Pages

Monday, September 12, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (9)

துணீ துவைத்து குளிச்சு ஈரத்துணியுடனே வீடு வந்தோம். வரும் வழியில் வாய்க்காலில் தளும்பி ஓடும் தண்ணீரைப்பார்த்ததும் இங்கியே குளிச்சிருந்தா நிறைய முங்கி நீச்சலும் அடிச்சிருக்கலாமேன்னு தோனித்து.வீடு வரும் வழியிலேயே அத்தை என்னிடம் இங்க வந்தும் நீ காலை பிஸ்கெட் தான் வேனும்னுலாம் முரண்டு பண்ணக்கூடாது. அவா என்னதராளோ அதை சாப்பிடனும்னு மிரட்டலா சொல்லி கூட்டிண்டு வந்தா. நானும் பூம், பூம் மாடு போல தலையை ஆட்டிண்டு கேட்டுண்டேன் வேர வழி.எலாருக்கும் சுட சுட முறுகலாக கல் தோசை சூடாக வார்த்துப்போட்டா. தொட்டுக்க சாம்பார் ,சட்னி எல்லாம் பண்ணி இருந்தா. எனக்கு இப்படி காலேல சாம்பார்சட்னிலாம் சாப்பிட்டா ஹெவி ஆயிடும். நான் மட்டும் பொடி எண்ணை போட்டுண்டேன். எள்ளுமணக்க மிளகா பொடியும் செக்குலேந்து ஆட்டிவந்த நல்லெண்ணையும் அத்தனை ருசியா இருந்தது. இதுதான் கிரமத்து அசல்மணம் கூடவே திக்காக பில்டர்காபியும் தந்தா. ரெண்டு தோசை சாப்பிட்டதுமே வயிறு ஃபுல். சாப்பிட்டு அவசரமாக பெரியஹாலில் போயி ஊஞ்சலில் உக்காந்தேன். அப்பாடா வீசி வீசி ஆடினேன். கூடவே ஒருமாமியும் வெந்து உக்காந்தா. என்ன ஆனந்த அனுபவம் தெரியுமா. நேத்து நைட்டே ஒருமணி நேரம்தானே தூங்க கிடைச்சது ஊஞ்சல்லயே படுத்துட்டேன். சுகமா தூக்கம்வந்தது. எங்க தூங்க விட்டா.?






                       






மருந்து கூட சாப்பிடாம அப்படி என்ன ஊஞ்சல்னு மருந்தைகொண்டு தந்தா. சே (ரசனையே இல்லாம இருக்காளேன்னு நினைச்சேன்.). மருந்து சாப்பிட்டு திரும்பவும் படுத்தேன். அத்தை உள்ள போயி எல்லாருடனும் கல்கல்ப்பாக பேசிண்டு இருந்தா.அவளுக்கு நாள்பூரா பேசினாலும் போராது.10- நிமிஷத்ல வந்து எழுப்பிட்டா, கிளம்புங்கோ  எல்லாரும் பெருமாள்கோவில்ல திருமஞ்சன அபிஷேகம் பூஜைக்கெல்லாம் ஏற்பாடு பண்ணி யிருக்கேன் வாங்கோ கோவில் போலாம்னு. எங்க ஊரு பெருமாள் பேரு லக்‌ஷ்மீபதிசாமி .எல்லாரும் கிளம்பி கோவில் போனோம். எங்களுக்காக பட்டர் எல்லாரும் காத்துண்டு இருந்தா. முதலில் மூலஸ்தானத்தில் இருக்கும் ஆதிவராக ஸ்வாமிக்கு வரிசையாக பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம் என்று வரிசையாக எல்லா அபிஷேகங்களும் கற்பூர ஹாரத்தி, பண்ணி பிரசாத வினியோகமும் நடந்தது.அப்புறம் உற்சவருக்கு அர்ச்சனை ஹாரத்தி, எல்லாம் முடிய 3-மணி நேரம் ஆச்சு. கோவில் கண்டாமணி ஓசை ஊர் பூராவும் கேக்கும். அதுகேட்டு எல்லாரும் கோவிலில்ல ஏதோஸ்பெஷல் பூஜை இருக்குன்னு வந்து கலந்துப்பா.

எண்ணி10 பேர்தான் வந்திருந்தா.எல்லாருமே தூரத்து உறவுக்காரர்களாகவே இருந்தா, எங்களை நல்லாவே அடையாளம் தெரிஞ்சுண்டு விசாரிச்சா.அத்தைக்கும் எல்லாரையும் நினைவுக்கு கொண்டு வரமுடிந்தது. என்னால முடியல்லே. எல்லாருமே எங்களை அவங்க வீட்டுக்கு மதிய சாப்பாடுக்கு கூப்பிட்டா.னானும் அத்தையும் மட்டும் ஒருவீட்டுக்கு சாப்பிட போனோம். மத்தவா  நாங்க இறங்கின வீட்டுக்குப்போனா.அத்தை வழக்கம்போல அவாகுடும்பவிஷயங்கள் எல்லாம் கல்,கல்ப்பாக பேசினா.  நல்ல சுவையான , ருசியான சாப்பாடு, முகமலர்ந்த உபசரிப்பு எல்லாமே நல்லா இருந்தது.அவா அப்பள பிசினெஸ் பண்ணிண்டு இருக்கா. சாப்பிட்ட பிறகு எங்க வீட்டைபார்க்க எங்க தெருவுக்கு போனோம். வீட்டுக்குள் நுழையும் போதே அழுகை முட்டிண்டு வருது. வாடகைக்கு இருப்பவர்கள் கணவன் மனைவி சின்னகுழந்தை மூவர்மட்டுமே.  எங்களை நன்கு வரவேற்று பேசினா. ஒவ்வொரு ரூமாக போய்ப்பார்த்தோம். பழைய நினைவுகள் முட்டிண்டு வந்த்து



தொண்டை அடைக்குது. அப்போ  வீடு நிறைய மணுஷாளுடன் எப்பவுமே கல்யாண கலகல்ப்புடன் இருந்தவீடு காலியா டல்லடிக்கரது. அந்தக்காலத்ல எங்கவீடு பெயர்பெற்ற் அப்பளக்கடையாக இருந்தது அதே தெருவில் நாலு வீடு சேர்ந்தாப்போல எங்களோடதுதான்.ஒருவிடு பூராவும் அப்பளதயாரிப்பு வேலைகள்,  வேலைக்காரர்களாக  நிறம்பி இருக்கும். எங்க தாத்தாவிடம்  வேலை பார்த்தவர்கள் இங்கு தொழில் கத்துண்டு அவாளே தனியா தொழில் தொடங்கி இன்றுவரையும் வியாபாரம் பண்ணிண்டுதான் இருக்கா. மற்ற மூன்று வீடுகளிலும் எப்பவும் ஆட்கள் வருவோர் போவோர்னு எப்பவும் நிறைஞ்சே இருக்கும். பிறகு நாளாவட்டத்தில் எல்லாமே மாறியது ஒரு வீடு மட்டுமே வச்சுண்டு பாக்கி எல்லா வீடுகளும் வந்த விலைக்கு வித்துட்டோம். அந்தஒருவீடும் நாங்க வாடகைக்கு விடவேண்டிய நிலை..

கொல்லைப்புறம் எல்லாம் புதர்மண்டி காடாக இருக்கு. நடு ஹாலில் சுவரெல்லாம் விரிச்ல் விழுந்து பரிதாபமாகட்சி அளிக்கிரது.வருஷம் ஒருமுறை என் தம்பி பாம்பேலேந்து வந்து ரிப்பேர் வேலையெல்லாம் பண்ணிக்கொடுத்துட்டுதான் இருக்கான். பராமரிப்பு சரி இல்லைனா அப்படித்தான் இருக்கும். 7-மாடி கொண்ட வீடு. மாடியை பூட்டி வச்சிருந்தோம். அங்கயும் போயி பாத்தோம். பூட்டியே இருப்பதால் தூசியும் தும்புமாக பார்க்கவே முடியல்லே. நம்ம வீடுன்னு சந்தோஷமா பார்க்கவே முடியல்லே. இப்படி பாக்கவேண்டியிருக்கேன்னுதான் மனசு பூரா ஆதங்கமா இருந்தது.அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீடுகளிலும் போயி எல்லாரையும் பார்த்து பேசினோம்





எல்லாருமே எங்களை நினைவில் வச்சுண்டு இருக்கா. ரொம்ப வயசானவங்கதான் உடம்புக்கு முடியாம இருக்கா பெரும்பாலான வீடுகளில் . நம்ம ஊரு,, நம்ம ஊருன்னு எவ்வளவு சந்தோஷமா பாக்கவந்தோமோ அந்த சந்தோஷமஎல்லாம் போன இடமே தெரியலை.மனசு நிறையா பாரமான நினைவுகளைச்சுமந்துதான் சென்றோம்.என்ன செய்ய முடியும். காலத்தின் கட்டாயம் எல்லாத்தையும் ஜீரணிச்சுக்கத்தான் வேண்டி இருக்கு.கோவிலைச்சுற்றி உள்ள தெருக்களை மாடத்தெருன்னு சொல்ல்வோம் எங்க வீடு தெற்குமாடத்தெருவில் இருந்தது. கோவில் சன்னதிக்கு நேராக உள்ள தெரு சன்னதி தெருன்னு சொல்வோம். அங்கு எதிரும்புதிருமாக இரண்டு வரிசையிலும் வீடுகள் உண்டு.










                             






கோவிலும் கூட  உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்று பிரும்மாண்டமா இருக்கும். கருங்கல் கட்டிடம் தான் கோவில் விசேஷமென்றால் எல்லாருமே வந்து கல்ந்து கொண்டு சிறப்பாக நடத்துவார்கள். இப்போ கோவிலை கண்கொண்டு பார்க்கவே முடியல்லே. திரும்பின பக்கமெல்லாம் அழுக்கு எண்ணை பிசுக்கு தூசி, நூலாம்படைன்னுரொம்ப சிதிலமான நிலையில் தான் இருக்கு.எங்க பார்த்தாலும் இருட்டு குகையா இருக்கு சாமிகிட்டமட்டும் எண்ணை விளக்கு கொஞ்சமா எரிஞ்சிண்டு இருந்தது சாயங்காலமும் கருடவாகனத்தில் சாமி உக்கந்துண்டு வீதிவலம் வருவார், கருட சேவை பூஜைக்கும் நாங்க ஏற்பாடுகள் பண்ணி இருந்தோம். நிறைய பூ அலங்காரம் எல்லாம் பண்ணி தயார் பண்ணி வச்சிருந்தா. யாருகட்டளைக்காராளோ அவர்களும் வீதி உலாவில் சாமிசப்பரத்தின் பின்னால் போகணும். சாயங்கால எல்லாரும் கொவில் வந்தோம். முன்னேல்லாம் கருட சேவை அன்று கோவிலில் கூட்டம் சொல்லி முடியாது நிறம்பி வழியும் இப்போ மணி சத்தம் கேட்டும்கூட 10, 15, பேருக்கு மேல ஆட்களே வரல. ஊரில் ஆள் இருந்தாதானே வருவா?





                             





சப்பரம்தூக்கவும் முன்னெல்லாம் நான் நீ என்று போட்டி போட்டுண்டு பக்தர்கள் ஓடிவந்து முன்னால 10 பேர், பின்னால் 10 பேர் மறி மாறி தோள்தூக்கி வருவா. இப்ப ஆட்களே இல்லியே மோட்டர் வச்ச ஒரு வண்டியில் கருடன் மேலமர்ந்தசாமியை உக்காத்திவச்சு வீதி உலா நடத்தினார்கள்.வேதகோஷம் சொல்லிண்டு பின்னால பிராம்மணர்கள் நிறையபேரும் வருவா. இப்போ அதுக்கும் ஆள் இல்லை.தீவட்டி பேருக்கு ஒன்னே ஒன்னுதான் கொளுத்தி இருந்தா. எந்த தெருவழியாக சாமி ஊர்வலம் வராரோ அந்த தெருக்களில் உள்ளவா வாசல் தெளித்து பெரிசாக கோலமும் போட்டு சாமியை வரவேர்க தயாரா இருப்பா. ஒவ்வொரு வீட்டினரும் வெத்லைபாக்கு பழம் நைவேத்யமும் செய்வார்கள்.இருட்டிலேயே எல்லாதெருக்களிலும் சாமி ஊர்வலம் சென்று வந்தார். கோவிலில் இரவு நேர பூஜையும் முடிந்து வீடு வர இரவு10- மணி ஆச்சு ஒரே டயர்ட். சாப்பிட்டு நான் ஊஞ்சலில் போயி படுத்தது தான் தெரியும். அடிச்சு போட்டதுபோல தூக்கம்.

85 comments:

Anonymous said...

முதல் பயண மறுமொழி லக்ச்மிம்மா..

Anonymous said...

பயணம் தொடருங்கள்... சிறப்பாய் இருந்தது... லக்ச்மிம்மா..

நிரூபன் said...

வணக்கம் அம்மா,
சுவாரஸ்யமான முறையில் பயணப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

துளசி கோபால் said...

கோவில்களை நினைச்சாத்தான் ரத்தக்கண்ணீர் வர்றது:(

Rajkumar said...

Nalla pathivu..

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப நன்னாயிருக்கு லக்‌ஷ்மி அம்ம உங்களோட பயணம்.
இப்ப கிராமத்தில் கோவில்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கு.அதை பார்க்கும் போதே வேதனையாக இருக்கு.
நல்ல அனுபவம் பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

அழகா பகிர்ந்ததற்கு நன்றிகள்!

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா,

//பராமரிப்பு சரி இல்லைனா அப்படித்தான் இருக்கும். 7-மாடி கொண்ட வீடு. மாடியை பூட்டி வச்சிருந்தோம். அங்கயும் போயி பாத்தோம். பூட்டியே இருப்பதால் தூசியும் தும்புமாக பார்க்கவே முடியல்லே. நம்ம வீடுன்னு சந்தோஷமா பார்க்கவே முடியல்லே. இப்படி பாக்கவேண்டியிருக்கேன்னுதான் மனசு பூரா ஆதங்கமா இருந்தது.// இதனை [அடிக்கறச்சே என் மன ரொம்ப கனத்து போச்சு.ஆண்டு அனுபவித்து,இப்ப நெடு நாள கழித்து நேரில் பார்க்கும் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.என்ன செய்வது வாழ்க்கை சக்கரத்தில் இது போன்ற அனுபவங்களில் சிலவற்றை தவிர்க்க இயலாதுதான்.

அமுதா கிருஷ்ணா said...

உங்க வீட்டை பற்றி எழுதி இருப்பது கஷ்டமாய் இருந்தது.அவர் அவர் இருக்கும் பிஸியில் ஒரு வீடு தன் அழகை இழந்து கொண்டு இருக்கிறது.

Jaleela Kamal said...

லக்‌ஷி அக்கா
ஆஹா அந்த ஊஞ்சல பார்த்த்டனும் எனக்கு உட்கார்ண்டு ஆடனும் போல் இருக்கு

எங்க் மெட்ராஸில் இருக்கு நெரிசல்லில்
இப்படி ஊஞ்ச்ல் ஆடும் அள்வுக்கு வீடு கட்டுவது மிக்ச்சிரமம்

Asiya Omar said...

நல்ல சுவாரசியமாக நேரில் பார்த்தது போல் எழுதறது தான் உங்கள் ஸ்பெஷல்.அருமையான பகிர்வு.

Madhavan Srinivasagopalan said...

கருடசேவை.. சூப்பர்.. (பாத்தேன் )
பொறுங்க.. படிச்சிட்டு வாறன்..

ம.தி.சுதா said...

///நம்ம ஊரு,, நம்ம ஊருன்னு எவ்வளவு சந்தோஷமா பாக்கவந்தோமோ அந்த சந்தோஷமஎல்லாம் போன இடமே தெரியலை.மனசு நிறையா பாரமான நினைவுகளைச்சுமந்துதான் சென்றோம்////

எத்தனை காலம் போனாலும் சொந்தமண் சொர்க்கமல்லவா அம்மா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயணம் தொடருங்கள்...வாழ்த்துக்கள் ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பயணக்கட்டுரையும் இனிதே பயணித்து வருகிறது. தொடருங்கள்.vgk

மகேந்திரன் said...

சென்ற மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகே ராஜபதி என்ற சிவன் கோவிலுக்கு

சென்றிருந்தேன். கோவிலின் சிற்பங்கள் அந்தக்கால சுண்ணாம்புக் கற்களால்

சிறிது கரைந்தும் உருவம் மாறுபட்டும் இருந்ததை கண்டேன்...

மனம் வருத்தமடைந்தது ....

கோவில்களின் கருப்பொருளே இப்படியா என்று...

உங்களின் பயணம் சுவாரஸ்யமாக செல்கிறது அம்மா...

தக்குடு said...

லெக்ஷ்மீபதி கோவிலை பத்தி நீங்க சொன்ன தகவல்ல எனக்கு உடன்பாடு இல்லை மாமி!! வருஷா வருஷம் மராமத்து வேலை பாத்து கோவிலை பத்திரமா பாத்துக்க ஊர் பிள்ளைகள் 65 பேர் சேர்ந்து லெக்ஷ்மீபதி சேவா சமிதி உண்டாக்கி எல்லா காரியமும் பண்ணறா (அனேகமா உங்க கருடசேவையே அவா ஏற்பாடுதான்). 30 வருஷத்துக்கு முன்னாடி நடந்த வசந்த உத்ஸவம் கூட இப்ப மறுபடியும் ஜாம் ஜாம்னு நடக்கர்து. முடிஞ்சா இந்த புரட்டாசி மாச சனிக்கிழமைல கோவிலை போய் பாத்துட்டு வந்து எனக்கும் சொல்லுங்கோ! நீங்க எந்த ஆத்துக்கு வந்து இறங்கினேள்னும் கண்டுபிடிச்சாச்சே!!! :))

சக்தி கல்வி மையம் said...

பயம் அருமை ..
கூடவே வரும் ஒரு பீலிங் வருது..

சாந்தி மாரியப்பன் said...

பூவலங்காரம் ரொம்ப அழகாருக்கு லஷ்மிம்மா..

அப்ப, ஊர்ல இருந்தவரைக்கும் காலைல பிஸ்கட்டே சாப்ட முடியலைன்னு சொல்லுங்கோ ;-))

ADHI VENKAT said...

பெரும்பாலான கோவில்கள் இப்படி தான் பராமரிப்பு இல்லாம இருக்கு.

நல்ல பயணக்கட்டுரைம்மா.

பனித்துளி சங்கர் said...

அப்படி எவளவு பெரிய ஊஞ்சல் அது !?எத்தனை பேருதான் அதில் இருப்பிங்க !? . இதன் முன் பகுதிகள் இன்னும் வாசிக்கவில்லை முழுவது வாசித்து விட்டு மீண்டும் வருகிறேன் .இன்னும் சற்று பதிவை நீட்டித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் . புரிதலுக்கு நன்றி

shortfilmindia.com said...

வித்யாசமான கட்டுரை.

http://udanz.com
திரட்டியில் இணையுங்கள்.

SRINIVAS GOPALAN said...
This comment has been removed by the author.
SRINIVAS GOPALAN said...

லக்ஷ்மி மாமி
உங்களோட பழைய ஆத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட கஷ்டத்தைப் புரிஞ்சுக்க முடியறது. பெரும்பாலும் எல்லா அக்ரஹாரதிலும் இதே நிலை தான். போன தலைமுறையிலே வட மாநிலமும், இந்த தலைமுறையில வெளி தேசம் என்றும் போயாச்சு. வாடகைக்கு விட்டாலும் பக்கத்துல இருந்து கவனிக்காவிட்டால் இப்படி தான் ஆகும். கோயில்களிலும் இதே நிலைமை தான். முன்பெல்லாம் மணி அடித்தவுடன் கிராமமே வரும். இப்பொழுது அப்படியும் வருவதில்லை. சில சமயம் ஏன் போனோம் இதெல்லாம் பார்க்க என்று ஆகி விடுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

காலத்தின் கட்டாயம் எல்லாத்தையும் ஜீரணிச்சுக்கத்தான் வேண்டி இருக்கு.

Rathnavel Natarajan said...

எங்க வீட்டைபார்க்க எங்க தெருவுக்கு போனோம். வீட்டுக்குள் நுழையும் போதே அழுகை முட்டிண்டு வருது. வாடகைக்கு இருப்பவர்கள் கணவன் மனைவி சின்னகுழந்தை மூவர்மட்டுமே. எங்களை நன்கு வரவேற்று பேசினா. ஒவ்வொரு ரூமாக போய்ப்பார்த்தோம். பழைய நினைவுகள் முட்டிண்டு வந்த்து

அருமையான பதிவு.
நன்கு ரசித்து படித்தோம்.
நன்றி அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

நிறைய கோவில்களில் நிலைமை மோசம் தான்.... பழங்கால வீடுகளின் நிலை அதை விட மோசம்.

உங்களுடனே வந்தது போல ஒரு உணர்வு.

தொடர்ந்து எழுதுங்கம்மா...

M.R said...

உங்களோடு சேர்ந்து நாங்களும் தரிசனம் செய்தோம் .
நன்றி பகிர்வுக்கு

மாய உலகம் said...

கோயிலுக்கெல்லாம் போயிட்டு வந்து ரொம்ப நாளைக்கப்பறம் சீக்கிரம் தூங்கிருக்கீங்க போல.... பதிவு அருமை அம்மா

குறையொன்றுமில்லை. said...

ரெவரி, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நிருபன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

துளசிகோபால் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

PTR thanks

குறையொன்றுமில்லை. said...

ரமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

விக்கியுலகம் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா, வருகைக்கும் நெகிழ்வான பின்னூட்டத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அமுதா ரொம்ப கரெக்டா சொன்னீங்க.

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா மெட்ராசில் எங்க இருக்கீங்க?

குறையொன்றுமில்லை. said...

ஆசியா ஓமர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ

குறையொன்றுமில்லை. said...

மாதவன் நன்றீ

குறையொன்றுமில்லை. said...

ம.தி. சுதா, என்னிக்கிருந்தாலும் சொந்த ஊரு சொர்க்கம்தான் சரியா சொன்னேப்பா.

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால்சார் நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் ஆமாங்க ரொம்ப எதிர்பார்ப்புடன் போனப்போ சிலவிஷயங்கள் மனசைக்காயப்படுத்துதே.

குறையொன்றுமில்லை. said...

தக்குடு உங்க அபிப்ராயம் நீ சொல்லி இருக்கே. மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்கோ.னாம கண்முன்னே பாக்கர விஷயங்கள் நம்ம அனுபவம்தானே சொல்ல முடியும் இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமா அமைதிச்சாரல் ஊர்ல இருக்கும்வரை பிஸ்கெட்டே சாப்பிட முடியல்லே ஹி ஹி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

பனித்துளி சங்கர் எல்லாபகுதியும் படிச்சு பாருங்க சிலபேரு பதிவு நீண்டுகொண்டே பாவதாகச்சொல்ராங்க நீங்க இன்னும் எழுதசொல்ரீங்களே?/?

குறையொன்றுமில்லை. said...

shortfilmindia.com வருகைக்கு நன்றீ எப்படி அந்த திரட்டியில் இணைக்கனும்?

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீனிவாச கோபாலன் ரொம்ப கரெக்ட்தான் ஏந்தான் போனோமோன்னுதா தோனிச்சு.

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேச்வரி நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரத்னவேலையா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ

குறையொன்றுமில்லை. said...

M,R. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ

குறையொன்றுமில்லை. said...

மாய உலகம் ராஜேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

கிராமத்தில் அக்ரகாரத்தில் எல்லா ஊரிலும்
எல்லா வீடுகளின் நிலைமையும் இதுதான்
நீளம் ரொம்ப அதிகம்.இப்போது இருக்கிற யாராலும்
வாரம் ஒருமுறை கூட்டிப் பெருக்குதல் என்பது கூட
மிக மிக கஷ்டம் நாங்களும் அப்படித்தான்
கோவில் யானையப் போய் கும்பிட்டு வருவது மாதிரி
அப்ப அப்ப போய்ப் பார்த்து பெருமூச்சுவிட்டு வருகிறோம்
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 11

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி

ஸ்ரீராம். said...

ஆசை ஆசையைப் பார்க்கப் போன ஊர். சந்தோஷம் போய் மனதில் பாரம் என்று படித்த போது அந்த கனத்தை உணர முடிந்தது. பழைய நினைவுகளும் படிக்கும் போது நாம் எல்லோருமே எதை இழந்து எதைப் பெற்றிருக்கிறோம் என்று தோன்றியது. விஞ்ஞான முன்னேற்றங்கள் உட்பட எல்லாம் பெறுவது ஆதாயம்தான். ஆனால் இழப்பதும் நிறைய.

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

A and A said...

ரொம்ப நன்னா இருக்கு உங்க பயண அனுபவம். எல்லா ஊர்லேயும் இதே கதி. வயசானவாளா முடியறது இல்லை, சின்னவா படிப்பு, வேலை என்று ஊர விட்டு போய்யிட்டா. அனேகமா வெளியூர்காராளுக்கு தங்க வந்த இடத்துல இருக்கற கோவில்களில் ரொம்ப ஈடுபாடு இருக்கறது இல்லை. இருக்கற ஏதோ 10 பேர் பாரம்பரியத்தை விட முடியாமல் செய்சுண்டு இருக்கா!

அந்நியன் 2 said...

நேற்று நெட் வேலை செய்யாததால் வர முடியவில்லைமா.

பயணங்கள் தொடரட்டும்....

எல்லாமே படிக்க அருமையாக இருக்கின்றது.

மற்றும் தமிழ் மணம் ஓட்டும்.

குறையொன்றுமில்லை. said...

A AND A வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

அந்நியன்2 வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... இன்னும் பயணம் தொடருதா... சூப்பர்

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க அப்பாவி, சொந்தம் எப்போதும்
தொடர்கதைதானே>?

அம்பாளடியாள் said...

வணக்கம் அம்மா உங்கள் அனுபவப் பகிர்வை இவ்வளவு பொறுமையாக அழகாகத் தொடர்ந்து எழுதுகின்றீர்களே
இதைக்கண்டு நான் மிகவும் பெருமைகொள்கின்றேன்....
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் ஆக்கங்கள் மேமேலும் சிறப்பாகப் பயணிக்க .மிக்க நன்றி பகிர்வுக்கு ...............

அம்பாளடியாள் said...

எனது ஓட்டுக்கள் அனைத்தும் போட்டுவிட்டேன் .வாழ்த்துக்கள் அம்மா .......

சுசி said...

கல் தோசை,பொடி,நல்லெண்ணெய் ஆஹா.... படிக்கர்செயே நன்னா இருக்கே ! ம்ம்...yummy.

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள், வருகைக்கு, கருத்துக்கு ஓட்டுக்கு நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

தானைத்தலைவி வருகைக்கு நன்றி

Sumitra srinivasan said...

mami
appadiye thirunelveli i nera kondu vandirukkel
padikka padikka then than pongo
thodurungal avaludan edirpakkiren

குறையொன்றுமில்லை. said...

சுமி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மாதேவி said...

கிராமம் கோயில் வீடு என எங்களையும் எங்கள் ஊரை நினைக்க வைத்துவிட்டீர்கள்.

பிறந்து வாழ்ந்த ஊர் என்றுமே தித்திப்பானதுதான்...

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

Lakshmi 30 years is long time. We have to digest some of the new developments.
It was so nice to go thru your experiences.

Unknown said...

உங்கள் பயணத்தை தொடருங்கள்

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

குறையொன்றுமில்லை. said...

வல்லி சிம்ஹன் வருகைக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

வைரை சதீஷ் வருகைக்கு நன்றி

shanmugavel said...

ஒன்பதாவது பாகமா? பொறுமையாக நேரம் கிடைக்கும்போது மற்றவற்றை படிக்கிறேன்.நன்று.

குறையொன்றுமில்லை. said...

ஷன்முகவேல் வருகைக்கு நன்றி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அம்மா ஹி ஹி ஹி , நீங்க ஒரு தனி ட்ரக் போறீங்க . சூப்பர் சூப்பர் . .

குறையொன்றுமில்லை. said...

ராஜா வா, வா, என்ன சுறு சுறுப்பு. ரொம்ப சீக்கிரமே வந்துட்டியே?

என்னை ஆதரிப்பவர்கள் . .