அமைதிச்சாரல் என்னையும் தொடர்பதிவு எழுத அழைச்சிருக்காங்க.நிறையப்பேரு நிறைய விதமா சொல்லியாச்சு. நான் என்ன சொல்ல?
எனக்கும் எங்க குடும்ப வழக்கப்படி அப்பாவின் அம்மா (பாட்டி) பெயர்வச்சாங்க. அப்படியும் இப்பவும் இந்தவயசிலும் எங்கவீட்டில் எல்லாருக்கும்
நான் ”கோந்தே” தான். நான் பிறந்ததும் என்னை வளர்க்க ஒரு வேலைக்காரி
ஏற்பாடு பண்ணினாங்க. அவங்கபேரு லஷ்மிதான். பின்னாடிகொல்லைப்புறமா நிக்கும் பசுமாடுகளில் ஒன்றின்பெயரும்லஷ்மிதான்.பாத்திரம்தேய்க்கவரும்வேலைக்காரிகளில்ஒருவர்பேரும்லஷ்மியே.
வீடும் ரொம்ப பெரிசு, அதனால லஷ்மின்னு பெரிசா சத்தமா கூப்பிட்டா, நான்,ஆத்தா,( என் வெலைக்காரிபசுமாடு,த்திரம்தேய்க்கும்வேலைக்காரி
எல்லாருமே ஓடி வந்துடுவோம் அதனால என்னை எச்சுமி ஆக்கிட்டாங்க.எச்சி, எச்சுகுட்டி, எச்சா ன்னு இஷ்டத்துக்கு என்பேரு பல அவதாரங்கள்
எடுக்கும்.என்பேரு பெருமை சின்னபதிவா இருக்கே. இல்லியா? எங்க 5-வதுபெண்பிறந்ததும் இதே என்னபெயர்னு குழப்பம். ஏற்கனவே பிறந்த நாலு
குழந்தைகளுக்கும் பெரியவங்க பேர் எல்லாம் வச்சாச்சு, இப்ப யாரு பேரு?
அந்தக்குழந்தையின் பேரிட்டுக்கலயாணத்திற்கு புகுந்தவீட்டு ஆட்கள்என் பிறந்தவீட்டு ஆட்கள் எல்லாருமே வந்திருந்தாங்க. புகுந்தவீட்டுக்காரங்க
அவங்கவீட்டு பெரியவங்கபேருதான்வைக்கணும்னு சொல்ராங்க, என்வீட்டு மனுஷங்களோ முதல் நாலு குழந்தைகளுக்கு உங்கவீட்டு பெரியவங்க
பேர்தானே வச்சிருக்கு. இப்ப எங்க வீட்டுப்பெரியவங்க பேருதான் வைக்கணும்
குழந்தைகளுக்கும் பெரியவங்க பேர் எல்லாம் வச்சாச்சு, இப்ப யாரு பேரு?
அந்தக்குழந்தையின் பேரிட்டுக்கலயாணத்திற்கு புகுந்தவீட்டு ஆட்கள்என் பிறந்தவீட்டு ஆட்கள் எல்லாருமே வந்திருந்தாங்க. புகுந்தவீட்டுக்காரங்க
அவங்கவீட்டு பெரியவங்கபேருதான்வைக்கணும்னு சொல்ராங்க, என்வீட்டு மனுஷங்களோ முதல் நாலு குழந்தைகளுக்கு உங்கவீட்டு பெரியவங்க
பேர்தானே வச்சிருக்கு. இப்ப எங்க வீட்டுப்பெரியவங்க பேருதான் வைக்கணும்
என்று, இரண்டு பக்கமும் விட்டுக்கொடுக்க மாட்டேங்கராங்க. பேர்வைக்கவந்த வாத்யார் எல்லாரிடமும் இப்படி ஆளாளுக்கு பேசிண்டே இருந்தா எப்படிசீக்கிரமா ஒருபேரு சொல்லுங்கோ என்று சொல்லிநான்ஒருஐடியாசொல்ரேன்
இரண்டு வீட்டுக்காரங்களும் அவங்கவங்க பெரியவங்க பெயரை ஒருபேப்பரில் எழுதி என்கிட்ட தாங்க, நான் பாத்து நல்ல பெயரா சொல்ரேன்
என்றார். இருபக்கத்து ஆட்களும் பேப்பரில் எழுதிக்கொடுத்தார்கள்.வாத்யார்அந்தப்பெய்ர்களைப்பார்த்து சிரிச்சுகிட்டே ரெண்டுபேரும் எழ்தி தந்த பெயர்ஒன்னாவே இருக்கு இதுக்குதான் இவ்வளவு நேரம் வாக்குவாதம் செய்தீங்களா? என்று சொல்லி ஜெயலஷ்மி என்ற பெயர் சூட்டினார். இரண்டுபக்க ஆட்களுக்கும்சந்தோஷம்நம்மவீட்டுப்பெரியவங்கபபேருதான் வைச்சிருக்கோம் என்று..
இப்ப அந்தபெண்குழந்தைக்கு இப்ப 44 வயசு. ஜெயலஷ்மின்னு பேரு பெரிசா இருக்காம் ஜெயஸ்ரீ என்று சுருங்கிபோச்சு. அதுவும் கூட சுருங்கிபோயி ஜஜ்ஜிஆச்சு. அவகூடப்பிறந்தவங்களுக்கு கோபத்தில் அவளை ஜஜ்ஜி பஜ்ஜின்னு
திட்டுவதற்கு உபயோகமா இருக்கு. இப்ப என் ஃப்ரெண்ட்பேரு பத்தி கொஞ்சம்
இப்ப அவபேரு கோமு. திருனவேலி பக்கம் ஏதானும் ஒரு சின்னகிராமத்துலஒரு தெருல போயி நின்னுண்டு கோமுன்னு கூப்பிட்டா 10 வீடு களிலிருந்துதலைகள் எட்டிப்பார்க்கும்.இன்னொரு தெருவில் போயி காந்தின்னு கூப்பிட்டா
இப்ப அவபேரு கோமு. திருனவேலி பக்கம் ஏதானும் ஒரு சின்னகிராமத்துலஒரு தெருல போயி நின்னுண்டு கோமுன்னு கூப்பிட்டா 10 வீடு களிலிருந்துதலைகள் எட்டிப்பார்க்கும்.இன்னொரு தெருவில் போயி காந்தின்னு கூப்பிட்டா
அங்கியும் 10- வீடுகளிலிருந்து தலைகல் எட்டிப்பார்க்கும்.
திருனெல்வேலி யில் காந்திமதி அம்மனும், கோமதி அம்மனும்தான் பிரபலமான அம்மன்கள்.அந்த அம்மன் பேரைத்தான் பெரும்பாலனவர்கள் தங்க
குழந்தைகளுக்கு வைப்பார்கள். கோமதி சின்னப்பெயர்தான் அதுவே சுருங்கி
கோமு ஆனதுபோல, காந்திமதி சுருங்கி காந்தி ஆகும்.
Tweet | |||||
54 comments:
பலமுறை ஏன் 'எச்சுமி' எனப் பெயர் வந்தது என கேட்கத் தோன்றியது..
இப்போது தெரிந்தது.
நன்றி.
மாதவன் முதல் வருகைக்கு நன்றி.
இப்பதெரிஞ்சுதா.
தமிழ்மணத்தில் நீங்கள் இணைத்தாலும்.. அதற்கு தனியாக லாக்-இன் செய்து ஓட்டுப் போட வேண்டும்.
இன்ட்லியில் இணைக்க வில்லையா ?
ஒரு பெயரில் இவ்வளவு இருக்கிறதா?
பலமுறை சந்தேகம் வந்தது ஏன் 'எச்சுமி' எனப் பெயர் வந்தது என ....
இப்போது தெரிந்தது.
பகிர்வுக்கு நன்றி அம்மா.
நிறைய பேர் வீட்டில லக்ஷ்மிங்கற பெயர் எச்சுமி ஆயிடறதுண்டு.
ஆனா அந்த அழகான பெயரை அப்படி ஆக்கறதுல
எனக்கு வருத்தம்தான்.எனக்கு நீங்க 'லக்ஷ்மிமா' தான்.
அம்மா...எனக்கும் எச்சுமி பெயரை பத்தி கொஞ்சம் டவுட் இருந்துச்சு. சீனா ஐயா கொஞ்சம் விளக்கினாரு. இப்ப நீங்க தெளிவா விளக்கிடீங்க...நன்றி...
எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!
Let me read and comment later..Sorry for the delay
நகைச்சுவை கலந்து மெல்லிய புன்னகையோடு எழுதியிருக்கிறீர்கள் அம்மா !
