Pages

Monday, May 7, 2012

ராஜ்மா க்ரேவி

தேவையான பொருட்கள்.
 ராஜ்மா-------------    கால் கிலோ.
பெரிய வெங்காயம்-----------   3.
தக்காளிப்பழம்-----------------   4.
மல்லித்தழை--------------------  ஒரு கைப்பிடி
பூண்டு---------------------------    10 பல்லு.
இஞ்சி -----------------------   ஒரு சிறிய துண்டு.
பட்டை----------------------  ஒரு சிரிய துண்டு
ஏலக்காய்----------------   4.
கிராம்பு-------------------- 4.
சோம்பு-------------------- ஒரு ஸ்பூன்.
 ஜீரகம்----------------------- ஒரு ஸ்பூன்.
மஞ்சப்பொடி-------------- ஒரு டீஸ்பூன்.
தனியா பொடி-------------  ஒரு ஸ்பூன்.
மிளகாய்ப்பொடி----------  2 ஸ்பூன்.
கரம் மசாலா பொடி-------- ஒரு ஸ்பூன்.
தாளிக்க எண்ணை---------    4 ஸ்பூன்.
 உப்பு-------------------------  தேவையான அளவு.
 செய் முறை.

                                        
 ராஜ்மாவை இரவே நன்கு அலம்பி தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
மறு நாள் காலை பிரஷர் பேனை அடுப்பில் வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் ஊறிய ராஜ்மா, ஒரு துண்டு பட்டை, ஏலம் கிராம்பு மஞ்சப்பொடி சேர்த்து 7, 8,
                                                      
விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.
                                                          
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி ஜீரகம் சோம்பு போட்டு பொரிந்ததும், பொடிசாக அறிந்து வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும்  பொடிசாக அறிந்து வைத்திருக்கும் தக்காளி, பூண்டு
                                                
இஞ்சிசேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் காரப்பொடி, தனியாபொடி, கரம் மசாலா பொடிகள் போட்டு சுருள வதக்கவும். எண்ணை பிரிந்து வரும் போது
                                                
வெந்த ராஜ்மாவைச்சேர்த்து 10- நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். கொத்துமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

                                                








22 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

படங்களுடனான குறிப்புக்கு நன்றி.

ஸாதிகா said...

அருமையாக செய்து காட்டி இருக்கீங்க. லக்‌ஷ்மிம்மா.

MARI The Great said...

கடைசி புகைப்படம் ராஜ்மாவை ருசித்து விட வேண்டும் என்ற ஆவலை மனதில் ஏற்படுத்துகிறது ..!

RAMA RAVI (RAMVI) said...

சுவையான ராஜ்மா கிரேவி. படங்கள் சூப்பர்,அம்மா.

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பராக இருக்கு ராஜ்மா கிரேவி.

முற்றும் அறிந்த அதிரா said...

ராஜ்மா என்றதும் ஏதோ ஒருவகை மா (flour)என நினைத்துவிட்டேன்:))... புதுப்பெயராக இருக்கு.. இது ஒருவகைக் கெளப்பி இனம்தானே?

Angel said...

புதுப்பெயராக இருக்கு.. இது ஒருவகைக் கெளப்பி இனம்தானே?//


அதீஸ் ராஜ்மா என்பது கிட்னி பீன்ஸ் .வட இந்தியாவில் ராஜ்மா .
லக்ஷ்மிமா என் மகளுக்கு இந்த கிரேவி ரொம்ப பிடிக்கும் .
சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பர் டேஸ்ட்.

சாந்தி மாரியப்பன் said...

ஒரு ப்ளேட் பார்சேல்ல்ல்ல் :-))

Mahi said...

/ராஜ்மா என்றதும் ஏதோ ஒருவகை மா (flour)என நினைத்துவிட்டேன்:))... / நல்லவேளை, முனிமா-ராக்கம்மா மாதிரி "மா"-ன்னு நினைக்காம விட்டீங்களே அதிரா,அதுவரை வீ ஆர் ஸேஃப்! :)))))))))

ராஜ்மா என்பது கிட்னி பீன்ஸ்! :) கிட்னிய யூஸ் பண்ணாம கமென்ட் போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்!

லஷ்மிம்மா,க்ரேவி சூப்பரா இருக்கு. எங்க வீட்டில் நான் ஒரு ஆள் தான் இதை சாப்பிடணும்,அதனால வாங்கறதே இல்லை!

Mahi said...

/இது ஒருவகைக் கெளப்பி இனம்தானே? /என்ன்ன்ன்ன்ன்ன்னது? கெ....ள...ப்....பி?????

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிரா கெளப்பின்னா என்ன?

குறையொன்றுமில்லை. said...

ஏஞ்சலின் வருகைக்கும் அதிராவுக்கு விளக்கம் கொடுத்ததற்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி, பார்சல் கூரியரில் அனுப்பினேனே கிடைச்சுதா?

குறையொன்றுமில்லை. said...

ஏன்மஹி உங்க வீட்ல வேர யாருக்கும் பிடிக்காதா?

Yaathoramani.blogspot.com said...

அடுத்து அடுத்து அது தயாரான விதத்தை
மிக அருமையாக படமாகக் கொடுத்த து
உடன்செய்து பார்க்கும்ஆர்வத்தை
தூண்டிப் போகிறது பதிவு
பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

மாதேவி said...

நன்றாக இருக்கின்றது.

Geetha Sambasivam said...

ராஜ்மா இங்கே தமிழ்நாட்டில் எத்தனை நாள் ஊறினாலும் வேக வைத்தால் குழைவதே இல்லை. வெடுக்கென்றே இருக்கிறது. ராஜ்மாவோட பாஸ்மதி அரிசியில் செய்த மடர் புலவ் நல்ல காம்பினேஷன். நானும் இது குறித்து என்னோட சாப்பிடலாம் வாங்க பதிவில் எழுதி இருக்கேன்.

குறையொன்றுமில்லை. said...

கீதா வருகைக்கு நன்றீ

என்னை ஆதரிப்பவர்கள் . .