Google+ Followers

Pages

Wednesday, November 16, 2011

மழலை உலகம் மகத்தானது

 பதிவர் ரசிகன் இந்த தலைப்பில் தொடர்பதிவு எழுத அழைப்பு அனுப்பி இருக்கார்.
  நிறையபதிவர்கள்இதுபத்திநிறையஎழுதிஇருக்காங்க.எனக்குத்தெரிந்தவிதத்தில் நானும் கொஞ்சம் சொல்ரேன். எனக்கு வெளிவிவகாரம் பழக்கமில்லை. வீட்டுப்பறவை நான். வீட்டில் நடந்ததை வைத்து என் எண்ணங்களை ச்சொல்ரேன். எனக்கு என் முதல் பெண் பிறந்தப்போ என் வயது13.( நம்பித்தான் ஆகனும்) வரிசையா 5குழந்தைகள் 19-வயதில் கடைசி குழந்தை. அப்போல்லாம்  பெரியகுடும்பம். மாமியார், மாமனார், தாத்தா, நாங்க இருவர் , 5 குழந்தைகள் என்று வீடு நிறம்பி மனிதர்கள் அவர்களுக்கு காலை என்ன டிபன் செய்யலாம்?, என்னமதிய சாப்பாடு , இரவு சாப்பாடு பண்ணலாம் என்று யோசிச்சு செயல் படுவதிலேயே பூரா நாளும் சரியா இருக்கும் . அதுதவிர வீடு பெருக்கிமெழுகி, பாத்திரம் தேய்த்து துணி துவைத்து என்று மூச்சு முட்ட வேலைகள் சரியா இருக்கும் என் குழந்தைகள் கூட செலவு செய்ய நேரமே இருக்காது. எப்படி வளர்ந்தார்கள் என் று தெரியாமலே வளர்ந்து ஆளாகி இன்று பெரிய பெண்ணுக்கே 50 வயது. என்குடும்ப பொறுப்புகள் எல்லாம் நிறைவேற்றியபிறகு பாட்டி பதவி வந்தபிறகு பேரக்குழந்தைகள் கொஞ்சம் நெருக்கமா இருக்கா.அம்மா அப்பாவிடம் கூட பேச முடியாத விஷயங்களை பாட்டிகூட பேசரா. எனக்கு இப்ப ஃப்ரீ டைம் நிறைய கிடைப்பதால் பேரக்குழந்தைகள் மனசுபோல அவர்களுக்கு பிடித்தவிதத்தில் கதைகள் சொல்லி விளையாடி எண்டெர்டெயின் பன்ரேன்.எனக்கு4- பேரன்கள் இருக்கா. அதில் 3-பேரன்கள் மும்பையிலேயே வேறு, வேறு இடங்களில் இருக்காஅவா அப்பா அம்மாவுடன் ஒருபேரன் தமிழ் நாட்டில் அவ அம்மா, அப்பாவுடன் இருக்கான். பெரிய லீவு விடும்போது 4- பேரும் பாட்டிவீடு வந்துவிடுவார்கள். இத்தனைக்கும் இங்க அப்ப கடும் கோடைகாலம் கரெண்ட்கட் காலை 3 மணி நேரம், இரவு 3-மணி நேரம் மெயின் வாட்டரும் தட்டுப்பாடுதான் . அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. தமிழ் நாட்டில் இருக்கும்பேரன் தமிழ் மட்டுமே பேசுவான். மும்பை குழந்தைகள் தமிழே தெரியாது. அவர்கள் ஆக்‌ஷனிலேயே பேசிக்கொள்வது பார்க்க ரொம்ப வேடிக்கையா இருக்கும்.சாப்பாட்டு விஷயங்களிலு ஒருத்தனுக்கு பிடிப்பது மத்தவனுக்கு பிடிக்காது எல்லாரையும் அவா போக்குப்போல விட்டு பிடிக்கனும்.

 கரெண்ட் கட் ஆவதில் கம்ப்யூட்டர் டி.வி. இருக்காது அப்போ நாலுபேரையும் கேரம் செஸ் தாயக்கட்டம் ட்ரேட் (பிசினெஸ்) விலையாட்டுன்னு விளையாடச்சொல்லி நானும் கூடவே உக்காந்து உற்சாகப்படுத்திவருவேன். பல்லாங்குழி பத்தி சொல்லிண்டு இருப்பேன் குழந்தைகள் உடனே அந்த விலையாட்டு சொல்லித்தா என்பார்கள் திடீர்னு பல்லாங்குழிக்கு எங்க போக முடியும்? பக்கத்து வீட்டில் முட்டைவாங்க ப்ளாஸ்டிக் ஸ்டாண்ட் ஒன்னுவச்சிருந்தா அதை வாங்கி வீட்டில் உள்ள தட்டைப்பயறை காய் ஆக்கி விளையாட சொல்லிக்கொடுப்பேன். புதிது புதிதாக விளையாட்டு கற்றுக்கொள்வதி எல்லாருமே ஆர்வம் காட்டினா.குழந்தைகள் பச்சைமண் போன்றவர்கள் அவர்கள் விருப்பம் தெரிந்து நாம் அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கமுடியும். பெற்றவர்களுக்கு பொறுமையும் இல்லை நேரமும் இல்லைன்னு சொல்லிடுவா.   எனக்கு கிடைக்காத வசதி, பொருட்கள் எல்லாம் என் குழந்தைக்கு கிடைக்கனும் என்று காசை கண்டபடி செலவு செய்து குழந்தைகள் கேட்கும் முன்பே சாமான்களை வாங்கி குவித்து விடுகிரார்கள் .இதனால குழந்தைகளுக்கு காசின் அருமையும் விலை உயர்ந்த பொருட்களின் வால்யுவும்தெரியாமலே போகிரது.  நாம எடுத்து சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ள ரெடி இல்லே.இங்க இருக்கும் ஒரு மாதமும் கம்ப்யூட்டரோ டி. வி யோ தேடவே மாட்டாங்க.துறு துறு குழந்தைகளை எவ்வளவு நேரம் வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைக்க முடியும் கொஞ்சம் வெளிக்காத்தும் உடம்புல ஒபடனுமில்லியா. வெய்யில் தணிந்து 6-மணி சமயம் கீழே கூட்டிப்ப்ய்யி பில்டிங்க் காரகுழந்தைகள் எல்லாரும் கிரிக்கெட்டோ, புட்பாலோ விளையாடும் இடத்தில் இவர்களையும் சேர்ந்து விளையாட விடுவேன். குஷியா விளையாடுவாங்க. ஒரு நா விட்டு ஒரு நா வீட்டிலிருந்து தள்ளி இருக்கும் பார்க்குக்கோ கார்டனுக்கோ கூட்டிப்போயி விளையாட விடுவேன். ந்திரும்ப வரும்போது எல்லாருக்கும் இள நீர் வாங்கி கொடுப்பேன்.

 சாப்பாட்டு விஷயத்திலும் கத்தரிக்கா சாப்பிட்டா கணக்கு நல்லா வரும், வெண்டைக்கா சாப்பிட்ட நல்ல பலசாலி ஆகலாம்னு சொல்லி சொல்லி எல்லா காய்களையும் சாப்பிடவைப்பேன். GOOD BLOOD, BAD BLOOD   என்றெல்லாம் வேகமா சொல்லி டங்க் ட்விஸ்ட் பயிற்சியும் விளைய்யாட்டுப்போல சொல்ல சொல்லுவேன். ஒன்னு, ரெண்டு பத்து வரை ஒன்னாம் நம்பர் தமிழிலும், ரெண்டாம் நம்பர் இங்க்லீஷிலும்  மூனாம் நம்பர் தமிழிலும் நாலாம் நம்பர் இங்கிலீஷிலும் அதாவது ஒன்னு டூ,  மூணு ஃபோர்
 ஐந்து சிக்ஸ், ஏழு எய்ட். ஒன்பது டென் இப்படி வேகமா மாத்தி மாத்தி சொல்லச்சொல்லி பாஷை கத்துக்க வழி சொல்லுவேன் . அறிவுக்குவேலை கொடுக்கும் விதத்தில் சில புதிர்கள் என்று பூரா நாளும் அவர்களை பிசியாவே இருக்கவைப்பேன் ஆர்வமுடன் கத்துக்குவாங்க. இதுவே அவா அவா வீடுபோயிட்டா ஸ்கூல் படிப்பு ஹோம் ஒர்க் எக்ஸ்ட்ரா கோச்சிங்க்க்ளாஸ் பாட்டு க்ளாஸ் டான்ஸ்க்ளாஸ் நு பிசி ஆகிடுவாங்க.போதாததற்கு கம்ப்யூட்டரும் டி.வி யுமே கதின்னு இருப்பாங்க.இங்க வந்தா அவா எல்லாருமே நல்லா எஞ்சாய் பண்ணுவாங்க. தமிழ்பேரன் அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பான் மத்தபேரன்கள் இவனுக்கு ஹிந்தி சொல்லி கொடுப்பாங்க மொத்தத்தில்  லீவு அவர்களுக்கு போரடிக்காம போகும்.அடுத்தபெரியலீவு எப்பவரும்னு காத்துகிட்டு இருப்பாங்க.