ஹ்ம்ம் என் பாட்டியின் பெயர் "ஜெயா" . படிக்கும் பொழுது அவர்கள் ஞாபகம்தான் வந்தது. லக்ஷ்மி எச்சுமி ஆகும், அதே மாதிரி கிருஷ்ணமூர்த்தி கிச்சா ஆகும், பார்த்தசாரதி பாச்சா ஆகும்
அருமை...!
//ஆச்சு. அவகூடப்பிறந்தவங்களுக்கு கோபத்தில் அவளை ஜஜ்ஜி பஜ்ஜின்னு//
ஹி ஹி. என்னை சுனாமின்னு திட்டற மாதிரி,
INTERESTING.
மாதவன் சரியாபுரியலியே.விளக்கமா சொல்லமுடியுமா?
வேடந்தாங்கல் கருன், வருகைக்கு நன்றி
உங்களுக்குமா எச்சுமி சந்தேகம்?
ராஜி இந்தபெட் நேம் எல்லாமே
ஒருபிரியத்தில் வரதுதானே.
ராஜி இந்தபெட் நேம் எல்லாமே
ஒருபிரியத்தில் வரதுதானே.
தமிழ்வாசி வருகைக்கு நன்றி. சீனா ஐயா
விடம்போயிகேட்கும் அளவுக்கா பெயர்
சந்தேகம்.வேடிக்கைதான். அவங்க என்ன
சொன்னாங்க.?
டக்கால்டி நன்றி.
ஹேமா வருகைக்கு கருத்துக்கு நன்றிம்மா.
ஆமா கார்த்தி, கார்த்தி கூட
காக்கி ஆகும்.எங்க வீட்டு வேலைக்கார்
பெண்பேரு தொன்னை.ஒருவன்பேரு டிண்டிமணி இப்படி நிறையா சொல்லிண்டே
போலாம்தான்.
பிரணவம் ரவிகுமார் வருகைக்கு நன்றி.
அனாமிகா நீங்க சுனாமியா,!!!!!
சூப்பர்.
இராஜராஜேஸ்வரி தேங்க்யூ.
டும்டும்...டும்டும்..
பெயர் காரணத்திற்கு அருமையான விளக்கம்.ஆனா,நமக்கு மத்தவங்க கூப்பிடற விட...நமக்கு பிடிச்சவங்க கூப்பிட்டா இன்னும் சந்தோசப்படுவோம். உங்களை லட்சுமி என்று அழைத்தவர்கள் எச்சுமி என அழைத்தால் இருவருக்கும் இடையேயான தூரம் குறைந்தாக அர்த்தம்.அதுதான் பெயருக்கும் செல்ல பெயருக்கும் உள்ள வித்தியாசம்
நையாண்டி மேளம் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றிங்க. நீங்க சொல்வது
ரொம்ப கரெக்ட்.
ம்ம்.பெயர் சுருக்கம் ஜ்ஜ்ஜி நல்லாயிருக்கே..
லஷ்மிமா மிகவும் எதார்த்தமான உங்க எழுத்தும் நடையும் சூப்பர்.சொல்ற விதம் நேரில் பேசுவது போல் உள்ளது. நானும் நெல்லை தான்,நான் படித்த காலத்தில் எல்லா வகுப்பிலும் பொதுவாக கோமதியும்,காந்திமதியும் இருப்பாங்க.எச்சுமி கூட செல்லமாக நல்லாயிருக்கு.
//Lakshmi said...
மாதவன் சரியாபுரியலியே.விளக்கமா சொல்லமுடியுமா? //
இன்ட்லியில் இணைக்கும்போதே உங்கள் ஒட்டு சேர்ந்துவிடும்.
ஆனால் தமிழ்மனத்தில் இணைப்பது வேறு ஓட்டுப் போடுவது வேறு.
முதலில் பதிவை இணைத்து.. பின்னர் உங்க பதிவிற்கு சென்று. அங்குள்ள தமிழ்மண லிங்க் படத்தில் இருக்கும் 'கட்டை விரல்' உயர்த்தி இருக்கும் படத்தின் மேல் க்ளிக் செய்தால் மட்டுமே, உங்கள் ஒட்டு அந்த தமிழ்மண இணைப்பிற்கு போய் சேரும். அதாவது முதலில் இணைத்து.. நீங்கள் உங்கள் பதிவிற்கு ஒரு ஓட்டும் போடலாம்.
எச்சுமிய விட லக்ஷ்மி தான் பிடிச்சிருக்கு. சீட்டு குலுக்கி போட்டு பெயர் தேர்ந்தெடுத்தது சூப்பர்!
அட ஒரு தெருல 10 கடை இருந்தா அதுல 6 கடைக்கு லக்ஷ்மி - னு தான் பேரு இருக்குங்க!!!
அமுதா வருகைக்கு நன்றிம்மா.
ஆஸியா ஓமர், நீங்களும் நம்ம ஏரியாதானா? அப்ப நான் சொன்னது எல்லாம் நல்லாவே புரிஞ்சிருக்கும்.
மாதவன் விவரமாகச்சொன்னதுக்கு நன்றி. இண்ட்லி, உலவு, தமிழ்10
எல்லாம் எப்பவும் தெரியுது. ஆனா தமிழ்
மணம் எப்பவும் தெரிவதில்லையே. புது
போஸ்ட் போட்டதும் இணைக்கும் போதுமட்டும் தெரியுது. அப்பரம் தெரியரதில்லை. அப்பறம் எப்படி நாமே
ஓட்டுப்போட்டுக்கமுடியும்? எவளவு விஷயம் தெரிஞ்சுக்காம இருக்கேன் பாத்தீங்களா? உங்களைப்போல யாராவது சொல்லி ஹெல்ப் பண்ணுவதாலதான் ஓறளவாவது தெரிஞ்சுக்க முடியுது, நன்றி.
கோவை2தில்லி உங்களுக்கு எப்படி கூப்பிட பிடிச்சிருக்கோ அப்படியே கூப்பிடுங்க.
நாக சுப்ரமணியன், ஆமாங்க,அப்படித்தானே இருக்கு. அதனாலதானே எச்சுமி ஆனேன்.
// Lakshmi said...
மாதவன் விவரமாகச்சொன்னதுக்கு நன்றி. இண்ட்லி, உலவு, தமிழ்10
எல்லாம் எப்பவும் தெரியுது. ஆனா தமிழ்
மணம் எப்பவும் தெரிவதில்லையே. புது
போஸ்ட் போட்டதும் இணைக்கும் போதுமட்டும் தெரியுது. அப்பரம் தெரியரதில்லை. அப்பறம் எப்படி நாமே
ஓட்டுப்போட்டுக்கமுடியும்? எவளவு விஷயம் தெரிஞ்சுக்காம இருக்கேன் பாத்தீங்களா? உங்களைப்போல யாராவது சொல்லி ஹெல்ப் பண்ணுவதாலதான் ஓறளவாவது தெரிஞ்சுக்க முடியுது, நன்றி. //
http://echumi.blogspot.com ஓபன் பண்ணா தமிழ்மணம் லிங்க் தெரியாது
ப்ளாக்ஸ்பாட் ஓபன் பண்ணாம எப்படி?
மாதவன், இன்னொரு ஹெல்ப். தமிழ்விரும்பி என்னும்தலைப்பிலும் ஒரு பதிவு எழ்தரேன் இல்லியா. அங்க தமிழ் மணத்ல இணைக்கவேமுடியலை.
submit to tamilmanam click பண்ணினதும் இப்படி ஒரு பேஜ் ஓபன் ஆகுது,please click here to submit
your blog to tamilmanam. என்று வரது.அதையும் க்ளிக் பண்ணினா
இன்னொருபேஜ் வருது அங்க நம்ம url
கேக்குது. டைப் பன்ணிட்டு ”அளி”ன்னு
க்ளிக் பண்ணினதும் ஒருமெசேஜ் வருது. ”இந்த உங்களின் பதிவு ஏற்கனவேதமிழ் மணத்தில் இணைக்கப்பட்டுள்ளதுன்னு”. ஆனா
இணைக்கப்படவே இல்லை. இதுக்கு என்ன பண்ணனும்?
பேரில் இவ்வளவு இருக்கின்றது...இரண்டு வீட்டு காரங்களும் கடைசியில் ஒரே பெயருக்கா சண்டை போட்டு கொண்டாங்க..
கீதா ஆச்சல், வருகைக்கு நன்றிம்மா.
ஆமா ஒரேபேருக்காகத்தான் இரு வீட்டுக்காரங்களும் விட்டுக்கொடுக்காம இருந்தாங்க.
// Lakshmi said...
ப்ளாக்ஸ்பாட் ஓபன் பண்ணாம எப்படி? //
மன்னிக்கணும்.. நா சொல்ல வந்துள பாதிதான் பதிவாயிருக்கு..
இப்போ திரும்பவும் முழுசாச் சொல்லறேன்.
http://echumi.blogspot.com ஓபன் பண்ணா தமிழ்மணம் லிங்க் தெரியாது.
குறிப்பிட்ட ஒரு பதிவோட லிங்குல போனாத்தான் தமிழ்மணம் லிங்க் வரும். உதாரணமா இந்த பதிவிற்கான லிங்க்
http://echumi.blogspot.com/2011/03/blog-post_22.html
இந்த லிங்க்க க்ளிக் பண்ணிப் பாருங்க.. தமிழ்மணம் ஓட்டுப் பட்டை தெரியும்.
நீங்க கேட்ட ரெண்டாவது கேள்விக்கு நா யோசிக்கணும்.. இப்பதைக்கு பதில் இல்லை சாரி ..
மாதவன், திரும்பவும் நன்றி.அந்த பதிவின் டைட்டிலில் க்ளிக் பண்ணி பார்த்தேன். அப்பதான் மேலே அந்த பதிவின் லிங்க் வந்தது. அப்ப தமிழ்மணம் ஓட்டுப்பட்டையும் தெர்ந்தது.
நீங்க சொல்லியிருந்தபடி அந்தக்”கை”
மேல க்ளிக் பண்ணினேன். ஓட்டுப்போட தனியா லாகின் பண்ணி ஓட்டும் போட்டுட்டேன். இவ்வலவு நாளா இது தெரியாம இருந்தது. அடுத்தகேள்விக்கும் படில் சொல்லுங்க. மீண்டும் நன்றி.
நல்ல விளக்கம் லஷ்மிம்மா.. லஷ்மி என்ற பெயர் எச்சுமி ஆவதும் சிலசமயம் லச்சு ஆவதும் உண்டு இல்லியா :-)))
சம்பிரதாயத்துக்காக பெரியவங்க பேரை வெச்சாலும், தலைல அடிச்சமாதிரி பேரைச்சொல்லி கூப்பிடமுடியாதுங்கறதுக்காக வைக்கிற செல்லப்பெயர்கள் இன்னும் வேடிக்கை இல்லியா :-)))
பதிவை தொடர்ந்ததுக்கு நன்றி.
பெயர் காரணம் பகிர்வு வெகு சுவாரஸ்யம்.
:)நல்ல சுவாரசியமான பெயர் கதை.
இங்க அதே பல லக்ஷ்மிகளுக்கு நடுவில் நானும் மாட்டி அனுபவிச்சிருக்கேன் :)
அமைதிச்சாரல் வருகைக்கு நன்றிங்க.
என் தங்கை குழந்தைகள் எல்லாரும் என்ன எச்ச(காக்கா எச்சமா, குருவி எச்சமா?) பெரிம்மான்னு தான் இப்பவும் கூப்பிடராங்க.
ஸாதிகா, வருகைக்கு நன்றிம்மா.
முத்துலட்சுமி, வருகைக்கு நன்றி, என் மாமியாருபேரு சீதாலஷ்மி, என் பாட்டிபேரு ஜெயலஷ்மி, பெரியம்மாபேரு ராமலஷ்மி,சித்திபேருமுத்துலஷ்மி,
அத்தைபேரு பாக்கியலஷ்மி இன்னும் இருக்கு. லஷ்மி எத்தனை லஷ்மியடி?
Sorry writing in English.
Not yet influenced with this Computer.
Very nice write ups.
Adhu seri unga oor eathu?
viji
விஜி,வருகைக்கு நன்றிம்மா. எனூரு திருனெல் வேலி ஜில்லாவில் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள அப்பளத்திற்கு மிகவும் பிரபலமான கல்லிடைக்குறிச்சிதான்.(இத்துனூண்டு
சின்ன ஊருக்கு என்ன பில்ட் அப் பாரு)
ஆமா நீங்க எந்த ஊரும்மா?
பெயர் காரணங்கள் சுவாரஸ்யமாக இருந்தன
HVL,வருகைக்கு நன்றிங்க.
ஆகா.. இப்படி எல்லாம் ஆகிவிட்டதா :)
மாதேவி, வருகைக்கு நன்றி.
Post a Comment