Pages

Friday, December 16, 2011

காவலன் 3



என்னங்க, ராஜாவுக்கு வயசாயிண்டே போறது . அடுத்த லீவுல வரப்போ அவனுக்கு நல்ல பொண்ணாபார்த்து கல்யானம் பண்ணிடலாங்க என்றாள் அம்மா. ஆமா நீ சொல்வது சரிதான். ஏண்டா ராஜா அங்கியே ஏதானும் பொண்ணு பாத்து வச்சிருக்கியா என்றார். ஐயோ என்னப்பா இது நீங்கபாத்து யாரைச்சொல்ரீங்களோ அவளைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்றான்.மகனின் இதபதிலால் பெற்றோருக்கு ரொம்பவே சந்தோஷம். சரி அப்பா ஒரு முக்கியமான விஷயம் பத்தி உங்க கிட்ட பேசணும். என்றான். என்னடா ராஜா சொல்லுப்பா. அப்பா நேத்து இரவு நான் நம்ம சன்னதி தெரு வழியாதான் வந்தேன். நீங்களும் உங்க வயசுக்காரங்க சிலரும்கோவில் வாசல்ல உக்காந்து சீட்டு விலையாடிகிட்டு இருந்தீங்க. பாக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்ததுப்பா. அம்மாவை இரவு தனியே வீட்ல விட்டுட்டு நீங்க இப்படி சின்னப்பிள்ளை போல சீட்டு விளையாடல்லாம் போலாமாப்பா? ஓஅதுதான் விஷயமா. நீ ஒரு வார்த்தைல கேள்வியா கேட்டுட்டே. இதுக்கு பின்னால ஒரு கதையே இருக்குப்பா.


அப்படி என்னப்பாகதை. இரு இரு சொல்லத்தானே போரேன். காலேல குளிக்கப்போனே இல்லியா வழில உன் வயசுக்காரங்க யாரையானும் பாத்தியோ? என்றார். என்வயசுக்காரங்கன்னு இல்லேப்பா தெரு பூராவும் ஆள் நட மாட்டமே இல்லாம வெறிச்சோடி இருந்ததுப்பா. ஆத்திலயும் ரெண்டு மூனுபேர் தவிர யாருமே இல்லே. ஊர்ல உள்ளவங்கல்லாம் எங்க போனங்கப்பா?அதான்பா உன்னைப்போல் சின்ன வயசு பிள்ளைங்கல்லாம் நல்லா படிச்சுட்டு நல்ல வேலைதேடி வெளி மானிலமோ, வெளி நாடுகளுக்கோ போயிடராங்க. நம்ம கிராமத்ல வேலை வாய்ப்பு வசதிகளே இல்லியே.அப்போ அவங்களை எப்படி குத்தம் சொல்ல முடியும். படிச்சபடிப்பை வீணாகலாமோ?இப்போ முக்காவாசி வீடுகளில் எங்களைப்போல வயசானவங்கதான் இருக்கோம். பசங்க நீங்கல்லாம் பணம் அனுப்பி வைக்கரீங்க. நாங்களும் சவுரியமா இருக்கோம். அது இல்லே விஷயம் இதுவேபடிக்காத பாமர ஜனங்க, முன்னெல்லாம் வயக்காட்டு வேலைக்குப்போயி தங்க குடும்பத்தை காப்பாத்தினாங்க. இப்ப அதுக்கும் கேடு வந்துடுத்து. நெல்வயல் உள்ள இடத்தைப்பூரா ப்ளாட் போட்டு வித்து பெரிய பெரிய கட்டிடங்களாக கட்டிடராங்க.வயல் வேலைக்குபோனவங்கல்லாம் எங்க போவாங்க? அவங்க சாப்பாட்டுக்கு என்னவழி. அவங்களுக்கும் குடும்பம் குழந்தைக இருக்கு பசிக்கர வயிறும் இருக்கே. வேர வேலையும் தெரியாது படிப்பறிவும் கிடையாது அதில் சிலர் திருட்டுத்தொழிலில் இறங்கிடராங்க.

நம்ம ஊர்ல பெரும்பாலானவங்க வீடுகளில் ஓட்டுக்கூரைதானிருக்கும் இல்லியா? நம்ம வீட்டுக்கு நீ பாதுகாப்பா காரை எடுத்துக்கட்டி பக்காவா, பாதுகாப்பா வீட்டைக்கட்டி தந்திருக்கே. எல்லாராலும் அது முடியாதே இல்லியா? போனவாரம் அம்மிணி மாமி வீட்ல திருடவந்தவன் ஓட்டைப்பிரித்து அவவீட்டு அடுக்களையில் இறங்கி அங்கு அலுமினிய குண்டானில் இருந்த சாதம் குழம்பு பொரியல்னு திருடி இருக்கான் என்ன பசிக்கொடுமை பாரு. அப்புரம் வீடுகளில் பெரிய பொருளா எதும் கிடைக்காததால கோவில்களுக்குள் தங்க கைவரிசை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க.ஸ்வாமிக்கு போட்டிருக்கும் நகைகள் ஐம்பொன் சிலைகள் பூஜைக்கு வைத்திருக்கும் வெள்ளி பித்தளைப்பாத்திரங்கள் என்று ஒவ்வொன்றாக திருடு போக ஆரம்பிச்சது.முதல்ல போலீஸ்லதான் கம்ளைண்ட் பண்ணினோம். ஒருவாரம் போல வந்து பாத்துட்டு ஒரு காவல்காரனையும் போட்டா. 4- ஆட்களா திருட வந்தா அந்தஒரு காவல்காரன் எப்படி சமளிப்பான். அப்புரம்தாம் ஒவ்வொரு தெருவில் இருக்கும் பெரியவங்கல்லாம் பேசி தீர்மானம் பண்ணினோம். நாம 10-பேரா சேர்ந்து கோவில் வாசல்ல இரவு பூரா காவலுக்கு இருக்கலாம்னு. நம்ம தெருபோலவே பக்கத்து தெரு, சிவன் கோவில், பிள்ளையார் கோவில் நம்ம பெருமாள் கோவில் என்று எல்லா கோவில்களிலும் இப்ப நாங்க 10,,10, பேராகூடிகாவலுக்கு இருக்கோம். எங்களைப்போல வயசானவங்களுக்கு இரவு தூக்கம்லாம் சரியாவே வராது, வீட்ல சும்ம படுத்து உறுளுவதை விட இங்க வந்து உக்காந்துடரோம்.
முதல்ல வெரும்ன கதை பேசிண்டுதான் இருந்தோம். எவ்வளவு நேரம்தான் பேசமுடிம் அவாவீட்ல அது ஆச்சு, இவா வீட்ல இதுஆச்சுன்னு வம்புதான் வளர்ந்தது. அப்புரம்தான் சீட்டு ஆடினா உற்சாகமாகவும் இருக்கும்.தூக்கமும் வராது மத்தவங்க பத்தி வம்பு பேச்சும் வளராதுன்னு சீட்டு ஆடி பொழுதைப்போக்கரோம். ஆனா காசு வச்சு சூதாட்டம் போலல்லாம் இல்லேப்பா. நமக்கு ஆரோக்கியமான நல்ல வாழ வச்சுண்டு இருக்கிற ஆண்டவனுக்கு செய்யும் சேவையா எண்ணி தான் இதைச்செய்யரோம்.

நீ சொல்ரதுபோல நான் இதை ஞாயப்படுத்த விரும்பலை. ஒரு எலக்ட்ரீஷியன்கிட்ட சொல்லி கோவில்ல இரவு யாரு எங்க கையை வச்சாலும் சத்தமா அலரும்படி ஒரு அலாரம் பிட் பண்ண் அசொல்லி இருக்கோம். அந்த எலக்ட்ரீஷியன் ஊருக்கு போயிருக்கான் அவன் வரும் வரைதான் எங்க சீட்டாட்டகாவல் பெல் பொருத்திட்டா அது கத்தி ஊரைக்கூட்டிடும் பிறகு கவலை இல்லே.
அதெல்லாம் சரிப்பா, உலகத்தையே காப்பாத்தும் ஆண்டவனுக்கு தன்னை காப்பாத்திக்கத்தெரியதா?.உன்னைப்போல படிச்சவங்கல்லாம் இப்படித்தான் விதண்டா வாதமா பேசுவீங்க. நாங்கல்லாம் சுவாசிக்கரதே பகவன் நாமாவில்தான். நமக்கு என்ன நல்லதோ கெடுதலோ எது நடந்தாலும் அது ஆண்டவன் கருணையால் என்றுதான் நம்புவோம்.அவன் முகத்தில்தான் முழிப்போம் சமைக்கும் உணவைக்கூட அவனுக்கு கையைக்காட்டிட்டுதான் சாப்பிடுவோம் இதெல்லாம் கூடவே வளர்ந்த உணர்வுகள். ஆண்டவனுக்கே பிறந்த நாள் கல்யான உற்சவம் எல்லாம் செய்து சந்தோஷப்படுவோம் அவனா கேட்டான் இல்லியே . நம்ம வீட்லயே ஒருவனா தான் ஆண்டவனையும் நினைக்கிரோம் நம்புரோம் அவனுக்கு ஒரு கஷ்டம்னா நம்ம வீட்டுக்காராளுக்கு வந்தகஷ்டமா நினைச்சு எங்களாலான உதவி செய்யனும்னு பரபரத்து ஓடரோம்..எங்களால இப்படித்தான் யோசிக்க முடியும்பா. அது எங்க பலமோ பலவீன்மோ தெரியாது எல்லாத்தையும் அவன் பாத்துப்பான்னு அவன் பொறுப்பில் விட்டுடுவோம். அதே சமயம் எங்களால முடிந்த முயற்சியும் செய்துடுவோம் சும்மல்லாம் இருந்துடமாட்டோம். ரகுவுக்கு அப்பாசொல்வதில் பாதி புரிந்து பாதி புரியாமலும் இருந்தது. சரி இதுபத்தி இப்படியே விட்டு விடுவதுதான் சரியா இருக்கும் என்று எண்ணினான்.


42 comments:

மகேந்திரன் said...

கதை அருமையா இருக்குது அம்மா....

ADHI VENKAT said...

அப்பாவின் சீட்டாட்டத்திற்கான காரணம் தெரிந்து விட்டது.

நல்லதொரு கதைக்கு பாராட்டுகள்ம்மா.

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை. கடைசிப் பத்தி அருமை.

Mahi said...

வாவ்!சூப்பர் ட்விஸ்ட் வைச்சிட்டீங்கமா!:))))))

நல்ல கதை!:)

சாந்தி மாரியப்பன் said...

கதை ரொம்ப நல்லாருக்கு.. அதுவும் அந்த விளக்கம் ச்சான்ஸே இல்லை ஜூப்பர் :-)

RAMA RAVI (RAMVI) said...

//. நம்ம வீட்லயே ஒருவனா தான் ஆண்டவனையும் நினைக்கிரோம் நம்புரோம் அவனுக்கு ஒரு கஷ்டம்னா நம்ம வீட்டுக்காராளுக்கு வந்தகஷ்டமா நினைச்சு எங்களாலான உதவி செய்யனும்னு பரபரத்து ஓடரோம்..எங்களால இப்படித்தான் யோசிக்க முடியும்பா. //

அருமையான வரிகள் அம்மா.

சிறப்பான கதை.

Madhavan Srinivasagopalan said...

அஹா. என்னமா மெசேஜ் சொல்லுறீங்க..!
மிகவும் நன்றாக இருந்தது..

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ... லக்ஸ்மி அக்கா அருமையாகக் கதை சொல்கிறீங்க, இப்போதான் படிக்க முடிந்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதுவே படிக்காத பாமர ஜனங்க, முன்னெல்லாம் வயக்காட்டு வேலைக்குப்போயி தங்க குடும்பத்தை காப்பாத்தினாங்க. இப்ப அதுக்கும் கேடு வந்துடுத்து. நெல்வயல் உள்ள இடத்தைப்பூரா ப்ளாட் போட்டு வித்து பெரிய பெரிய கட்டிடங்களாக கட்டிடராங்க. வயல் வேலைக்குபோனவங்கல்லாம் எங்க போவாங்க? அவங்க சாப்பாட்டுக்கு என்னவழி. அவங்களுக்கும் குடும்பம் குழந்தைக இருக்கு பசிக்கர வயிறும் இருக்கே. வேர வேலையும் தெரியாது படிப்பறிவும் கிடையாது அதில் சிலர் திருட்டுத்தொழிலில் இறங்கிடராங்க.
//

சூப்பரா எழுதியிருக்கீங்க! பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அப்புறம்தான் சீட்டு ஆடினா உற்சாகமாகவும் இருக்கும்.தூக்கமும் வராது மத்தவங்க பத்தி வம்பு பேச்சும் வளராதுன்னு சீட்டு ஆடி பொழுதைப்போக்கறோம். ஆனா காசு வச்சு சூதாட்டம் போலல்லாம் இல்லேப்பா. நமக்கு ஆரோக்கியமான நல்ல வாழ வச்சுண்டு இருக்கிற ஆண்டவனுக்கு செய்யும் சேவையா எண்ணி தான் இதைச்செய்யறோம்.//

அருமை, வெகு அருமை. நியாயமான பேச்சாகவே உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆண்டவனுக்கே பிறந்த நாள் கல்யான உற்சவம் எல்லாம் செய்து சந்தோஷப்படுவோம் அவனா கேட்டான் இல்லியே . நம்ம வீட்லயே ஒருவனா தான் ஆண்டவனையும் நினைக்கிரோம் நம்புரோம் அவனுக்கு ஒரு கஷ்டம்னா நம்ம வீட்டுக்காராளுக்கு வந்தகஷ்டமா நினைச்சு எங்களாலான உதவி செய்யனும்னு பரபரத்து ஓடரோம்..எங்களால இப்படித்தான் யோசிக்க முடியும்பா. //

இதுவும் மிக அழகான அனுபவம் வாய்ந்த முதியோர்களின் சொல், கேட்கவே இனிமையாய் உள்ளது.

கோகுல் said...

முதல் இரு பகுதியோட இப்பத்தான் படிச்சேன்,அருமை.

Anonymous said...

3 பகுதியையும் இப்பதான் படிச்சேன்.. எதிர் பாரத திருப்பம்.. கதை அருமை..


நம்ம பக்கம் வாங்க...
காதல் - காதல் - காதல்

Yaathoramani.blogspot.com said...

காவலன் தலைப்பு அதற்கான விளக்கமாகப் பதிவும்
மிக மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்

பால கணேஷ் said...

எனக்கென்னமோ அப்பாவோட செயல்ல ஏதாவது நியாயமான காரணம் இருககும்னுதான் முதல்லருந்தே தோணிண்டிருந்தது. அவர் சொன்ன காரணம் நன்று! நல்ல விஷயத்தை அழகான கதையாச் சொல்லி அசத்திட்டீங்கம்மா!

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதவன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கும் விரிவான கருத்துகளுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோகுல் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

எனக்குப்பிடித்தவை முதல் முறை வரீங்களா? நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கு நன்றி

ரசிகன் said...

சங்கடமா இருக்கும்மா.

நீங்க யதார்த்தத்தை எழுதி இருக்கீங்க. ஆனாலும் சங்கடமா தான் இருக்கு. பிழைப்புக்கு இருந்த நிலமெல்லாம் மலடாக்க பட, பசி கொடுமையில் திருடுகிறார்கள் என்றால் அவர்கள் பசி தீர வழி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கோவிலுக்கு அலாரம் வைப்பார்கள். வீடுகளுக்கு???

இறைவன் இவர்களுக்கு ராஜ வாழ்கையை ரட்ச்சித்தது அடுத்தவர்களை பசியால் பரிதவிக்க விட தானா?

வாடிய பயிரை கண்டதற்கே வாடிய வள்ளல் வாழ்ந்த மண்ணில் சக மனிதனின் பசி கூட புரியாத கருங்கல் மனிதர்கள், தங்கள் கோவிலில் யாரை தேடுகிறார்கள்?

காக்கை சிறகினிலும் கடவுளை கண்ட கவிஞன் கற்று தந்ததை படிக்கவில்லையா அவர்கள்?

திருமூலர் சொல்கிறார், "படமாடக் கோவிலுக்கு ஒன்று ஈயின் நம்பர்க்கு ஆகா. நடமாடக் கோவிலுக்கொன்றீயின் நம்பர்க்காமே." துணிகளால் வேயப் பட்ட [அவர் காலத்தில் துணிகளால் கோவில் இருந்திருக்கலாம்] கோவிலுக்கு ஒன்று கொடுத்தால் அது கடவுளுக்கு போய் சேருவதில்லை. நடமாடும் கோவிலான மனிதர்களுக்கு (மட்டுமல்ல) ஒன்று கொடுத்தால் அது கடவுளை அடைகிறது.

ஆதி சங்கரர் சொன்ன அத்வைதத்தின் படி சிவனும் இவனும் வேறல்ல எனும் போது பசித்தவனும், புசித்தவனும் எப்படி வேறாக முடியும்? எது இவர்கள் சித்தாந்தம்? எதற்கு இவர்களுக்கு கோவில்?

I am sorry to say this. I dont like this story.

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் உங்க யதார்த்தமான பின்னூட்டம் ரொம்பவே யோசிக்க வைக்குது. வருகைக்கு நன்றி.

radhakrishnan said...

இரவில் கோயில் வாசல் சீட்டாட்டத்திறகு மிகப் பொருத்தமான
காரணம் சொல்கிறாரே.அருமை. ரொம்ப யோசித்தும் எனக்குத் தோன்றவில்லை.
கிராமங்களின் நிலை குறித்து நனகு விளக்கியுள்ளார் நல்ல யோசிக்கத்தூண்டும் கதை.எதிர்பாராத
முடிவு.நன்றி அம்மா ரசிகன் சார்
நீண்ட கேளவிக்கு மிக நாசூக்காக
மறுமொழியளித்துள்ளீரகளே. பாராட்டுகள்

radhakrishnan said...

தமிழ் விரும்பியில், உடலநலம்,
என்னவாயிற்று.?நீண்ட நாடகளாக
வீடியோக்களைக் காணோமே?

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் வருகைக்கு நன்றி. 2, 3, ப்ளாக் மேனேஜ் பண்ண்ரேன் இல்லியா இங்க போடும்போது அங்க டிலே ஆகுது மண்டே அங்க போடரேன்.
அது 20- பகுதி இரூக்கு போரடிக்கக்கூடாதேன்னு கொஞ்சம் இடை வெளி விட வேண்டி இருக்கு.

ஹேமா said...

இன்றைய சூழ்நிலை.பெற்றவர்களை விட்டுப் பிள்ளைகள், வெளிநாடு போவது.இயற்கையை அழித்து சீமெந்துக் கட்டிடங்களை எழுப்புவது மன ஆதங்கம் கதை வழி கொட்டிக் கிடக்கிறதம்மா !

சிவகுமாரன் said...

சீட்டாட்டத்திற்கான காரணம் நல்ல twist

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

சிவ குமரன் வருகைக்கு நன்றி

G.M Balasubramaniam said...

கமெண்ட் மாடெரேஷனில் என் கருத்து களையப் பட்டதா.?

குறையொன்றுமில்லை. said...

நான் எல்லாருடைய கமெண்டும் பப்லிஷ்தானே பண்ணுரேன் ஐயா.

மாதேவி said...

இப்போதுதான் படித்தேன்.

கணேஸ் கூறியதுபோல படிக்கும்போதே எனக்கும் தோன்றியது. நல்ல விளக்கம்.

மாதேவி said...

இப்போதுதான் படித்தேன்.

கணேஸ் கூறியதுபோல படிக்கும்போதே எனக்கும் தோன்றியது. நல்ல விளக்கம்.

கதம்ப உணர்வுகள் said...

பொறுமையா படிச்சு பின் கருத்திடுவேன் அம்மா...

மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஞ்சு ரொம்ப நா கழிச்சு வரே. வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .