Pages

Monday, May 28, 2012

கொத்தமல்லி தொகையல்.

தேவையான பொருட்கள்.
 கொத்துமல்லி-------------------  5 சிறியகட்டு.
 உளுத்தம்பருப்பு----------------  250- கிராம்
மிளகாய்ப்பொடி----------------   100- கிராம்
 புளி--------------------------------   ஒரு சிறிய ஆரஞ்ச் அளவு.
பெருங்காயம்-------------------   சிறிதளவு
 எண்ணை------------------------   2 டேபிள் ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு.
                             

செய் முறை
 கொத்துமல்லியை மண்போக நன்கு கழுவி ஒரு பேப்பரில் பரவலாக
 போட்டு நன்உ உலரவிடவும். ஈரப்பதம் கொஞ்சம் கூட இருக்கக்கூடாது.
 மிகவும் பொடிசாக அரிந்து வைக்கவும்.
                                       
 கடாயில் எண்ணை ஊற்றி உளுத்தம்பருப்பை சிவக்கவருக்கவும்.
 நன்கு சிவந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகாபொடி பெருங்காயம்
 அத்துடன் சேர்த்து நன்கு கலக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் உப்பு
 புளி வறுத்துவைத்திருக்கும் பருப்பு +மிள்காபொடி கலவையை மிக்சியில்

 போட்டு ரவை பதத்தில் அரைக்கவும். அரைத்தபொடியை நறுக்கிவைத்தி
ருக்கும் கொத்துமல்லியுடன் கலந்து மறுபடியும் மிக்சியில் சுற்றி எடுக்கவும்
 எல்லாம் சேர்ந்து சுற்றியதும் ஒரு தாம்பாளத்தில் போட்டு ஆற விடவும்.
 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பீங்கான் பரணியில் அல்லது கண்ணாடி
                                   
 பாட்டிலில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்கவும்.  ஈரப் பதமே இல்லாத
தால் 6 மாசம் வரையும் கெடாமல் இருக்கும். வெய்யில் காலத்தில் ஆவக்காய் வடுமாங்காய் ஊறுகாய் எல்லாம் போடுவதுபோல இந்த கொத்துமல்லி தொகையலும் வருடாந்திரத்துக்கு தயார் செய்து வைக்கலாம்.
மோர்சாதமுடன் தொட்டுக்கொள்ள மிகவும் நல்லா இருக்கும்.
 சூடு சூடு சாதத்தில் நல்லெண்ணை ஊற்றி இந்ததொகையில் போட்டு
 பிசைந்து சாப்பிடவும் ரொம்ப நல்லா இருக்கும்.
முன்னே எல்லாம் பரணியில் போட்டு நல்ல வெள்ளைத்துணியால் இறுக கட்டி வைத்து பாதுகாப்பாக வைப்போம். இப்ப ஃப்ரிட்ஜ் வசதிலாம் வந்தபிறகு ஜிப்லாக் பேகில் போட்டு ப்ரீசரில் வைக்கிரோம்.

35 comments:

அப்பாதுரை said...

செய்து பார்க்கத் தோன்றுகிறது. ரொம்ப காரமா இருக்கும் போலிருக்கே? பரணி என்றால் தூக்கா?

Akila said...

My friend do this same as u... Love it

சாந்தி மாரியப்பன் said...

வாவ்.. அருமை லக்ஷ்மிம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மோர்சாதமுடன் தொட்டுக்கொள்ள மிகவும் நல்லா இருக்கும்.

சுடச்சுட சாதத்தில் நல்லெண்ணை ஊற்றி இந்ததொகையில் போட்டு
பிசைந்து சாப்பிடவும் ரொம்ப நல்லா இருக்கும்.//

கொத்தமல்லித் துவையல் நாக்கில் நீர் வரவழைப்பதாக உள்ளது. பாராட்டுக்கள்.

MARI The Great said...

துவையலில் கொத்தமல்லி துவையல் நான் விரும்பி சாப்பிடும் துவையலில் ஒன்று..,

வருட கணக்குகள் ஆகிவிட்டது கொத்தமல்லி துவையலை ருசித்து..

கே. பி. ஜனா... said...

உடல் நலனுக்கேற்ற பதார்த்தம் ஆயிற்றே? நல்ல பகிர்வு!

K said...

தலைப்பிலே தொகையல் என்ற சொல்லைப் பார்த்துவிட்டு, “ தொகையல்” என்பது கேள்விப்படாத சொல்லாக இருக்கிறதே என ஓடிவந்தேன்!

அக்கா, இதுதான் தொகையலா? சரி எனக்கு இது பயன்படாது! ஆனால் படித்து வைக்கிறேன்! ஏன்னா பெரியவர்கள் எனக்கு பொண்ணு பார்க்கறாங்க!

எப்படியோ கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நான் சமைக்கணும் இல்லையா?

மிக்க நன்றி அக்கா பகிர்வுக்கு :-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

அப்பாதுரை said...

பரணி என்றால் தூக்கா?

Sir,

அது பரணியும் அல்ல தூக்கும் அல்ல.

பரணை என்பதே சரியான சொல்.

பரணை = LOFT

Unknown said...

கொத்தமல்லித் தொகையல் ரெசிப்பி நல்லா இருக்கு. ப்ரீஸர், ஃப்ரிட்ஜ் இல்லாத காலத்தல இதைப் பாதுகாக்க பரணியில போட்டு வெச்சுப்போம்னு நீ்ஙக சொன்ன தகவல் புதுசா இருக்கு. இப்ப நவீன வாழ்க்கை வசதிகளுக்குப் பழகிட்டதால அதை நினைச்சுப் பாக்கவே புதுமையா இருக்கு.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

மெனுவும் செய்முறையும் சூப்பர்....எங்க இருந்து இத கத்துகிடீங்க சகோ.

மகேந்திரன் said...

சுவையான கொத்தமல்லி தொகையல்...

முற்றும் அறிந்த அதிரா said...

லக்ஸ்மி அக்கா.. மிக அருமையான சத்துணவுக் குறிப்பு.... அதெப்படி உழுந்தை அவ்வளவு அழகாக, கருகாமல் சிவக்க வறுத்திருக்கிறீங்க.... சூப்பர்.

ஊ.கு:
கல்யாணக்.. கல்யாணக்.. கல்யாணக் கனவூஊஊஊ.. சிலருக்கு:))

குறையொன்றுமில்லை. said...

அப்பாதுரைசார் வருகைக்கு நன்றி. நாள்பட வைத்திருக்கும் இதுபோல தொகையல் வகை களுக்கு முதல்ல உப்பு காரம் கூடத்தான் போட்டு செய்யனும். ஆனாதான் நாள்பட கெட்டு போகாம இருக்கும். பரணி என்பது பெரிய பீங்கான் ஜாடி.

குறையொன்றுமில்லை. said...

அகிலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கு நன்றி. இதுபோல ரெசிப்பி நம்மபோல உள்ளவங்களுக்கு என்றுமே சுவை மிகுந்ததுதான்.

குறையொன்றுமில்லை. said...

கே. பி. ஜனா, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள், வருகைக்கு நன்றி. ஆமாங்க இப்பல்லாம் யாரும் மெனக்கிடுவதில்லை. எல்லாம் ரெடிமேட் ஐட்டங்களுக்கு பழகிட்டாங்க.

குறையொன்றுமில்லை. said...

மணி வருகைக்கு நன்ரி. கல்யாணம் ஆகப்போகுதா. சந்தோஷம். அடிக்கடி வாங்க உங்களுக்கு தெரிஞ்சுக்க நிறையா ரெசிப்பிகள் கிடைக்கும் இங்கே.

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் நான் சொன்னது பெரிய பெரிய பீங்கான் ஜாடிகளைத்தான். முன்னேல்லாம் ஊறுகாய்கள் எலுமிச்சை, நாரத்தை வடுமாங்கா மொளாமாங்கா ஆவக்கா என்று வருடாந்திரத்துக்கு போட்டு பாதுகாப்பா வைப்பாங்க இல்லியா அந்த பீங்கான் ஜாடியைத்தான் பரணின்னு சொல்லுவாங்க. பரணை வேர. நான் சொன்னது அது இல்லே.

குறையொன்றுமில்லை. said...

நிரஞ்சனா வருகைக்கு நன்றி பழயகால மணிதர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையாவே இருக்கும்மா.

குறையொன்றுமில்லை. said...

திருவாளப்புதூர் முஸ்லீம் வருகைக்கு நன்றி. 12 வயசிலேயே சமையல் அறை கரண்டியை கயில் எடுத்தாச்சே.எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கும் இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிரா இங்க வந்தும் ஊசிக்குறிப்பு கொடுத்து அசத்துரீங்களே.ஓனர் வந்து ரிப்லை பண்ணுவாங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Lakshmi said...
கோபால் சார் நான் சொன்னது பெரிய பெரிய பீங்கான் ஜாடிகளைத்தான். முன்னேல்லாம் ஊறுகாய்கள் எலுமிச்சை, நாரத்தை வடுமாங்கா மொளாமாங்கா ஆவக்கா என்று வருடாந்திரத்துக்கு போட்டு பாதுகாப்பா வைப்பாங்க இல்லியா அந்த பீங்கான் ஜாடியைத்தான் பரணின்னு சொல்லுவாங்க. பரணை வேர. நான் சொன்னது அது இல்லே.//

OK OK எனக்கும் இது புதுதகவள்களே!
புரிந்து கொண்டேன். நன்றி.

பீங்கான் மாங்கா ஜாடி என்று தான் நாங்கள் சொல்லுவோம்.

குறையொன்றுமில்லை. said...

ஒவ்வொரு ஊரில் ஒவொரு பேச்சு வழக்கு போல இருக்கு.மீண்டும் வருகைக்கு நன்றி கோபால் சார்

Mahi said...

New recipe to me..looks yummy Lakshmi-ma!

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

ஹேமா said...

கொத்தமல்லித் துவையல் ஊரில் சாப்பிட்டதுதான்.அந்த வாசனனையோடு நிறையவே சாப்பிடலாம்.ஞாபகம் வந்தாச்சு...நானும் செய்யப்போறேன் !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றி. சீக்கிரம் செய்து பாருங்க.

அப்பாதுரை said...

மொளாமாங்காவா? அது என்ன variety?

Geetha Sambasivam said...

பரணின்னதும் நானும் லக்ஷ்மி சொல்வதையே நினைச்சேன். என்னதான் அவங்க திருநெல்வேலின்னாலும் நான் மதுரையாச்சே, என்னோட மாமிங்க எல்லாரும் திருநெல்வேலிக்காரங்க தான். அதனால் எனக்குப்புரிஞ்சது.

முன்னெல்லாம் இந்தக் கொத்துமல்லி மிளகாய்ப்பொடினு எங்க வீட்டிலே சொல்வாங்க. கல்லுரலில் போட்டு உலக்கையால் இடிக்கணும். இப்போத் தான் மிக்சி. என்ன இருந்தாலும் அந்த டேஸ்ட் வராது. பழைய சாதம் ஜில்லுனு பிசைந்து, இந்தக் காரமான கொ.ம. மி.பொ. தொட்டுக் கொண்டால், ஆஹா!

Vetirmagal said...

ரெசிபி தெரிந்தது தான்.

ஆனால் அந்த குறிப்பு மிக முக்கியமானது.

உருட்டி பரணியில் போட்டு, பல நாட்கள் கெடாமல் வைத்து, ஆஹா, என்ன அருமை. ஊறுகாய் மாதிரியே!
அந்த புகைப்படங்களும்..ம்..

சூப்பர்!

Geetha Sambasivam said...

@அப்பாதுரை, அது மொளகாய், மாங்காய். தின்னவேலி ஸ்லாங்! :))))))))))))

குறையொன்றுமில்லை. said...

கீதா நான் இப்ப உரல் உலக்கை பத்தி எழுதினா அப்படின்னா என்னதுன்னு சில பேரு கேப்பாங்க. ஹா ஹா. அதுக்கு தனியா வேர விளக்கம் சொல்லனும் இலியா.

என்னை ஆதரிப்பவர்கள் . .