Google+ Followers

Pages

Monday, November 28, 2011

காத்திருப்பு. 1

இந்திரபிரஸ்த் கார்டன் ஏர்கண்டிஷன் செய்ததுபோல குளு, குளு என்றிருந்தது. கார்டன் என்றால் குழந்தைகள் விளையாடும் பார்க்தான். அதற்கே உறிய சறுக்குமரம், ஊஞ்சல், குடைராட்டினம் கம்பி விளையாட்டு எல்லாமே இருந்தது. பக்கவாட்டில் இருந்த புல் வெளிகளையும் அழகாக மிருகங்களின் உருவத்தில் செதுக்கி ட்ரிம் செய்திருந்தது மிகவும் அழகாக இருந்தது. சுனிதாவும் சேகரும் அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த மிக்சரைக்கொறித்தவாரே தங்கள் எதிர்காலம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சேகர் வேலை இல்லா பட்டதாரி. சுனிதாவோ அந்தஊரிலேயே பெரும் செல்வந்தரின் ஒரே ஆசைமகள். இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஒருவருடமாகிரது. சேகர் இன்னிக்கு எந்தக்கம்பெனி படையெடுப்பு என்றாள் சுனிதா. உனக்கு கேலியா இருக்கா சுனி, நான் எவ்வளவு தீவிரமா வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கேன்னு உனக்குத்தெரியாததா?என் படிப்புக்குத்தகுந்த வேலை கிடைக்கமாட்டேங்குதுது, எனக்கிருக்கும் ஒரே துணை ஆன என் மாமா என்னை படிக்கவைக்க எவ்வளவு கஷ்டங்கள் பட்டிருக்கார் தெரியுமா? ஒரு நல்ல வேலையில் அமர்ந்து அவரை உக்காரவச்சு பார்த்துக்கனும்னும், உன்னையும் திருமணம் செய்துக்கனும்னு மனசுல எவ்வளவு ஆசைகள் இருக்குதெரியுமா?மிகவும் ஆதங்கத்துடன் சொன்ன சேகரைப்பார்த்து சுனிதா  சாரி சேகர் எனக்கும் உன் விருப்பம் நல்லாவே தெரியும் அதுக்காக நானும் உன்னைப்போல நாள் பூரா மூஞ்சியைத்தூக்கி வச்சுண்டு  உர் ர்னு இருக்கவா?உன் மூடை மாத்தத்தான் கொஞ்சம் ஜாலியா பேச்சு கொடுத்தேன். நானும் எத்தனையோ முறை சொல்லிட்டேன் என் அப்பாவைப்பார்த்துப்பேசு, முதலில் நம் காதல், பற்றிசொல்லி பிறகு நம் கல்யானம் பற்றி பேசு அப்புரம் அப்பாவே மாப்பிள்ளையா வரும் உனக்கு உயர்ந்தபதவியில் ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்துடுவார். நீயும் அலையாத இடமில்லை வேலையோ கிடைச்ச மாதிரி இல்லே கொஞ்சம் யோசிச்சுப்பாரு. என்றாள் சுனிதா.

 சுனி, ஒன்றுமில்லாத வெரும் மனிதனாக எப்படி பெண்கேக்கமுடியும்? தவிர எந்த பணக்கார அப்பாவும் தன்  ஒரே செல்லமகளை ஒரு ஓட்டாண்டிக்கு கொடுக்க சம்மதிக்கவே மாட்டார். என்று விரக்தியுடன் சொன்னான் சேகர். இல்லே சேகர் நீ நினைப்பதுபோல என் அப்பா அப்படிப்பட்ட ஆளில்லை. ஒருதரம் அவரை சந்தித்துப்பேசிப்பாரேன். அப்போ உனக்கே புரியும் எல்லா பணக்காரர்களையும் ஒரேபோல நினைக்காதே. என் அப்பாவுக்கு என் விருப்பம்தான் முக்கியம். என் விருப்பத்துக்கு மாறாக என்றுமே தடை சொல்லவே மாட்டார். அதுவும் தாயில்லா பொண்ணுன்னு ரொம்பவே பரிவுடன் இருப்பார். நான் ஆசைப்படுவதயே நிறைவேற்றி விடுவார். ப்ளீஸ் நாளை மாலை 7-மணிக்கு என் வீட்டுக்கு வந்து என் அப்பாவை மீட் பண்ணூ எத்தனை நாள்தான் இப்படி பார்க் பீச் என்று சுற்றிக்கொண்டிருப்பது? நான் அப்பாவிடம் நம்மைப்பற்றி சொல்லி தயார் செய்து வைக்கிரேன். நீ தைரியமா வந்து பேசு சரியா? நீ வந்து பேசினா உனக்கு நல்ல வேலையும் கிடைச்சுடும் நம்ம கல்யானமும் சீக்கிரம் நடந்துடும். வீணாக குழப்பிக்காதே. உன்னை என் உயிருக்கும் மேல நான் நேசிக்கிரேன் அதுக்ககவாவது, எனக்காகவாவது வந்து என் அப்பாவுடன் பேசு. என்று உருக்கமாக சொன்னாள்சுனிதா

   சரி சரி, நீ சொல்ரேன்னு உன் ஆசையைக்கெடுக்கவேண்டாம்னு வரேன் நானும்தான் என் உயிருக்கும் மேலாக உன்னை நேசிக்கிரேன் அது உனக்கும் தெரியும்தானே? ஆனாலும் என் காலில் நிக்கவேண்டாமா? சரி நாளை மாலை 7- மணிக்கு வரேன் உன் அப்பாவுடன் பேசுரேன் ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லேன்னு அரைமனதுடனே சொன்னான் சேகர்.. இப்பதான் நீ என் சேகர் மறக்காம நாளை 7-மணிக்கு வந்துடு நான் காத்துகிட்டே இருப்பேன். இப்ப கிளம்பலாமா, நேரமாச்சுன்னு இருவரும் எழுந்து தம் தம் வீடு நோக்கி போனார்கள். சேகருக்கு இரவு பூராவும் இதே சிந்தனைதான் தூக்கமே வரல்லே சுனிதா அப்பா என்ன சொல்லுவாரோன்னு அதே நினைப்புதான்.

 மறு நாள் மாலை சுனிதா தன்னை மிகவும் கவனமாக அலங்கரித்துக்கொண்டாள். தன் தந்தையின் வரவை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கி வாசலிலே நின்று கொண்டிருந்தாள்.அவள் அப்பா சிங்கப்பூர் ட்ரிப் ஒருவாரத்துக்குப்போய் இன்றுதான் திரும்புவதாக இருந்தது. கரெக்டாக மாலை 6- மணி அளவில் விலை உயர்ந்த காரில் வந்து இறங்கினார் சுனிதாவின் அப்பா. சுனிதாவுக்காக வில உயர்ந்தபரிசுப்பொருட்கள் எல்லாம் நிறைய கொண்டுவந்திருந்தார்.பெண்ணை ஒரு வாரமாக பார்க்கமல் இருந்த ஏக்கம் அவருக்கும் இருந்தது அவள் மேல் உயிரையே வைத்திருந்தார். அவரைக்கண்டதும் டாடி என்று குழந்தைபோல குதூகலித்தவாரே ஒட்டிப்போய் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.என்னடா செல்லம் அப்பாவை பார்க்கமல் ஒரு வாரம் கஷ்ட்டமா இருந்ததாடான்னு அவரும் மகளின் தலைக்கோதி கொஞ்சினார்.உனக்காக தேடிப்பிடிச்சு இந்தப்பரிசுப்பொருள் எல்லாம் வாங்கி வந்தேன் பிடிச்சிருக்கா பாருடா செல்லம். என்று பெட்டியைத்திறந்து எல்லாவற்றையும் வெளியே எடுத்து பரத்தினார். ஆர்வமுடன் எல்லாவற்றையும் கொண்டு பீரோவில் வைத்துவிட்டு வந்த சுனிதா,டாடின்னா டாடிதான். நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க குளிச்சுட்டு வாங்க முதல்ல சாப்பிடலாம்னுஅவரை விரட்டினாள்  என்னடா செல்லம் இன்னிக்கு ஒரே பர பரப்பா சந்தோஷமா இருக்கே அலங்காரம் எல்லாம் அமர்க்களமா பண்ணி இருக்கே என்ன விஷயம்டா செல்லம்?. இந்த டாடிக்கக ஏதானும் ஸ்பெஷல்  நியூஸ் வச்சிருக்கியாடா?  முதல்ல குளிச்சுட்டு வாங்க டாடி சாப்பிட்டுகிட்டே பேசலாம் என்றாள். இல்லே முதல்ல நீ என்ன விஷயம்  சொல்லு, பிறகு தான் குளியல் சாப்பாடு எல்லாம் என்று சோபாவில் காலை நீட்டி அமர்ந்து விட்டார்.

 சுனிதா அதற்குமேல் மறைக்க விரும்பாமல் சேகரை லவ் பண்ணும்விஷயம் அவனுக்கு வேலை இல்லாத விஷயம் அவன் இன்று அவரை சந்திக்க வரும் விபரம் எல்லாம் வெட்கம் கலந்த சந்தோஷத்துடன் சொல்லி முடித்தாள். அவள் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்ட அவர்  செல்லம் நீ என்னை இன்னும் சரியா புரிஞ்சுக்கலேடா.  என்னடாடி சொல்ரீங்க என்று பதட்டத்துடன் கேட்டாள் சுனிதா. அந்த நேரம் வாசலில் வந்த சேகர் கொஞ்சம் ஒதுங்கி நின்று பேச்சு தன்னைப்பற்றியதுதான் என்று எண்ணிவெளியிலேயே நின்று அவர் சொல்வதை  கவனமாக கேட்டான்.  சுனிதாவின் அப்பா பேச ஆரம்பித்தார். ஆமாடா செல்ல ம் நீ எனக்கு ஒரேசெல்லப்பொண்ணு, நமக்கு வர மாப்பிள்ளை நமக்குத்தகுந்த அந்தஸ்தி இருக்கனும், நல்ல வேலையில் இருக்கனும் உன்னை மஹாராணி மாதிரி வச்சு காப்பாத்தனும் அதுக்கு நல்ல பணக்காரமாப்பிள்ளையா இருக்கணும்......... ட்ரிங்க்.........ட்ரிங்க்,,,,,,,,ட்ரிங்க், பாதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே போன் அழைக்கவே ஒன் மினிட் சுனி என்று போன் பேச்ப்போனார். இவரின் பேச்சை வாசலிலே நின்று கேட்டுக்கொண்டிருந்த சேகருக்கோ அவமானமும்,  ஆத்திரமும், கோபமும் போட்டிப்போட்டுக்கொண்டு அவனை நிதானம் இழக்கவைத்தன. அவன் ஏற்கனவே எதிர்பார்த்தவிஷயம் தான் ஆனாலும் நேரில் கேட்கும் போது அவனால் தாங்கிக்கொள்ள வே முடியல்லை. விடு, விடு வென்று வீட்டை நோக்கி நடையைக்கட்டினான்.

                                                                                                    (தொடரும்)

43 comments:

G.M Balasubramaniam said...

தொடர் கதையா.?முழுவதும் படித்துப் பின் கருத்து. ஓக்கேவா,!

ராமலக்ஷ்மி said...

முழுவதுமாகக் கேட்காமலே போய் விடுகிறாரா? தொடருங்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சேகர் என்ன முடிவெடுப்பார்.. பார்ப்போம்.. அம்மா தொடரும்ன்னு போட்டுடாங்கலே...

RAMVI said...

சேகர் அப்பாவின் பேச்சை முழுவதும் கேட்காமல் அவசரப்பட்டு சென்று விட்டானோ?

அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுங்க அம்மா,முடிவை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு.

காட்டான் said...

வணக்கமம்மா!
எந்த ஒரு தகப்பனுமே தன் மகள் கஷ்டப்படகூடாது என்றுதான் பார்பான்..

அதுக்கு அதிக வசதியோ அந்தஸ்தோ தேவையில்லை.. சரி அடுத்த பதிவில பார்க்கிறேன். ஹி ஹி கல்யானம் கட்டினா பொண்டாட்டிய காப்பாத்துற அளவுக்காவது சேகருக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்கோ...!!

மகேந்திரன் said...

மிக இயல்பா இருக்குது அம்மா...

தமிழ்வாசி பிரகாஷ் said...

கதை அருமை.
உங்களை எனக்குள் நான் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

நம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

ஸ்ரீராம். said...

சேகர் அவசரப் படுவதாகத் தெரிகிறது!

கோமதி அரசு said...

தொலை பேசி இடையூரு செய்து விட்டதே! சேகர் மீதி பேச்சையும் கேட்டு இருக்கலாம்.

கதை நன்றாக இருக்கிறது.

asiya omar said...

கதை இண்ட்ரெஸ்டிங்..தொடருங்க..

கோவை2தில்லி said...

காதல் கதையாக ஆரம்பித்திருக்கிறது. பார்க்கலாம் எப்படிப் போகிறது என்று.....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

raji said...

ஆஹா!கரெக்டா சஸ்பென்ஸ் வச்சு தொடரும் போட்டீங்களே!சேகர் இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்து சுனியோட அப்பா இன்னும் என்ன சொல்றார்னு கேட்டிருக்கலாம்.அவசரப் பட்டார்னு நினைக்கிறேன்

அடுத்த பார்ட் எப்போ?

raji said...

ஆஹா!கரெக்டா சஸ்பென்ஸ் வச்சு தொடரும் போட்டீங்களே!சேகர் இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்து சுனியோட அப்பா இன்னும் என்ன சொல்றார்னு கேட்டிருக்கலாம்.அவசரப் பட்டார்னு நினைக்கிறேன்

அடுத்த பார்ட் எப்போ?

radhakrishnan said...

என்னம்மா, வை.கோ. சாருக்குப்
போட்டியாக சிறுகதைக்களத்தில்
இறங்கி விட்டீர்களே.? நடக்கட்டும்

கதை சினிமா போல் விறுவிறுப்பாகப்
போகும்போல இருக்கிறதே
என்ன இருந்தாலும் உங்கள் அநுபவக்
கதைகள் போல் வராது. நன்றி அம்மா

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... தொடரும் போட்டு இருக்கு! மொத்த கதையும் படிச்சுடுவோம்... :)

கதை விறுவிறுப்பா ஆரம்பிச்சு இருக்கு.... எப்படி முடியுதுன்னு பார்க்கணும்...

ரசிகன் said...

காத்திருக்கிறேன்.

அமைதிச்சாரல் said...

காத்திருக்கிறோம்.... நாங்களும் :-)

Madhavan Srinivasagopalan said...

// எந்த ஒரு தகப்பனுமே தன் மகள் கஷ்டப்படகூடாது என்றுதான் பார்பான்..//

Obvious ofcourse. Also, 'Sekar' himself may not like such a chance without his personal efforts/skills. She should have waited for some more time..

Nither Father, nor Sekar to be blamed for it.

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த பதிவு எப்போது என்று ஆவலாக உள்ளேன் அம்மா...நன்றி!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

Lakshmi said...

பால சுப்ரமனியம் சார் வருகைக்கு நன்றீ

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றீ

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

காட்டான் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

பிரகாஷ் வருகைக்கு நன்றீ

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றீ

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்ரி

Lakshmi said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்ரி

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராதாகிருஷ்னன் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரசிகன் வருகைக்கு நன்றீ

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றீ

அம்பாளடியாள் said...

அருமையான கதை தொடர வாழ்த்துக்கள் அம்மா .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

மாதேவி said...

கதை தொடரும்.... காத்திருக்கின்றோம்.

கீதா சாம்பசிவம் said...

யு.எஸ். வந்ததில் இருந்து உங்க வலைப்பக்கம் திறப்பதில் பிரச்னை. இன்னிக்கும் பதிவு பாதி தான் வந்தது. கணினி பிரச்னைனு நினைக்கிறேன். :(((((

கதையைப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். சஸ்பென்ஸில் நிறுத்தி இருக்கீங்க. சேகருக்குத் தன்மானமா? அவசரமா? புரியவில்லை. பார்க்கிறேன். :)))

Lakshmi said...

கீதா என் பதிவெல்லாம் கஷ்ட்டப்பட்டு படிக்கிரீங்களா? நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .