தாத்தாவுக்கு மமியார் ஒரே பொண்ணு. வேறயாரும் கிடையாது.அதனால
அவரும் இவங்க கூடவே தங்கி, சமையலும் வீட்டையும் நிர்வாகம் பண்ணி
வந்தார். மாமியாருக்கு என் வீட்டுக்காரர் ஒரே பிள்ளை.அப்பாவும் மகனும்
ஆபீஸ்போயி சம்பாதிக்கணும். மாமியார் உடம்பு முடியாதவங்க . தாத்தா
கூட இருந்தது அவங்களுக்கு சவுரியமாகவே இருந்தது. சமையல் பாத்திரங்கள்
தேய்க்கப்போனேன். வைக்கொல்லில் சாம்பலும் சீக்காபொடியும் பிரட்டிண்டு
ஒவ்வொரு பாத்திரமாக் கவனமாக தேய்த்தேன்.சாதம் பண்ணவெங்கலபானை
குழம்பு பண்ண கையாசட்டி, ரசம் பண்ண ஈயசெம்பு, கீரை மசிக்க மண் சட்டி
எல்லாம் ஒன்னிச்சு வேக வைக்க பெரிய பித்த்ள்ளைக்குக்கர் என்று எல்லா
பாத்திரங்களும் ஏக கனம். ஒரு வழியா பாத்திரம்லாம் தேய்த்து கழுவி துடைத்
து அதனதன் இடதில் வைத்தேன்.
தாத்தாவிடம் ஏன் தாத்தா பாத்திரம் தேய்க்க, துணி தோய்க்க வேலைக்காரி
வச்ச்க்கலாமே என்றேன். ஏம்மா கஷ்டமா இருக்கா என்றார்.இவாள்ளாம்
ரொம்ப ஆசாரக்காரா. வீட்டுக்குள்ள வேலைக்காரி காலை வைக்கவே சம்ம
திக்கமாட்டா. பின்னாடிபோயித்தான் எல்லா வேலையும் செய்யனும்.அது
வும் தவிர அவ அலம்பி வைச்சாலும் நீயும் வேற தண்ணிபோட்டு அலம்பிதான்
வீட்டுக்குள வைக்கமுடியும். துனியும் அவதோச்ச துணியை நீயும் திரும்ப
நல்ல தண்ணி விட்டு அலசி பிழிஞ்சு காயப்போடனும்.அவளுக்கு தனியா தண்ணீர், உனக்கு வேர தனியா தண்ணீர் என்று நிரைய தண்ணி வேணும்.
அந்த அளவுக்கு பிடிச்சு வைக்க ஏனம் இல்லை. அவ வேலை பண்ணினாலும் உனக்கும் வேலை ஒன்னும் குறையாது. தவிர உன் மாமனார்ரொம்ப சிக்கனம்.
அனாவசியமா ஒரு பைசா கூட செலவு செய்ய சம்மதிக்க மாட்டார்.
வேலைக்காரிக்கெல்லாம் 10- ரூவா க்டுப்பதெல்லாம் அதிகம் என்பார். தவிர
அவருக்கு 250 ரூப சம்பளம், சீனுவுக்கு 100 ரூபா சம்பளம். அதுல நாம 5 பேர்
வாழ்க்கை நடத்தியாகணும். கட்டும் செட்டுமா இருந்தாதானே முடியும்?
என்றார்.பலசரக்கு, காய்கறில்லாம் குறைவில்லாம வாங்கி போட்டுடுவார்.
உனக்கும் நாளாக, நாளாக பழகிடும்.உங்க வீட்ல செல்லமா வளந்திருக்கே
இல்லியா அதான் உனக்கு கஷ்டமா இருக்கு என்றார். இங்க ஒரு விஷயம்
சொல்லணும். பிறந்தவீட்டில் சொகுசா இருந்தப்போ அதையும் நான் பெரிசா
நினைக்கலை. இங்க ப்ழக்கமே இல்லாம இவ்வளவு வேலைகளும் செய்ய
வேண்டி இருந்ததை கஷ்டம்னும் நினைக்கவே இல்லை.எதையும் யதார்த்த
மாக எடுத்துக்கொள்ளும் மனசு அப்பவே அமைஞ்சிருந்த்து. ஒருவேளை
இதுதான் பிறவிக்குணமோ?
மத்யானம் சாப்பிட்டு வேலை எல்லாம் முடிய 2 மணி ஆச்சு. தாத்தா கிச்சனிலேயேதுண்டு விரிச்சு படுத்துட்டார். மாமியார் முத ரூம்ல வழக்கம்போல படுத்துனு இருந்தா,னான் இப்போ என்ன செய்யனும்னு
புரியலை. கீழ ஒரு பாய் போட்டு நானும் படுத்துட்டேன். கண்ணைச்சுழட்டிண்டு
வந்துடுத்து.பொழுதுபோக்குன்னு எதுவுமே கிடையாது. சாயன்காலம் இவர்
5 மணிக்கு வந்தார். தாத்தா திரும்ப கரி அடுப்பு பத்தவச்சு காபி போட்டு
பஜ்ஜி பண்ணி தந்தார்.ஒருவாரத்துக்கு் வாங்கும் காய்கறி களை கிச்சனில்
ஒரு சாக்கை ஈரம் பண்ணி காய்களை அத்ன்மேல பறப்பி வைத்து மேலாக
வும் ஒரு சாக்கை ஈரம் பண்ணி மூடி வைப்பார். ஒரு வாரமும் காய் கள்
வாடியோ, அழுகியோ போகாமல் நல்லாவே இருக்கு.
இரவு சமையலுக்கு ஏற்பாடுகள்.ஆரம்பம்.காலை மாதிரி விஸ்தாரமா இல்லைனாலும் 5பேருக்கு என்ன தேவையோ அது பண்ணித்தானே ஆகனும்.
மத்யானம் பண்ணினதில் என்ன மிச்சம் இருக்குனு பாத்துண்டு இரவுக்கு
ரெடி பண்ணூவார். நானும்தாத்தாகூடவே இருந்ததால ஓரளவு எல்லாம்
கத்துக்க முடிந்தது.
Tweet | |||||
48 comments:
vadai
அப்பாடி பாத்திரங்களை நினைத்தாலே தலைசுத்துகிறது.சின்ன வயதில் பழக்கமே இல்லாத வேலைகளை அந்த காலத்தில் பெண்களி செய்ய சொல்லி இருக்கிறார்கள்.16 வயதிலேயே அத்தனை சுமை.
//பிறந்தவீட்டில் சொகுசா இருந்தப்போ அதையும் நான் பெரிசா
நினைக்கலை. இங்க ப்ழக்கமே இல்லாம இவ்வளவு வேலைகளும் செய்ய
வேண்டி இருந்ததை கஷ்டம்னும் நினைக்கவே இல்லை.எதையும் யதார்த்த
மாக எடுத்துக்கொள்ளும் மனசு அப்பவே அமைஞ்சிருந்த்து. //
மிகவும் நல்ல மனசு..
sweet memories!
in old days, so many dishes for coking! it's a wonderful experience
thanks for sharing it
good post
////குழம்பு பண்ண கையாசட்டி, ரசம் பண்ண ஈயசெம்பு, கீரை மசிக்க மண் சட்டி////
நன்றியம்மா நன்றி... தமிழ் எங்கும் வாழ்கிறது.. இங்கும் கூட..
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_08.html
பெண்கள் என்றால் சகிப்புத் தன்மைதானோ?
//அனாவசியமா ஒரு பைசா கூட செலவு செய்ய சம்மதிக்க மாட்டார்.//
நல்ல கொள்கைமா.
எதர்க்கு நாம் அனாவசியமாக செலவு செய்யனும் ?
அருமையான தொடர் தொடருங்கள்.
தொடர்ந்து தங்கள் பதிவைப் படிப்பதன்மூலம்
அந்தக் காலத்தில் ஆசாரமான குடும்பங்களில்
பெண்களால் வீட்டுப்பராமரிப்பு தவிர
வேறு பிற விஷயங்களில் லேசாகவேனும்
கவனம்செலுத்தமுடியுமா என்பது கேள்விக்குறியேஎன்பது தெரிகிறது
தங்கள் பதிவின் மூலம் ஒரு தலைமுறையை
அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறீர்கள்
தயவு செய்து அவசரம் காட்டாமல் இதேபோன்று
நிதானமாக இன்றுவரை தொடர்ந்து வாருங்கள்
தொடர்ந்து வருகிறோம் 50 பதிவாயினும் பரவாயில்லை
அன்புடன்....
டக்கால்டிவ்வருகைக்கு நன்றிங்க.
அமுதா, வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிம்மா.
மாதவன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
மாத்தியோசி, வருகைக்கும் கருத்
துக்கும் நன்றிங்க.
செல்லா,வருகைக்கு நன்றி.
ம.தி வருகைக்கு நன்றி நாம
தமிழ்க்காரங்க. நாமதானே தமிழை வாழ
வைக்கனும்.
சௌந்தர் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்
தியதற்கு நன்றிங்க.
பிரபு பெண்களுக்கு அடையாளமே
சகிப்புத்தன்மைதான்.
அந்நியன்2 வருகைக்கும் கருத்
துக்கும் நன்றிங்க.
ரமணி சார் நன்றிங்க. நான்
ரொம்ப இழுவையா இழுக்கரே
நோன்னு நினைச்சேன். உங்க பின்னூட்டம் அப்படி இல்லைனு
சொல்லுது.
நன்றாக இருக்கிறது.தொடர்கிறேன்...
மாதேவி நன்றி.
எதையும் யதார்த்த
மாக எடுத்துக்கொள்ளும் மனசு அப்பவே அமைஞ்சிருந்த்து. ஒருவேளை
இதுதான் பிறவிக்குணமோ?//
சகிப்புத் தன்மைக்குப் பாராட்டுக்கள்.
romba nallaa irukku lakshmimma. intha kaala pengalukku porumai enraal enna enru unga pathivugalai padikka sollanum. niraiya mana muthircciyai tharakkoodiya nadai :)
vaazzthukkal.:)
இராஜ ராஜேஸ்வரி, வருகைக்குக் கருத்துக்கும் நன்றிம்மா.
அன்னு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.
பழைய நினைவுகள்… நன்றாக இருக்கிறதம்மா உங்கள் நினைவலைகள். தொடருங்கள்.
நண்பர்களே.
தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html
வெங்கட் வருகைக்கு நன்றி.
அ ந் நியன்2 வருகைக்கு நன்றி.
நீங்க சொல்றச்சே எனக்கே தாத்தா சமையலை சாப்பிட ஆசை வந்துவிட்டது,இப்படி தாத்தா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.நல்ல பகிர்வு லஷ்மிமா.
rombha nalla irukku aunty.
enakku tamilla typing saivadhu eppadinnu theriyalai. adhanala ippadi type adikka vendiyadha aaiduthu. sorry. adhu part of malarum ninaivugallukku waiting.
ஆஸியா ஓமர்வருகைக்கும் கருத்துக்கும்னன்றிங்க.
ராம்வி, தமிழோ, ஆங்கிலமோ வருகை தந்து கருத்தும் சொல்லி இருக்கீங்களே
அதுக்கு நன்றி.
"பிறந்தவீட்டில் சொகுசா இருந்தப்போ அதையும் நான் பெரிசா
நினைக்கலை. இங்க ப்ழக்கமே இல்லாம இவ்வளவு வேலைகளும் செய்ய
வேண்டி இருந்ததை கஷ்டம்னும் நினைக்கவே இல்லை.எதையும் யதார்த்த
மாக எடுத்துக்கொள்ளும் மனசு அப்பவே அமைஞ்சிருந்த்து. ஒருவேளை
இதுதான் பிறவிக்குணமோ?
"
எதிர்பார்ப்பு இல்லாத நல்ல மனசும்மா உங்களுக்கு.
தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். தொடருங்கள் மலரும் நினைவுகளை.
கோவை2தில்லி வருகைக்கு கருத்துக்கு நன்றி.
haa haa ஹா ஹா
சி.பி. செந்தில்குமார் வருகைக்கு நன்றி. ஆமா எதுக்கு சிரிச்சீங்க?
சுவாரஸ்யமான நினைவுகள் ! மலரும் நினைவுகள் ! என் மனதிலும்!
சித்ரா, வருகைக்கு நன்றி
neenga sonna madhiriya NHM download saidhu vittan.type adikka try pannanumn. thank u aunty.daily aavaloda unga blogskku wait pannaren mukkiyama malarum ninaivugallukku.
50 varushathukku mundhina valkaiya patri therindhu kolla engalukku oru sandarppam kidaikiradhu.
raamvi வருகைக்கு நன்றி.
//எதையும் யதார்த்த
மாக எடுத்துக்கொள்ளும் மனசு அப்பவே அமைஞ்சிருந்த்து//
அப்படி ஒரு மனசு எல்லாருக்கும் அமைஞ்சுடாது.அது உங்களுக்கு கிடைத்த வரம்தான்
ராஜி ஆமாம்மா.
//எதையும் யதார்த்த
மாக எடுத்துக்கொள்ளும் மனசு அப்பவே அமைஞ்சிருந்த்து. ஒருவேளை
இதுதான் பிறவிக்குணமோ?//
ரொம்ப அருமையா சொன்னீங்க...! லேட்டா வந்ததுக்கு சாரி...!
SATHIS KUMAR NANRI.
Dear Lakshmi, xour post takes me back to my childhood days, when we did not gas connection.
You have a wonderful Mmemory and it has courage and patience and simple correspondence. I am so happy to see this and read about your early life.
God bless you ma.
valli simhan muthal muraiya vanthirukinga santhosham atikkati vanga.
Post a Comment