அந்த ஹாலின் நடுவில் பெரிய மர ஊஞ்சல் என்னை வாவ்வான்னு கூப்பிட்டுது. தரைபூரா க்ரேனைட் பதிச்சு பள பளன்னு இருந்துச்சு. ஒரு பெரிய கல்யாணமே நடத்தலாம் போல அவ்வளவு பெரிய ஹால். ஒருபுறம், ஹோம் தியேட்டர் சுற்றி நிறய சோபா செட்ஸ், இன்னொரு புறம் விஸ்தாரமாக பூஜாரூம். அங்கு இல்லாத சாமி படங்களே இல்லை. எல்லா படங்களையும் பள, பளன்னு துடைத்து வைத்து சந்தன குங்குமம் வைத்து மலர் மாலைகளால் அழகு படுத்தி இருந்தர்கள். தசாங்க மணமும் ஊதுபத்திமணமும் கமழ பூஜா ரூம் தெய்வீக மா இருந்தது. இன்னொரு புறமாக விருந்தினருக்காக ரெண்டு தனித், தனி ரூம்கள் நல்ல பெரிசா கட்டில் மெத்தை அட்டாச் பாத்துடன் அமர்க்களமாக இருந்தது. ஊஞ்சலை வீசி வீசி ஆட தாராளமாக இடமும் இருந்தது. ஒவ்வொரு அழகையும் கண்ணுக்குள் சிறை பிடித்தவாரே மெதுவாக நடந்துபோனேன். அத்தை, இதோ பாரு நேரா போயி ஊஞ்சல்ல உக்காராதே. அப்புரம் உன்னை அங்கேந்து எழுப்பவே முடியாதுன்னு மிரட்டியவாரே உள்ளே டைனிங்க் ஹால் கூட்டினு(கர, கரன்னு இழுத்துண்டு)போயிட்டா.ஒரே நேரத்ல 50 பேருக்கு இலை போட்டு பந்தி பரிமாறலாம்போல அவ்வளவு விஸ்தாரமான டைனிங்க் ஹால் இந்தக்காலத்துக்கு ஏத்தமாதிரி நடுவில் பெரிய டைனிங்க் டேபிலும் சேர்களும் கூட இருந்தது. மணக்க மணக்க பில்டர் காபி உபசாரம்பண்ணினா. அப்போ காலை 6.30 மணி தான் ஆகி யிருந்தது. அவர்கல் வீட்டிலும் பெரியவர்கள் சிறியவர்கள் என்று 6- பேர் இருந்தா, நாங்க 4 பேரு செந்தா மொத்தமா 10 பேரு இருந்தோம்.
கிச்சனும் நல்ல பெரிசா இருந்தது காலை வேலைகளில் அவர்கள் எல்லாரும் ரொம்ப பிசியா இருந்தா. நான் அத்தையிடம் பாத்ரூம் எங்க இருக்கு முதல்ல குளிச்சுடலாமேன்னேன். அடிக்கவே வந்துட்டா. என்ன நினைச்சுண்டிருக்கே நீ இது ஒன்னும் உங்க பாம்பே இல்லே பாத்ரூம்ல குளிக்க. நம்ம ஊராக்கும். இங்க வந்தா ஆத்தங்கரைக்குளியல்தான்னு தெரியாதான்னுகோவமாவே கேட்டா. எனக்கும் இவர்களின் பாலிஷான வீட்டைப்பார்த்ததும் நம்ம ஊருக்கு வதிருக்கோம்னே நினைவில் வல்லே. முன்னே எல்லாம் எவ்வளவு வசதி உள்ளவா வீடானாலும் காரைக்குடி செங்கல்தரைதான் இருக்கும் . மிஞ்சி, மிஞ்சி போனா சிவப்பு சிமெண்டில் தரை இருக்கும். எஙக் வீடும் பெரிசுதான் ஆனா அப்போல்லாம் க்ரேனைட்னு ஒன்னு இருப்பதே தெரியாத காலம்தான். அதனால நம்ம ஊர்ல இப்படி ஒரு பிரும்மண்டவீடான்னு மலைச்சுதான் போனோம் டைனிங்க் ரூம் தாண்டியும் பின்னால பெரிய கூடம் இருந்தது எல்லா இடமும் க்ரேனைட்டால இழைச்சு, இழைச்சுகட்டி இருந்தா. முன்னே இந்த தெருவில் உள்ள வீடுகளின் முன்புறம் கோவிலும் பின் புறம் வாய்க்காலும் ஓடும். பின்னடி தோட்டம் தாண்டினா வாய்க்கால் இருக்கும் எல்லாரும் அங்கதான் குளிப்பா. கொல்லைவாய்க்கால் உள்ளவா ஆத்தங்கரைபோக சோம்பல்பட்டு வாய்க்காலிலேயே குளிப்பா. இப்போ அந்த வாய்க்கால் போகும் வழியை கவெர்மெண்ட்காரா பெரிய சுவர்கட்டி தடுத்துவச்சிருக்கா.
