Google+ Followers

Pages

Tuesday, November 8, 2011

டாக்டர் 2நித்யா கன்யாவிடம் கன்யா என் அப்பா எனக்காக மெடிகல் ஸீட் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்ராங்க.ஆனா எனக்கு மெடிகல்ல இண்ட்ரெஸ்ட்டே இல்லே. டாடி கிட்ட எப்படி சொல்லன்னும் புரியல்லே. அதான்.

ஏண்டி பிடிக்கல்லே?ஒவ்வொருத்தர் மெடிக்கல் கிடைக்கலியேன்னு எவ்வளவு தவியா தவிக்கராங்க? நீ என்னடான்னா பிடிக்கலேங்கரே? ஏன் காரணம் என்கிட்ட சொல்லேன். என்று கன்யா கேட்கவும் உன்கிட்ட சொல்லாம வேர யாருகிட்டேடி சொல்லப்போரேன். டாக்ட்டருக்குப்படிக்க எனக்குபிடிக்கலே. நாள்பூரா வியாதிக்காரங்க மத்திலயேஅவங்க வேதனையான புலம்பல் களுக்குமத்தியில், அசிங்கம் பார்க்காம ஆப்ரேஷன் ரத்தம் வாடைகளுக்குமத்தில என்னால சகிச்சுக்கவே முடியாது. அது தவிர கால நேரம் பாக்காம எந்தன்னேரமானாலும் ட்ரீட்மெண்ட் கொடுக்க அலர்ட்டாவே இருக்கனும்.னமக்குன்னு செலவுபண்ண நேரமே இருக்காது

இப்படி எல்லாவிதத்திலும் நம்ம சுதந்திரத்தையும் விட்டுக்கொடுத்து ஆயிரக்கணக்கில் பணத்தையும் செலவு செய்து அப்படியாவது இந்தபடிப்பில் சேரனுமான்னுதான் யோசனையா இருக்கு. நா ஆரம்பத்திலேந்தே சொகுசா செல்லமா சகல வசதிகளுடனு வளர்ந்தவ இல்லியா என்னால இப்படி கஷ்ட்டப்பட முடியுமாடி?அதுவும் கைராசி இல்லேன்னா பேரும் கெட்டுப்போகும் ஒரு சி. ஏ. படிச்சு பேங்க்ல ஆபீசரா 10- டு 5 வேலைன்னா ஓ. கே. அதுதான் எனக்கு சரிவரும் . ஆமா உனக்கு மேலே படிக்க ஆசை இல்லியாடி?
நித்யா இந்தவிஷயத்தில் நான் உன் எண்ணங்களிருந்து நேர்மாறானது என் எண்ணம். எனக்குமட்டும் பணவசதி இருந்தா நான் தேர்ந்து எடுப்பது இந்த டாக்டர் படிப்பைத்தான்.சின்ன வயசிலேந்தே என்லட்சியமே, ஏன் வெறின்னு

கூட சொல்லலாம்.டாக்டர் படிப்புதான் . ஆனா என்ன செய்ய பணம்னா ஆட்டிவைக்குது. நீ ஈசியா சொல்லிட்டே காரணங்களை. அது உன் விருப்பம். ஆனா கொஞ்சம் யோசிச்சுப்பாரு, உடல் உபாதையுடன், வலி வேதனைகளுடன் வருபவர்களை, நம்ம படிப்பால்,னம்மால் தீர்க்கமுடிந்தால் அது எவ்வளவுநல்ல விஷயம்.னம்மாலும் மற்றவர்கள் படும் துன்பங்களை த்தீர்க்கமுடிகிரதே? வலி நீங்கி மன நிறைவுடன் செல்பவர்களைப்பார்த்தால் நம் மனசுக்கு எவ்வளவு அமைதி கிடைக்கும்.எத்தனை வியாதி அவஸ்தியுடன் வருபவர்களையும் நாம் படிக்கும் படிப்பால் குணப்படுத்தி அவர்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கமுடியுமே அதே சமயம் நம் குண

நலன்களிலும்னல்லவித மாறுதல்களை நம்மால் உணற முடியும்.வேதனைப்படுபவர்களை சந்தித்து சந்தித்து மற்றவர்களிடம் பொறுமையாகவும் சாந்தமாகவும் பேசும் குணம் படிப்படியாக வந்துவிடும். நாம்

கவனமாக செயல் பட்டால் மக்கள் நம்மை தெய்வத்துக்கு சம்மாக மதிப்பார்கள். என்னைப்பொறுத்தவரை டாக்டர் படிப்புதான் உயர்ந்தபடிப்பு என்பேன் என்றாள் கன்யா.

ஏ அப்பா, உன் மனசுல இவ்வளவு ஆசை இருக்கா, ஏன் இத்தனை நாள் சொல்லலேடிஎன்றாள் நித்யா.

போடி முடவன் கொம்புத்தேனுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது இல்லியா அதான் உன்கிட்ட கூட சொல்லல்லே என்றாள்

சரிடி நேரமாச்சு நான் கிளம்புரேன் என்று சொல்லி நித்யா வீடு போனாள்.

இரவு சாப்பாட்டின்போது நித்யா தன் அப்பாவிடம் டாடி உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனுமே என்றாள். நான் என்ன சொன்னாலும் மறுக்காம செய்வீங்களா டாடி? என்றாள்.

என்னடா செல்லம், நீகேட்டு நான் என்னிக்காவது மறுப்பு சொல்லி இருக்கேனா தயங்காம சொல்லுடா என்றார்.

வந்து டாடி......... எனக்கு மெடிக்கல் படிக்க விருப்பம் இல்லே. என்று தயங்கியவாரே ஆரம்பித்தாள் .

ஏண்டா செல்லம் பிடிக்கலியா?வேர எதுல சேரனுமோ சொல்லுடா உன் விருப்பத்துக்கு மாறா நான் என்னிக்குமே எதுவுமே செய்யமாட்டேண்டா என்றார்.

டாக்டர்படிப்பு தனக்கு ஏன் பிடிக்கலை என்பதற்கு விரிவாக காரணங்களை சொல்லிவிட்டு என்ஃப்ரெண்ட் கன்யா இருக்கா இல்லியாப்பா அவளுக்கு மெடிகல் சேர ரொம்ப ஆசை இருக்கு ஆனா வசதி இல்லே.அவளுக்கு அந்த ஸீட்டை வாங்கி கொடுங்க டாடி. என்றாள் டாடியு மகள் விருப்பப்படியே

கன்யாவை மெடிக்கலில் சேர்க்க எல்லா ஏற்பாடுகளும் செய்தார்.

மறு நாள் நித்யா வீடு வந்த கன்யா என்னடி நித்தி நம்ம ஃப்ரெண்ட் ஷிப்பை இப்படி கடனாளி ஆக்கிட்டியே என்னை.ஆனாலும் உனக்கு உனப்பாவுக்கும் ரொம்ப பெரிய மனசுடி நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் உன்கடனை முதலில் அடைப்பதுதான் என் வேலையா இருக்கும். உங்களை என் வாழ் நாள் பூராவும் மறக்கவே மாட்டேண்டி என்று கண்களி நீர் வழிய கன்யா நித்யாவை கட்டிக்கொண்டாள்.

58 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனது கொண்ட தோழி... நல்ல சிறுகதை அம்மா...

பகிர்ந்தமைக்கு நன்றி.

RAMVI said...

டாக்டர் தொழில் பற்றி கன்யாவின் விளக்கம் அருமை அம்மா.
நல்ல கதையை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாக சுலபமாகச் சொல்லி முடித்து விட்டீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுபோல ஒரு சில நல்ல மனம் படைத்த செல்வந்தர்கள், ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவினால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே!

புலவர் சா இராமாநுசம் said...

நல்ல கதை சகோதரி!
அன்புக்கும் நட்புக்கும் இடுத்துக்
காட்டே இக்கதை
வாழ்த்துக்கள்!
வலைப் பக்கம் வாருங்கள்

புலவர் சா இராமாநுசம்

கணேஷ் said...

நெகிழ்வான கதை லஷ்மிம்மா. டாக்டருக்குப் படிக்கும் எல்லாரும் கன்யா மாதிரி சேவை மனப்பான்மையுடன் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். நம் நோயுடன் சேர்த்து பணத்தையும் பிடுங்கும் டாக்டர்கள் தான் நிறைய... நிறைவைத் தந்த கதை. நன்று.

Mahi said...

இவ்வளவு நல்ல நட்பு கிடைக்க கன்யா கொடுத்துவைத்திருக்கணும்! நித்யகன்யா:) நட்பு மனசைத் தொட்டுட்டுச்சு!:)

அமைதிச்சாரல் said...

ரெண்டு பாகங்களையும் சேர்த்துப் படிச்சிட்டேன். ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க லஷ்மிம்மா..

அம்பலத்தார் said...

பணமே வாழ்வென ஆகிவிட்ட இன்றைய உலகில் மனிதம் முற்றாக அழிந்துவிடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் தந்தையும் மகளும்.

கோகுல் said...

அடடா!இது போன்ற நட்பு கிடைக்க
என்ன தவம செய்தனை?

ஹ ர ணி said...

வணக்கம். உங்கள் வலைப்பதிவிற்கு முதல் வருகை நர்ன். சிறுகதை படித்தேன். சற்றே எதார்த்தம் மீறிய கதை என்றாலும் இந்தச் சிறுகதையை விதிவிலக்கில் அடக்கி சுவைக்க முடிகிறது. ஒரு நல்ல நட்பின் அடையாளத்தைக் காணமுடிகிறது. இப்படியான உண்மை நட்புகள் அருகிப்போய்க்கொண்டிருக்கிற காலக்கட்டமான இன்றைய நிலையில் இது சற்றே ஆறுதலைத் தருகிறது. படைப்பின் மூலம் மீட்டெடுத்தல் என்பதும் இன்றைய காலத்தின் தேவையாகிறது என்பதையும் உணர வைக்கிறது உங்கள் கதை.

K.s.s.Rajh said...

அட அருமையான தொடர் முதலாவது பகுதியை படிக்கவில்லை பிறகு படிக்கின்றேன்

ஆமினா said...

நல்ல நட்பு

ஆமினா said...

வாழ்த்துக்கள் மாமி

இராஜராஜேஸ்வரி said...

very nice write up..

ஸ்ரீராம். said...

இடுக்கண் களையும் நட்பு.

athira said...

நல்ல கதை நல்ல முடிவு. வித்தியாசமான நட்பு.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

kurai ondrum illai, kadhai solla kannaa,, vazhththukkal......

raji said...

மனதிற்கு நிறைவான, நட்புக்கும் மனிதாபிமானத்திற்கும் உதாரணமான கதை.பகிர்விற்கு நன்றி

ஹேமா said...

நட்பென்றால் இதுதான்.நல்லதொரு கதை !

G.M Balasubramaniam said...

இரண்டு பகுதிகளையும் ஒன்றாகப் படித்தேன். நித்யா, கன்யா இருவரின் பின்புலத்துக்கு யார்/ என்ன காரணம். ஒருவர் மேல் தட்டில் மற்றவர் அடித்தட்டில். இவற்றை சமன் செய்ய நித்யா போலவும், அவர் தந்தை போலவும் நிறைய பேர் இருக்கவேண்டும். கதை நிகழ்ச்சி எழுதுபவரின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கிறது. பாராட்டுக்கள்.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

புலவர் சா. ராமானுசம் ஐயா வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கணேஷ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோகுல் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அம்பலத்தார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஹரணி, முதல் வருகைக்கும் கதையை ரசித்ததற்கும் நன்றி. அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க.

Lakshmi said...

ராஜ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீராம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அதிரா, வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்பார்க் கார்த்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஜி. எம். பாலசுப்ரமணியம் ஐயா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Thanai thalaivi said...

மிக நல்ல கதை அம்மா ! மனதை தொட்டது !

radhakrishnan said...

மருத்துவத் தொழில் மேன்மை குறித்து
கன்யா கூறுவது அருமையானவை,உண்
மையானவை ஆனால் ஆர்வம் இல்லாது
அதில் ஈடுபட்டால் அனர்த்தம்தான்.
அது வேண்டாம் என்று காரணங்களுடன்
கூறும் நித்யாவின் நேர்மையும்,தன்
சீட்டை ,ஆர்வமுள்ள தன் ஏழைத்தோழிக்கு வழ.ங்கிய அவள்
கருணையும் போற்றுதலுக்குரியது. நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி அம்மா

Lakshmi said...

மாய உலகம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

தானைத்தலைவி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராதாகிருஷ்னன், வருகைக்கு நன்றி

மாதேவி said...

இதுவல்லவோ நட்பு.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

ரசிகன் said...

நண்பேன்டா!

டாக்டர் தொழிலில் விருப்பமில்லை என வித்தியாசமான விளக்கம் சொன்ன நித்யாவை தான் எனக்கு பிடித்திருக்கிறது. நல்ல கதை.

Lakshmi said...

ரசிகன் வருகைக்கு நன்றீ

ரசிகன் said...

அம்மா... இன்றைய எனது மழலைகள் உலகம் மகத்தானது பதிவு, ஒரு தொடர் பதிவு என்பதால், அதை தொடர்ந்து எழுத உங்களையும் அழைத்துள்ளேன். அவசியம் தொடருங்கள்.

http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post_14.html

சிவகுமாரன் said...

சுபமான மகிழ்ச்சியான முடிவு

அம்பாளடியாள் said...

நட்புக்கு எடுத்துக்காட்டாக நல்லதொரு தொடர் கதைப் பகிர்வு .
என்ன இருந்தாலும் உங்களைப்போல் தொடர்கதை எழுத
எம்மால் முடியாது .மிக அழகாக தொடர்கதை எழுதும் தங்களுக்கு
வாழ்த்துக்கள் அம்மா .முடிந்தால் வாருங்கள் என் தளத்தில் இன்று
சிறுவர் தினத்தை ஒட்டி ஒரு தொடர் பதிவு உள்ளது .உங்கள் கருத்தினையும்
தாருங்கள் அம்மா .மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு .

தமிழ்தோட்டம் said...

அருமையான சிறுகதை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Lakshmi said...

ரசிகன் தொடர்வருகைக்கு நன்றி. என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்ததற்கு நன்றி. முயற்சி செய்கிரென்.

Lakshmi said...

சிவகுமாரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

தமிழ் தோட்டம் வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .