Pages

Friday, March 11, 2011

மலரும் நினைவுகள்.(2)



கல்யாணம் முடிந்து வருவதால் எக்கச்சக்க லக்கேஜ் இருந்தது.வெல்வெட்மெத்தை,தலகாணி போர்வைகள்மூட்டை, சீர்பாத்திர பண்டங்கள் ஒரு வண்டி,அதுபோக 5 பெரிய டின்களில் கல்யாண சீர் பட்சணங்கள்.ஆனை அடி முறுக்கு,அதிரசம், மனோகரம், லட்டு, மைசூர் பாகு என்று ஏகத்துக்கு.அந்தசாமான்களை வைக்கவே முதல் ரூம் கால்வைக்க இடமில்லாம நிரம்பிடுத்து.எனக்கும் 50 பவுனுக்கு நகை போட்டிருந்தார்கள். நானும் நகைக்கடைபொம்மை மாதிரி ஒரு ஓரமா நின்னுண்டு இருந்தேன்.







அந்தக்காலத்தில் ஒரு பவுன் 60 ரூபாதான்.( நம்பித்தான் ஆகணும்.) அக்கம் பக்கம்எல்லாருமே நிறைய தமிழ்க்காரங்க இருந்தாங்க. நாங்க வந்ததுமே ஆரத்தி எல்லாம் எடுத்து வர வேற்பு கொடுத்தாங்க.இன்னிக்குத்தான் புது பொண்ணு வந்திருக்கா இன்னிக்கே சமையல்(அப்படின்னா என்ன?) வேலைலாம் ஆரம்பிக்க வேணாம். நாங்க பண்ணித்தரோம் என்றார்கள்.
வீட்டில் நான், வீட்டுக்காரர், அவ அப்பா, அம்மா, தாத்தாஎன்று 5 பேர்கள்.
வீட்டுக்காரரே எல்லா சாமான்களையும் ஒதுக்கி வைத்து சரி செய்தார்.



சமயல் அறை என்று சொல்லப்பட்ட ரூமில் போனேன். ஒரே இருட்டு.பூராவும்
அடுப்பு சாம்பல் பரவி இருந்தது.ஒரு ஓரமாக 4 குமுட்டி அடுப்புகள் இருந்தது.
இன்னொரு ஓரம் ஒரு சாதிக்காய் பெட்டி நிறைய கரி நிறம்பி இருந்தது.சாமான்
கள் போட்டு வைக்கும் டப்பாக்கள் எல்லாமே பித்தளையில் இருந்தது.பாத்திரங்கள் எல்லாமும் பித்தளையில்தான் இருந்தது.
அதுவும் ”யானைச்சிவப்பில்” அதிகச்சிவப்பான கலரில் கண்ணைப்பறித்தது.
டம்ளர், கரண்டி, ஸ்பூன் முதல் எல்லாமே பித்தளைதான்.



அதையெல்லாம் பாக்கும்போதே எனக்கு முதலில் பயம்மா இருந்தது. அதுக்கும்
மேல இன்னொரு புறம் ஒரு பெரிய செப்பு பாய்லர் வேறு குட்டி யானை போலவே இருந்தது.ஊர்பக்கம் டீக்கடை வாசலில் மட்டுமே போய்லர் பாத்த
ஞாபகம். அது எதுக்கு இங்க இருக்கு. இவாளும் இதுல தான் டீ போட்டுக்குடிப்பார்களோ என்று நினைத்தேன். யாரிடமும் எதுவும் கேக்கவும்
தோணலை. முதல் பார்வைக்கே வீடும் ஊரும் பிடிக்கவே இல்லை.



சின்ன வயதிலே கல்யாணம் பண்ணிக்கொடுத்ததால சமையல் பத்தி எல்லாம்
சொல்லித்தந்ததே இல்லை.எங்க வீட்ல எல்லாத்துக்குமே ஆட்கள் இருந்ததால
சாப்பிட்ட தட்டிலேயே கை அலம்பி எழுந்து போகும் பழக்கம்தான். சமையல் அறை பக்கம் எங்களை யெல்லாம் விடவே மாட்டாங்க.எனக்கும் சாப்பிட மட்டுமே தெரியும்.எப்படி சமாளிக்கப்போறேனோன்னு ரொம்பவே பயம்.

40 comments:

ம.தி.சுதா said...

அம்மா அந்தக் காலத்து பவுண் கொஞ்சம் இருந்தால் தருவிங்களா ? ஹ..ஹ.

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

கே. பி. ஜனா... said...

ஆஹா, அந்தக் காலம் கண் முன் விரிகிறது...

குறையொன்றுமில்லை. said...

ம.தி.சுதா எத்தனை பவுன் வேணும்?

குறையொன்றுமில்லை. said...

கே.பி. ஜனா.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

விழியே பேசு... said...

அம்மா...உங்கள் எழுத்துக்கள் நல்லா இருக்கும்மா...!!

Madhavan Srinivasagopalan said...

செம.. மேடம்.. செம..
ஒவ்வொரு வரிகளையும் ரசிச்சு படிச்சேன்..
தொடர்ந்து எழுதுங்க.. சூப்பர்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பழயகாலத்தவர்களை யோசிக்க வைத்தவிட்டீர்கள்.

Asiya Omar said...

லஷ்மிமா ரொமப எதிர்ப்பார்த்திட்டு இருந்தேன்,எனக்கு அனுபவங்கள் படிக்க மிகவும் பிடிக்கும்,அதில் இருக்கும் எதர்ர்த்தம் எதிலும் வராது.அருமையாக இருக்கு.பொறுத்திருந்து படிக்கும் அளவு நல்ல தொடர்...

வெங்கட் நாகராஜ் said...

என் அம்மா கூட சொல்வார்கள் ஒரு பவுன் 45 ரூபாய்க்கு விற்றது என்று! இன்று அதை வைத்து ஒரு கிராம் வெள்ளி கூட வாங்க முடியாது :) நன்றாக இருந்தது இந்த பகிர்வு!

ராம்ஜி_யாஹூ said...

அந்தக் காலம் போல் அல்லாமல் இப்போது வரதட்சினை, சீர் வரிசைகள் குறைந்து வருவது மகிழ்வாக இருக்கிறது

ADHI VENKAT said...

கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணின் உணர்வுகளை வெளிபடுத்தியுள்ளீர்கள். யாரிடம் எதுவும் கேட்கவும் தோணாது. கேட்டாலும் கிண்டல் செய்வார்களோ? என்று பலவாறாக தோன்றும்.
மேலும் தெரிந்து கொள்ள ஆவல்.

ஸாதிகா said...

சம்பவங்களும்,எழுதும் விதமும் சுவாரஸ்யம்

ரஹீம் கஸ்ஸாலி said...

அந்த காலத்துல பவுன் அம்பது ரூபா வித்ததா எங்க பாட்டியும் சொல்லிருக்கு,

குறையொன்றுமில்லை. said...

விழியே பேசு வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

மாதவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

தோழிபிரஷா, வருகைக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி.
உங்க அம்மாவுக்கும் 65-வயசுக்கு மேலயா?

குறையொன்றுமில்லை. said...

ராம்ஜி யாஹூ ஆமாங்க நீங்க சொல்வது சரிதான்.

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா, வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ரஹீம் கஸாலி, வருகைக்கு நன்றிங்க.

raji said...

ராஜிக்கு ஒரு பத்து பவுன் பார்சல் ஹி ஹிஹி
சும்மா ஒரு தமாஷுதான்

கல்யாண சீர் பட்சணங்கள்.ஆனை அடி முறுக்கு,அதிரசம், மனோகரம், லட்டு, மைசூர் பாகு என்று ஏகத்துக்கு.

படிக்கவே நல்லாருக்கு, சாப்ட்டா இன்னும் நல்லாருக்கும்தான்

சரி அப்பறம் எப்பிடித்தான் பிரச்சனைய சமாளிச்சீங்க

குறையொன்றுமில்லை. said...

வாங்கராஜி.சமாளிக்கரதாவது. உங்ககூடல்லாம் பேசும்போது நானும் அந்த நாட்களுக்கே போயிடரேன்.

Sathish Kumar said...

//மேல இன்னொரு புறம் ஒரு பெரிய செப்பு பாய்லர் வேறு குட்டி யானை போலவே இருந்தது...//

ரொம்ப நல்லா இருந்தது...:-))

குறையொன்றுமில்லை. said...

சதீஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Prabu Krishna said...

பித்தளை???

என் அம்மாயி(அம்மாவின் அம்மா) வீட்டில் பார்த்தது.

சிவகுமாரன் said...

எங்க பாட்டி சொல்வாங்க நகை எல்லாம் அரிசிப் பானைக்குள்ளே போட்டு வச்சிருப்பாங்களாம். ...
ரொம்ப சுவாரசியமாய் இருக்கு தொடர்.

குறையொன்றுமில்லை. said...

பித்தளை பேரே கேள்வி பட்டதில்லியா.

குறையொன்றுமில்லை. said...

சிவகுமாரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

யதார்த்தமாய் சுவையாய் காட்சிகளைக் கண் முன் கொண்டு வந்த திறமை பாராட்டுக்கு உரியது.

Nagasubramanian said...

//அந்தக்காலத்தில் ஒரு பவுன் 60 ரூபாதான்//
ஏன்மா வைத்தெரிச்சல கெளப்புறீங்க?

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி,வருகைக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

நாக சுப்ர மணியன், அந்தக்காலத்தின்
விலைவாசி எல்லாம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

எல் கே said...

நான் போட்ட கமென்ட் எங்க ?? காணாம போய்டுச்சு ???


அப்பா/அம்மா மூலம் அந்தக் கால சூழ்நிலை ஓரளவுக்குத் தெரியும் என்றாலும், உங்கள் எழுத்துக்கள் மேலும் ஆர்வத்தை தூண்டுகின்றன

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி, இப்பத்தானே உங்க காமெண்ட் வந்தது. இதுக்கு முன்ன வல்லியே.

மாதேவி said...

நீங்க சொல்லும்போது நல்லாக இருக்கு. எப்படி எல்லாம் சமாளித்தீர்கள்?.

Geetha Sambasivam said...

அந்தக்காலத்தில் ஒரு பவுன் 60 ரூபாதான்.( நம்பித்தான் ஆகணும்.) /

நம்பலாம், ஏன்னா அதுக்கப்புறமா பனிரண்டு வருஷம் கழிச்சு என் கல்யாணத்தின் போதும் பவுன் விலை நூறுக்கும் கீழே தான் இருந்தது. ரூபாய் எடை வெள்ளி அதாவது பத்து கிராம் ஐந்துரூபாய்க்குள்ளோ என்னமோ இருந்தது. அரை கிலோ வெள்ளித் தட்டை வெறும் 150 ரூபாய்க்கோ என்னமோ வாங்கினார் என் அப்பா. ஆனால் 150ரூபாய் என்பது பெரிய தொகை. ஜரிகையோடு பட்டுப் புடைவை 50 ரூபாய்க்கு வாங்கி நான் கட்டி இருக்கேன்.

Geetha Sambasivam said...

அது சரி, கேட்க மறந்துட்டேனே, திருநெல்வேலிப் பக்கமா நீங்க?? ஆனைஅடி முறுக்குனு பார்த்ததும் அங்கே தானே ஆனையடி அப்பளம், முறுக்கு எல்லாம் உண்டு என்று நினைவில் வந்தது.

உங்க வீடு மாதிரிப் பெரிய வீடு, மாடு, கன்னுனு இல்லாட்டியும் மதுரையில் நாங்க குடி இருந்த வீடுகளெல்லாம் மூன்று கட்டு வீடுகள் தான். :))))

குறையொன்றுமில்லை. said...

ஆமா கீதா நான் திரு நெல் வேலிதான்.
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .