ஒரு குயர் ரூல்ட் பேபர், பார்க்கர், சியெல்லொ,ரேனொல்ட் என்றுவகைக்கு ஒரு
பேனா, ஃப்ளாஸ்க் நிறையா சூடாஸ்ட்ராங்கா காஃபி, கொறிப்பதற்கு கொஞ்சம்
கடலை, சாக்லெட் என்று டேபிள் பூராவும் பந்தாவாக பரப்பி வச்சுண்டு கூடவே
மாதாந்திர வாராந்திர தமிழ் பத்திரிக்ககளையும் எடுத்து வச்சுண்டு உக்காந்தேன்.நல்லா வசதியாக குஷன் சேரில் ஹாயாக சாய்ந்து உக்காந்துஐபாட்டையும்காதில் சொருகிண்டேன்.குன்னக்குடி, நாமகிரிபேட்டை,கத்ரி கோபால் நாத்காயத்ரி வீணை, மாண்டலின் சீனிவாஸ் எல்லாரையும் துணைக்கு வச்சுண்டேன்.
இது தவிர, ஹிந்தி ,தமிழ்,பாட்டுக்களையும் விட்டு வைக்கலை.
பெட்ரூம் கதவையும் சாத்தி, கதவின் வெளியே, டோண்ட் டிஸ்டர்ப் கார்டையும்மாட்டினேன்.இதெல்லாம் எதுக்கா? அது ஒன்னுமில்லே.எனக்கு வெகு நட்களாகஒரு சந்தேகம்.(இந்த வரிகளை தில்லானாமோகனாம்பாள் ஜில், ஜில்குரலில்படிக்கவும்.) இப்ப எந்த தமிழ் பத்திரிக்கையை எடுத்தாலும் வாசகர்களுக்கு என்று போட்டி மெல, போட்டிகளாக வைத்து பரிசு மழை பொழிகிரார்கள்.ஏதானும் ஒரு போட்டியிலாவது கலந்துண்டுஒரு சின்ன பேனாவையாவதுபரிசா வாங்கிடனும்னு நினைச்சேன்.அதான் இத்தனை பில்ட் அப்.
முதல்ல ஏதானும் நகைச்சுவையாக எழுதலாமான்னு யோசிச்சேன். இதுவரை
யாரும் சொல்லாததை சொல்லனும்னு நினைச்சு பத்ரிகைகளை புரட்டினேன்,
ஆரம்பமே அமர்க்களமா இருக்கனும் என்று கொஞ்சம் கடலை கொறித்து
ஒருவாய் காபி முழுங்கி, ஒரு சாக்லெட்டையும் வாயில் அடக்கிண்டேன்.
நகைச்சுவையில் எத்தனை ரகம் உண்டோ அத்தனையும் அனுராதா ரமணன்
எழுதிட்டாங்க. அங்க யோசிக்க விஷயமே கிடைக்கலே. சரி இது சரிப்படாது.
ஏதானும் ரெசிப்பி புதுசா அனுப்பலாம்னு யோசனை. புக்கைபார்த்தா வித, வித
மான ரெசிப்பிகள் கண்ணைக்கட்டுது.எல்லாரும் கலக்குராங்க. இதுவும் சரியா
வராது. எந்தபத்ரிகையை புறட்டினாலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால்
வரை உள்ள அழகு குறிப்புகள் எக்கச்சக்கமா இருந்தது.
அடுத்து ஹெல்த் கேர் கேள்விபதில்களில் எல்லா வித மருத்துவ ஆலோசனை
கள் நிபுணர்களால் அலசப்பட்டிருந்தன.மனம் விட்டு பேசும் டைரி பகுதியில்
எல்லாரும் தங்கள் சொந்தக்கதை, சோகக்கதைகளும் பிட்டுப், பிட்டு வச்சிருந்தாக.கிராமத்து வாசனை என்று பாரத தேவிகள் விலா வாரியா சொல்லி யிருந்தாங்க.இன்னமும் கைவேலைப்பகுதி,சொந்த வியாபாரம் செய்து முன்னுக்கு வருவது எப்படி என்று மகளிர் முன்னேற்றக்குழு வினர் வேறுஆலோசனைகளும் சொல்லி இருந்தார்கள். எந்தப்பக்கம் போனாலும் திறமையானவர்களின் படைப்புக்கள் பிரமிக்க வைக்கின்றன. இதில் நான் என்னத்தைஎழுதிக் கிழிக்கன்னு மனசு சோர்வானது தான் மிச்சம். ஆனாலும் தோல்வியைஏற்றுக்கொள்ளமனமில்லே.ஏதானும் எழுதியே ஆக்ணும் என்கிர வீம்பு.
இதுவரை யாரும் சொல்லாத விஷயமகவும் இருக்கணும்னு யோசித்தேன்.
மனசுல ஒரு விஷயம் பல்பு எரிஞ்சது. இங்க நான் வந்து இன்னமும் தமிழ்
பத்திரிகைகள் வாங்கப்படும் பாடு பத்தி சொல்லலாம்னு நினைச்சேன் சொல்லரேன். இப்பல்லாம் எனக்கு பத்ரிகைகள் படிக்காம ஒரு நாள் கூட இருக்கமுடியல்லே.என்னதான் நெட்ல படிக்கலாம்னாலும் கூட அது அவ்வளவுசவுரியமா இல்லே. கண் , கழுத்தெல்லாம் வலிக்க வலிக்க படிக்க வேண்டியிருக்கு. கையில புக் வச்சுண்டு, பெட்ல படுத்துகிட்டோ, சேரில் சாய்ந்துகிட்டோபடிப்பதுதான் ஆனந்த வாசிப்பு. நல்லா இருக்கு. மாசாந்திர பட்ஜெட்டில் முதல்லபத்ரிகைகளுக்குன்னு தான் எடுத்து வைப்பேன்.அனேகமா மாசம் 300 ரூபாய்க்குபுக்ஸ் வாங்குவேன்.
நான் இருப்பது புற நகர் பகுதியில். கடைகல் எல்லாமே 5 கிலோ மீட்டர் தள்ளி
தான் இருக்கு. ஒரு புஸ்தககடைக்காரனிடம்(தமிழ்காராதான்) போயி
வீட்ல புக் கொண்டு போடமுடியுமான்னு கேட்டேன். நீங்க ஏதானும் ஒரு
தமிழ் பேப்பர் வாங்கினா போடரோம்னு சொன்னா. எனக்கு பேப்பர் படிப்பதில்
விருப்பமே இல்லே அதுவும் இங்க வரும் தமிழ் பேப்பர்4-பக்கம் தான் இருக்கும்.
அதுவும் சாணிப்பேப்பர். சரின்னு சொன்னேன் . அடுத்தஒருவாரம் பேப்பர்
புக்ஸ் எல்லாம் சரியாவந்தது. அப்பரம் வரல்லே. கடையில் போயி கேட்டேன்
உங்க வீடு ரொம்பவே உள்ளே தள்ளீ இருக்குனு ஒரு பையனும் அவ்வளவு
தூரம் வரமாட்டேங்கராஙன்னு சொன்னாங்க.
சரி, சென்னைக்கே ஒருவருஷத்துக்கு சந்தா அனுப்பலாம்னு நினைச்சு ஒரு
மாசாந்திர புக்குக்கு அனுப்பினேன். அதுவும் ரெண்டுமாசம் சரியாவே வந்தது.
இங்க நான் இருப்பது மூணாவது மாடியில். இங்குள்ள போஸ்ட்மேன் யாரும்
மூணு மாடி ஏறிவந்து டோர் டெலி வரி பண்ணமாட்டாளாம்.கீழ வெத்தலபெட்டி
சைசில் சின்னதா ஒரு போஸ்ட் பாக்ஸ் வச்சிருக்கு. அதில் கார்டு, கவர் மட்டுமே உள்ள் நுழையும். புக் போச்டெல்லாம் கீழயே வச்சுட்டு போயிடுவா
வாச்மேனும் கவனிக்க மாட்டான். நாம் அதான் சாயங்காலமா போயிப்பாத்து
எடுத்துண்டு வரனும். நான் பொய்யி பாக்கும்போது என் புக்கெல்லாம் அஙக்
வரும் மாடு ஆடு நாயெல்லாம்சாப்பிட்டு அசைபோட்டுட்டு இருக்கும்.
இப்பவரை அதே நிலமைதான்.இதுக்கு என்னதான் தீர்வு?
Tweet | |||||
37 comments:
//இதுக்கு என்னதான் தீர்வு? //
//.கீழ வெத்தலபெட்டி
சைசில் சின்னதா ஒரு போஸ்ட் பாக்ஸ் வச்சிருக்கு. அதில் கார்டு, கவர் மட்டுமே உள்ள் நுழையும். //
புஸ்தக சைசுல ஒரு பெட்டி வெச்சிடுங்களேன்....
நியாயமான ஆசைகள் தானேம்மா உங்களுடையது. தமிழகம் விட்டு வெளியே வந்துவிட்டால் இந்த வாராந்திர, மாதாந்திர புத்தகங்கள் அவ்வளவாக கிட்டுவதில்லை என்பதில் எனக்கும் வருத்தம்தான். பக்கத்தில் இருந்தாலும் தில்லியில் வீட்டில் டெலிவரி எல்லாம் செய்வதில்லை. ஆன்லைன் படிப்பு தான் இப்போதைக்கு.
ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள் - உங்கள் தபால் பெட்டியை சற்று பெரியதாய் செய்து [வாய் அகலமாய்] கீழே மாட்டி விடுங்களேன்... அதிலேயே வசதியாய் போட்டு விடும்படி...
ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிரிங்களே...
தங்களின் அனுபவம் நகைச்சுவையாக நல்லாவே இருக்குது. பத்திரிகைகளுக்கு நாம் எழுதி அனுப்ப நிறைய பொறுமை வேண்டும். நம் படைப்பு வெளிவர மிகவும் அதிர்ஷ்டமும் வேண்டும். வெளிவருமா? வராதா? என்று கடைசிவரை தெரியவே தெரியாது. போதிய தபால்தலை வைத்து அனுப்பினால் ஒரு 6 மாதம் கழித்து அது திரும்பி வரும். தபால்தலையுடன் கூடிய சுயவிலாசமிட்ட கவர் அனுப்பாமல் போனால் 6 வருடங்கள் ஆனாலும் என்ன ஆச்சு என்றே நமக்குத் தெரியாது. நல்ல படைப்புகள் எழுதி, வெளியாகி, ஓரளவு பிரபலமாகி விட்டால், தொடர்ந்து ஆதரவு கிடைக்கக்கூடும். என்னுடைய ஆலோசனை என்னவென்றால், ப்ளாக்கில் எழுதுவதே நல்லது. பரிசோ சன்மானமோ கிடைக்கா விட்டாலும், ஆத்ம திருப்தி கிடைக்கும். பலபேர்களின் பின்னூட்டம் உற்சாகம் அளிக்கும். அதைவிட பெரியதாக எந்த உற்சாகமும் இந்தப்பத்திரிகைக்காரர்கள் தந்துவிடப்போவதில்லை, என்பதே என் கருத்து.
கஷ்டம் தான்...நீங்க பேசாமல் on-lineயில் வாங்கி கொண்டு print எடுத்து படித்து பாருங்க...
computerயிலே உட்கார்த்து படிக்கவும் போர் அடிக்கும்..இப்படி ப்ரிண்ட் எடுத்தால் வசதியாக இருக்கும்.
Thanks for introducing me in the blog. As I am out of station for holidays, I saw the post only today. Thank U very much.
////நான் பொய்யி பாக்கும்போது என் புக்கெல்லாம் அஙக்
வரும் மாடு ஆடு நாயெல்லாம்சாப்பிட்டு அசைபோட்டுட்டு இருக்கும்.
இப்பவரை அதே நிலமைதான்.இதுக்கு என்னதான் தீர்வு?////
ரொம்ப சிம்பிள் , அந்த ஆடு மாடு , நாய் எல்லாத்தையும் , ஸ்கூல்கோ , இல்ல காலேஜ் கோ அனுப்பி முதல்ல படிக்க வைங்க , அதுங்க எல்லாம் நல்ல படிச்சு பாஸ் பண்ணதுக்கு அப்புறம் பாருங்க , உங்க புக் எல்லாத்தியும் சாபிடாம , அதுங்க சமத்த உக்காந்து படிச்சுட்டு , பத்திரம வச்சு இருக்கும் , நீங்க போகும் போது எந்த சேதாரமும் இல்லாம எடுத்து கிட்டு வரலாம் அம்மா . . . .
மாதவன், யொசனை நல்லாதான்
இருக்கு. அது பில்டிங்க் காரங்க
கையிலன்னா இருக்கு.
வெங்கட் உங்க யோசனையும் ஓகே
தான். ஃப்ளாட் ஸிஸ்ட்டம் வீடு
களில் நம்ம இஷ்ட்டத்துக்கு எதையுமே
செய்யமுடியாதே.
கோபால்சார் நானும் பத்ரிகைகலுக்கு
எழுதி அனுப்பிண்டு இருந்தப்போ
ரொம்பவே கஷ்ட்டங்களை அனு
பவிச்சுட்டேன். கம்ப்யூட்டர் இப்பதானே
அறிமுகம். இப்ப இதுதான் வசதி.
பிரகாஷ் கஷ்ட்டப்பட்டுதான்
படிக்கவேண்டி இருக்கு. எனக்கு
எதுவுமே ஈசியா கிடைச்சதே
இல்லே.ஒன்னொன்னுக்குமே
போராட்டம்தான்.
கீதா உங்க யோசனைக்கும் நன்றி.
H.V.L. நன்றி.
வாப்பா வா. ஆமா இந்த அனிமல்
ஸ்கூல் எங்க இருக்குன்னு கொஞ்சம்
சொல்ரியா. எனக்கும் கொஞ்சம்
வசதியா இருக்கும்.
இத்தனை சிரத்தை எடுத்து ஒரு புத்தகம் படிக்க என்றால் நிச்சயம் அது பாராட்டத்தக்கது தான்.
ஹப்பா..பத்திரிகைகள் வாங்கி படிப்பதற்குள் நாக்குதள்ளிப்போய் விடும் போலும்.
இராஜேஸ்வரி வருகைக்கு நன்றி.
ஸாதிகா வருகைக்கு நன்றி.
படிப்பு என்பது சும்மாவா ஆறு, கடல் எல்லாம் தாண்டவேண்டி இருக்கிறதே:))
Hi,
I have read your experience in Paraniyum. My father also have the same knee problem doctor suggest to knee replacement. But we plan to go for Ayurvedic as it doesn't have no side effects.It would be great if you provide me the Phone no and address of the paraniyum to my email id.
My email id is aspirations28@gmail.com.
Awaiting for your reply.
Thanks,
Anu
தமிழ் வார மாத பத்திரிக்கைகள் எல்லாம்
மக்களுக்கு பிடித்தது எனஅரைத்த மாவைத்தான்
அரைத்துக்கொண்டு உள்ளார்கள்
என்வே அதை பெரிய இழப்பாகக் கொள்ளவேண்டியதில்லை
என்பது என் கருத்து
உண்மையில் ஒரு முன்னனி வார மாத இதழா அல்லது
தங்கள் பதிவாஎனக் கேட்டால் நான் உண்மையில்
தங்கள் பதிவைத்தான் தேர்ந்தெடுப்பேன்
தங்கள் பதிவில் உள்ள சமூக உணர்வோ
அனுபவ முத்திரைகளோ சத்தியமாய் அவைகளில் இல்லை
தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
மாதேவி வருகைக்கு நன்றி.
அனுசூயா மெயில் அனுப்பி யிருக்கேன்.
ரமணீ சார் என் எழுத்தை இவ்வளவு ரசிக்கரீங்கன்னு தெரிய ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நன்றி.
அனு சுயா உங்க மெயில் போகமாட்டேங்குதே. எர்ரர் காட்டுது.
நான் என் பதினைந்தாவது வயதில் பத்திரிகைக்கு எழுதினேன். சில வெளிவந்தன. நான் எழுதியதை விட தரம் குறைவானவை பிரசுரமாகி என் கவிதைகள் புறக்கணிக்கப்பட நிறுத்திவிட்டேன். இப்போது ப்ளாக் தான் வடிகால் .
போஸ்ட் பாக்சை பெரிதாக்கி விடுங்களேன்
சிவ குமாரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. போஸ்ட் பாக்சை எப்படி பெரிது பண்ண?
பிலாக்கில எழுதி, நாலு பேர் பாத்து கமெண்ட் போடற சுகமே தனி தான்!
வர,வர எனக்கு பத்திரிகைகளுக்கு அனுப்பறதில்ல பிடித்தமும் இல்ல...
இது நமக்கெல்லாம் ஒரு அற்புதமான வ்டிகால்!!
அம்மா வணக்கம்
உங்களின் கருத்துக்களை பல தளத்தில் படித்திருந்தாலும்
உங்களின் எழுத்தை படிப்பது இதுவே முதல் முறை (வலைசரத்தில் ஒரு அறிமுகம் படித்திருக்கிறேன்) எந்த விதமான அலங்காரமும் இல்லாமல் நீங்கள் பக்கத்தில் அமர்ந்து பேசுவது மாதிரியாக இருக்கிறது உங்களின் எழுத்து, அதே நேரத்தில் உங்களின் படிக்கும் ஆர்வம் என்னை ஆச்சர்ய பட வைக்கிறது , நல்ல பதிவு இனி தொடர்ந்து வருவேன்
வணக்கம்
வாழ்த்துங்கள் என்னை
A.R. ராஜ கோபாலன் முதல் வருகைக்கு நன்றி. இனி அடிக்கடி வாங்க.
ஆரன்ய நிவாஸ் ராமமூர்த்தி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Thanks a lot Aunty. Can you send me to this id below,
u.anusuya@gmail.com
அனுசூயா அனுப்பரேன்மா
நீங்கள் பத்திரிகைகளுக்கெல்லாம் எழுதிப்பார்த்தீர்களா?இப்போது எந்தப்பத்திரிகைகளும் நன்றாகவே இல்லையே-அமுநசுரபி,கலைமகள்
தவிர.நான் எல்லாவற்றையுமே நிறுத்தி
விட்டேன்.புத்தகங்கள் மற்றும் வலைத்த
ளங்கள்தான்.வலைத்தளங்களைப்படித்து மாளவில்லையே அம்மா.கொட்டிக்கிடக்கின்றனவே.
பகிர்வுக்கு நன்றி அம்மா
கோபால்சார்,ரமணிசார் கூறுவது
100பர்சண்ட் சரி.உங்களுடையதைப்போல
மிகச்சிறந்த பதிவுகள் எளிதாக கிடைக்கின்றனவே.இவைகளே போதும்
என்று நினைக்கிறேன்.இலவச இணைப்பாக நல்ல நட்புகள்வேறு
கிடைக்கின்றது.இல்லையா?
ராதாகிருஷ்னன் முதல்ல பத்ரிகைகளில் தான் எழுதிவந்தேன் லஷ்மிஸ்ரீனிவாசன் என்னும் பெயரில். மங்கையர்மலர், கலைமகள் , அவள் விகடன், சினேகிதி எல்லாத்லயும் வந்திருக்கு. ப்ளாக் எழுத ஆரம்பித்தபிரகு இங்கமட்டும்தான் எழுதரேன். இங்க எவ்வளவு நட்புகள் மலர்ந்திருக்கு அது மிகப்பெரிய சந்தோஷம். உங்க பேரு ராதாகிருஷ்னன் துரைசாமி மதுரை ஃபேஸ் புல கிடைக்கமாட்டேங்குது.
Post a Comment