                            
  எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவர் ஆவதும் ஆன்னை வளர்ப்பதிலே.

 குழந்தைகள் வருங்காலத்தூண்கள் என்று சொல்வாங்க அந்தவருங்காலதூண்களுக்கு அஸ்திவாரம் பலமா இருந்தால் தானே நல்லது. நல்லது சொல்லும் விதத்தில் சொன்னாகுழந்தைக கேக்குராங்க பெரியவங்கதான் பொறுப்போட நடந்துக்கனும்.கூடியமானவரை நம் ஆசைகள் விருப்பங்களை அவர்கள் மேல் திணிக்காமல் அவர்களின் விருப்பத்தை அறிந்து உற்சாகமும் ஊக்கமும் கொடுக்கவும்.

இ ந்த தொடர்பதிவைத்தொடர நான் அழைக்கும் நால்வர்
  k.s.s. ராஜ்,  ராதாகிருஷ்னன் சார்,  ம்னோ மேடம், ஜலீலா கமல்
 தொடருங்க.வாழ்த்துக்கள்.
 ராஜ் நீங்க இந்தக்கால இளைஞர், வருங்கால தலைமுறையினருக்கு எங்களைவிட உருப்படியாகவும் சுவாரசியமாகவும் சொல்லமுடியும்
 அதனால உங்களை தொடர அழைச்சிருக்கேன்.
 ராதா கிருஷ்னன் சார் நீங்களும் தொடருங்க கண்டிப்பா உங்களால முடியும்
 மனோமேடம் நாமல்லாம் அனுபவபட்டவங்க குழந்தைகளுக்கு பயன்படும் டிப்சா நிறையா சொல்லமுடியுமே இல்லியா
 ஜலீலா மேடம் உங்க பார்வையிலும் என்ன சொல்ல விரும்புரீங்களோ சொல்லுங்க.

61 comments:

அமைதிச்சாரல் said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க லஷ்மிம்மா..

அருமையான பாட்டி நீங்க :-))

DrPKandaswamyPhD said...

அனுபவங்கள் நல்லா இருக்கு.

கணேஷ் said...

பிறந்தபோதே அப்பாவழி, அம்மாவழி தாத்தா பாட்டிகளை கண்ணால் பார்க்காத எனக்கு இப்படி ஒரு பாட்டி அமையவில்லையே என்ற ஏக்கத்தையே ஏற்படுத்தி விட்டீர்கள் அம்மா. குழந்தைகள் பச்சை மண். நாம்தான் அவர்களைப் பண்படுத்த வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகமிக உண்மை. நல்ல விஷய்ங்கள் படித்ததில் திருப்தி.

K.s.s.Rajh said...

////ராஜ் நீங்க இந்தக்கால இளைஞர், வருங்கால தலைமுறையினருக்கு எங்களைவிட உருப்படியாகவும் சுவாரசியமாகவும் சொல்லமுடியும்
அதனால உங்களை தொடர அழைச்சிருக்கேன்.////

ஹா.ஹா.ஹா.ஹா..எழுதிட்டா போச்சு இன்று ஓரு பதிவு போட்டுவிட்டேன் நாளைக்கு எழுதுறன் மேடம்

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வும்மா. பேரன்களுடன் நல்லா என்ஜாய் பண்றீங்க.

Madhavan Srinivasagopalan said...

முக்கியமான வரிகளை குறிப்பிட்டு பாராட்டலாம் என்றால்.....
என்ன செய்வது.. எல்லா வரிகளுமே முக்கியமானதாக இருக்கிறதே.
குழைந்தால் பற்றி சொன்னது அனைத்தும் மிகவும் உண்மை. தகவலுக்கு நன்றிகள்

RAMVI said...

பிரமாதம் அம்மா.ரொம்ப யதார்தமா சொல்லியிருக்கீங்க.நீங்க உங்க பேரக்குழந்தைகளுக்கு கொடுக்கும் உற்சாகம் நாளை அவர்களை பெரிய மனிதர்களாக்கும்.நாங்களும் உங்கவழிகளை பின்பற்ற முயற்சிக்கிறோம்.நன்றி அம்மா.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தொடர் பதிவா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

குழந்தைகள் வருங்காலத்தூண்கள் என்று சொல்வாங்க அந்தவருங்காலதூண்களுக்கு அஸ்திவாரம் பலமா இருந்தால் தானே நல்லது. // மிகவும் சரி..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

GOOD BLOOD, BAD BLOOD என்றெல்லாம் வேகமா சொல்லி டங்க் ட்விஸ்ட் பயிற்சியும் விளைய்யாட்டுப்போல சொல்ல சொல்லுவேன்// நல்ல ஆலோசனை, ஏன் மகளுக்கு பயன் படுத்துவேன்.. நன்றிம்மா..

ராமலக்ஷ்மி said...

தங்கள் அனுபவத்துடனான பகிர்வு மிக அருமை.

raji said...

எத்தனை பேரோட பதிவுகள் படித்தாலும் இங்க வரும் போது அனுபவம் மிக்கவங்க பதிவுங்கறது பளிச்சுன்னு தெரியுது.
எளிமையா எல்லார் மனசிலயும் போய்ச் சேரறாப்பல சொல்லியிருக்கீங்க.
உங்க கிட்ட கத்துக்க எனக்கு நிறைய இருக்கு.பகிர்விற்கு நன்றிம்மா

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் நல்ல பகிர்வு... உங்கள் போன்ற பழுத்த அனுபவம் மிகுந்தவர்கள் சொல்லும் விதத்தில் நல்ல பயன் இருக்கும்...

நல்ல பகிர்வுக்கு வாழ்த்துகள் அம்மா....

காட்டான் said...

வணக்கமம்மா!
பேரக் குழந்தைகளோடு இருந்து அவர்கள் லூட்டியை ரசிப்பதே சுகம்தான் உங்கள் அனுபவம் பேசுகிறது..!!

மகேந்திரன் said...

ரொம்ப அழகா சொல்லியிருகீங்க அம்மா...

ஸாதிகா said...

ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.

Ramani said...

தங்கள் கருத்துதான் மிகச் சரி
பெரியவர்கள் தங்கள் கருத்தைத் திணிக்காமல்
அவர்கள் விருபத்தை அறிந்து அது சரியாக இருந்தால்
அதில் அவர்கள் உயர்வத்ற்கு வழிவகை செய்து கொடுத்தால்
அதுவே சரியாக இருக்கும் என்பதே என் கருத்தும்
அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி
த.ம 7

Thanai thalaivi said...

நல்ல பதிவு மாமி !, என் பெரிய பெண் கண்ணாடி போட்ட போது டாக்டர் டிவி கம்ப்யூட்டர் பார்ப்பதைவிட வெளியில் விளையாடுவதே நல்லது என்று சொன்னார். அதனால் இப்போதெல்லாம் அவளுக்கு வாரத்தில் ஒரு நாள் தான் கம்ப்யூட்டர். தினமும் அரை மணி நேரம் தான் டிவி.

ரசிகன் said...

//எனக்கு கிடைக்காத வசதி, பொருட்கள் எல்லாம் என் குழந்தைக்கு கிடைக்கனும் என்று காசை கண்டபடி செலவு செய்து குழந்தைகள் கேட்கும் முன்பே சாமான்களை வாங்கி குவித்து விடுகிரார்கள் .இதனால குழந்தைகளுக்கு காசின் அருமையும் விலை உயர்ந்த பொருட்களின் வால்யுவும்தெரியாமலே போகிரது. நாம எடுத்து சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ள ரெடி இல்லே.//

திருவாசகம்.


கலக்கிட்டீங்கம்மா. அனுபவத்தை குழைத்து அழகா எழுதி இருக்கீங்க. உங்க அனுபவம் இங்க பல பேருக்கு பயன்படும். ஒன்னு, டூ, மூணு... நிதானத்தையும், புத்திக் கூர்மையையும் உண்டாக்கும் அற்புதமான விளையாட்டு. அறிமுகப் படுத்தினதுக்கு நன்றிம்மா.

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

டாக்டர் கந்தசாமி சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கணேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராஜ் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி ஆமா நீங்க சொல்லி இருப்பது சரிதான்.

Lakshmi said...

மாதவன் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி

Lakshmi said...

கருன் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. உங்க குழந்தைகளும் ஆர்வமா கத்துப்பாங்க .

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

Lakshmi said...

ராஜி நீங்க சொல்லொ இருப்பது உண்மைதான் எனக்கும் உங்க எல்லாரிடமும் கத்துக்க நிறைய விஷயம் இருக்கே.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

காட்டான் பேரக்குழந்தைகள் வருடம் ஒருமுறை வந்து என்கூட ஒருமாசம் தங்கி பிக்னிக் போல எஞ்ச்சய் பண்ணுவாங்க எனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும் அவங்களுக்கும் கூட.வருகைக்கு நன்றிங்க

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

தானைத்தலைவி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

ரசிகன் நீங்க தொடர்பதிவுக்கு அழைத்ததால் தானே எல்லாரும் ரசிக்கும்படி ஒரு பதிவு போடமுடிந்தது அதனால உங்களுக்குத்தான் முதல் நன்றி சொல்லனும்.

புலவர் சா இராமாநுசம் said...

அருமையாகவும் மிக அழகாகவும்
எழுதியிருக்கீங்க!

நன்றி!

புலவர் சா இராமாநுசம்

சி.பி.செந்தில்குமார் said...

சுட்டிகளின் லூட்டி காமெடி தான் .. நல்ல அனுபவ பகிர்வு

ஸ்ரீராம். said...

கொடுத்து வைத்த பேரக் குழந்தைகள்!

athira said...

மிக அழகாகச் சொல்லியிருக்கிறீங்க லக்ஸ்மி அக்கா.

ஒரு நல்ல பாட்டியாக வாழ்ந்து வாறீங்க அப்படியே இனியும் இருக்க வாழ்த்துகிறேன்.

பெற்றோரைவிட, பேரன் பேத்தியோடுதான் குழந்தைகள் அதிகம் ஒட்டுவார்களாம்... இது ஒரு ஆராச்சியில் படித்தேன்.

புலவர் சா இராமாநுசம் said...

உள்ளதை உள்ளபடி அனுபவித்து
எழுதியுள்ளீர்
அருமை!


புலவர் சா இராமாநுசம்

மாதேவி said...

உங்கள் அனுபவங்களை அழகாகத்தந்துள்ளீர்கள்.

asiya omar said...

எப்பவுமே உங்க பகிர்வில் ஒரு பாடம் இருக்கும்,எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் என்ற பாடல் ஒன்றை குறிப்பிட்டு கருத்தை அழகாக சொல்லியிருக்கீங்க.

சென்னை பித்தன் said...

அனுபவம் பேசுகிறது!
அருமை.

Lakshmi said...

புலவர் சா. ராமனுசம் ஐயா வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.

Lakshmi said...

செந்தில் குமார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீராம் ஹா ஹா. நன்றி.

Lakshmi said...

அதிரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

புலவர் சா. ராமானுசம் ஐயா வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

சென்னை பித்தன் சார் வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவர் ஆவதும் ஆன்னை வளர்ப்பதிலே.


அனுபவப்பகிர்வுகள் அருமை. பாராட்டுக்கள் அம்மா!

Mahi said...

நல்ல பதிவு லஷ்மிம்மா!உங்களுடன் ஒரு விடுமுறையைக் கழித்தமாதிரி இருந்தது!:)

Lakshmi said...

ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Bharath Computers said...

குறை ஒன்றுமில்லை என்பதில் நிறைகள் நிறைய இருக்கிறது.
அருமையாக உள்ளது, உங்கள் மழலை உலகம்.
வாழ்க வளமுடன்

Lakshmi said...

bharath computers thanks.

radhakrishnan said...

அருமையான பதிவு பேரக்குழந்தைகள்
உங்களிடம் ஓடோடி வரும் அளவுக்கு
பிரியத்தைக் கொட்டி அவர்களுடன்
நேரத்தை செலவிடுகிறீர்களே இந்தப் பொறுமை எல்லாருக்கும் வரும் என்று
தோன்றவில்லை.அழைப்புக்கு மிக்க
நன்றி அம்மா.முயற்சி செய்கிறேன்.

Lakshmi said...

ராதா கிருஷ்னன் வருகைக்கு நன்றிசார்

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா இன்னும் இந்தபதிவு போடல எழுவத|ற்குள், வேறு ஏதாவதூ/ இப்ப ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்கள்

என்னை ஆதரிப்பவர்கள் . .