Google+ Followers

Pages

Wednesday, May 2, 2012

சாந்தா ( M. S.)

 ரவிக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் அன்றுதான் கையில் கிடைத்தது. மஹா ராஷ்ட்ராவில் ஒரு ஒதுக்கு புறமாக இருக்கும் சந்த்ரபூர் என்னும் இடத்துக்கு. பேரு கூட கேள்விப்பட்டதில்லியேன்னு நினைத்தார்கள். அதுவும் ஊருக்கு 40- கிலோ மீட்டர் உள்ள தள்ளி இருக்கும் சாந்தா என்னும் பொட்டல்காடு.செண்ட்ரல் கவர்மெண்ட் உத்யோகத்தில் இருந்து கொண்டு டிரான்ஸ்பருக்கு பயந்தா முடியுமா?5, 5 வருஷத்துக்கு ஒரு முறை இப்படி காவடி தூக்கித்தான் ஆகனும். இதுக்கு முன்ன ஜபல் பூரிலிருந்து 50- கிலோ மீட்டர் உள்ள தள்ளி இருக்கும் கமேரியா என்னும் இடம். அதுக்கும் முன்ன பூனாவிலிருந்து உள்ள தள்ளி இருக்கும் கர்க்கி என்னும் இடம். ரவி வேலை செய்வது ஆர்டினன்ஸ் ஃபேக்டரி.அது ஊருக்கு வெளியே ஒதுக்கு புறமாகத்தான் இருக்கும். வெரும் ஃபேக்டரி, அதில் வேலை செய்பவர்களுக்கு பதவிக்கு தகுந்தாற்போல குடி இருப்பு வசதிகள். அந்தக்குழந்தைகள் படிக்க ஒருஸ்கூல். அதில் 10- வது வரைதான் இருக்கும். அப்புரம் பேருக்கு ஒரு ஆஸ்பிடல். மற்றபடி வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடும். அங்கிருந்துதான் ப்ரொவிஷன் சாமானோ, காய்கறிகளோ வேறு அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக்கனும். பொழுது போக்கு என்று ஏதுமே கிடையாது. அந்த சமயம் டி, வி, யோ கம்ப்யூட்டரோ வந்திருக்கலே.என்ன டிரான்ஸ்பரோ குழந்தைகள் படிப்பை கெடுத்துண்டு ஊர் ஊரா மூட்டை கட்ட வேண்டி இருக்கேன்னுபுலம்பிக்கொண்டேதான் ரவியின் மனைவி தயார் செய்தாள்.ஒரு வழியாக சாந்தா வந்து சேர்ந்தார்கள்.  நல்ல வேளை வீடு ரெடியாக இருந்தது. சுற்றி வர ஒரே பொட்டல் காடுதான்.ஒரேபொழுதுபோக்கே ஃப்ரெண்ட்ஸ் வீடுகளுக்கு போய் வருவதுதான்.இது புது இடம் புது மனிதரகள்
பழகினபிறகு தான் சரிவரும் என்று எண்ணியவாரே கொண்டு வந்திருந்த மூட்டை முடிச்சுகளை அப்படி அப்படியே முதரூம் ரெண்டாவது ரூம் பூராவும் பரப்பி வைத்துவிட்டு இரவுக்கான உணவு தயார் செய்து சாப்பிட்டு அலுப்பில் படுத்து விட்டார்கள்.இரவு 12- மணிக்கு ஜோன்னு மழை பெய்யுரமாதிரி சப்தம் கேட்டு விழிப்பு வந்தது ரவிக்க்கு. மனைவியை எழுப்பி வாசல்ல மழை பெய்யுது போல இருக்கு தண்ணி சத்தம் கேக்குது என்றான். என்னங்க சொல்ரீங்க? இது நல்ல கோடை காலம் இப்ப எப்படி மழை பெய்யும் என்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்கள். நல்ல அனல் காத்துதான் அடித்துக்கொண்டு இருந்தது.

உள்ள வந்தா வீடு பூராவும் முழங்கால் அளவுக்கு தண்ணி தேங்கி நின்னு கொண்டுவந்த மூட்டை முடிச்செல்லாம் நனைந்து முதக்குது.தரையில் படுத்திருந்ததால் தலகாணி மெத்தை எல்லாமும் தண்ணீர் ஊறி விட்டது.ஐயோ வீட்டுக்குள்ள வெள்ளம் எப்படி வந்ததுன்னு கிச்சன் பக்கம் போயி பார்த்தார்கள் குழாய் மூடப்படாமல் திறந்திருந்தது. பாத்ரூம் டாய்லெட் எல்லா இடங்களிலும் குழாய்கள் திறந்திருந்தது. ஒரு ரூமுக்கும் அடுத்த ரூமுக்கும் படிகளோ தடுப்புகளோ ஏதுமில்லாததால் எல்லா ரூமிலும் தண்ணிர் வேகமாக தேங்கி கொண்டு வந்த சாமான் எல்லாமே நனைந்து விட்டது. குழந்தைகளையும் எழுப்பி எல்லாரும் தண்ணீரை இறைத்து ஊற்றி வீட்டை சுத்தம் செய்யத்தொடங்கினார்கள். சுத்தம் செய்து கொண்டிருக்கும் போதே குழாயில் தண்ணீர் வருவது நின்று விட்டது. சுத்தம்பண்ணும் கவனத்தில் தண்ணீர் எந்தப்பாத்திரத்திலும் பிடிச்சு வைத்துக்கொள்ளவே தோணலை. அதற்குள் நன்கு விடிந்து விட்டது.

புது இடம் என்பதால் பால்காரன் ஏற்பாடு எதுவும் செய்துக்கலை. பக்கத்து வீட்டில் கதவைதட்டி பால் எப்ப வரும்னு கேட்டார்கள் ஓ, வந்துட்டு போயிட்டானே நாளை முதல் உங்களுக்கும் பால் ஊத்த சொல்லவான்னு கேட்டங்க பக்கத்து வீட்டுக்காரங்க. அவர்களிடம் பேச்சு கொடுத்ததில் இங்கெல்லாம் நாள் பூராவும் குழாயில் தண்ணி வராதாம். இரவு 12- டு 2- வரைதான் வருமாம் பக்கெட்ல பாத்திரத்ல பிடிச்சு வச்சுக்கனும்னு சொன்னாங்க. இதெல்லாம் தெரியாதே. எல்லாரும் பல் தேய்க்க பாத்ரூம் போனா பொட்டு தண்ணி கிடையாது.இதேதுடா இப்படி ஒரு சங்கடம்னு நினைச்சுண்டே ஈரமான மூட்டைகளை மொட்டைமாடியில் பிரித்துப்போட்டு காய வைத்தோம்.அதற்குள் ஃபேக்டரி சங்கு ஊதிவிட்டது. அவசர அவசரமாக ரவி கிளம்பி ஆபீஸ் போனான். சைக்கிள்தான் எல்லாரிடமும்.அன்று தண்ணி இல்லாமல் சாப்பாடு எதுவும் பண்ணமுடியல்லே. பக்கத்து வீட்டுக்காரங்க அவல் உப்மாவும்,  டீயும் தந்தாங்க.

 நல்ல கோடைகாலம் ஆனதால மொட்டைமாடியில் போட்டிருந்த சாமான்கள் எல்லாம் ஒரே நாளில் காய்ந்து விட்டது.அன்றைய பொழுது வீட்டைக்க்ளீன் செய்வதிலேயே சரியா போச்சு. அன்று இரவு 12- மணி வரை தூங்காம முழிச்சுகிட்டு இருந்து தண்ணிவந்ததும் அண்டான் குண்டான் பக்கெட் கப் என்று எல்லாவற்றிலும் தண்ணி பிடிச்சு வச்சுட்டுத்தான் பாக்கி வேலைகள். மறு நாள் பக்கத்து வீட்டுக்காரி பால்காரனிடம் சொல்லி வச்சிருந்ததால 5- மணிக்கு பால் வந்தது.அன்றைய பொழுது எந்தப்பிரச்சினையும் இல்லாம போச்சு.புது இடம் மாறிப்போனா என்னல்லாம் பாக்கவேண்டி இருக்கு. அன்னிலேந்து அவங்க வீட்ல யாருமே தண்ணீரை அனாவசியமா செலவு பண்ணவே மாட்டாங்க...இப்படி ஒவ்வொரு வருக்கு ஒரு அனுபவம் கிடைச்சாதான் தண்ணியை சிக்கனமா செலவு செய்வாங்க போல இருக்கு.
முன்னல்லாம் கடித போக்கு வரத்துஒன்றுதான் தொடர்பு சாதனமாக இருந்தது. ரவியின் அப்பா கிராமத்திலிருந்து 10- நாட்களுக்கு ஒரு போஸ்ட் கார்ட் எழுதி போடுவார். அதில் முகவரி எழுதும்போது CHANDA என்று எழுத CANADA என்றுதான் எப்பவும் "H"  லெட்டர் எழுத மறந்து விடுவார்.சாந்தா கானடா ஆகி விடும். ஆனாலும் கூட கடிதாசி கரெக்டாக வந்து சேர்ந்துவிடும்.  

36 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அனுபவம்! பகிர்வுக்கு நன்றி.

Mahi said...

நல்ல (அனுபவ) கதை லக்ஷ்மிம்மா! ;)

Ramani said...

வித்தியாசமான அனுபவம்
நாங்களும் அனுபவிப்பதுபோல் சொன்னவிதம் அருமை
வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 2

ஸாதிகா said...

சுவாரஸ்யமான அனுபவங்களை சுவைபட கூறி இருப்பது அருமை.

கோமதி அரசு said...

அனுபவங்கள் தான் பாடம் கற்றுக் கொடுக்கிறது.
தண்ணீர் சிக்கனம் கடைபிடிக்க பாடம் கற்று கொண்டார்கள் அல்லவா!

பழனி.கந்தசாமி said...

நல்லா இருக்கு.

அமைதிச்சாரல் said...

நல்ல அனுபவம்தான்..

savitha said...

கதை சூப்பர் லக்ஷ்மிமா..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அனுபவங்கள்.

சூப்பரா எழுதியிருக்கீங்க.

//முன்னல்லாம் கடித போக்கு வரத்துஒன்றுதான் தொடர்பு சாதனமாக இருந்தது. ரவியின் அப்பா கிராமத்திலிருந்து 10- நாட்களுக்கு ஒரு போஸ்ட் கார்ட் எழுதி போடுவார். அதில் முகவரி எழுதும்போது CHANDA என்று எழுத CANADA என்றுதான் எப்பவும் "H" லெட்டர் எழுத மறந்து விடுவார்.சாந்தா கானடா ஆகி விடும். ஆனாலும் கூட கடிதாசி கரெக்டாக வந்து சேர்ந்துவிடும். //

;)))))

பாராட்டுக்கள்.

சீனு said...

//இப்படி ஒவ்வொரு வருக்கு ஒரு அனுபவம் கிடைச்சாதான் தண்ணியை சிக்கனமா செலவு செய்வாங்க போல இருக்கு.// உண்மையான கருத்துக்கள் அனுபவம் கற்றுக் கொடுக்காத வரை நமக்கு எதுவுமே புரிவதில்லை .
கருத்துள்ள பதிவு

krishy said...

அருமையான பதிவு

மே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் த். ம. ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

Lakshmi said...

பழனி கந்த சாமி வருகைக்கு நன்றீ

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றீ

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்களுக்கு கமேரியாபற்றி தெரிந்திருக்கும் இல்லியா?

Lakshmi said...

சீனு வருகைக்கு நன்றி

Lakshmi said...

KRISHY உங்கபக்கம் வந்தேன் என் பதிவை இணைக்கவே முடியல்லியே?

ராஜி said...

அனுபவத்தை கதையாக்கிருக்கீங்களா இல்லை கதையே அனுபவமா அம்மா?

Lakshmi said...

ராஜி ரெண்டுமேதான் ஹா ஹா. வருகைக்கு நன்றி

radhakrishnan said...

ஆகா, சொந்த அனுபவங்களைப் புகுத்தி
நன்றாககஃ கதை சொல்கிறீர்களே,
.எங்கோ படித்தமாதிரி இருந்ததே என்று பார்த்தால் எல்லாம் உங்கள் சொந்த
அனுபவங்கள்தான்.மீள்பதிவுபோல்
படித்தாயிற்று. நல்ல பகிர்வு. நன்றி அம்மா

Lakshmi said...

ராதா கிருஷ்னன் வருகைக்கு நன்றி. திடீர் திடீர்னு காணாம போயிடரீங்க.

athira said...

இது உண்மைக்கதையா லக்ஸ்மி அக்கா? முடிவில சொல்லப்போறீங்க ரவியின் மனைவி வேறு யாரும் அல்ல.. அது நானேதான் என:))

athira said...

நல்ல அனுபவப் பகிர்வு... சாந்தா கனடாவானதா? அவ்வ்வ்வ்வ்:))).. ஊருக்கும் சாந்தா எனப் பெயர் வச்சிட்டீங்களே...:))

கணேஷ் said...

உங்களின் படைப்பைங(கிலிபி) இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொரு வருக்கு ஒரு அனுபவம் கிடைச்சாதான் தண்ணியை சிக்கனமா செலவு செய்வாங்க போல இருக்கு.

அனுபவம் புதுமை!

Lakshmi said...

அதீஸ் வருகைக்கு நன்றி சந்த்ரபுர்தான் சாந்தா ஆனது

Lakshmi said...

கணேஷ் வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி

Lakshmi said...

இராஜராஜேச்வரி வருகைக்கு நன்றி

RAMVI said...

நல்ல அனுபவம் அம்மா. நன்றி பகிர்வுக்கு.

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

மாதேவி said...

சுவாரஸ்யமாக இருக்கின்றது.

என்னை ஆதரிப்பவர்கள் . .