Pages

Monday, September 19, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்(11)

ஆசிரமம் பேரு ஜனகல்யாண்.வய்தான முதியோர்களுக்காக நடத்தப்படும் முதியோர் இல்லம்.16, முதல் 20 முதியோர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு உறைவிடம் உணவு, உடுக்க உடை, பாதுகாப்பு கொடுத்து நன்கு கவனித்துக்கொள்கிராரகள்.அமைதியான சூழ் நிலையில் நன்கு பராமரித்து வருகிரார்கள்.பொழுது போக்குக்கு நிறைய புஸ்தகங்கள் , டி. வி எல்லாம் இருக்கு.ஆசிரமத்தைகவனித்துக்கொள்ள பணியாளர்களும் இருக்காங்க. சமையலுக்கும் தனியா ஆட்கள் இருக்காங்க. ரொம்ப அமைதியான இடம். அங்குள்ளவர்களின் முகங்களிலும் நிம்மதியும் சாந்தமும் பாக்க முடிந்தது. எங்க ஊரில் இந்த முதியோர் இல்லம் எல்லாம் மிகப்புதிய விஷயங்கள்தான். கூட்டுக்குடும்பமுறை சிதைந்துபோனதால் வந்த விளைவுதான் வேர என்ன சொல்ல. ஆண்டவன்படைப்பில் என்னல்லாம் ஏற்றத்தாழ்வுகள்.ஒருகாலத்தில் லட்சாதி பதியாக இருந்தவால்லாம் இன்று பிட்சாதி பதிகளா இருக்காங்க. அவர்களுக்கு தகுந்த வைத்திய வசதிகளும் செய்து கொடுக்கராங்க.


                         









ஆசிரமத்தை நடஹ்துபவர் பாம்பேயில் செண்ட்ரல் கவெர்மெண்ட் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். தனக்கு கிடைத்தஓய்வூதிய பணத்தில் இதுபோல ஒரு முதியோர் இல்லம் தொடங்கி சிறப்பாக பணியாற்றி வருகிரார். கஷ்ட்டத்தைக்கொடுக்கும் இறைவன் இதுபோல உதவிக்கும் தகுந்த ஆட்களை அனுப்பி வைக்கிரார். இவர்கள்செய்வது பெரிய சேவை தன்னலமில்லாத பொது நலத்தொண்டு. இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 நாங்களும் பிஸ்கெட்ஸ் பழங்கள் எல்லாம் வாங்கிண்டு போயி அங்குள்ளவர்களிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வீடு வந்தோம். மனசெல்லாம் பாரமா இருந்தது. 5மணிக்கு கிளம்பி கடைத்தெருபோயி கொஞ்சம் டிட் பிட்ஸ் வாங்கிண்டு காரில் திருனெல் வேலி கிளம்பினோம். ஸ்டேஷனில் கொஞ்சம் உறவுக்காரா பாக்கவந்திருந்தா. 6மணிக்கு வண்டி கிளம்பியது. நான் அங்கேந்தே தமிழ் வாசி பிரகாஷுக்கு போன் பண்ணினேன். நெல்லை எக்ஸ்ப்ரெஸ் மதுரைக்கு இரவு 9 மணிக்கு வரும் முடிந்தால் வா என்றேன். போன சந்திப்பில் போட்டோ எடுக்கலேன்னேன். சரி வரேன்னான்


                       





சொன்னபடி சீனா ஐயாவும் பிரகாஷும் மதுரையில் சந்தித்தார்கள். அல்வா கொடுத்தேன். அவர்களும் பழங்கள்கொண்டுவந்தா. மறக்காம முதல்ல போட்டோ எடுத்துண்டோம். வண்டி உடனே கிளம்பிடுத்து. மொபைலில்தான் போட்டோ எடுக்க முடிந்தது. க்ளியரா வரல்லை சுமாராதான் வந்தது.மறு நாள் காலை 6மணிக்கு தாம்பரம் வந்தோம். மறு நாள் நானும் அத்தையும் கிளம்பினோம். ஒரேஃப்ளைட்தான். நாம் மும்பையில் இறங்கிண்டேன் அவ நேரா அமெரிக்கா போனா. ஆக இனிமையா பயணம் முடிந்தது. மெட்ராஸ்டு மும்பை ப்ஃளைட்  டைம் ஒன்னரை மணி நேரம். ஆனா மும்பை சாந்தாக்ரூசிலிருந்து அம்பர்னாத்வர ரெண்டரை மணி நேரம் ஆச்சு என்னத்த சொல்ல. ஒருமாசமா பூட்டி இருந்த வீடு  அதிலும் நல்ல மழைக்காலம் வேறு வீடுபூரா  ஈரத்தோடு மக்கின வாடை. ஒவ்வொரு இடமாக்ளீனிங்க் பண்ணணூம். ஒருமாசமா ஜாலியா ஊர்சுத்தியாச்சு இப்ப வீட்டு வேலைகள் வெளி வேலைகள் என்று ரெடியா காத்துண்டு இருக்கு. மறு நாள் முதல் க்ளீனிங்க் ஆரம்பிக்கனும். இவ்வளவு நாள் கம்ப்யூட்டர் பக்கமே போக முடியல்லே.அதையும் கவனிக்கணும். ஆக வழக்கம்போல பிசி ஆயிடுவேன். அப்பாடா ஒருவழியா பயண அனுபவம் முடிஞ்சுது. இவ்வள்வு நாளும் பொறுமையா படிச்சவங்கல்லாம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சூ விட்டுக்கோங்க.

49 comments:

ஸாதிகா said...

பயணம் இனிதே முடிந்து நடைமுறை வாழ்கைக்கு வந்துட்டீங்க.அனைத்தை உடன் அருகே இருந்து பார்த்த ஃபீலிங்க்....

M.R said...

அழகிய பயணம் அழகாய் முடிந்தது .
தங்களின் எண்ணப் பதிவிற்கு நன்றி அம்மா .

ஸ்ரீராம். said...

ஊர் பார்த்து வந்த அனுபவம் உங்களுக்கு நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும். எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உடன் அழைத்துச் சென்று சந்தோஷங்களில் பங்கு கொள்ள வைத்தமைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

ஒருமாசமா ஜாலியா ஊர்சுத்தியாச்சு இப்ப வீட்டு வேலைகள் வெளி வேலைகள் என்று ரெடியா காத்துண்டு இருக்கு. மறு நாள் முதல் க்ளீனிங்க் ஆரம்பிக்கனும். இவ்வளவு நாள் கம்ப்யூட்டர் பக்கமே போக முடியல்லே.அதையும் கவனிக்கணும். ஆக வழக்கம்போல பிசி ஆயிடுவேன். அப்பாடா ஒருவழியா பயண அனுபவம் முடிஞ்சுது. இவ்வள்வு நாளும் பொறுமையா படிச்சவங்கல்லாம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சூ விட்டுக்கோங்க.

எங்கு சென்றாலும் பெண்களுக்கென்றே காத்திருப்பது இந்த வீட்டு
வேலைதானம்மா .அப்போ இனி இந்த உல்லாசப் பறவைக்கு வேலைப்பளு வந்துவிட்டது போலும் .உங்கள் வேலைகள் இலகுவாக முடிந்து வலைத்தளத்தில் புதிய செய்தியோடு
இயல்பு நிலைக்குத் திரும்ப கடவுள் துணைநிற்கட்டும் மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா ?......

K said...

உங்களது அழகான பயணத்தோடு எங்களையும் சேர்த்து பயணிக்க வைத்து, எம்மையும் ஊர் சுற்றிப் பார்க்க வைச்சுட்டீங்க! ரொம்ப நன்றியம்மா!

வாழ்த்துக்கள்! வீட்டு வேலைகளையும் கவனிச்சுக்கிட்டே, மறக்காம பதிவுகள் போடுங்க!

தமிழ்வாசி பிரகாஷ் said...

iniya payanam. ungalai santhithathil mikka magizhchi amma

RAMA RAVI (RAMVI) said...

அவ்வளவுதான பயணத்தொடர்.சீக்கிரமாக முடிந்து விட்டது போல உணர்வு.

உங்ககூடவே வந்து நீங்க பார்த்த எல்லா இடத்தையும் பார்த்த மாதிரியே இருந்தது அம்மா உங்க எழுத்தை படிக்கும் பொழுது.நன்றி.

கே. பி. ஜனா... said...

அனுபவங்களை அசை போட வாய்ப்பு இப்போது! வாழ்த்துக்கள்!

காட்டான் said...

முதியோர் இல்லங்கள் கவலைக்குரியது..

சாந்தி மாரியப்பன் said...

ஒரு மாசப்பயணமோ இல்லை ஒரு நாள் பயணமோ,.. வீட்டுக்கு வந்ததுமே காத்திருக்குதே கடமைகள் ;-))

சக்தி கல்வி மையம் said...

என்ன .. சென்னை பயண அனுபவம் முடிஞ்சதா?

துபாய் ராஜா said...

அழகான எழுத்து நடையால் உங்கள் கூடவே நாங்களும் பயணம் செய்தது போல் இருந்தது.

பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் அம்மா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

குறை ஒன்றும் இல்லை .வாழ்த்துக்கள் .

ADHI VENKAT said...

ஊருக்கு போறதுக்கு முன்னாடியும் வேலைகள் நிறைய இருக்கும். வந்த பிறகும் வேலைகள் காத்துண்டிருக்கும்.

நல்ல பயணமா இருந்ததும்மா.

கவி அழகன் said...

அருமையான பயணம் அமைதியான வாழ்க்கை

ஆமினா said...

மாமி........

ரொம்ப நாளா உங்க பின்னாடி நானும் வந்துட்டே இருந்தேன். திடீர்ன்னு மும்பைல என்னைய பத்திவிட்டது மாதிரி இருக்கு :-)

சீக்கிரம் விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்கோ :-)

மாய உலகம் said...

அல்வா கொடுத்தேன் என்று சொன்னவுடன்... சிரித்துவிட்டேன்... உங்களது நல் உள்ளம் இந்த பதிவில் பிரதிபலிக்கிறது பகிர்வுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்

அந்நியன் 2 said...

//இவ்வள்வு நாளும் பொறுமையா படிச்சவங்கல்லாம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சூ விட்டுக்கோங்க//

சரிம்மா...

அடுத்த பயணம் எப்போது?

பயணங்கள் முடிவதில்லை.

வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பயணம்.... பகிர்வுக்கு நன்றிம்மா...

Anonymous said...

அப்பாடா ஒருவழியா பயண அனுபவம் முடிஞ்சுது....

முடிஞ்சதா????

சீக்கிரமாக முடிந்து விட்ட உணர்வு...

Unknown said...

பயணம் நீங்க மட்டுமா போனீங்க
நாங்களுந்தானே வந்தோம்
நன்றி! சகோதரி!

புலவர் சா இராமாநுசம்

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

M.R. வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள் வருகைக்கும் அழ்கான பின்னூட்டத்துக்கும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

ஐடியா மணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

பிரகாஷ், வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கே.பி. ஜனா. வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

காட்டான் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கருன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

துபாய் ராஜா வருகைக்கு நன்றி நீங்களும் கல்லிடையா?

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கவி அழகன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமி பாம்பே கிளம்பியாச்சா எப்பவரே சொல்லு வெயிட்டிங்க்.

குறையொன்றுமில்லை. said...

mமாய உலகம் ஆமா அல்வா கொடுத்தேன்னா அர்த்தமே வேர இல்ல?

குறையொன்றுமில்லை. said...

அந்நியன்2 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆப்ரிக்கா போய் வந்தது பற்றி எழுதலாமான்னு நினைச்சேன்.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரெவரி நன்றி

குறையொன்றுமில்லை. said...

புலவர் சா. ராமானுசம் ஐயா வருகைக்கு நன்ரிங்க.

சுசி said...

ஆமா மாமி, கம்ப்யுடரையும் கவனிங்கோ அதுல தானே நாங்கல்லாம் இருக்கோம்.

சுசி said...

ஆமா மாமி, கம்ப்யுடரையும் கவனிங்கோ அதுல தானே நாங்கல்லாம் இருக்கோம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பயணத்தில் கூடவே நாங்களும் உங்களோடு வந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

குறையொன்றுமில்லை. said...

தானைத்தலைவி, கம்ப்யூட்டரையும் கவனித்ததால் தானே உங்க கூட எல்லாம் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

மாதேவி said...

இனிய பயணங்கள் தொடர்ந்தோம். தொடரட்டும் புதிய பயணங்கள்....

என்னை ஆதரிப்பவர்கள் . .