நாங்க நாலுபேரும் துண்டு சோப்பு டப்பா எல்லாம் எடுத்துண்டு தாமிரபரணி நோக்கி நடக்க ஆரம்பிச்சோம். வீட்லேந்து கிட்ட தட்ட ஒரு கிலோமீட்டர் தள்ளிதான் ஆறு இருந்தது. அந்த தெருவில் சுமார் 20 வீடுகள் இருந்தது. ஒவ்வொரு வீடு தாண்டி போகும்போதும் ஒவ்வொரு வாசனை மூக்கைதுளைத்து எடுத்தது. இலுப்பசட்டி தோசை, இட்லி சாம்பார், கல் தோசை அடை,உப்மா சட்னி என்று விதவித வாசனைகளை மோப்பம் பிடித்துக்கொண்டே நடந்தோம். காலை வேளை இல்லியா எல்லாரும் டிபன் ரெடி பண்ணிண்டு இருந்திருப்பா. அந்த தெரு தாண்டினதும் ஒரு திருப்பத்தில் சிவன்கோவில் ஒன்னு வரும். அதை தாண்டி கன்னடியன் கால்வாய்னு ஒரு வாய்க்கால் தண்ணீர் தளும்பி ஓடிக்கொண்டிருந்தது.ஓடும் த்ண்ணீரைக்கண்டாலே உடனே குதித்து நீச்சல் அடிக்கனும்னுதான் தோனும்.அதைதாண்டி அப்புர பூராவும் வயல் வரப்புதான் ஒத்தையடிப்பாதைதான் அதில் நடப்பது சுகமான அனுபவம். குத்தாலத்தில் சீசன் ஆரம்பித்தபடியால் இங்கும் மெலிசான தூரல் போட்டுக்கொண்டிருந்தது. மண் வாசம் மூக்கைதுளைக்க வயல் வரப்பில் நடந்து போனோம். சகதிகாலில் ஷூ போட்டதுபோல அப்பிக்கொள்ளும். பக்கத்தில் சிறு, சிறு ஓடைகளில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் கால் அலம்பியவாரே வரப்பில் நடந்து போனோம். ஓடைகளில் சின்ன சின்ன மீன்கள் ஜாலியா துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்தன.
இப்போ நாமெல்லாம் காலை வாக்கிங்க், மெடிடேஷன், பிராணாயாமம் என்றெல்லாம் பியூட்டி பார்லர் காரா சொல்வதைக்கேட்டு செய்துவரோம். அதுவே நம் முன்னோர்கள் அதெல்லாம் உடற் பயிற்சிகள் என்று தெரியாமலேயே செய்து வந்திருக்கிரார்கள். குளிக்க போக வர 2 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி, வாசலில் சாணம் தெளித்து குனிந்து நிமிர்ந்து கோலம்போடுவ்து, ஆட்டுக்கல்லில் அரைத்தி கரைத்துஎன்று எவ்வளவு உடலுழைப்பு சேர்ந்த காரியங்கள் செய்து ஆரோக்கியமாக இருந்திருக்கா என்று நினைக்கும்போதே பிரமிப்பா இருக்கு. சிறியவர்கள் ஏதானும் கேட்டா அவர்களுக்கு சரியா விளக்கமா சொல்லத்தெரிந்திருக்கலை. பெரியவா சொன்னா க்கேக்கனும் ஏன் எதுக்குன்னுல்லாம் கேள்வி கேக்கக்கூடாத்துன்னு ஒரே வார்த்தையில் அடக்கிடுவா. அதனாலயே நம்மால் நிறைய விஷயங்களை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியாமலே போய் விட்டது,
ஆத்தங்கரை நெருங்கினோம் குறைந்தது 20, 30 படிகள் இறங்கி போகணும். படிகள் எல்லாம் சரியான பராமரிப்பில்லாமல் கோணா, மாணலாக ஆடிக்கொண்டிருந்தது. இறங்கி நடந்தாலே கால்தடுக்கி விழுந்துடுவோமோன்னுதான் தோனும் படி இருந்தது. ஒருவர் கையை ஒருவராக பிடிச்சுண்டு மெதுவாக இறங்கிட்டோம் ஆத்தங்கரையைபாத்ததும் சந்தோஷப்படவேண்டிய மனசு சங்கடப்பட்டது. ஒருகாலத்தில்கரை புரண்டு ஓடிய ஆறு இன்று முழங்கால் அளவுக்குதான் தண்ணீர் இருந்தது.திரும்பினபக்கமெல்லாம் பாறைகள் தான் இருந்தது. தண்ணீரே ஓடவே இல்லே.பொதுமக்கள் எல்லாரும் அவங்க சவுரியத்துக்காக ஆற்றிலிருந்து ஆழ்குழாய் போட்டு அவனவங்க வீட்டில் குழாய் மூலமாக தாமிரபரணியை அவ்ர்கள் வீடுகளிலேயே அருவியா கொட்டவச்சுண்டு இருக்கா. அப்புரம் ஆற்றில் எப்படி தண்ணீர் ஓட்டம் இருக்கும். முங்கி நீஞ்சி குளிக்கணும்னு ஆசையுடன் வந்ததெல்லாம் எதுவுமே நடக்கலே. படுத்துண்டுதான் உடம்பை நனைக்க வேண்டி இருந்தது.எங்களைத்தவிர வேறு ஆட்களும் யாருமே இல்லே.
Tweet | |||||
64 comments:
நானும் உங்க கூடவே வயல் வரப்பையெல்லாம் ரசித்து, ஆற்றங்கரைக்கு வந்தது போலவே இருந்தது லக்ஷ்மி! சின்ன வயசு ஞாபகங்கள் எல்லாம் வந்து விட்டன. அந்த காலத்தில் பெரியவர்கள் சொன்னது தான் வேத வாக்கு. காரணமெல்லாம் கேட்கத்தோன்றியதேயில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால்தான் இத்தனை வயது வரை நிறைய நல்ல பழக்க வழக்கங்கள் நம் கூடவே ஒட்டிக்கொண்டே வருகின்றன.
ரசனை மிக்க பதிவு!
நல்லவே போய்கிட்டு இருக்கு தங்களின் பயணக்கட்டுரை.
வாவ் அருவிக் குளியலும் ஊரின் வாசனையும் ஆகா அற்புதம்
பகிர்வுக்கு நன்றி அம்மா!
மிகவும் ரசித்து நீங்க பார்த்ததை அழகாக வர்ணனை செய்திருக்கீங்க அம்மா.நானும் மிக ரசித்து படித்தேன்.
வற்றாத ஜீவநதி தாமிரபரணி இப்போ இப்படி ஆகிவிட்டதே..
அனுபவ பகிர்வு தொடர் சூப்பர்... தொடர்க
// எனக்கும் இவர்களின் பாலிஷான வீட்டைப்பார்த்ததும் நம்ம ஊருக்கு வதிருக்கோம்னே நினைவில் வல்லே //
உண்மை.. உண்மை.. உண்மை..
// பெரியவா சொன்னா க்கேக்கனும் ஏன் எதுக்குன்னுல்லாம் கேள்வி கேக்கக்கூடாத்துன்னு ஒரே வார்த்தையில் அடக்கிடுவா. அதனாலயே நம்மால் நிறைய விஷயங்களை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியாமலே போய் விட்டது, //
கேள்விகேக்காம பாஃலோ பண்ணிருந்தாலாவாது உடம்பாவது பொழச்சிருக்கும்..
அருவிக் குளியலும்
கிராமிய அழகும்
மனம் வீசுது அம்மா.
தொடர் தொடர்ந்து அருமையாக உள்ளது அம்மா
நடைப்பயிற்சி, வாசலில் சாணம் தெளித்து குனிந்து நிமிர்ந்து கோலம்போடுவ்து, ஆட்டுக்கல்லில் அரைத்தி கரைத்துஎன்று எவ்வளவு உடலுழைப்பு சேர்ந்த காரியங்கள் செய்து ஆரோக்கியமாக இருந்திருக்கா
உண்மை தானம்மா .அவர்களுக்கு இயற்கையிலேயே உடற்பயிற்சி தான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் அமைந்து விட்டது
வயல்வரப்பில் நடப்பது, ஆத்தங்கரைக் குளியல், ஊஞ்சல் எல்லாமே அற்புதமா இருக்குமே....
ஆற்றில் குளிப்பது என்பது நாங்கள் ஒவ்வொரு முறையும் அகண்ட காவேரியில் திருப்பராய்த்துறை என்ற கிராமத்தில் என் கணவரின் பெரியம்மா வீட்டில் அனுபவிக்கிறோம்.
ரசித்து எழுதியிருக்கீங்கம்மா. நாங்களும் தொடர்ந்து வரோம்.
பயண அனுபவங்கள் ரசித்தேன். தொடர்ந்துகிட்டே இருக்கேன்
வணக்கம் மேடம்! ஆ.. இம்மாம் பெரிய பதிவு! இருங்க ஓட்டும் போட்டுட்டு, பதிவையும் படிச்சுட்டு வர்ரேன்!
மேடம் ரொம்ப அருமையா இருக்கு, உங்க பதிவு! நல்லதொரு பயண அனுபவம்!சுவாரசியமா இருக்கு!
அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.
மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள் எனச் சொல்வதைவிட
எங்களையும் அழைத்துக் கொண்டு போகிறீர்கள் எனச்
சுருக்கமாகச் சொல்லி விடலாம்
அருமையான தொடர்
ரசிப்பது மட்டுமல்லாது எப்படி எழுதுவது என்றும்
கற்றுக் கொள்ளும்படியாகவும் உள்ளது
படங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு
தொடர்ந்து வருகிறோம்.தொடர வாழ்த்துக்கள்
உங்க கூட வர உற்சாகம்.
கல் தோசை.. ஆஹா.. அதெல்லாம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு..
உங்க ஊரையும் பசுமை நிறைந்த வயல் வெளியும் எனக்கு எங்க
ஊரை நினவு படுத்தின
அருமையான பயண அனுபவம்
புலவர் சா இராமாநுசம்
அனுபவ பகிர்வு தொடர் அருமை... தொடர்க ...வாழ்த்துக்கள்...
தொடர் அருமையாக இருக்கின்றது தினதந்தி கன்னிதீவு போல.
வாழ்த்துக்கள் அம்மா.
தொடர் அருமையாக இருக்கின்றது தினதந்தி கன்னிதீவு போல.
வாழ்த்துக்கள் அம்மா.
கூடவே இருந்து பார்த்த அனுபவம் மாதிரியே இருக்கு :-))
மாமி
எங்களுக்கும் பூர்வீகம் திருநெல்வேலி தான் - அரியநாயகிபுரம். தாமிரபரணியில் நீரே இல்லையா? வருத்தம் தான்.
பூர்வீக ஊர் போகும் போது வரும் உணர்வு வருகிறது. தொடர்ந்து படிக்கிறேன் உங்களை.
ஆத்துல முங்கிக் குளிச்சே பல யுகம் ஆகிட்டுது. இப்போ முங்கிக் குளிக்க ஆறும் இல்ல, குளமும் இல்ல. எல்லாமே சாக்கடையாகிட்டது ;-(
அனுபவங்களோடவே பயணம் செய்யனுமில்ல!பாராவை இன்னும் கொஞ்சம் குறையுங்களேன்:)
நீங்க போன சமயம் கோடையா இருக்கும் & கன்னடியன் கால்வாய்ல ஜலம் ஜாஸ்தியா ஓடரசமயம் ஆத்தங்கரைல ஜலம் கம்மியாதான் இருக்கும். கல்லிடைல இருக்கும் தாமிரபரணி எந்த குறையும் இல்லாம அப்பிடியே அழகுசுந்தரியா தான் ஓடிண்டு இருக்கு! கவலையேபடவேண்டாம் 10 நாள் முன்னாடி அங்க தான் ஸ்னானம் பண்ணிட்டு வந்தேன். நீங்க சொன்னதை வச்சு பாக்கும் போது நீங்க போன தெரு வத்திப்புரம் தெருவா இருக்கலாம்னு தோனர்து!! :))
சுவாரஸ்சியமான ஆக்கமம்மா உங்களது
ஆக்கம் .லக்ஸ்மி அம்மா உங்கள் ஒரு கேள்விக்கு என் தளத்தில் பதில் காத்திருக்கின்றது .தவறவிடாமல்
வாசியுங்கள் .நன்றி பகிர்வுக்கு .....
//ஒவ்வொரு வீடு தாண்டி போகும்போதும் ஒவ்வொரு வாசனை மூக்கைதுளைத்து எடுத்தது. இலுப்பசட்டி தோசை, இட்லி சாம்பார், கல் தோசை அடை,உப்மா சட்னி என்று விதவித வாசனைகளை மோப்பம் பிடித்துக்கொண்டே நடந்தோம். //
வாசனை எங்கள் மூக்கு வரைக்கும் உங்கள் எழுத்து மூலம் வந்து விட்டது...
தண்ணீர் இல்லாத ஆறுகள்... ம்... கஷ்டம்..
ரொம்பச் சுருக்கமாக ஒரு பக்கக் கதை போல சுருக்கமாகக் கொடுத்து விட்டீர்கள். சுவாரஸ்யமாகத் தொடர்கிறேன்.
மனோ மேடம் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி
கோபால் சார் வருகைக்கு நன்றி
விக்கியுலகம் நன்றி
ராம்வி நீங்க எல்லாரும் ரசிக்கும்படி சொல்லி இருக்கேனா?
பிரகாஷ் நன்றி
மாதவன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
மகேந்திரன் அருவிக்குளியல் பத்தி ஏதுமே சொல்லலியேப்பா.
m.r. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கோவை2தில்லி நம்ம எல்லாரிடமும் கிராமத்து நினைவுகள் இன்னமும் மிச்சம் இருக்கத்தான் செய்யுது இல்லியா.
புதுகைத்தென்றல் வருகைக்கு நன்றி
ஐடியா மணி வருகைக்கும் அருமையான கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி
ரத்னவேல் ஐயா வருகைக்கு நன்றிங்க
ரமணீ சார் நீங்கல்லாம் என்கூடவே வந்து ரசிப்பதில் ரொம்ப சந்தோஷம்.
ரிஷபன் எங்க வீட்டுக்கு வாங்க சூப்பரா கல் தோசை பண்ணித்த்ரேன்
புலவர் ராமானுசம் ஐயா எல்லாருக்கும் அவங்க கிராமத்து நினைவு கண்டிப்பா வரும் ஐயா
ரெவரி, வருகைக்கு நன்றி
அந்நியன்2, நீங்க பாராட்டா சொல்ரீங்களா? இல்லே???????????
ஜெய்லானி நன்றிங்க.
ஸ்ரீஇனிவாசகோபாலன் நீங்களும் திருனெல் வேலியா சூப்பர்.
அமைதிச்சாரல் வருகைக்கு நன்றி ஆறு குளம் எல்லாம் இருக்கு தண்ணிதான் இல்லே
ராஜராஜன் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. கவனத்தில் கொள்கிரேன்
தக்குடு வெரிஸ்மார்ட் வைத்திப்புரம் தான் கரெக்டா சொன்னே. ஊர்க்காரான்னா சும்மவா? ஜூலைமாசம் கோடையா?
இல்லியே நாங்க போனப்போ ஆத்தில தண்ணியே இல்லேப்பா.கிழக்காத்தங்கரை இல்லே மேக்காத்தங்கரையாக்கும் சொன்னேன்
அம்பாளடியாள் வருகைக்கு நன்றி இதோ உன் பக்கம் வந்து பாக்கரேன்.
வெங்கட் வாசனை வந்துதா அதுதான் கிராமத்துமணம்.
ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி
பசுமையான பதிவு
லக்ஷ்மி நம்ம ஊருக்கெல்லாம் போறீங்களேன்னு
சந்தோஷமாவும் இருக்கு. போக முடியலையேன்கிற
ஆத்தாமையை உங்கள் எழுத்து போக்கிவிடுகிறது.
பயணம் சூப்பராக போகிறது... பகிர்வுக்கு நன்றி அம்மா
வல்லி சிம்ஹன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மாய உலகம் வருகைக்கு நன்றி
கவி அழகன் நன்றி
அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி
தாமிரபரணி தண்ணி குளியல் மனத்தைக் குளிரவைக்கிறது.
மாதேவி வருகைக்கு நன்றி
Post a Comment