Google+ Followers

Pages

Wednesday, May 9, 2012

இட்லி உப்மா.

முதல்ல இட்லி உப்மால்லாம் பதிவா போடனுமான்னு நினைச்சேன். ஆனா இப்ப பெரும்பாலான வீடுகளில் ஆண்களும் குழந்தைகளும் இட்லின்னாலே என்னம்மா எப்ப பாத்தாலும் இட்லியே பண்ணி போரடிக்கரேன்னு முகம் சுளிக்கிரார்கள்.தோசையை விரும்பி சாப்பிடுவதுபோல இட்லியையும் அவங்க விரும்பி சாப்பிடனும்னா இப்படி ஏதானும் மேக்கப் செய்து கொடுக்கனும். கலர் ஃபுல்லா இருந்தா சாப்பிடுவாங்க. என் பேரன்களிடம் நான் இதை பனீர் உப்மான்னு சொல்லி கொடுப்பேன். இட்லிய சதுரமாக  பனீர் துண்டுகள் போலவே கட்செய்துகாய்களும் சேர்த்து உப்மா செய்தால் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. தினசரியுமே என்ன டிபன் செய்ய, என்ன லஞ்ச் செய்யன்னு சர்க்கஸ்தான் பண்ண வேண்டி இருக்கு.ஒருவருக்கு பிடிப்பது இன்னொருவருக்கு பிடிக்க மாட்டேங்குது. எல்லாரையும் திருப்தி செய்யனும்னா ஏதானும் புதுசு புதுசா யோசிக்கத்தானே  வேனும்.
தேவையான பொருட்கள்.
ஏற்கனவே செய்து வைத்திருக்கும் இட்லிகள் ---------     4
 வெங்காயம்-------------------------------------------------------- 1
தக்காளி--------------------------------------------------------------  1
உருளைக்கிழங்கு =-----------------------------------------------  1
பச்சைமிளகாய்----------------------------------------------------    2
கறி வேப்பிலை------------------------------------------ கொஞ்சம்
தாளிக்க
எண்ணை-----------------------     2 ஸ்பூன்
கடுகு-----------------------------1  ஸ்பூன்
உளுத்தம்பருப்பு-------------- 1   ஸ்பூன்
கடலைப்பருப்பு--------------  1   ஸ்பூன்
மஞ்சபொடி--------------------   கால் டீஸ்பூன்
உப்பு----------------------------    சிறிதளவு
                                          
செய் முறை
காய்களை நன்கு கழுவி சின்ன துண்டங்களாக கட் செய்து கொள்ளவும்
 இட்லிகளை உதிர்த்துக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி கடுகு
                                                    
பொரிந்ததும் பருப்புகபோட்டு சிவந்ததும் மிளகாய் வெங்காயம் போட்டு பாதி வதங்கியதும் காய்களைச்சேர்க்கவும். விருப்ப பட்டவர்கள் ஒரு கைப்பிடி
                                        
பச்சை பட்டாணி, ஒரு குடை மிளகா சேர்த்துக்கொள்ளலாம் ஒரு கண்ணுள்ள தட்டால் மூடி 5 நிமிடங்களுக்கு வேக விடவும். இட்லியில் உப்பு இருக்கும்,
                                                  
அதனால காய்களுக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.காய்கள் நன்குவதங்கியதும் உதிர்த்து வைத்திருக்கும் இட்லி துண்டுகளைச்சேர்த்து 5-
                                              
நிமிடங்களுக்கு வதக்கி இறக்கவும்.          
 நான் ஒரு ஆளுக்கு தேவையான அளவுகளுக்குத்தான் சொல்லி இருக்கேன் அதிக நபர்களுக்கு செய்யும்போது அதற்கேற்றார்போல் பொருட்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளவும்.            

32 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு லக்ஷ்மிம்மா...

சர்க்கஸ் வேலை.... சரியாச்சொன்னீங்க :-)))

ராமலக்ஷ்மி said...

/பதிவா போடனுமான்னு /

அப்படியெல்லாம் நினைக்காதீங்க. ஒவ்வொருவர் செய்வதும் ஒவ்வொரு மாதிரி. குறிப்புகளில் நாம் அறியாத புதுசான விஷயம் எப்போதும் கிடைக்கிறது.

கலர்ஃபுல் உப்புமா! அருமை.

ராஜி said...

இந்த உப்மாக்கு என் பிள்ளாஇகள் வெச்சிருக்கும் பேர் “சூர்ய வம்ச உப்மா”

RAMVI said...

எங்க வீட்டில் இட்லி உப்புமா எல்லொருக்கும் பிடித்த டிஃபன். ஆனால் தக்காளி, உருளைக்கிழங்கு எல்லாம் போட்டு செய்ய மாட்டேன்.

உங்க செய்முறை விளக்கம் நன்றாக இருக்கு அம்மா, இப்படி செய்து பார்க்கிறேன்.

Mahi said...

Nice recipe..never added veggies with idli uppuma! Looks yummy!

கணேஷ் said...

அட... தெரிஞ்ச டிஃபன் தான்னாலும் புதுசா, அழகா செய்யற மாதிரி சொல்லியிருக்கீங்களே... நன்றி!

நிரஞ்சனா said...

இட்லி உப்புமா எனக்குப் பிடிக்கும். ஆனா மம்மி இட்லி மிச்சமாகற அன்னிக்கு மட்டும்தான் பண்ணுவாங்கன்றதால ஆவலோட காத்திருப்பேன். அதுல நீங்க சொல்லிருக்கற மாதிரி வெஜிடபிள்ஸ் சேர்த்ததே இல்லை மம்மி. அடுத்த தடவை பண்ணட்டும்... இதெல்லாம் சேக்கச் சொல்லி ஒரு வழி பண்றிடறேன்... Thanksma!

Avargal Unmaigal said...

லட்சுமியம்மா இது தெரிஞ்ச டிஃபன் என்றாலும் அதை படங்களுடன் சொல்லி இருக்கும் முறை நன்றாக உள்ளது. ஆனா இதை கூட தெரியாத பல அம்மாக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.. தொடருங்கள் ....நன்றி!

athira said...

ஸ்ஸ்ஸ்.. இட்லி உப்புமா சூப்பர்... இப்ப சமையலிலெல்லாம் படமெடுத்துக் கலக்குறீங்க லக்ஸ்மி அக்கா.

Lakshmi said...

வலைஞன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராஜி சூர்ய வம்ச உப்மா பேரு நல்லா இருக்கே.

Lakshmi said...

ரமா வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கணேஷ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

நிரஞ்சனா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றி

ஸாதிகா said...

தக்காளி உருளை எல்லாம் சேர்த்து வித்தியாசமாக உள்ளதே .அவசியம் இந்த முறையில் செய்து பார்த்திட வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

இட்லி உப்புமா காய்கறிகள் கலவையுடன் பார்ப்பதற்கே அழகாக இருக்கிரது லக்ஷ்மிம்மா!

Lakshmi said...

ஸ்திகா வருகைக்கு நன்றி

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

செய்முறையே சாப்பிடதோனும் வகையில் உள்ளது அடடா பின்னிடீங்க.

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

Lakshmi said...

திருவாளப்புத்தூர் முஸ்லீம் வருகைக்கு நன்றி

ஹேமா said...

இட்லியைக் கண்டே ரொம்ப நாளாச்சம்மா.இதில எங்க உப்புமா.....சரி சரி செய்முறை ஞாபகத்தில இருக்கு.நன்றி !

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்ரி

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

Lakshmi said...

சசிகலா வலைச்சர அறிமுகத்துக்கு நன்றிம்மா.

arul said...

superb

Geetha Sambasivam said...

காய்கள் சேர்த்து இட்லி உப்புமா பண்ணினதில்லை. இம்மாதிரி ஒருநாள் முயன்று பார்க்கிறேன்.

Lakshmi said...

கீதா வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .