Pages

Friday, August 17, 2012

பூரண் போளி

தேவையான பொருட்கள்
 கடலைப்பருப்பு-----------    200 கிராம்
 வெல்லம்------------------ 200 கிராம்
 கோதுமை மாவு--------    2 கப்
 நெய்----------------------- ஒரு கிண்ணம்.
 ஏலப்பொடி-------------- அரை ஸ்பூன்
                                   
 செய் முறை
கடலைப்பருப்பை நன்கு கழுவி தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் 4, 5 விசில் வரும் அளவுக்கு வேக விடவும். ஆவி அடங்கி ஆறியதும்
 குக்கரைதிறந்து  வெந்த பருப்பிலுள்ள தண்ணிரை வடிகட்டியில் வடி கட்டவும்
வடிகட்டிய பருப்பு ஜலத்தை ரசமோ, குழம்போ கொதிக்கும் போது சேர்க்கலாம்.
வெந்த பருப்புடன் வெல்லம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்
                                                   
 அரைத்தவிழுதை பெரிய கடாயில் போட்டு கை விடாமல் கிளறவும். அரைத்த கலவை சிறிது  நீர்க்க  லூசாக இருக்கும். கடாயில் போட்டு கிளறும் போது
                                   
நன்கு கெட்டி ஆகி விடும்.  ஏலப்பொடி சேர்க்கவும்.நன்கு உருட்டும் பததிற்கு
                                     
வந்ததும் இறக்கி ஆறியதும் சிறு ,சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
                             
கோதுமை மாவில் தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசைந்து கொள்ளவும்.முதலில் சிறிய சப்பாதியாக இட்டு நடுவில் ஒரு பூரண
                                               
உருண்டையை வைத்து மூடி மெதுவாக வட்டமாக இடவும். அழுத்தம் கொடுக்காமல் இடவும். தோசைக்கல்லில்  போட்டு இரு புறமும் நெய் விட்டு நன்கு சிவந்து வெந்ததும் எடுக்கவும்
                                                     
 சிலர் கோதுமை மாவுக்கு பதில் மைதாமாவு சேர்த்து கைகளால் வாழை இலையில் வைத்து தட்டி பண்ணுவார்கள். மைதாவில் பண்ணும் போளி சூடாக சாப்பிட் மட்டுமே நன்றாக இருக்கும் ஆறிப்போனா ரப்பர் போல இழுக்கும். கோதுமை மாவில் இடுகிற போளி 2,3 நாட்கள் ஆனாலும் மெத்தென்று ஸாஃப்டாகவே இருக்கும்.
                       
                                 

29 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி அம்மா... படங்களுடன் குறிப்புகள் அருமை... (TM 1)

ஆமினா said...

வாவ்வ்வ்வ்வ்...

எக்க ச்சக்க டிப்ஸ் கிடைச்சுருக்கு!

மாமி தேங்காய் துருவல் சேர்க்கதேவையில்லையா?

கோதுமைமாவில் செய்து பார்க்கிறேன்

Unknown said...

நல்ல குறிப்பு கோதுமைமாவில் போளி செய்ததில்லை அடுத்த முறை செய்துவிடுகிறேன்.நன்றி அம்மா.

கோமதி அரசு said...

சிலர் கோதுமை மாவுக்கு பதில் மைதாமாவு சேர்த்து கைகளால் வாழை இலையில் வைத்து தட்டி பண்ணுவார்கள். மைதாவில் பண்ணும் போளி சூடாக சாப்பிட் மட்டுமே நன்றாக இருக்கும் ஆறிப்போனா ரப்பர் போல இழுக்கும். கோதுமை மாவில் இடுகிற போளி 2,3 நாட்கள் ஆனாலும் மெத்தென்று ஸாஃப்டாகவே இருக்கும்.//
நல்ல குறிப்பு கொடுத்தீர்கள்.
மைதாவைவிட கோதுமை உடலுக்கும் நல்லது அக்கா.

கடலை பருப்பு வேகவைத்த நீரை வீணாக்காமல் குழம்பு அல்லது ரசத்திற்கு சேர்த்துக் கொள்ளல்லாம் என்றவுடன் என் அம்மா நினைப்பு வந்து விட்டது. இப்படித்தான் எதையும் வீணக்கமாட்டார்கள்.
நன்றி அக்கா.

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ.. ஜூப்பர் போளி. எங்கூட்ல ரங்க்ஸின் பிறந்த நாள் மெனுவில் தவறாமல் இது இடம் பெறும்.

ராமலக்ஷ்மி said...

கோதுமையில் செய்ததில்லை. மைதாவை உடல் நலனுக்குக் கேடு. இந்தக் குறிப்பு அருமை. நன்றி.

ஸாதிகா said...

போளின்னா எனக்கு மிகவும் இஷ்டம்.சூடான போளியில் உருக்கின பசும் நெய்யையை ஒருதுளி விட்டு சாப்பிட்டால்...

நிரஞ்சனா said...

ஏன் படங்களை படுக்கை வசத்துல வெச்சுட்டீங்க? போளிக்கான செய்முறைக் குறிப்பு உடனே ட்ரை பண்ணத் தூண்டுது. பண்ணிப் பாத்துடறேன்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

அழகான குறிப்பு லக்ஸ்மி அக்கா..

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் முதல் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமி தேங்கா சேர்த்தா இன்னும் நல்ல சுவையுடந்தான் இருக்கும். இடும்போது மிடில் மிடில்ல தடுக்கும்(இது சரியான வார்த்தைதானா?) போளி கிழிஞ்சு கிழிஞ்சு போகும்.எனக்கு இப்படித்தான் சொல்ல வருது ஆமி. அட்ஜஸ்ட் செய்து புரிஞ்சுக்கோ. தேங்கா சேர்க்காமலே கூட இதுவும் நல்லா டேஸ்டா இருக்கும். இப்ப தான் எல்லாரும் கொலஸ்ட்ரால் பத்திலாம் யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்களே இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

இந்திரா சந்தானம் கோதுமை மாவில் நல்லாவே இருக்கும் செய்து பாருங்க. நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு நாங்கல்லாம் ஓல்ட் ஜெனரேஷன் இல்லியா ஒரு பொருளையும் வீணடிக்க மாட்டோம் அதான். வருகைக்கு நன்றி. உண்மைதான் மைதாவை விட கோதுமை உடம்புக்கும் நல்லது.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி அப்படியா? போளி பிடிக்காதவங்களும் உண்டோ?

குறையொன்றுமில்லை. said...

ஆமா ராமலஷ்மி கோதுமைதான் நல்லது செய்துபாருங்க. நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமாஸாதிகா நெய்யுடன் தொட்டு சாப்பிட சூப்பர் சுவையா இருக்கும்.

குறையொன்றுமில்லை. said...

நிரஞ்சனா நான் ஸேவ் பண்ணி வச்சிருக்கும் போட்டோவில் சரியாதான் இருக்கு .ப்ளாக்ல அப்லோட் பண்ணும்போது இப்படி ஆகுது. எப்படி சரி செய்யனும் தெரியல்லியே. உனக்கு தெரிஞ்சா சொல்லித்தரியா?

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்றி

Anonymous said...

படிக்கும் போதே... படங்களை பார்க்கும் போதே... நாக்கில் எச்சில் ஊறுது...

குறையொன்றுமில்லை. said...

தமிழ் திரட்டி வருகைக்கு நன்றி

அன்பு உள்ளம் said...

வணக்கம் அம்மா இனிய நல் வேளையில் வந்து உள்ளேன்!...
உங்கள் ஆசீர்வாதம் என்றும் இந்த அன்பு உள்ளத்திற்கும் அவசியம் .
எனக்கே எனக்கா இந்த ஸ்வீட் எல்லாம் ???...........இதை என் தளத்தில்
வந்து கொடுங்கள் அன்போடு நல் ஆசியோடும் .

ஸ்ரீராம். said...

நாங்களும் பெரும்பாலும் மைதா மாவில்தான் செய்வது! எப்போதாவதுதான் கோதுமை மாவு!

குறையொன்றுமில்லை. said...

அன்பு உள்ளம் என் ஆசிகள் உனக்கு எப்பவும் உண்டு. உனக்கே உனக்குத்தான் இந்தஸ்வீட். உந்தளத்திற்கு வரேன் இதோ

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அன்பு உள்ளம் உன் தளம் ஓபன் ஆகவே மாட்டெங்குதே? எப்படி வருவது?

மாதேவி said...

கோதுமை மாவில் போளி சுவையாக இருக்கின்றது.

Unknown said...

கோதுமை மாவில் போளி சுவையாக இருந்தது. குறிப்புக்கு மிகவும் நன்றி அம்மா.

குறையொன்றுமில்லை. said...

இந்திரா போளி பண்ணி பாத்திங்களா நன்ரி

Geetha Sambasivam said...

மைதாவில் பண்ணும் போளி சூடாக சாப்பிட் மட்டுமே நன்றாக இருக்கும் ஆறிப்போனா ரப்பர் போல இழுக்கும். //

ஒரு வாரம் ஆனாலும் சாப்பிடச் சுவையாம மெத்தென இருக்கும். நான் காரன்டி. :)))))

கோதுமை மாவு சேர்த்துச் செய்யும் போளிக்குத் தேங்காய், சர்க்கரை மட்டுமே சேர்ப்பது எங்க வீட்டு வழக்கம். பூரண போளி எனில் கடலைப்பருப்பு, தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து மைதா மாவில் தான், கையால் தட்டித் தான். ஆனாலும் ஒரு வாரம் வரையும் இருக்கும். :))))))) வீணாகாது. சாஃப்ட்னஸுக்கு முழு காரன்டி கொடுக்கிறேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .