தேவையான பொருட்கள்.
தோசை மாவு ---------------- ஒரு பாத்திரம் நிறைய.( 4 பேருக்கு)
வெங்காயம்------------------ 2 சின்னதாக கட் செய்து கொள்ளவும்.
தக்காளி --------------------- 2 சின்னதாக கட் செய்து கொள்ளவும்.
கேரட்------------------------- 2 துருவிக்கொள்ளவும்.
பச்சை மிளகா------------- 2 சின்னதாக கட் செய்து கொள்ளவும்
இஞ்சி----------------------- ஒரு சிறிய துண்டு சின்னதாக கட் செய்யவும்
கருவேப்பிலை------------- ஒரு ஆர்க்
கொத்துமல்லி------------ ஒரு கைப்பிடி
நல்லெண்ணை----------- ஒரு கிண்ணம்.
செய்முறை
கட் செய்து வைத்திருக்கும் காய்களை தோசைமாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
சின்ன கனமான இலுப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு ஸ்பூன்
எண்ணை ஊற்றி அதன்மேல் மாவை ஊற்றவும். கண் உள்ள தட்டால் மூடி 5
நிமிடங்கள்வேக விடவும். இந்த தோசை கனமாக இருக்கும். அதனால் வேக கொஞ்சம் டைம் எடுக்கும். ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மீண்டும் ஒரு
ஸ்பூன் எண்ணை ஊற்றி மொறு, மொறுப்பாக வேக விட்டு எடுக்கவும். பொடி எண்ணை, சட்னியுடன் நன்றாக இருக்கும்.காய்கள் சேர்ப்பதால் நன்கு வயிறு நிறம்பும்.
இந்த தோசை மேல் புறம் மொறு, மொறுப்பாகவும், உள்புறம் மெத்தென்றும் மிகவும் சுவையாக இருக்கும்.

Tweet | |||||
38 comments:
அருமையானதொரு சிற்றுண்டிக்கு
நன்றிகள் அம்மா..
மிக வித்தியாசமான சத்துள்ள தோசை
ரொம்ப அருமையா இருக்கு லக்ஷ்மிம்மா.. காய்கறிகளை இதுலயே சேர்த்துருக்கறதால சத்தும் கூட.
வணக்கம் லக்ஸ்மி அக்கா!
மிகவும் வித்தியாசமான தோசை போல இருக்கு! எனக்குத் தெரிந்த தோசைகள் - சாதாரண தோசை, மசாலா தோசை, முட்டைத்தோசை மட்டுமே!
இலுப்பச் சட்டி தோசை புதுஷா இருக்கு!
ஆமா அக்கா இலுப்பச் சட்டி என்றால் என்ன??
தோசை சூப்பர். உடனே சாப்பிடணும் போல ஆசை வந்துவிடட்து.
பார்த்தா நல்ல சுவையா இருக்கும் போல தெரியுது!
ம்...சத்துணவு !
அருமையா இருக்கு லஷ்மிமா! ஸ்பெஷல் ஐட்டங்களும் கொடுங்களேன்.
ஹையா பக்கா பிரமாணாள் சமையல் பதிவு போட்டு அசத்த்றேள் லக்ஷ்மிம்மா.தொடருங்க..
நல்ல பகிர்வு... வித்தியாசமானதும் கூட.... ட்ரை செய்யணும்... :)
ஆகா! வருடக்கணக்கில் தேடிக் கொண்டிருந்தேன்.. நன்றி.
லக்ஸ்மி அக்கா.... இலுப்பை மரம் தெரியும்... அதில் ஏதும் பூ எடுத்து தோசையாக்கும் என நினைத்தேன்.. ஆனா அதுக்கும் தோசைக்கும் சம்பந்தமே இல்லமல் இருக்கே....
நல்ல சத்துணவுத் தோசை.
மாமி
அப்படியே எங்க வீட்டுக்கும் பார்சல் அனுப்பிடுங்கோ
:-)
எங்க வீட்டில் தாளிப்பு கரண்டியில் இந்த மாதிரி தோசை செய்வாங்கம்மா! சூப்பரா இருக்கு தோசை! :P
ஓகே ஓ கே...செய்து பார்த்திடுவோமில்ல...:)
இலுப்பச் சட்டி தோசை காய்கள் எதுவும் போடாமலேயே செய்து சாப்பிடலாம். சூப்பரா இருக்கும். ஓரமெல்லாம் முறுமுறுனு நடுவில் மெத்தென்று!! அதுக்குன்னே தனிச் சட்டி வைச்சிருக்கேன். :))))
மகேந்திரன்வருகைக்கு நன்றி.
அவர்கள் உண்மைகள் வருகைக்கு நன்றி
சாந்தி நன்றி
மணி இலுப்ப சட்டினா கடாய் அதாவது வாணலின்னு சொல்வாங்க கீழ அதிராவோட கேள்வியபாருங்க..
கோபால் சார் நன்றி
ஹேமா நன்றி
அஸ்மா என்ன ஸ்பெஷல் ஐட்டம் வேனும்னு சொல்லுங்க. கொடுத்திட்டாபோச்சு. நன்றி
சாதிகா நீங்களும் எங்க பிராமணாள் சமையல் ப்த்திலாம் தெரிஞ்சுக்கலாமில்லியா அதான் அதுவே கொடுக்கரேன். நன்றி
வெங்கட் வருகைக்கு நன்றி
அப்பாதுரை சார் வருகைக்கு நன்றி
அதீஸ் ஜோக்கெல்லாம் அடிக்கிரீங்க. மணி போலவே உங்களுக்கு, இலுப்ப சட்டின்னா என்னான்னு தெரியலியா?
ஆஹா ஆமி ஏது இந்தபக்கம்லாம் கூட வரே?வா வா அடிக்கடிவா. உன் பதிவெல்லாம் என் டேஷ்பொர்ட்ல வரவே மாட்டேங்குதே ஏன்?
மஹி வருகைக்கு நன்றி
சிட்டுக்குருவி உடனே செய்து பாருங்க.
ஆமா கீதா அம்மா பாட்டில்லாம் காய்கள் எதுவும் போடாம தான் செய்வாங்க. இந்தக்காலக்குழந்தைகளை திருப்தி படுத்த இப்படி ஏதானும் பண்ணி பேரையும் இண்டியன் பிஸ்ஸான்னு சொல்லி கொடுக்க வேண்டி இருக்கே.
எங்கும் வித்தியாசம் எதிலும் வித்தியாசம்...காய்கறினாலே பயந்து ஓடும் இன்றைய குழந்தைகளுக்கு இதுபோன்று வித்தியாசமா காய்கறிய வைச்சே ஏதாவது செஞ்சா சாபிடுவான்களோ என்னமோ!!!!...நல்ல சமையல் குறிப்பு......
புதிய வரவுகள்:
பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
திருவாளப்புதூர் முஸ்லீம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சுவையான தோசை.
மிகவும் வித்தியாசமான தோசை பகிர்வுக்குப் பாராட்டுக்கள் அம்மா
இதுக்காகத் தனிச்சட்டி இருக்கா என்ன? தேடிப் பாக்கணும்.
மறக்கறதுக்கு முன்னாலே.. போன ஞாயிற்றுக்கிழமை செய்து பார்த்தேன். நல்லாவே இருந்தது இந்டியன் பிட்சா :)
ரெசிபிக்கு ரொம்ப நன்றி.
அப்பாதுரை சார் இரும்பு சட்டியில் பொரியல், இதுபோல தோசை வகைகள் என்று செய்தால் உடம்பில் இரும்பு சத்து சேரும்னு சொல்வாங்க. இப்பதான் எல்லாருமே நான் ஸ்டிக் சட்டிதானே யூஸ்பண்ணுராங்க.
அப்பாதுரை, மொட்டைச் சட்டியா இருந்தால் இன்னும் டேஸ்ட் ஜாஸ்தியாகுமாக்கும். :))))
எங்க வீட்டிலே கல்யாணச் சீரோட எல்லாருக்கும் இந்தச் சட்டி ஒண்ணு கொடுத்துடுவாங்க. என்னோட சட்டியைப் படம் பிடிச்சுப் போடறேன். தோசை வார்க்கிற அன்னிக்குத் தான். :)))))
Post a Comment