக்கு.அடிக்கடி வந்து கருத்துக்களைச்சொல்லுங்க அ ந் நியன்2
நல்லா எழுதியிருக்கீங்கம்மா. என் பிறந்த வீட்டிலும் காப்பி பிரியர்கள் தான். புகுந்த வீட்டிலும் அப்படித்தான். நான் மட்டும் விதி விலக்கு.
கோவை2தில்லி காஃபி பற்றி மேட்டர் எழ்தும் நாமெல்லாம் காஃபி பிடிக்காதவங்களாகவே இருக்கோம் என்ன வேடிக்கை இல்லியா?
அந்த மன உறுத்தல் இருக்கிறதே அது நம்மை பாடாய் படுத்திவிடும் .
காபி அனுபவம் வாசித்து நெகிழ்ந்து போனேன்
goma- முதல் வருகைக்கு நன்றிம்மா.அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க.
ரொம்ப கலக்கமா இருந்துச்சி லஷ்மி அக்கா
இது வரை நல்ல படியாக கவனித்து இருக்கீங்க.அதுவும் ஸ்டவ் அடுப்பில் செய்வது அத்தனை சுலபமா என்னா
நானும் அம்மா வீட்டில் சின்னதில் இருந்து கேஸ் அடுப்பு தான்
ஆனால் மாமியார் வீட்டில் கேஸ் அடுப்பு இருந்தாலும், அது சுலபாம செய்யும் சமையல் தான் அதில் செய்யனும்,
மீதி வெறகு அடுப்பிலும், ஸ்டவ்விலும் தான் செய்யனும், ரொம்ப நேரம் ஆகும்.
ஜலீலா வருகைக்கு நன்றிம்மா. இப்ப கேஸ்அடுப்பிலும் மைக்ரோவேவிலும் நிமிஷமா சமைக்க முடிகிரது. வீட்டில் நிறயா பேர் இருந்தப்போ கெரசின் ஸ்டவ்
சமையல்தான். இப்ப நினைச்சாகூட நாம தான் அப்படில்லாம் இருந்திருக்கோமான்னு தோனுது.
Post a Comment