Google+ Followers

Pages

Friday, May 11, 2012

பாசம்

சீதாவின் கணவருக்கு ஜூன்மாதம் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. அப்போது தான் குழந்தைகள் பள்ளி திறந்திருந்தது. பாதி படிப்பில் வேறு ஊர் போவது சிரமம் என்பதால் முதலில் சீதாவின் கணவர் அங்க போகட்டும் ஒருவருடம் கழித்து குழந்தைகளுடன் சீதாவும் அங்கு போய்ச்சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து முதலில் அவர் கிளம்பி போனார். இரண்டு குடும்பச்செலவு அதிகமாகவே ஆனது.அங்கு அவருக்கும் தனி வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவு, அதுபோலவே இங்கு இவர்களுக்கும் தனியா வீட்டு வாடகை சாப்பாட்டு செலவு குழந்தைகள் படிப்பு செலவு என்று சமாளிக்க ரொம்பவே சிரமமாக இருந்தது. சீதா எல்லா விஷயங்களிலும் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். அந்த நேரம் சீதாவின் அப்பா பெண்ணைப்பார்க்க வந்தார். வீட்டில் குழந்தைகளுடன் அவள் ரொம்ப சிக்கனமாக குடும்பம் நடத்துவதைப்பார்க்க அவருக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. சீதாவிடம்,இங்க பாரும்மா , நீ நம்ம வீட்ல வெள்ளிதட்டுல பால் சோறும் நெய்ச்சோறுமா சாப்பிட்டு செல்லமா வளர்ந்த பொண்ணு. இப்ப வறட்டு ரொட்டியும் பச்சை வெங்காயமும் சாப்பிடுரீங்க. நீ குழந்தைகளுடன் கிளம்பி நம்ம ஊருக்கு வந்துடு. இங்க எதுக்கு கஷ்ட்டப்படரே.மாப்பிள்ளை பொறுப்பு தெரிஞ்சு எப்போ உங்களைகவனிச்சுக்கராரோ அப்போ நீங்கல்லாம் சேர்ந்து இருந்தாபோறும்.என்று அவர் மன ஆதங்கத்தை மகளிடம் சொன்னார்ர், சீதாவோ அப்பா அவர் என்ன பொறுப்பில்லாம இருக்கார்? ரெண்டு குடும்ப செலவு சமாளிக்க முடியாமத்தானே இப்படில்லாம் இருக்க வேண்டி இருக்கு. எல்லாம் ஒரே ஒரு வருஷம்தானே. படிப்பை பாதியில் விடமுடியாதுன்னுதானே நாங்க அவர்கூட போக முடியல்லே.. எல்லாம் சரி ஆகிடும் அப்பா, நீங்க கவலைப்படாதீங்க. நான் உங்க கூட ஊருக்கெல்லாம் வரதா இல்லே. உங்க அன்பு புரியுதுப்பா. இப்ப நான் வேர ஒருவரின் மனைவி  இந்தகுழந்தைகளின் அம்மா எனக்குன்னு ஒரு குடும்பம், பொறுப்புகள் கடமைகள் என்று எனக்கு இருக்கு இல்லியா?அதை நான் ஒழுங்கா செய்யனும் இல்லியா? அதுவும் இல்லாம உங்க மாப்பிள்ளையை பற்றி உங்களுக்கே நன்னா தெரியும். என்மேலயும் குழந்தைக மேலயும் ரொம்ப அன்பும் பாசமும் வச்சிருக்கார்னு.
அப்படி இருக்கும்போது காரணமே இல்லாம எப்படி அவரை பிரிஞ்சு உங்க கூட வர முடியும்? சொல்லுங்கோ.

கஷ்டத்திலும் சுகத்திலும் அவர்கூடவே இருந்து சமாளிப்பதுதானே சரியா இருக்கும். இப்ப என்ன? கவர்மெண்ட் உத்யோகத்தில் டிரான்ஸ்பர் தவிர்க்க முடியாத ஒரு விஷயம்தானே. அதுக்குப்போயி கலங்காதீங்க. நான் பாத்துக்கரேன்.என்று தைரியமாக பேசின மகளைப்பெருமையுடன் பார்த்தார் சீதாவின் அப்பா. அம்மாடி நான் இன்னமும் உன்னை சின்னப்பெண்ணாகத்தான் பார்க்கிரேன். பாசம் கண்ணை மறைக்குதும்மா நீ பொறுப்புடன் தைரியமாகவும் பிரச்சினைகளை எதி கொண்டு சமாளிப்பது சந்தோஷம்தான். ஆனா நீங்க கஷ்ட்டப்படுவதை தங்கிக்க முடியல்லியேம்மா. ஏதானும் பணமோ வேர ஏதானும் வேணும்னா என் கிட்ட தயங்காம கேக்கனும் ஓக்கேவா? இப்ப கொஞ்சம் பணம் தந்துட்டு போரேன் செலவுக்கு வச்சுக்கோ என்றார். அப்பா எனக்கு என்ன வேனும்னாலும் உங்க கிட்டதான் கேப்பேன் இப்ப இந்தப்பணம் லாம் வேனாம்.அவர் அனுப்புவதில் சமாளிக்க முடியும்பா.எல்லாம் ஒரு வருஷம்தான்பா. அப்புரம் நாங்களும் அவர்கூட போயி சேர்ந்துடுவோம். அப்புரம் ஏதும் பிரச்சினை இல்லே. என்று பிடிவாதமாக சொல்லி அப்பா கொடுத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டாள்.அவரும் அரை மனதுடன் ஊருக்கு கிளம்பி போனார். 

23 comments:

Ramani said...

நட்டு வைத்த இடத்திற்குத் தகுந்தார்ப்போல வளர்ந்து செழித்து
பல்ன் தருவதுதானே செடியின் தன்மை
மனம் கவர்ந்த அருமையான சிறுகதை
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 1

Akila said...

Husbanda Vittu kudukama nalla penna nadanthukita seetha..... Nice one....

ஹேமா said...

இப்படிப் புரிந்துகொண்டு ’எனக்கு இவ்வளவும்தான்’ என்கிற பொறுமையோடு வரவுக்குத் தகுந்த செலவு செய்யும் பெண்கள் அமைந்துவிட்டால் எத்தனை சந்தோஷம் அந்தக் குடும்பத்தில் !

RAMVI said...

மிக அருமையான அனுபவக் கதை அம்மா.

வரலாற்று சுவடுகள் said...

இப்படி ஒரு துணைவி எல்லோரது வாழ்க்கையிலும் அமைந்தால் சொர்க்கத்தை பூமியிலேயே உணர்ந்துவிடுவான் ஒவ்வொரு ஆண்மகனும் ..!

சீனு said...

//அம்மாடி நான் இன்னமும் உன்னை சின்னப்பெண்ணாகத்தான் பார்க்கிரேன்.//

அருமையான கதை. இயல்பான வார்த்தைகள்.

இதையும் படித்துப் பாருங்களேன்
சென்னையில் வாங்கலாம் வாங்க

Mahi said...

சீதாவின் சுயமரியாதையும், நம்பிக்கையும் பிரம்மிப்பூட்டுகிறது! நல்ல பதிவு லஷ்மிம்மா! :)

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றிகள்.

Lakshmi said...

அகிலா தேங்க்ஸ்

Lakshmi said...

ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

வரலாற்று சுவடுகள் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சீனு வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றீ

ஸாதிகா said...

அருமையான கதை தந்து மனம் தொட்டு விட்டீர்கள்.

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

கே. பி. ஜனா... said...

அவர் ஆதங்கமும் சரி... அவள் உறுதியும் சரி....

மாதேவி said...

பலர் குடும்பம் நடத்தத்தெரியாமல் அளவுக்கு மீறி செலவுசெய்து குடும்பமே சீரளிவதைக் காண்கின்றோம்.

இவர்கள் இக்கதை மூலம் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கும் கருத்துக்கும் நன்
றி

Lakshmi said...

கே.பி. ஜனா வருகைக்கு நன்றி

ராஜி said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

Lakshmi said...

ராஜி வரு்ைக்கு நன்றி அன்னையர் தின வாழ்த்துகள்

என்னை ஆதரிப்பவர்கள் . .