Google+ Followers

Pages

Sunday, October 2, 2011

அஞ்சலி

ஒரு நல்ல மனிதரின் நினைவுகள். இன்று அக்டோபர் 2...  10-வருடம் முன்பு அவர் இந்த தேதியில் தான் காலமானார். பார்க்கும் அனைவரிடமும் அன்புமட்டுமே காட்டத்தெரிந்தவர். வீட்டுக்கு ஒரே பிள்ளயாக பிறந்ததால் அனைவருடனும் சகோதரபாச்த்துடனே பழகுவார்.யாருக்கு எந்த உதவி தேவைன்னாலும் முதல் ஆளாக போய் உதவுவார். சரியான வயதில் திருமணம் குழந்தைகள் என்று நடந்தது. கடவுள் பக்தியில் கன்மூடித்தனமானபக்தி உள்ளவர்.கோவிலில் ஸ்வாமி ஊர்வலம் இருந்தால்  ஸ்வாமிக்கு அல்ங்காரம் எல்லாம் சிறப்பாகப்பண்ணுவார். வீட்டிலும் ஒரு பண்டிகையும் பண்ணாமல் இருந்ததில்லை பூஜை புனஸ்காரம் எல்லாம் முறையாகப்பண்ணிவருவார்.தாராளமாககுழந்தைச்செல்வங்களும்பிறந்தார்கள்.
குழந்தைகளைச்சிறந்தமுறையில் வளர்த்து நன்கு படிப்பு வேலை திருமணம் என்று தன்கடமைகளைமிகச்சிறப்பாகவே செய்து முடித்தார்.செண்ட்ரல் கவர் மெண்ட் உத்யோகத்தில் இருந்ததால் ஊர் ஊராக மாறி, மாறிபோகவேண்டி இருந்தது.எல்லா இடங்களிலுமே அவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது.அவரின்55-வது வயதில் எதிர்பாராவிதமாக பாரலடிக்ஸ் அட்டாக் ஆனது. ஷுகர் இருப்பதே தெரியாம போச்சு. ரொம்ப ஹை ஆகி ப்ரைய்னில் ப்ளட் க்ளாட் ஆகி பாரலடிக்கில் கொண்டு விட்டது.கழுத்துக்கு கீழ எந்தபாகமுமே செயல்படாம ப்போனது. இடது கை மட்டு ஓரளவு மூவ்மெண்ட் மிக லேசாக இருந்தது. பேச முடியாது. எல்லாமே படுத்தபடுக்கையில் ஆனது.ஆஸ்பிடல் வாசம்லாம் பத்தி சொன்னா அது ஒரு பனிஷ்மெண்ட் காலங்கள் தான். அதனால சொல்லலே. பசங்கல்லாம் வேர வேர ஊர்களில் செட்டிலாகி இருந்தார்கள். ஆஸ்பிடலில் அவர் இருந்தப்போ எல்லாருமே வந்து சேர்ந்துட்டா. பிறகு ஆபீசு, வேலை குடும்பத்தையும் கவனிக்கனுமேஇல்லியா?
 வீட்டில் அவரும் மனைவியும் மட்டுமே.மனசில் நினைவுகள் எல்லாம் இருந்தது. முகம் கண் லேசாக அசைக்க முடியும்.. அவர்மனது வேதனைப்படுவது அவர்கண்களில் நன்கு தெரியும்.சமயத்ல குலுங்கி அழுதுடுவார். கண்ணீரைக்கூட அவரால் துடைச்சுக்க முடியாது .மனைவிதான் ஒன்னொன்னும் பாத்து பாத்து பண்ணீ யாகனும்.

 இன்சுலின் இஞ்செக்‌ஷன்போட்டு, மருந்துமாத்திரை கொடுத்து, லாப்சி கஞ்சி ஸ்பூனால ஊட்டிவிட்டு  வீல் சேரில் அவரைத்தூக்கி உக்காரவச்சு படுக்கையெல்லாம் அசிங்கம் பண்ணீயிருப்பதை க்ளீன்பண்ணி அவரைக்குளிப்பாட்டி எல்லாம் மனைவிதான் செய்யனும்.காய்கறிகளை நன்கு வேக வைத்து மிக்சியில் அடித்து சூப் மாதிரி செய்து ஸ்பூனால் ஊட்டி விடனும் ஷுகர் ஹையா இருந்ததால அரிசி சேர்க்க முடியாது.டயட்கண்ட்ரோல் பாலோ பண்ணனும்.போதும் போதாதுன்னு அவரால சொல்ல்முடியாது. மனைவிதான் ஒருகுழந்தையை கவனிப்பதுபோல ஒன்னொன்னும் பார்த்துப்பார்த்து பண்ணனும். நல்ல செயலா சுறுசுறுப்பா இருந்தவரை இப்படி ஒருவெஜிடபிலா பார்க்க அந்தமனைவி மனதுபடும் பாடு சொல்லில் அடங்காதது. இப்படி ஒருவருடம் ரெண்டு வருடம் இல்லே முழுசா 12- வருடங்கள் இந்தபனிஷ்மெண்ட் காலங்கள்.அவரின் எதிரில் அவள் கலக்கத்தைக்காட்டிக்கொள்ள முடியாது.தனியே போய்த்தான் அவளால அழமுடிந்தது.. அவரிடம் பக்கத்திலேயே உக்காந்துண்டு அவருக்கு தைரியம் சொல்லிக்கொண்டே இருப்பாள் அவருக்கு மனைவி எப்பவும் அவர்தலைமாட்டில் எப்பவுமே பக்கத்திலேயே அவள் உக்காந்திருக்கணும்.
இவ்வளவு நல்ல மனுஷர் ஏன் இப்படில்லாம் கஷ்ட்டப்படணும். ஆண்டவன்மேல எவ்வளவு பக்தி அன்பு வச்சிருந்தார். பின்ன இந்தக்கஷ்ட்டம் ஏன் கொடுத்தான் அந்த ஆண்டவன்?

 நல்ல வேளை அவருக்கு காது சரியாகேட்டுண்டு இருந்தது. ஏதானும்கேட்டால் கண்ண அசைத்து பதில் சொல்வார்.  அவளுக்கு வெளியே போக வேண்டிய வேலைகள் இருந்தால் அவரவளைப்போகவே விடமாட்டார் புடவைத்தலைப்பை பிடிச்சுண்டு போகாதே என்னை விட்டுட்டு ஒங்கும் போகாதேன்னு கண்களாலேயே கெஞ்சுவார். இரவு அவ்ள் முதல் ரூமில்தான் வந்து படுப்பாள் அரைமணிக்கு ஒருதடவைஅலாரம் வச்சுண்டு எழுந்து, எழுந்து அவருக்கு ஏதானும் வேனுமா, தூங்கராரான்னு போய்ப்போய் பாத்துனே இருப்பாள்.தன்னால அவரால திரும்பி படுக்கவும் முடியாது இவள்தான் அவரை திருப்பி படுக்க வக்கனும். குளிப்பாட்டி உடம்பு பூரா பவுடர் தடவி படுக்கையில் படுக்க வக்கனும் ரெண்டு பக்கமும் தலகாணீகளை அண்டைக்கொடுத்து படுக்க வைப்பாள் படுத்தவாரேதான் சாப்பாடு ஊட்டி விடனும்.படுக்கைப்புண்வந்துடக்கூடாதேன்னு பார்த்துப்பார்த்து நல்லாவே கவனித்துக்கொண்டாள். நான் உனக்கு ரொம்ப கஷ்ட்டம் கொடுக்கரேனேன்னு கண்களாலேயே அவளிடம் சொல்வார். அவரின் கண் என்ன பேசும் என்று அவளால் புரிந்து கொள்ளமுடியும்.ஆபீசில் வாலண்டியரி ரிடையர்மெண்ட் கம்பல்சரியா எடுக்க வேண்டிவந்தது. ரிட்டையர் ஆயிட்டா   ஆபீஸ் க்வாட்டர்சில் இருக்க முடியாது. பசங்க இருக்கும் ஊருக்கே இருவரும். வந்து ஊரின் ஒதுக்குப்புறமாக வீடுவாங்கினார்கள் குழந்தைகள் அங்குஇருவரும் தங்கினார்கள். மாதம் ஒருமுறை குழந்தைகள் வந்துபாத்துட்டுப்போவா. தினமும் போன் பண்ணி விசாரிப்பா.

 அப்படித்தான் ஒரு நாள் காலை படுக்கையெல்லாம் க்ளீன்பண்ணீ வீல் சேரில்  உக்காரவைக்கும் போது அவரின் இடதுகால் கட்டை விரலில் கடி எறும்பு கூட்டமா மொச்சுண்டு இருந்தது. ஐயோ பாத்து பாத்து கவனிக்கும் போதே எறும்பு எங்கேந்துவந்ததுன்னு அவ்ள் படுக்கையெல்லாம் உதறி செக்பண்ணி பார்த்தா. வேறு ஒரு இடத்திலும் எறும்பே இல்லை . இவரின் கால் கட்டை விரலில் மட்டுமிருந்தது. ஐயோ இவருக்கு கடிச்சிருக்குமே வலிக்குமேன்னு நினைத்து வேகவேகமாக க்ளீன்பண்ணி அவரைக்குளிப்பாட்டிபடுக்கையில் கொண்டு போய் உக்காத்தி மடியில் அவரின் தலையைசாய்ச்சு பிடிச்சுண்டு முதுகுப்பக்கம் பவுடர்போட்டு சமமா தடவி விடும்போது அவரிடமிருந்து விக்கல்மாதிரி ஒரு மெல்லிசா சத்தம் கேட்டுது. உடம்பும் லேசாக ஒரு குலுக்கல போட்டுது. அவளுக்கு ஒன்னும் புரியல்லே. என்னாச்சுன்னு அவரைப்படுக்கையில் மெதுவாகபடுக்கவைத்து கொஞ்சம் காபி தரவான்னா. அவர் எந்தகணசைவு ம் காட்டாம கண் நிலைகுத்தி இருந்தது. அவளுக்கு திக்குனு ஆச்சு. கையில் பல்ஸ் பார்த்தா. எந்த அசைவுமே இல்லே. மூக்கின் பக்கம் விரல் வச்சுப்பார்த்தா. சுவாசமே இல்லே. ஏதோ விபரீதம்னு புரிஞ்சுண்டா. உடனே டாக்டருக்கு போன் பண்ணி இப்பவே வந்து பாருங்க்ன்னு கேட்டா.டாக்டர் உடனே அவரின் அசிஸ்டெண்டை அனுப்பினார். அவர்வந்து செக் பண்ணிப்பார்த்துட்டு ஆண்டி உயிர் போயி 15- நிமிஷம் ஆரது என்றார். என்னை விட்டு எங்கும் போகாதேன்னு என்னிடம் சொன்னவர் இப்போ என்னை தனியே விட்டுட்டு அவர்மட்டும் போயிட்டார்.
கண்முன்னே ஒருசாவுபாக்க மனது ரொம்பவே திடமாக இருக்கணும்.அதுவும் சொந்தப்புருஷனின் சாவு பார்க்க ரொம்ப தைரியமான மனது இருக்கனும். கணவன் மனைவி இருவரில் ஒருவர்போய் ஒருவர் இருந்தால் மிச்சமிருக்கும் அவர்களின் வாழ்க்கை ஒரு பனிஷ்மெண்ட் வாழ்க்கையாகவே இருக்கும்.


இவளுக்கும் ஒரு செகண்ட் மூச்சே நின்னுடுத்து.என்மடிலேயே கடைசி மூச்சை விட்டார்ன்னு பொங்கி பொங்கி அழுகை வந்தது. கண்ட்ரோல் பண்ணிண்டு பசங்களுக்கெல்லாம் போன் பண்ணி விவரம் சொல்லிட்டுகுடும்ப வாத்யாருக்கும் போன்பண்ணிசொல்லிட்டு அமைதியா அவர்பக்க்ம போயி உக்காந்தா. ஒருமணி நேரம் கழிந்து ஒவ்வொருவராக வந்தார்கள் . அப்புறம் அந்தமனைவி விக்கு அங்க வேலை இல்லை. மூலேல உக்கார வச்சுட்டா. எத்தனை வயசாகிப்போனாலும் , வியாதி வந்து அவஸ்தைப்பட்டு ப்போனாலும் கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு புனிதமானது. அந்தப்பிரிவை எந்தப்பெண்ணால்  தாங்கிக்கமுடியும்? அந்த நல்ல மனிதர் என் கணவர். அந்தமனைவி. நானேதான் 43- வருஷ உறவு இல்லைன்னு ஆச்சு. ஒவ்வொரு அக்டோபர் 2-ம்தேதியும் உண்ணா விரதமும், மௌனவிரதமுமிருந்து என் அஞ்சலிகளை அவருக்கு சம்ர்ப்பித்துவருகிரேன் கடந்த10-வருடங்களாக. என்னால் வேர என்ன தான் செய்யமுடியும்?/?
அக்கம்பக்கம் உள்ளவர்கள் துக்கம் விசாரிக்க வந்து போகும் போதுஒருவயதான மராட்டிக்கார அம்மாவும் வந்து பேசிண்டு இருக்கும் போது கடி எறும்பு அவர்கால்களில் மொய்த்தவிபரம் சொன்னாள். மாஜி, இந்தகட்டெறும்பு எமனோட தூதுவர்களாக்கும். யாருவீட்ல இப்படி உடம்பு முடியாம படுக்கையில் ரொம்ப நாளா இருக்காங்களோ அவங்களிடம் எமன் வரும்முன் தன் தூதர்களாக எறும்பை அனுப்பி அந்த வீட்டினருக்கு எச்சரிக்கை அனுப்புவதாக அர்த்தம்.என்று சொன்னா. அது உண்மையோ பொய்யோ கண் எதிரே பார்க்கும் போது நம்க்கு நம்பிக்கை இல்லைனாகூட நம்பித்தான் ஆக வேண்டி இருக்கு.

என்கவலை, வருத்தம் சந்தோஷம் சிரிப்பு எல்லா உணர்வுகளையும் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்வதில் என் மனது லேசாவதுபோல உணர
 முடிகிறது. முதல்லல்லாம் அதாவது பதிவு எழுத வரும் முன்பு எல்லாவற்றையும் மனதுக்குள்ளயே அடக்கி வைத்ததால் தான் ரெண்டு ஹார்ட் அட்டாக்கை  ஒரே நாளில்சந்திக்க வேண்டிவந்ததோன்னு தோனுது. ப்ளாக் எழுதுதி என்மனசை லேசாக்கி படிப்பவர்மனதை பாரமாக்குரேனோன்னும் தோனுது.

81 comments:

வெங்கட் நாகராஜ் said...

// வருத்தம் சந்தோஷம் சிரிப்பு எல்லா உணர்வுகளையும் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்வதில் என் மனது லேசாவதுபோல உணர
முடிகிறது. //

உண்மை அம்மா...

அந்த நல்ல மனிதர் உங்களை என்றென்றும் உங்களை கவனித்துக் கொள்வார்....

Anonymous said...

'அந்த நல்ல மனிதர்' நினைவுகளை பகிர்ந்ததுக்கு நன்றி லஷ்மி அம்மா... ......

கணேஷ் said...

எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருக்கீங்க.. படிக்கவே மாதிரி இருக்கு ..

இனி வாழும் காலம் சிரமம் இல்லாமல் இருக்க நினைக்கிறன் ..

shanmugavel said...

//என்கவலை, வருத்தம் சந்தோஷம் சிரிப்பு எல்லா உணர்வுகளையும் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்வதில் என் மனது லேசாவதுபோல உணர
முடிகிறது. //

உண்மை.நம் உணர்வுகளை எழுத்தில் கொட்டும்போது நிகழ்வது.பலர் எழுத இதுவும் ஒரு காரணம்.

சம்பத்குமார் said...

//ஆண்டவன்மேல எவ்வளவு பக்தி அன்பு வச்சிருந்தார். பின்ன இந்தக்கஷ்ட்டம் ஏன் கொடுத்தான் அந்த ஆண்டவன்? //

நல்லவர்களை வாழும்போது சோத்திது வாழ்ந்து முடித்த பின் தன்னுடன் வைத்துக்க்கொள்வதற்க்கு த்ரப்படும் சோதனைகள்தான் இந்த கஷ்டங்கள்

நன்றி அம்மா நல்லதோர் பகிர்விற்க்கு

பாசத்துடன்
சம்பத்குமார்

கோகுல் said...

அதாவது பதிவு எழுத வரும் முன்பு எல்லாவற்றையும் மனதுக்குள்ளயே அடக்கி வைத்ததால் தான் ரெண்டு ஹார்ட் அட்டாக்கை ஒரே நாளில்சந்திக்க வேண்டிவந்ததோன்னு தோனுது. ப்ளாக் எழுதுதி என்மனசை லேசாக்கி படிப்பவர்மனதை பாரமாக்குரேனோன்னும் தோனுது.//

உங்க மனசு லேசாகுதுன்னா அதுவே எங்களுக்கு போதும் அம்மா!

Rathnavel said...

எங்களது மனப்பூர்வ பிரார்த்தனைகள் அம்மா

மாய உலகம் said...

நல்ல மனிதரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி அம்மா

ஜெய்லானி said...

படிக்கும் போதே மனசு கணக்குது :-(

போத்தி said...

//ப்ளாக் எழுதுதி என்மனசை லேசாக்கி படிப்பவர்மனதை பாரமாக்குரேனோன்னும் தோனுது.//

Actually the opposite thing happens (at least to me). Please do continue to share with us.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லவர்களுக்கே தொடர்ந்து கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வருவதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம் உள்ளது. சிலவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளக்கூட முடிவதில்லை.

நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.
அதனால் சந்தோஷங்களை மட்டுமே நான் பிறருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மறுபக்கம் யாருக்குமே இதுவரை தெரியாது. தெரிந்து என்ன பிரயோசனம் என்று விட்டுவிடுகிறேன்.


ஆண்டவா நீ எங்கு இருக்கிறாய்?

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா
இத முதலே படிச்சிட்டேன்
உடனே எதுவும் சொல்ல தோன்றல, கண்ணில் நீர் தான் பெருக்கெடுத்தது,
இதேல்லாம் அபப்டியே என் அம்மாவும் பட்டதால் அதை நேரில் பார்த்ததால் உஙக்ள் வலி அனைத்தும் அறிய முடியுது,
ரொம்ப கிரேட் நீங்க.

Jaleela Kamal said...

இப்படி எங்களுடன் எழுதி பகிர்ந்தால் கண்டிப்பாக மனம் லேசாகும்,
வலை பூ எழுதும் காலம் வரை நாங்க இருக்கிறோம் உஙக்ளுடன்.

Madhavan Srinivasagopalan said...

சந்தோஷங்களை பகிர்ந்தால் அது இரட்டிப்பாகும்..
துக்கங்களைப் பகிர்ந்தால், அது பாதியாகக் குறையும்..

உங்கள் நல்லவை, கெட்டவைகளை இங்கு தாராளாமாகப் பகிரவும்.. உங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்....

துஷ்யந்தன் said...

அந்த நல்ல மனிதர் பற்றி பகிர்த்து எம்மையும் நெகிழ செய்து விட்டீர்கள்... நன்றி

காட்டான் said...

வணக்கமம்மா மனசை கனக்கவைத்த பதிவு.. எனது தாத்தாவும் படுத்த படுக்கையாய் இருந்துதான் போனவர் அதன் வலிகள் எனக்கும் தெரியும் உங்களை போன்றோரை நினைத்து பெருமைப்படுகின்றேன்..!!!

மகேந்திரன் said...

நல்லவர்கெல்லாம் சாட்சியம் இரண்டு, ஒன்று மனசாட்சி மற்றொன்று தெய்வத்தின் சாட்சியம்...
வானின்று மழைபொழிய காரணமாய் இருக்கும் சில நல்லவர்களை குறிப்பிடுகையில் மனம் மகிழ்கிறது.
அம்மா உங்களை பதிவு அருமை.

M.R said...

அப்பிடியெல்லாம் இல்லை அம்மா ,உள்ளத்தின் உள்ளே எண்ணங்களை பதுக்கி வைக்க வேண்டாம் .

பகிர்ந்து கொள்ளுங்கள் ,மனதை இலவன்பஞ்சாக மாற்றுங்கள் .

அன்பு கொண்ட நெஞ்சம் பிரிந்து சென்றாலே மணம் பித்து பிடித்தது போல் ஆகும் .

அந்த பிரிவு நிரந்தரம் என்றால் மணம் படும் வேதனை சொல்லில் அடங்காது அம்மா .

மணம் தேற்றிக் கொள்ளுங்கள் ,மனதையும் லேசாகி வைத்துக்கொள்ளுங்கள் .

உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் .மூன்றாம் முறை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களை பார்க்கும் போது மிக நெகிழ்ச்சியா இருக்கு. இங்கு எழுதுவதால் உங்கள் மனசு லேசாகுதுன்னா கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. வலைப்பூகளால் இப்படியும் ஒரு நல்ல விஷயம். உங்களுக்கு மென்மேலும் மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கட்டும்...!

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் ஆறுதலான பின்னூட்டத்துக்கும் நன்றி

Lakshmi said...

ரெவரி நன்றி.

Lakshmi said...

கணேஷ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஷன்முகவேல் ஐயா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

சம்பத் நீங்க சொல்வது சரிதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கோகுல் அன்பான, ஆதரவான கருத்துக்கு நன்றி

Lakshmi said...

ரத்னவேல் ஐயா நன்றிங்க்வருகைக்கு.

Lakshmi said...

மாய உலகம் நன்றி

Lakshmi said...

ஜெய்லானி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

போத்தி முதல் முரையா வரீங்களா. நீங்க படிவு எதுவும் எழுடலியா? சீக்கிரமே எழுதுங்க. நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி. நான் என் சந்தோஷம் சிரிப்பு அழுகை எல்லாத்தையுமே உங்க எல்லார்கூடவும் பகிர்ந்து கொள்கிரேன். அதில் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லதான் நம்ம மனசு கிளியரா ஆயிடரதே இல்லியா?

Lakshmi said...

ஜலேலா அந்த வேதனை அனுபவிச்சவங்களாலதான் சரியா புரிஞ்சுக்க முடியும் நீங்க சரியா புரிஞ்சுண்டீங்க. நன்றி

Lakshmi said...

மாதவன் நீங்க சொல்ரது சரிதான் அதுதான் நானும் என் எல்லா விஷயங்களும் உங்க எல்லாருடனும் ஷேர் பண்ணிக்கரேன்.

Lakshmi said...

துஷ்யந்தன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

காட்டான் அந்த வலியை உணர்ந்தவர்களால் நன்கு புரிஞ்சுக்க முடியும் . வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

M.R. மனசை லேசாக்கி கொள்ளத்தானே உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன்.வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமா ராமசாமி சார், பதிவு எழுதுவது என்னைப்பொறுத்தவரை ஒரு நல்ல விஷயம்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

புலவர் சா இராமாநுசம் said...

அன்பச் சகோதரி உங்களுக்கும் முதற்
கண் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
தற்போது நம் இருவர் நிலையும்
ஒன்றுதான்
என் உயிரின் உயிராக இருந்தவள்
என்னை விட்டுப் போய்விட்டாள்
ஒரு நல்ல மனிதரின் (காந்தி)
பிறந்த நாளும் ஒரு நல்ல மனிதரின்
இறந்த நாளும் ஒன்றானது வியப்புக்
குரியதே
அவர் வழி வாழ்ந்த இவரும்
அவரைத்தேடிச் சென்றார் போலும்
தனிமையை வெல்ல நீங்கள்
வலைவழி வாழ்வது போல
இன்று நானும் வாழ்கிறேன்
கவலற்க!

புலவர் சா இராமாநுசம்

Lakshmi said...

புலவர் சா. ராமானுசம் ஐயா உங்க ஆறுதலான வார்த்தைகள் என்னை உய்ர்ப்புடன் வைத்திருக்கு. உங்களுக்கும் என் ஆறுதல்களை தெரிவிச்சுக்கரேன் ஐயா.

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் அம்மா,

அந்த நல்ல மனிதருக்கு என்னுடைய அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ப்ளாக் எழுதுவதால் மனம் இலேசாகின்றது என்பது உண்மையே.

கோவை2தில்லி said...

உங்களுக்காக எங்கள் பிரார்த்தனைகளும் இருக்கும்.

மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் நம் மனது லேசாக ஆகும்.

அமுதா கிருஷ்ணா said...

12 வருடங்கள் நினைத்தே பார்க்க முடியவில்லை.

Lakshmi said...

நிருபன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி நன்றி

Lakshmi said...

அமுதா நன்றிம்மா.

Ramani said...

இவ்வளவு அழகாக தெளிவாக படிப்பவர்களும்
உங்கள் உணர்வுகளை மிகச் சரியாக உணரும் வண்ணம்
பதிவாகத் தரமுடிந்த நீஙகள் உண்மையில்
எதையும் மிகச் சரியாக எதையும் பார்க்கவும்
உணரவும் கூடியவ்ராக இருக்கிறீர்கள்
நீங்கள் குறிப்பிடுவது போல அதைப் பகிராமல்
பகிர்வதற்குரிய சூழல் இல்லாமல் இருந்தது கூட
இதயத்திற்கு அதிக சுமை கொடுத்திருக்கலாம்
உங்களுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் உங்கள் பதிவினைப்
படித்தால் ஒரு நிம்மதி கிடைக்கிறது என்பது நிஜம்
தொடர்ந்து பதிவுகள் தர வேணுமாய் அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன் த.ம 12

புலவர் சா இராமாநுசம் said...

வலை வந்து வாழ்த்தினீர்
நன்றி சகோதரி!

புலவர் சா இராமாநுசம்

Lakshmi said...

ரமணி சார், வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

புலவர் சா. ராமா நுசம் ஐயா நன்றிங்க.

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரி லக்ஷ்மி!

நேற்று காலையிலேயே உங்களுக்கு நீண்ட பின்னூட்டம் அனுப்பினேன். அது உங்களுக்கு வந்து சேரவில்லை போலிருக்கிறது.

நேற்று உங்க‌ள் ப‌திவைப்ப‌டித்த‌தும் ம‌ன‌சு க‌ன‌மாகி விட்ட‌து. ப‌ன்னிரெண்டு நீண்ட‌ வ‌ருட‌ங்க‌ள்! எப்ப‌டி தாங்கிக்கொண்டீர்க‌ள் அந்த‌ வேத‌னையை என்று புரிய‌வில்லை. எந்த அளவிற்கு மன வேதனையையும் உடல் கஷ்டத்தையும் அனுபவித்திருப்பீர்கள்! எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு கணவரை இத்தனை அருமையாய் கவனித்துக்கொண்ட உங்களை மனைவியாகப் பெறுவதற்கு உங்கள் கணவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

அரூப‌மாய் உங்க‌ள் கணவரின் ஆசீர்வாத‌ங்க‌ள் எப்போதும் உங்க‌ளுக்குத் துணை நிற்கும்.

உங்க‌ளுட‌ன் சேர்ந்து நானும் இன்த‌ நினைவ‌ஞ்ச‌லியில் ப‌ங்கேற்கிறேன்!

ம‌னோ சாமிநாத‌ன்

அமைதிச்சாரல் said...

மனசுல எல்லாத்தையும் போட்டு வெச்சுக்கிட்டு புழுங்கிக்கிட்டு இருக்கறதை விட நம்ம மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட அதைப் பகிர்ந்துக்கறது நிச்சயமா ஆறுதலளிக்கும். அப்படி உங்களுக்கு நெருக்கமானவங்களா இந்த வலையுலகமும் நாங்களும் அமைஞ்சது எங்க பாக்கியமே..

Lakshmi said...

சாந்தி நீ சொன்னதுபோல இந்தவலை உலகமும் உஙக எல்லாரின் நட்பும் தான் என்னை உயிர்ப்புடன் இன்னும் வச்சிருக்கு.

Lakshmi said...

மனோ மேடம் நீங்க காலை அனுப்பிய பின்னூட்டம் கிடைக்கலியே கிடைச்சிருந்தா பதில் சொல்லி இருப்பேனே. இப்ப அனுப்பிய பின்னூட்டம் கிடைத்தது.வருகைக்கும் ஆறுதலான அன்புக்கும் நன்றி

வெண் புரவி said...

மீண்டும் ஒரு முறை கண் கலங்க வைத்துவிட்டீர்கள் அம்மா...

Thanai thalaivi said...

பள்ளியில் தமிழ் பாடத்தில் சிலப்பதிகாரம் இருந்தது, அதில் ஒரு இடத்தில் "இனி இம்முறை கூறி தேற்றுவார் எவருமில்லை." என்று வரும். அதாவது, ஒருவருக்கு அம்மா, அப்பா என்று எந்த உறவு முறை இறந்து விட்டாலும் என்னை உன் அம்மாவாய் நினைத்து கொள், அப்பாவாய் நினைத்து கொள் இப்படி பலவுமாய் ஆறுதல் சொல்லலாம். ஆனால், ஒருவருக்கு கணவர் இறந்து விட்டால் என்னை உன் கணவராய் நினைத்து கொள் என்று முறை சொல்லி தேற்ற முடியுமா?

இதை தான் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றார்கள் போலும்.

உங்களுக்கு எங்கள் ஆதரவை உறுதிபடுத்துகிறோம்.

radhakrishnan said...

அன்பு சகோதரி,
கடும் அதிர்ச்சியில்ஆழ்த்திவிட்டீர்களே
அம்மா.ஏதோஅஞ்சலிஎன்றால்காந்தி
மகானுக்குஅஞ்சலிஎன்றுநினைத்துதற்செயலாகப் படித்தபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.பதிவின்போக்கையும்
உங்கள்நிலையையும்பார்த்து அந்தசகோதரிநீங்கள்தான்என்றுஊகித்த
போதுபட்ட வேதனைசொல்லவார்த்தை
இல்லை.12வருடங்கள் தனியாகஎப்படியம்மா பார்த்துக்கொண்டீர்கள்?
என்தந்தை மூன்றுவருடங்கள்இடதுபக்கம்பாதிக்கப்பட்டுபடுக்கையில் இருந்தார்.வெளியூரில்
வேலைமார்த்துவந்த நான்1 வருடம்
மூன்றுசின்னப்பையன்களுடன்குடும்பத்
தைமதுரைக்குகொண்டுவந்துவைத்துவிட்டுநான்மட்டும்காலை7க்குள் அப்பாவைஎழுப்பிஅவர்கடமைகளைமுடித்துஅமரவைத்துவிட்டுவேலைக்குச்சென்றுவிட்டு இரவு9மணிக்குமேல்வந்து
மீண்டும்அவரைக்கவனிப்பேன்.அம்மாவு
ம்கடைசிதம்பியும் பகலில்கவனித்துக்கொண்டார்கள்.இரவுமுழுவதும் ஒருமணிக்குஒருமுறைஅப்பாமணியடித்ததும்அம்மாஎழுந்துகவனித்துக்கொள்வார்.

Lakshmi said...

வெண் புரவி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

தானைத்தலைவி சிலப்பதிக்கரத்தில் உதாரணம் சொல்லி என்னை ஆறுதல் படுத்தி இருக்கீங்க. நன்றிம்மா.

Lakshmi said...

ஆமா ராதாகிருஷ்னன் கொடுமையான தருணங்கள் தான் நானும் அவர்கையில் பூஜைக்கு அடிக்கும் மணியைத்தான் கொடுத்து வைத்திருந்தேன். பேசமுடியாதே அவரால மணி அடிச்சுதான் கூப்பிடுவார். இப்பகூட யார்வீட்டிலாவது பூஜைமணி அடிக்கும் சத்தம் கேட்டாக்கூட நெர்வசாகிடரது.

radhakrishnan said...

சகோதரி,
ஒருவருடத்திற்குமேல் வேலையில்தாக்குப்பிடிக்கமுடியவில்லை.
எனக்குexecutive work என்பதால்வெளியில்கேம்ப் தினமும்
செல்லவேண்டும்.சர்வே எடுக்கவேண்டும்.மேலதிகாரிகளைஅனுசரித்துகவனிக்க வேண்டும்.பலவிதமான
தொல்லைகள்.எனவேமீண்டும்குடும்பத்துடன்எனதுதலைமையிடத்திற்கேசென்று
விட்டேன்குழந்தைகள்படிப்பெல்லாம்
பாதிக்கப்பட்டது,பின்கடைசிவருடம்
அம்மாவும்தம்பியும் பார்த்துக்கொண்டனர்.
இதன்பின்20வருடம்கழித்துஅம்மாவின்
88ம்வயதில்தொடைஎலும்பு உடைந்து
ஆபரேஷன்செய்தும்பயனின்றிஎலும்பு
சேராமல்மூன்றரைவருடங்கள் வீட்டில்
வாட்டர்பெட்டிலேயைவைத்திருந்தோம்.
அவர்களைக்கவனிக்க கோட்டையத்திலிருந்துநர்ஸுகளை
அழைத்துவந்துகவனித்தோம்.மூன்று
மாதத்ஃதிற்கொருமுறைவேறுநர்ஸ்வர
வேண்டும்.அவர்களுக்குசாப்பாடுசம்பளம்கொடுத்துமனம்கோணாமல்பார்த்துக்
கொள்ள வேண்டும்.அம்மாநிலைமிகவும்வருத்தத்ஃதிற்குரியது.எதற்கும் பிறர்கையை
எதிர்பார்க்கவேண்டும்.எனதுமனைவிநன்றாகப்பார்த்துக்கொண்டாள்என்றாலும்
அவளுக்கும்உடல்நிலைசரியில்லை.
ஆணானஎன்னால்ஓரளவுதான்கவனிக்க
முடிந்ந்து.அம்மாவின் மேல்உயிராக
இருந்தஎனக்குமிகுந்தமனக்கஷ்டம்
உண்டாகிஉடல்நலம்பாதித்த்து.
இயற்கைஉபாதைகள்சரிவரநடக்கஅடிக்கடி மிகுந்தஇடையூறுகள்.எப்படியோ
சமாளித்தோம்.2008ல்அம்மாகாலமானார்.குடும்பத்தில்பலவிதமானதவறானபுரிதல்கள்
உங்கள்நிலைபயங்கரமானது.

athira said...

லக்ஸ்மி அக்கா... இதைப் படிச்சதும் கண்ணால தண்ணியே வந்துவிட்டதெனக்கு.... இழப்பு இழப்புத்தான்... எல்லாம் விதி.. என்ன செய்வது.. ஒன்றுமே சொல்ல முடியவில்லை எனக்கு.

//இவ்வளவு நல்ல மனுஷர் ஏன் இப்படில்லாம் கஷ்ட்டப்படணும். ஆண்டவன்மேல எவ்வளவு பக்தி அன்பு வச்சிருந்தார். பின்ன இந்தக்கஷ்ட்டம் ஏன் கொடுத்தான் அந்த ஆண்டவன்?
//

இதைத்தான் நானும் எல்லோரிடமும் கேட்கும் கேள்வி... நல்லவர்களை மட்டும் ஏன் ஆண்டவன் அதிகம் சோதிக்கிறான்?????????????.

அதிகம் கடவுள் பக்தியும் கூடாதாம்.

Lakshmi said...

ராதா கிருஷ்னன், உங்க ந்லமையும் என்னை விட மோசமாத்தானே இருக்கு, மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கத்தான் ப்ளாக்கே எழுதரோம். சுவத்துகிட்டயானும் சொல்லி அழுன்னு சொல்வாங்க இல்லியா. சுகம் துக்கம், அழுகை, சிரிப்பு எல்லா விஷயங்களையுமே நான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன். நான் எப்பவுமே எதையுமே சீரியசா எடுத்துக்கரதே இல்லேதான் அப்படியும் நம்மையும் மீறி சில சம்யம் கஷ்ட்டமாயிடும். தாங்கித்தானே ஆகனும். வேர வழி. நமக்கு வேளை வரும்வரை நாமும் வாழ்ந்துதானே ஆகனும்.

Lakshmi said...

அதுதான் ஆதிரா பக்திகூட சில சமயம் யோசிக்க வைக்குது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

இராஜராஜேஸ்வரி said...

கண்முன்னே ஒருசாவுபாக்க மனது ரொம்பவே திடமாக இருக்கணும்.அதுவும் சொந்தப்புருஷனின் சாவு பார்க்க ரொம்ப தைரியமான மனது இருக்கனும். கணவன் மனைவி இருவரில் ஒருவர்போய் ஒருவர் இருந்தால் மிச்சமிருக்கும் அவர்களின் வாழ்க்கை ஒரு பனிஷ்மெண்ட் வாழ்க்கையாகவே இருக்கும்.

கண்ணீர் தவிர ர்ன்ன ஆறுதல் தேறுதல் தரமுடியும்!

ஸ்ரீராம். said...

பகிரும்போது பாரம் குறையும்தான். அந்தக் கடைசி அனுபவங்களைப் படிக்கும்போது மனம் பாரமாகிப் போனது. என் அம்மாவின் கட்சி நாட்கள் நினைவுக்கு வந்தது. மற்றவர் அனுபவங்களில் நாம் நம் அனுபவங்களையும் பார்க்கிறோம்/உணர்கிறோம். உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா..இனி அக்டோபர் இரண்டாம் தேதியில் இவர் நினைவும் எனக்கு வரும்.

Lakshmi said...

இராஜ rராஜேஸ்வரி vவருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம், எல்லாரிடமும் இப்படி சில அனுபவaங்கள் இருக்குதான்.

veedu said...

கணவன் மனைவி அன்புக்கு இலக்கணம் நீங்கள், உங்களின் ஆசியே எங்களுக்கு பெரிய விருது உங்களுக்கு இத்தனை சொந்தங்களின்(பதிவர்கள்) ஆறுதல் உங்கள் மனதின் பாரத்தை குறைக்கும் அம்மா...

Lakshmi said...

வீடு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அம்பலத்தார் said...

உணர்வுகளை பகிர்ந்துகொள்வதனால் பாதி மனஅழுத்தம் குறைந்துவிடும். கஸ்டங்கள் கவலைகளை சொல்லி ஆறுதல்படுவதில் தவறேதும் இல்லை. சங்கடமின்றி உங்கள் மன உணர்வுகளை பகிருங்கள்.

Lakshmi said...

அம்பலத்தார் வருகைக்கு நன்றிங்க.

மாதேவி said...

உங்கள் மன வேதனையைப் பகிர்ந்து கொண்டீர்கள். எங்கள் மனங்களிலும் சோகம்.

Lakshmi said...

ஐயோ, மாதேவி உங்க எல்லாரையும் சோகப்படுத்திட்டேனா. சாரிம்மா.

மஞ்சுபாஷிணி said...

எச்சுமிம்மா....

இதை படிச்சு முடிக்குமுன்னரே அழுகை வந்துட்டுது எனக்கு....

அப்படி ஒரு நல்ல மனிதருக்கு நீங்க மனைவியா கிடைத்ததால் தான் ராஜா போல இருக்கமுடிந்தது இறைவனடி சேரும்வரை....

இத்தனை அவஸ்தைகள் உடலளவிலும் மனதளவிலும் நீங்களும் உங்காத்துக்காரரும் பட்டு இருந்திருக்கீங்க வரிகளில் படிக்கும்போதே அவர் பட்ட வலியை உங்க கண்ணீரின் அவஸ்தையை உணரமுடிந்தது அம்மா..

அந்த மனிதர் என் கணவர் தான், அந்த மனைவி நான் தான்னு படிச்சப்ப நெஞ்சடைத்துவிட்டது எனக்கு....

12 வருடங்கள் கண்ணின் மணியை காக்கும் இமைப்போல பத்திரமா பார்த்துக்கிட்டீங்களே அவரை.....

குழந்தையை பத்திரமா பார்த்துக்கிற தாயா கிடைச்சீங்களேம்மா கற்பகாம்பா போல....

மனசு முழுக்க பாரத்தை தாங்கி தாங்கி அட்டாக்ல விட்டுதா :(

இப்ப பகிர்ந்தப்ப பழைய நினைவுகளில் மூழ்கிட்டீங்களாம்மா?

இந்த பகிர்வு படிச்சப்ப சட்டுனு உங்க தலைமுடி கோதி என் மடில படுக்கவெச்சு பஜன் பாடி உங்களை ஆறுதல்படுத்தனும்போல இருந்தது....

அழுகை அடக்கவே முடியலை என்னால...

தெய்வத்தை நேர்ல பார்க்க முடியுமா? முடியும்.... இதோ உங்களை பார்த்துட்டு இருக்கேனே கற்பகாம்பா உங்க ரூபத்துல இருப்பது போல தெரிகிறதே....

எமனின் தூதுவர்களா எறும்புகள் :(

உங்க மடியில் இறுதி மூச்சு விட்டப்ப அவருக்கு எத்தனை நிம்மதி கிடைச்சிருக்கும்... சொர்க்கம் அம்மா சொர்க்கம்....

உங்க கிட்ட கண்ணாலயே பேசுவாரா... காது நல்லா கேட்குமா.... அவர் பக்கத்துலயே உட்கார்ந்து அவரை திருப்பி படுக்கவெச்சு நைட்ல கூட நீங்க முழு உறக்கம் இல்லாம அவரை நல்லபடியா அடிக்கடி முழிச்சு பார்த்துக்கிட்டு....

கத்துக்கிறேம்மா... நல்லவை... அன்பை.... வாழ்க்கையை.... எல்லாமே கத்துக்கிறேன் இந்த ஒரு பகிர்வில்....கணவன் மனைவி இன்பத்தில் மட்டும் வாழ்ந்து துன்பங்களில் வேதனைகளில் வயோகத்தில் மறந்து மறுத்து இருப்போருக்கு உங்க இந்த பகிர்வு கண் திறக்க வைக்கும் அம்மா....

குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றுமில்லை கண்ணா....

அம்மாக்கு உங்க பகிர்வை படிச்சு காமிப்பேன் கண்டிப்பா...

ரெண்டு நாளா என் அம்மாவுக்கு கடுமையான நெஞ்சுவலி... அம்மா இப்படி வலியுடன் அழுது நான் முதன் முறை பார்த்தேன்... எனக்குள்ளும் பயம் வந்துவிட்டது....அம்மாவை கம்பீரமா நேர் கொண்ட பார்வையுடன் பார்வையுடன் தான் பார்த்திருக்கேன். வாழ்க்கையில் அம்மா பட்ட துன்பங்கள் நேரில் இருந்து பார்த்த சாட்சி நான் ஒருத்தி தான்....

இந்த பகிர்வு என் மனதில் நிலைத்து இருக்கும் அம்மா இனி என்றும்....

லட்சுமி அம்மான்னா உங்க வாழ்க்கை இனி எனக்கு நினைவுக்கு வரும் கண்டிப்பாக...

அன்பு நன்றிகள் அம்மா பகிர்வுக்கு...

Lakshmi said...

மஞ்சு உன் பின்னூட்டம்படிக்கும்போதே என்கண்களில் கண்ணீர். அவ்வளவு அழகா ஆறுதலா பின்னூட்டம் கொடுத்திருக்கே. இவ்வளவு நல்ல நட்பு கிடைக்க இந்தபதிவுலகம் தானே காரணமா இருக்கு. உன் அம்மாவுக்கும் நீ ஆருதலா இரு. எல்லாமே கடந்துபோம்.

மஞ்சுபாஷிணி said...

கண்டிப்பாக அம்மா... உங்கள் அன்பும் ஆசியும் என்றும் வேண்டும் எனக்கு....

என்றும் நீங்கள் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள் அம்மா...

Lakshmi said...

மஞ்சு என் அன்பும் ஆசியும் உங்க எல்லாருக்கும் எப்பொழுதும் கூடவே இருக்கும்மா.

RAMVI said...

அம்மா, தங்களின் பதிவுகளைப் பற்றி வலைச்சரத்தில், அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

Lakshmi said...

ரமா வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

வெகு நாட்கள் கழித்து வருகிறேன் லக்ஷ்மி.
மனம் பார்மாகி விட்டது. இத்தனை சோகத்தை மனதில் சுமந்து கொண்டு இருந்திருக்கிறீர்களே. ஒண்ணும் இல்லாத்தற்கெல்லாம் பிரியும் தம்பதிகளுக்கு நடுவில் நீங்கள் ஒரு மாதர் குல மாணிக்கம். உடம்பை நன்றாக் கவைந்த்துக் கொள்ளவும். எங்களுக்கு உங்கள் எழுத்து வேண்டும்.

Lakshmi said...

வல்லி சிம்ஹன் இவ்வளவு நாள் கழிச்
ச்சும் என் பதிவு படிச்சு பின்னூட்டமும் கொ
டுத்திருக்கீங்களே நன்றிம்மா.

என்னை ஆதரிப்பவர்கள் . .