Google+ Followers

Pages

Wednesday, November 2, 2011

ருசி.

என்னம்மா இது டெய்லி இரவு வெரும் மோர் சாதமும் ஊறுகாயும் மட்டுமே போட்டு போரடிக்கரே. வெரைட்டியா பண்ணக்கூடாதா?  யாரு ரமணியா படிக்கர வயசில நாக்கு ருசி தேடினா படிப்பு அவ்வளவுதான்.போட்டதை தின்னு.மோருக்கும் ஊறுகாய்க்கும் ஆலாப்பறக்கும் நேரமும் வரும் அப்போ தெரியும் அதோட அருமை. அப்பாவின் கோபக்குரல்.
எதை வேணாலும் சாப்பிடலாம் அப்பா  இந்த மோறும் ஊறுகாயும் அலுத்துப்போகுதுப்பா.  இதுமகன் ரமணி.
 பேசாமபோட்டதை தின்னுட்டுப்போ. இல்லேன்னா ஒன்னும் சாப்பிடாமலேயே போய்க்கோ.அப்பாவுக்கு கோபத்தில் மூக்கு சிவந்தது.
  ஏங்க, வயசுப்பிள்ளை வாய்க்கு ருசியா கேக்கத்தான் செய்யும். இப்பதானே சாப்பிடர வயசு.இதுக்குப்போயி ஏங்க இப்படி கோவப்படுரீங்க? இது அம்மா.
வந்துட்டேல்லே?ச்ப்போர்ட்டுக்கு. குட்டி சுவர்தான் பிள்ளை.எப்ப கண்டிக்கும் போதும் இப்படி ஊடேல வராதேன்னு சொல்லி இருக்கேன்ல? ஏண்டி உனக்கு புரியமாட்டேங்குது? இது அப்பாவின் கோபம்.

 நா இப்ப என்னங்கசொல்லிட்டேன்.சாப்பாட்டு நேரத்ல இப்படி தினமும் தகறாறு பண்ரீங்களே அப்பாவும் மகனும். அம்மாவின்புலம்பல்.
 புத்தி சொல்லப்போனா தகறாறா? போட்டதை தின்னுட்டுப்போடான்னு பிள்ளையை கண்டிக்கத்தெரியல்லே. என் வாயை அடைக்க வந்துட்டே. எக்கேடு கெட்டுபோங்கன்னு பாதியிலேயே கையை உதறி எழுந்து போனார் அப்பா. ரமணியும் எழுந்து போனான். தினசரியும் உங்க ரெண்டுபேருகூடவும் ரொம்ப ரோதனையா போச்சு. இனி இருவரையும் தனித்தனியா உக்காரவச்சுத்தான் சாப்பாடு ப்பொடனும்.என்று மனதில் முணு முணுத்தவாரே
 அம்மா அடுக்களைக்காரியங்களை பார்க்கப்போனாள் அவளும் இரவு சாப்பிடாம படுக்கப்போனா. தினமுமே காலை ப்ரேக்ஃபாஸ்ட், மதிய உணவு எல்லாமே நல்ல சத்துள்ள காய் கறி பருப்புவகைகள் என்று பார்த்து பார்த்து பண்ணிப்போடுவாள் அதனால இரவு லைட்டா மோர்ச்சாதம் மட்டுமே பண்ணுவாள். அதுக்குத்தான் மகன் தகறாறு பண்ணூவான்.மறு நாள் சண்டே லீவு நாள் ரமணி காலைலயே டிபன் சாப்பிட்டு கிரிக்கெட் விளையாட போனான். கொஞ்ச நேரத்திலேயே பால் காலில் பட்டு முட்டியில் நல்ல அடி பட்டுண்டு அழுதுகொண்டே வீடு வந்தான். உடனே அப்பா ஆஸ்பிடல் கூட்டிப்போனார். டாக்டர் செக் செய்து முட்டியில் ப்ராக்சர் ஆகி இருக்கு. ஆபரேஷன் பண்ணனும் என்று சொன்னார்.அடுத்த நாள் ஆபரேஷன் முடிந்து 10- நாட்கள் ஆஸ்பிடலில் தங்க வேண்டி வந்தது. அப்பா அம்மா இருவரும் காலை மாலை போயி பார்த்து வந்தார்கள். அந்த ஆஸ்பத்திரியில் இன்பேஷண்ட்களுக்கு சாப்பாடெல்லாம் கொடுப்பா. காலை ப்ரேக்ஃபாஸ்ட் மதியம் லஞ்ச், இரவு டின்னர் எல்லாம் அவர்களே கொடுப்பார்கள் அதுவும் விதவிதமாக ஐட்டம் சாப்பிட கிடைக்கும் சாப்பாட்டுக்குப்பிறகு ஏதாவது ஒரு பழமும் கொடுப்பார்கள். சூடு சூடாக உணவு வகைகள் கட்டிலுக்கே கொண்டு கொடுப்பார்கள். ரமணிக்கு அதையெல்லாம் ஆசை பொங்க பார்த்ததுமே சாப்பிட தோன்றும். ஆனா என்னன்னா ஆஸ்பிடலின் டெட்டால் பினாயில் மருந்து நெடிகளின் வாடையினால் ஒரு வாய்ச்சோறுக்கூட உள்ளே இறங்காது. கண்முன்னாடி வித விதமா சாப்பாடு இருந்தாலும் ஒருவாய்கூட சாப்பிடமுடியாமல் ஆச்சு. அன்று ரமணியின் அப்பா அவனிடம் ரமணி நீ ஆசைப்பட்டமாதிரி வித விதமா நல்லா சாப்பாடு கிடைக்குது இல்லியா ஒரு வெட்டு வெட்டுடா ராஜான்னு கேலியாகச்சொன்னார். ரமணியோ அம்மாவை கட்டி பிடிச்சுண்டு அம்மா சாரிம்மா, என்னால இந்த ஆஸ்பிடல் வாடையில் எதுமே சாப்பிட பிடிக்கல்லே. நீ நம்ம வீட்லேந்தே மோர்ச்சோதமும் ஊறுகாயும் கொண்டு வரியா  என் நாக்கே வறண்டு போச்சும்மா. என்று சொன்னமகனை தாயும் தகப்பனும் ஆச்சரியமாகப்பார்த்தார்கள்.

44 comments:

RAMVI said...

பாவம் ரமணி,அவன் அப்பா சொன்னது மாதிரியே ஆகிவிட்டது.

கதை ரொம்ப நல்லாயிருக்கு லக்‌ஷ்மி அம்மா.

Ramani said...

மிகச்சரி
ருசி நாக்கு சமபத்தப்பட்டது மட்டுமா
மனம் சம்பத்தப்பட்டதும் தானே
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான அழகான பதிவு, அந்த ருசியான மோர் சாதம்+ஊறுகாய் போலவே. பாராட்டுக்கள்.

கவி அழகன் said...

சுவாரசியமா ருசியா இருக்கு

middleclassmadhavi said...

ரசித்த நல்ல கதை!! வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan said...

Nalla irukku..

விச்சு said...

எதுவுமே வீட்டு சாப்பாடுக்கு அப்புறம்தான். நல்ல சாப்பாடு...இல்ல இல்ல... நல்ல பகிர்வு.

ஸ்ரீராம். said...

அமிர்தமா இருந்தாலும் தினசரி சாப்பிட்டா போர் தான் அடிக்கும். அவ்வப்போது மாறுதலைச் சாப்பிட்டால் அலுக்காது. அதனால்தான் எப்போதாவது சமைக்கும் அப்பாக்களின் சமையல் அம்மாக்களின் சமையலை விடப் பெயர் வாங்குவது! சமயங்களில் இது மாதிரி சந்தர்ப்பங்களும் அம்மா, மோர் சாதம், ஊறுகாய் அருமையை உணர்த்துகின்றன!

வெங்கட் நாகராஜ் said...

பாவம்.... எப்ப கிடைக்காதோ அப்பதான் அந்த பொருளின் அருமை புரியும்.....

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பதிவு

மகேந்திரன் said...

யதார்த்தமாய் கதை செல்கிறது ...
மணமணக்க கூட்டாஞ்சோறு சாப்பிட்டதுபோல...
நல்லா இருக்கு அம்மா....

ஸாதிகா said...

யதார்த்தம்!

மாய உலகம் said...

அதான் சாப்பிட நினைக்கும்பொழுது கிடைக்காது.. கிடைக்கிறபொழுது சாப்பிட முடியாது... இந்த சூழ்நிலை ஏனைய பேருக்கு அமையுதும்மா... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமணிசார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கவி அழகன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மிடில்க்ளாஸ் மாதவி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

விச்சு, வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் நீங்க சொல்லி இருப்பது ரொம்ப சரிதான்

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாய உலகம் வருகைக்கு நன்றி

அம்பாளடியாள் said...

புதிய தொடர்கதை அருமையாகத்தான் தொடர்கிறது .வாழ்த்துக்கள்
அம்மா சிறப்பாக முடிய .மிக்க நன்றி பகிர்வுக்கு .

radhakrishnan said...

அப்பாவின் கண்டிப்பு, அம்மாவின்
அரவணைப்பு. குழந்தைகளுக்கு
பிற்காலத்தில் தான் புரியும். நல்ல
கருத்துக்கள் பொதிந்த கதை.
பகிர்வுக்கு நன்றி , அம்மா

Lakshmi said...

அம்பாளடியாள் இது தொடர்கதை இல்லியேம்மா. இங்கியே முடிஞ்சு போச்சே.

Lakshmi said...

ராதாகிருஷ்னன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மனோ சாமிநாதன் said...

அன்னையின் கையால் கிடைக்கும் பழைய சாதம் கூட அமிர்தமே என்பது அனுபவத்திற்குப்பின் தான் புரியும். இதை அழகாக சித்தரித்திருக்கிறீர்கள் லக்ஷ்மி!

ஹேமா said...

லஷ்மி அம்மா வீட்ல நடந்த கதையா.எழுதின விதம் அருமை.இயல்பும்கூட !

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ருசி நாக்கு சமபத்தப்பட்டது மட்டுமா
மனம் சம்பத்தப்பட்டதும் தானே

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

Lakshmi said...

என் ராஜபாட்டை ராஜா வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

கதை அருமை.

/ மோர்ச்சோதமும் ஊறுகாயும் /

ஸ்ரீராம் கூறியிருப்பதை வழிமொழிகிறேன்.

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

மாதேவி said...

நம்ம வீட்டு மோர்சாதம் ஊறுகாய்போல் வருமா. இல்லாதபோதுதான் அருமைதெரிகின்றது.அழகாய் சொல்லிவிட்டீர்கள்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Jaleela Kamal said...

மிக அழகாய் சொல்லி இருக்கீங்க் லஷ்மி அக்கா
எங்க அமிர்தமான சாபபாடா இருந்தாலும் , வீட்டு சாப்பாடு என்றால் மோர் சாத,ம்ரசம் சாதததுக்கு ஈடு இனை எத்வும் இல்லை

Lakshmi said...

ஜலீலா வருகைக்கு நன்ரிம்மா.

கூகிள்சிறி .கொம் said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

கூகிள்சிறி .கொம் said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

வை.கோபாலகிருஷ்ணன் said...

மீண்டும் படித்தேன். நல்லா இருக்கு.

இந்த தங்களின் படைப்பு இன்று 28.12.2012 வலைச்சரத்தில் ஏற்றி பாராட்டப்பட்டுள்ளது.

அதற்கும் சேர்த்து என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் VGK

என்னை ஆதரிப்பவர்கள் . .