Google+ Followers

Pages

Friday, November 18, 2011

சில நம்பிக்கைகள்

எங்கேன்ஜ் மெண்ட் ரிங்க் மோதிர விரலில் ஏன் போடுராங்க?
தெரிஞ்சுக்கலாமா? வாங்க.

முதல்ல உள்ளங்கைரெண்டையும் சேத்து சாமி கும்பிடுவதுபோல வைங்க.

வைச்சீங்களா? இப்போ நடுவிரலைஉள்ளங்கையை தொடுவதுபோல உள்ள

மடக்கி வைங்க. பாக்கி நாலுவிரல்களையும் சேத்து கும்பிடு வதுபோல ஒட்டி

வைங்க.ஆச்சா? இப்ப முதல்ல ரெண்டுகட்டை விரல்களையும் கொஞ்சமா விலக்கிட்டு திரும்பவும் ஒட்டவச்சுக்குங்க. அடுத்து ஆள்காட்டி விரல்களையும்

அதுபோலவே கொஞ்சம் விலக்கிட்டு திரும்ப ஒட்ட வச்சுக்குங்க. அடுத்து

சுட்டுவிரலையும் அதேபோல விலக்கி, சேருங்க. இப்ப மோதிர விரலையும் விலக்கி சேருங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என்னங்க முடியலை இல்லியா?
ஏன் தெரியுமா? நம்ம லைஃப்ல கட்டைவிரல் நம்மை பெத்தவங்கன்னு வச்சுக்குவோம். எப்பவேணா நம்மைவிட்டு விலகிடுவாங்க.ஆள்காட்டிவிரல்

நம்மகூடப்பிறந்தவங்கன்னு வச்சுக்குங்க.அவங்களும் எப்பவேணாலும் நம்மை விட்டு விலகிடலா.ம். இப்ப சுட்டுவிரல் நாமபெத்த குழந்தைகன்னு

வச்சுக்கலாம்.அவங்களும் ஒருஸ்டேஜ்ல நம்மைவிட்டு விலகிப்போயிடலாம்.

ஆனா மோதிர விரலை ஏன் விலக்கமுடியலை????? அது புருஷன் பெண்ட்டாட்டின்னு வச்சுக்கலாம். என்னிக்குமே விலகமுடியாத விலகக்கூடாத பந்தம் கணவன்மனைவி பந்தம்தான். அதனால தான் அந்தவிரல்களை விலக்கமுடியலை. அதை சிம்பாலிக்கா உணர்த்தத்தான்

மோதிரவிரலில் எங்கேஜ் மெண்ட் ரிங்க் போடுராங்க.சரிதானே?????

எல்லாரும் கும்பிட ஆரம்பிச்சுட்டீங்களா. ம் ம் ம் ட்ரை பண்ணிபாருங்க

62 comments:

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

thirumathi bs sridhar said...

நானும் செய்து பார்த்தேன்.சூப்பர் போங்க.கலக்கிடீங்க.இதை எனக்கு தெரிஞ்சவங்களிடமெல்லாம் இந்த உதாரணத்தை சொல்லப்போறேன்.உங்க நினைவுகளுடன்.

கணேஷ் said...

அடடே.. நிஜம்தான். இப்படி விரல்களை வெச்சு வாழ்க்கைத் தத்துவத்தையே சொல்ல முடியும்னு நினைச்சே பாக்கலை... சூப்பர்ம்மா...

raji said...

வாவ்!க்ரேட் மா!

இதுல இப்பிடி ஒரு தத்துவம் இருக்கா?

விரல்களை வச்சு வாழ்க்கை தத்துவம் சூப்பர்.செஞ்சு பாத்து புரிஞ்சுக்கிட்டாச்சு.பகிர்விற்கு நன்றிம்மா!

இராஜராஜேஸ்வரி said...

ஆனா மோதிர விரலை ஏன் விலக்கமுடியலை????? அது புருஷன் பெண்ட்டாட்டின்னு வச்சுக்கலாம். என்னிக்குமே விலகமுடியாத விலகக்கூடாத பந்தம் கணவன்மனைவி பந்தம்தான். அதனால தான் அந்தவிரல்களை விலக்கமுடியலை. அதை சிம்பாலிக்கா உணர்த்தத்தான்
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

asiya omar said...

ஆஹா இந்த விளையாட்டு நல்லாயிருக்கே.சரி தான் போல..

ஸாதிகா said...

ஆஹா....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வும்மா. மிகச்சரியானது தான்.

சில நாட்கள் முன்பு முகப்புத்தகத்தில் பார்த்ததை என்னுடன் பகிர்ந்து கொண்டார் என் கணவர். நானும் செய்து பார்த்தேன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நம்ம விரல்லையே தத்துவமா?
சூப்பர்..

அமைதிச்சாரல் said...

என் பசங்க மொதல்ல இதைச் சொன்னப்ப செஞ்சு பார்த்து அசந்துட்டேன். எவ்ளோ முயற்சி செஞ்சாலும் முடியலை :-)

Madhavan Srinivasagopalan said...

கான்செப்ட் நல்லாத்தான் இருக்கு..
இருந்தாலும் மோதிர விரல என்னால கொஞ்சமாவது விளக்க முடிஞ்சது.

நடு விரல எதுக்கு மடக்கணும், அதோட தாத்பரியம் என்ன ?
நடு விரல மடக்கலென்ன, மோதிர விரல ஈசியா மத்த விரல் போல விளக்க முடியுதே.

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா.பிரமாதமான விளக்கம் மேடம்

புதுகைத் தென்றல் said...

விளக்கம் நல்லா இருக்கும்மா? புரிஞ்சுகிட்டேன்.

பகிர்வுக்கு நன்றி

கவி அழகன் said...

Mudiyala

DrPKandaswamyPhD said...

ரசித்தேன்.

Lakshmi said...

திருமதி ஸ்ரீஇதர் வருகைக்கு நன்றி சொல்லுங்க எல்லாரிடமும் எல்லாரும் தெரிஞ்சுக்கலாமே.

Lakshmi said...

கணேஷ் வருகைக்கும் ரசித்தத்ற்கும் நன்றீ

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜேஸ்வரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஆஸியாஓமர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸாதிகா ஆஹா தான் இல்லியா?

Lakshmi said...

நண்டு நொரண்டு ம்ம்ம்ம் நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி ஏற்கனவே இது பத்தி தெரியுமா?

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி. நடுவிரல் மடக்கித்தான் இதை ட்ரை பண்ணிபாக்கனும்.

Lakshmi said...

ராஜ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

புதுகைத்தென்றல் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கவி அழகன் முடியல்லியா அதேதான்.

Lakshmi said...

கந்தசாமி சார் ரசித்த்தற்கு நன்றிங்க.

athira said...

அடடா சூப்பராச் சொல்லியிருக்கிறீங்க, இப்போ கும்பிட்டுப் பார்க்க முடியேல்லை மீண்டும் வந்து படிச்சு ட்ரை பண்ணுறேன்....

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றி

raji said...

@மாதான் ஸ்ரீனிவாச கோபாலன்

இப்பிடி கூட வச்சுக்கலாம்.இது என் கற்பனைதான்.ஆனா எனக்கு இப்பிடித்தான் தோணுது.

அதாவது நடு விரல் மடக்கறது அப்படிங்கறது வாழ்க்கைல கஷ்ட நஷ்டங்கள் வர்றது.வாழ்க்கைல கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் பிரியாத பிரியக் கூடாத உறவுங்கறதுதான் கான்செப்ட்.

//இருந்தாலும் மோதிர விரல என்னால கொஞ்சமாவது விலக்க முடிஞ்சது//

இருக்கலாம்.கொஞ்சம் கூட ஊடல்,பூசல் குட்டி குட்டி சச்சரவு இல்லைன்னாலும் கூடலோட அருமை புரியாது பாருங்க.அதான் கொஞ்சமா விலக்க முடியுது.

@லக்ஷ்மிம்மா

இந்த என் கருத்து சரின்னு உங்களுக்கு படுதாம்மா?

Lakshmi said...

ராஜி உங்க கருத்தை நானும் ஏத்துக்கரேன். சரியாதான் சொல்லி இருக்கீங்க.

ரசிகன் said...

அம்மா!!!!!!!!
எப்புடி இதெல்லாம்!!!!!!!!!!!

மனோ சாமிநாதன் said...

அசத்திட்டீங்க! விரல்களை வைத்தே வாழ்க்கையின் நிதர்சனத்தை ரொம்பவும் சர்வசாதாரணமாகச் சொல்லி பிரமிக்க வைத்து விட்டீர்கள்!!

என்னை தொடர்பதிவிற்கு அன்புடன் அழைத்ததற்கு நன்றி!
விரைவில் தொடர்கிறேன்!!

Lakshmi said...

ரசிகன் ஹா ஹா ஹா!!!!

Lakshmi said...

மனோமேடம் வருகைக்கும் நன்றி தொடர்பதிவுஅழைப்பை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி

அம்பாளடியாள் said...

பெரியவங்க எதைச் செய்தாலும் அதில ஒரு அர்த்தம்
இருக்கும் .இந்த மோதிரத்தை மாட்டினவர்களில் எத்தனை
பேருக்குத்தான் இந்தத் தத்துவம் விளங்கி இருக்கும்.அருமை!..
இன்று உங்களால் சிலரேனும் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு
இருப்பார்கள் .மிக்க மகிழ்ச்சியம்மா .இன்று என் தளத்திலும்
ஒரு நீதி பகரப்பட்டுள்ளது .இதற்கு உங்கள் விரிவான கருத்தினை
இடுமாறு மிக அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றேன் .
வாருங்கள் உங்கள் கருத்தினையும் தாருங்கள் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ....

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி

Ramani said...

அருமையா இருக்கே இந்த விஷயம்
நீங்கள் சொல்லிச் செல்லும் விளக்கம் அருமை புதுமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

K.s.s.Rajh said...

மேடம் உங்கள் கேள்விக்கு பதில்


ப்ளாக்ஸ்பாட் என்பது ப்ளாக்கர் தளத்தின் டொமைனில் சப் டொமைனில் இருந்து நாங்கள் எழுதுகின்ரோம்.ஓனர் ப்ளாக்கர் தான்
நாம் இல்லை,நமக்கு ப்ரியாக எழுத தறுகின்றது அவ்வளவுதான்

சொந்த டொமையின் வாகுகினால்(காம்,நெட்,)அது எமது சொந்த இணையதளமாக இருக்கும்.இதற்கான செலவு வருடத்துக்கு 500 ரூபா மட்டுமே.

இப்படி டொமைன் மாறுவதால் உங்கள் வலைப்பூ வேறு யாருக்கும் போகாது அது தொடர்ந்து உங்கள் பெயரிலேயே இருக்கும். உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்கள் தானாக உங்கள் தளத்திற்கு redirect செய்யப்படுவார்கள். இதனால் வாசகர்களை இழக்க மாட்டீர்கள். வழக்கம் blogger இல் இருந்தே நீங்கள் post செய்யலாம்.

விரிவாக விபரங்களுக்கு
மேலதிக விபரங்களை அறிய

நண்பர் வந்தே மாதரம் சசி எழுதியது பதிவு-http://www.vandhemadharam.com/2010/11/blog-post_6492.html

நண்பர் பலே பிரபு எழுதிய இந்தப்பதிவை பார்கவும்-http://baleprabu.blogspot.com/2011/07/custom-domain-1.html

இதுவும் பலே பிரவு எழுதிய பதிவுதான்
http://baleprabu.blogspot.com/2011/11/how-to-buy-domain-without-using.html

வேறு எதும் சந்தேகம் இருந்தால் என் தளத்தில் முகப்பில் தொடர்பு கொள்ள என்று இருக்கு பாருங்க அதில் எனக்கு மெசேஜ் போடுங்க விரிவாக சொல்கின்றேன்.
உங்கள் மெயில் ஜடி எனக்கு தெரியாததால் இங்கே கமண்டில் போட்டுள்ளேன்

radhakrishnan said...

அருமையான விரல் பயிற்சி. அருமையான விளக்கம். எங்குதான்
இவற்றையெல்லாம் பிடிக்கிறீர்களோ
அல்லது சொந்த சரக்கோ(இருந்தாலும் இருக்கும்)நன்றி அம்மா

Lakshmi said...

ராஜ் விரிவானபதிலுக்கு நன்றி நீ சொல்லி இருக்கும் லிங்க் போயி பாக்குரேன். புரியல்லேன்னா திரும்பவும் உன்னை டிஸ்டர்ப் செய்யுரேன்.

Lakshmi said...

ராதாகிருஷ்னன் தேடித்தேடி கொஞ்சம் அதிகமாவே படித்துவருவதால் இதுபோல விஷயங்கள் எல்லாம் கண்ணில் படுகிரது. அதை எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன் அவ்வளவுதான்.

ஹேமா said...

அம்மா...கும்பிடறேன்...கும்பிட்டேன் !

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்றி

ஹ ர ணி said...

இதுவரை நான் கேள்விப்படாதது. நன்றி. மாறுபட்ட சிந்தனை. ராஜேஸவ்ரியின் இது தொடர்பான சிந்தனையும் அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

இதுதான் காரணமா? நான் கூட வேறென்னமோனு நினைச்சேனே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சந்திரகௌரி said...

நீங்கள் சொன்னதை முயற்சி செய்து பார்த்தேன். என்னால் சிறிதளவு முடிந்தது.

Lakshmi said...

ஹரணி வருகைக்கு நன்றி

Lakshmi said...

செந்தில் வருகைக்கு நன்றீ

Lakshmi said...

சந்திரகௌரி வருகைக்கு நன்றி

G.M Balasubramaniam said...

இந்த விளையாட்டு தெரியும். ஆனால் இந்த விளக்கங்கள் புதிது. பாராட்டுக்கள்.

Lakshmi said...

பாலசுப்ரமனியம் ஐயா வருகைக்கு நன்றி

மாதேவி said...

நல்ல விளக்கம்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

அப்பாதுரை said...

interesting.. ஆனா நடுவிரலை ஏன் மடக்கணும் சொல்லலியே?
ஆள்காட்டி விரலை மடக்கி வச்சா எல்ல விரலையும் பிரிச்சு சேக்க முடியுமாக்கும். (குதர்க்கம் கூடப் பொறந்தது என்ன செய்ய?)

இருந்தாலும் அருமையான கருத்து..

Lakshmi said...

அப்பாதுரை இnந்தப்பதிவு போட்டு இவ்வளவு நாள் ஆகியும்கூட வந்து பtடிச்சு ரசிக்கிரீங்க அதற்கு நன்றி.
நடு விரல் மடக்கினாதாnனே வீடு போல ஷேப் வரும் இல்லியா அதான்.

என்னை ஆதரிப்பவர்கள் . .