Pages

Wednesday, September 21, 2011

ஹாப்பி பர்த் டே.

மம்மி, ஹாப்பி பர்த்டே, அம்மா, மெனி மோர்ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப்த டே,பிறந்த நாள் வாழ்த்துக்கள்மா. பெரிய பெண் பையன் கணவரின் வாழ்த்துக்கள் மனதுக்கு இதம்மாக இருந்தது. நன்றி சொல்லிட்டு வழக்கமான வீட்டு வேலைகளில் பிசியானா கல்பனா. பின்னாடியே வந்த பெண் ஏன்மம்மி புது சாரி எடுத்துக்கலே? பையன் ஏன் அம்மா ஸ்வீட் ஏதுமே பண்ணலே? கோவிலுக்கும் கூட வரமாட்டேங்கரேன்னு கணவர்  மூவரும் சேர்ந்து எங்க பர்த்டேன்னா க்ராண்டா கொண்டாடரோம் இல்லியா?  புதுசு போட்டுண்டு ஸ்வீட் சாப்பிட்டு சந்தோஷமா கொண்டாடரோம் இல்லியா? அட்லீஸ்ட் ஒரு பாயசம் கூட பண்ண மாட்ரே. ஏன் இப்படி பன்ரே மம்மின்னு துளைச்சு எடுத்துட்டா. கல்பனா பதில் ஏதுமே சொல்லாம வேலையைகவனித்தாள்.  அவள் எது சொன்னாலும் அவர்கள் அவளை ச்சரியாபுரிந்துகொள்ள மாட்டார்கள். கல்பனாவுக்கு என்று சில விஷயங்கள் மனசுக்குப்பிடிக்கும். ஆனா செயலபடுத்த முடியாத நிலை. சொன்னாலும் இவர்களின் கேலிப்பெச்சும் கிண்டலுக்கும் கேட்க வேண்டி வரும். அதனால் எதுமே பேசாமல் இருந்து விடுவாள்.



அடுத்தவாரமே கல்பனாவின் கணவர் விஜய்க்கு பர்த்டே வந்தது. அவருக்கு ஆசைகள் அதிகம். அவர் இஷ்டப்படி புது துணீ மணி எடுத்து கேக் வெட்டி, சினிமா போயி ஸ்வீட்பண்ணி என்று க்ராண்டாக கொண்டாடினார்கள்.பகல் நேரம் குழந்தைகள் காலேஜுக்கும் கணவர் ஆபீசுக்கும் போகவேண்டி இருப்பதால் இரவு டின்னர் க்ராண்டாக ரெடிபண்ணினாள் கல்பனா. தினசரியுமே நால்வரும் இரவு சேர்ந்துதான் சாப்பிடுவார்கள்.ஆப்பீசில் காலேஜில் நடந்த சம்பவங்களைப்பேசி சிரித்து அரட்டை அடித்தவாரே சாப்பிடுவார்கள்.அன்றும் சேர்ந்து உக்காந்தார்கள் ஒருவாய் சாப்பிட்டதும் விஜய் குழந்தைகளிடம் உங்க அம்மா சமையலில் எக்ஸ்பர்ட்டா ஆயிட்டா. இன்னிக்கு சேமியா பாயசம் என்ன டேஸ்டா பண்ணீயிருக்கா இல்லியான்னு பராட்டை ஆரம்பித்தார் .குழந்தைகளும்  சளைத்தவர்களா என்ன? ஆமாடாடி இந்த வடா சாம்பார் சுப்பரா இருக்கு,இது பையன் , குலாப்ஜாமுன் வாயில போட்டாகரையுதுன்னு பெண் தன் பங்குக்குசொல்லவும் கல்பனாவுக்கு இவர்கள் மனம் திறந்து பாராட்டுவது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. பாராட்டெல்லாம் இருக்கட்டும் ஒழுங்கா சாப்பிட ஆர்ம்பிங்கன்னு சொன்னாள்.அம்மா சாப்பிடுமுன்ன எங்க கேள்விக்கு பதில் சொல்லு. ஆனாதான் சாப்பிடுவோம். நீ பதில் சொல்லலைனா நீ அருமையா பண்ணி வச்சிருக்கர சாப்பாடெல்லாம் மீந்துபோகும் நாங்க சாப்பிடவேமாட்டோம் ஆனா எங்களுக்கெல்லாம் செமப்பசியா இருக்கு ஒழுங்கா பதில் சொல்லிடுன்னுபையனும் பெண்ணும் ஆளுக்கொருபுறமா பிடிச்சுண்டு அடம் பண்ணினா.

இன்னிக்கு அப்பா பர்த்டேக்கு இவ்வளவு க்ராண்டா எல்லாம் பண்ணி எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா கொண்டாடரோம். உன் பர்த்டே ஏன் கொண்டாட மாட்ரே. வீ வாண்ட் ரீசன். நீசொன்னாதான் சாப்பிடுவோம் என்று கணவரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார் வேர வழி இல்லாமல் கல்பனா ஆரம்பித்தாள். காரணம்லாம் ஒன்னுமில்லை. நான் மட்டும்தான் அதிசயமா பிறந்திருக்கேனா.உலகத்ல பிறந்தவா எல்லாருமா பிறந்த நாள் கொண்டாடி கிட்டு இருக்காங்க.ஒருவேளை சாப்பாடுக்கு வழி இல்லாதவங்கல்லாம் இப்படி ஆடம்பரமா பர்த்டேயா கொண்டாடுராங்க?அதுவுமில்லாம...... என்று தொடர்ந்தவளை இடை மறித்த விஜய், ஆமா நீ என்ன  அன்றாடம் காய்ச்சியாவா வாழ்க்கை நடத்துரே?கை நிறைய சம்பாதிக்கும் புருஷன்,கண் நிறைந்த மழலைச்செல்வங்கள் வீடு நிறைய தேவையான சாமன்கள் என்று வசதியான வாழ்க்கைதானே வாழரே.எந்த சௌரியத்ல உனக்கு குறை வச்சிருக்கேன் ?இருக்கறதை அனுபவிக்கத்தெரியாம ஏன்குப்பை மேட்டையே பார்த்துண்டு உன்னையே நீ கஷ்ட்டப்படுத்திக்கரே? என்றுகோவமாக ஆரம்பித்துவிட்டார். கல்பனா மேற்கொண்டு ஏதும் பேசினால் இவரின் கோபம் இன்னும் அதிகமாகிடும் என்று அவள் சும்மா இருந்தா.. அப்படியும் விடாமல் அவர் ஏன் நிறுத்திட்டே. மஹாத்மா காந்திக்கு நேர்வாரிசு நீதானே.எப்படியோ சொல்லனும்னு ஆரம்பிச்சுட்டே முழுசையும் சொல்லிடு என்றார்.  நாம வசதியாத்தான் இருக்கோம்ங்க.அதுக்காக தினசரியுமா அன்னதானமா செய்யச்சொல்ரேன்மனசுல கொஞ்சமாவது இரக்கம் இருக்கணுங்க. மற்றவர்கள் பசியை புரிஞ்சுக்கணும். அதுக்குத்தான் நம் ஒரு நாள் உணவை பசியாக இருக்கு ஒரு ஏழைக்கு கொடுக்கலாமில்லையா?அதுவும் வருடத்தில் ஒரு நாள் தானே சொல்ரேன்.அந்த ஒரு நாள் என்பர்த்டேவா  ஏன்இருக்கக்கூடாது?


 உங்க பர்த்டே உங்க விருப்பபடி, என்பர்த்டே என்விருப்பபடி. 100 பேருக்காவது ஏதாவது இல்லம் போயி அன்னதானம் செய்ய ஆசைதான் அதெல்லாம் முடியாதுன்னுதான் ஒரேஒரு நாள் ஒரு ஆளின் பசியையாவது போக்கலாம் இல்லியா அது மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு என்றாள் கல்பனா. விஜய் ஒரு கேலிப்பார்வையுடன் ஆமா நீ ஒரு நாள்  ஒரு வேளைச் சோறு  கொடுப்பதால் அவனுக்கென்ன பிரயோசனம்? மறு நாள் யாரு வீட்ல சோறு கிடைக்கும்னு எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவான். உன்னைப்போல அன்னதான பிரபுக்கள் தெருவுக்கு ஒருத்தராவது இருப்பாங்கதானே.உங்களைப்போன்றவர்களால்தான் நாட்டில் பிச்சைக்காரர் களின் எண்ணிக்கையும் சோம்பேரிகள் எண்ணிக்கையும் கூடிண்டே போகுது அது உங்களுக்கெல்லாம் சொன்னா எங்க புரியப்போகுது?திடமாகையும் காலும் இருக்கும்போது உழைச்சு சாப்பிட பழகணும். அதுக்கெங்கே புத்தி இருக்கு. அவர்களை கெடுக்கத்தான் உன்னைப்போல நிறையப்பேரு இருக்கீங்களேன்னு சொல்லியவாறே சே, மூட் அவுட் ஆயிடுச்சு. மீதி சாப்பாட்டை அமைதியுட சாப்பிட்டு எழுந்தார்கள் கல்பனாவுக்கு என்ன சொல்வதென்ரே புரியல்லே.

77 comments:

Unknown said...

யதார்த்தத்தை உள்ளடக்கிய பதிவுக்கு நன்றி அம்மா!

RAMA RAVI (RAMVI) said...

கல்பனாவின் நல்ல மனதை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லையே?
நல்ல பகிர்வு அம்மா நன்றி.

சக்தி கல்வி மையம் said...

நான் உங்க பிறந்த நாள் வாழ்த்து சொள்ளலாம்ன்னு ஓடி வந்தேன்..

ஆனா?

கே. பி. ஜனா... said...

புதிய கோணத்தில் நல்ல கதை.

மகேந்திரன் said...

நாம சந்தோசமா இருக்கும் தருணத்தில்
இன்னும் நாலு பெரு சந்தோசமா இருந்தா
மனசு குதூகலிக்கும்
நல்ல பகிர்வு அம்மா.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவு ஒன்றை அறிமுகப்படுத்த
வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.

இணைப்பு...

http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_21.html

Anonymous said...

என்ன சொல்வதென்றே
புரியவில்ல....
நல்ல எழுதிருகிங்க நன்றி....

Jaleela Kamal said...

அருமையான கருத்து கொண்ட கதை

லஷ்மி அக்கா கொஞ்சம் பேரா பேராவா இடை வெளி விட்டு எழுதுங்க

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பகிர்வு .

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் யதார்த்தமான நல்ல பகிர்வு.

ADHI VENKAT said...

யதார்த்தத்தை சொன்ன கதை. பகிர்வுக்கு நன்றிம்மா.

ரிஷபன் said...

உங்க பர்த் டேன்னு நினைச்சு வந்தேன்..
வந்த இடத்துல சூப்பர் கதை படிக்க முடிஞ்சுது

shanmugavel said...

இதைப்பற்றி இருவேறு பார்வைகள் எப்போதும் உண்டு.அன்னதானம் நமது பாரம்பர்யம்.ஏன் உழைத்து சாப்பிடக்கூடாது? என்பதும் கேள்வி.ஆனால் உடலால் முடியாதவர்களும் உண்டு.கல்பனா போன்ற நல்ல இதயங்களும் உண்டு.

ஆமினா said...

அருமை மாமி

தமிழ்மணம் 7 :-)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை....

ஸ்ரீராம். said...

நல்லதொரு கதை. நல்ல மனம் கல்பனாவுக்கு இருக்கிறது. அந்த நாளில் கல்பனா ஒரு முதியோர் இல்லத்திலோ அனாதைக் குழந்தைகள் இல்லத்திலோ உதவிகள் செய்யலாம்.(யோசனை சொல்லுமளவு கதையில் ஒன்றி விட்டேன்)

மாய உலகம் said...

நானுந்தான் உங்க பிறந்த நாள் சொல்லலாமுன்னு ஓடி வந்தேன்...நல்ல பகிர்வு அம்மா நன்றி.

K said...

இதைப்பற்றி இருவேறு பார்வைகள் எப்போதும் உண்டு.அன்னதானம் நமது பாரம்பர்யம்.ஏன் உழைத்து சாப்பிடக்கூடாது? என்பதும் கேள்வி.ஆனால் உடலால் முடியாதவர்களும் உண்டு.கல்பனா போன்ற நல்ல இதயங்களும் உண்டு.://///

அண்ணனோட கருத்துதான் எனது கருத்து மேடம்!

அந்நியன் 2 said...

அருமையான கருத்து கொண்ட கதை.

GEETHA ACHAL said...

நான் உங்களுக்கு இன்றைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லாம் என்று வந்தால்...இது கதை..

ரொம்ப அருமை...

சம்பத்குமார் said...

அருமையான சிறுகதை அம்மா..

தொடரட்டும்

பாசத்துடன்
சம்பத்குமார்

'பரிவை' சே.குமார் said...

யதார்த்தம்.

குறையொன்றுமில்லை. said...

விக்கி உலகம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கருன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கே.பி. ஜனா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் வலைச்சர அறிமுகத்துக்கும் நன்றி

சுசி said...

கதை ரொம்ப நல்லா இருக்கு அம்மா. very nice and touching.

குறையொன்றுமில்லை. said...

சின்னத்தூரல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சுசி said...

கதை ரொம்ப நல்லா இருக்கு அம்மா. very nice and touching.

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

நண்டு, நொரண்டு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரிஷபன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஷன்முகவேல், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமி வருகைக்கும் ஒட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் கதையில் ஒன்றிப்போகும் அள்வுக்கு நல்லா எழுதவருதா சந்தோஷமா இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

மாய உலகம் எவ்வளவு பேரு என் பிறந்த நாள் என்று நினைச்சிருக்கீங்க?

குறையொன்றுமில்லை. said...

ஐடியா மணி இந்த ரெண்டு கருத்தையும் சொல்லத்தான் இந்தக்கதையே சொன்னேன்.முன்னே ரேடியோ சிலோனில் என் இந்தக்கதை வந்தது நீங்க யாருமே கேட்டிருக்க முடியாது. அதான் இங்க திரும்பவும் சொன்னேன்.

குறையொன்றுமில்லை. said...

அந்நியன்2 வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கீதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

சம்பத் குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

சே. குமார் நன்றீ

ஆயிஷா said...

நல்ல பகிர்வு.

தமிழ்மணம் 12

குறையொன்றுமில்லை. said...

ஆயிஷா வருகைக்கு நன்றி

அம்பலத்தார் said...

வித்தியாசமான நல்லதொரு பதிவைத் தந்ததற்கு நன்றிகளம்மா

raji said...

கல்பனாவின் மனது அவள் குடும்பத்தாருக்கு இல்லையே.அப்படி இல்லாவிடினும் அவள் ஆசையை
நிறைவேற்றி வைக்க கூட அவர்கள் முற்சிக்காமல் விட்டு விட்டார்களே.மனிதர்களின் குணங்கள் பலவிதம்,அதில் இது ஒரு விதம்.
கதை நன்றாக இருந்தது.

குறையொன்றுமில்லை. said...

அம்பலத்தார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

M.R said...

யதார்த்தமான பதிவு அம்மா

Anonymous said...

யதார்த்தத்தை சொன்ன கதை...நன்றாக இருந்தது...

கும்மாச்சி said...

நல்ல பதிவு. வாழ்த்துகள்.

ஸாதிகா said...

அருமையான கதை லக்‌ஷ்மியம்மா.

குறையொன்றுமில்லை. said...

M.R. வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரெவரி, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கும்மாசசி, வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா நன்றி

குறையொன்றுமில்லை. said...

hi,

இராஜராஜேஸ்வரி said...

கல்பனாவின் நல்ல மனதை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லையே?
நல்ல பகிர்வு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கல்பனாக்களை யாரும் புரிந்து கொள்வதில்லை. பெருமை பேசுவதை கேலி செய்யும் கூட்டம் தான் அதிகம். நல்ல கதை லக்ஷ்மி'ம்மா...

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அப்பாவி தங்கமணி வருகைக்கு நன்ரீ

G.M Balasubramaniam said...

THE JOY OF GIVING HAS TO BE EXPERIENCED. அந்த ஆத்ம திருப்தி தெரியாதவர்களால் கொடுப்பதனால் ஏற்படும் மனநிறைவை புரிந்து கொள்ள முடியாது. இங்கு காந்தி கூறியதாக எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. தேவைக்கு மீறி செலவு செய்பவன் எங்கோ ஒரு திருடனையோ பிச்சைக்காரனையோ உருவாக்குகிறான்.

மாதேவி said...

உங்கள் கதை ரேடியோசிலோனில் வந்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

நல்ல கதை.

குறையொன்றுமில்லை. said...

G.M. பாலசுப்ரமனியம் சரியா சொன்னீங்க. வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

radhakrishnan said...

அருமையான கருத்துள்ள குட்டிக்கதை
எல்லோருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்
வழக்கம் முன்பு நம் குடும்பங்களில்
உண்டா?கொண்டாடுவதற்குதான் நிறைய
பண்டிகைகள் நமக்கு உண்டே.ஆனால்
இதையார் கேட்பார்கள்.இளைய தலைமுறைக்கு இது ஒரு கூடு.தல்
வாய்ப்பு.ஹேப்பி பர்த்டே கொண்டாடாவிட்டால் குழந்தைகள் கூட
கோபித்துக்கொள்ளுமே.

கதம்ப உணர்வுகள் said...

அன்பு வணக்கங்கள் லக்‌ஷ்மிம்மா...

உங்க கதையை ரொம்ப ரசித்து படித்தேன். பெண்களின் நிலை எல்லா இடத்திலும் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க உங்க கதை படிச்சா போறும்...

எல்லா இடத்திலும் பெண்கள் ராட்சசி இல்லை.. கல்பனா போன்ற நல்ல உள்ளங்களும் இருக்காங்க.

எல்லாருக்குமே ஒரு தனித்தன்மை இருப்பது போல எல்லாருக்குமே ஆசாபாசங்கள் கனவுகள் லட்சியங்கள் இருக்கும்...

கல்பனாவுக்கு தன் பிறந்தநாளில் கூட தர்மம் செய்யனும் என்கிற அருமையான சிந்தனை..

அதற்கு உதவலேன்னாலும் பரவால்ல... ஆனால் இப்படி சொல்லி இருந்திருக்கவேண்டாம்..

பிச்சை காரர்களுக்கு பிச்சை போடுவது சட்டப்படி தப்பு, ஆனால் தர்மப்படி கரெக்ட்.....

அம்மா அருமையான கதை பகிர்வு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

அன்பு வணக்கங்கள். உங்க தளம் இன்றுதான் வந்து பார்த்தேன்.
இணைத்தும் கொண்டேன் என்னை...

அன்பு வாழ்த்துகள் அம்மா...

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஞ்சுபாஷினி, முதல்முறையா வரீங்களா அடிக்கடி வாங்க நல்ல வியாசமான வாசிப்பு அனுபவங்கள் இங்கு கிடைக்கும். இணைத்துக்கொண்டதுக்கும் அருமையா கருத்து சொன்னதுக்கும் நன்றி

Unknown said...

அருமையான கதை .வாசித்தேன் ரசித்தேன் ......

குறையொன்றுமில்லை. said...

A.சிவசங்கர், முதல் முறை வரீங்களா. அடிக்கடி வாங்க . நன்றி

கதம்ப உணர்வுகள் said...

உண்மையே அம்மா... வந்ததுமே இம்ப்ரெஸ் ஆகிட்டேன் அம்மா உங்க பகிர்வில்.... இனி மிஸ் பண்ணமாட்டேன்.

குறையொன்றுமில்லை. said...

மஞ்சு வா, வா அடிக்கடிவா.

சாந்தி மாரியப்பன் said...

உங்க பிறந்தநாள்ன்னு நினைச்சு ஏமாந்தவங்கள்ல நானும் ஒருத்தி :-))

கதை ரொம்ப நல்லாருக்குது லஷ்மிம்மா.

என்னை ஆதரிப்பவர்கள் . .