Google+ Followers

Pages

Tuesday, December 25, 2012

சிங்கப்பூர் 10

அந்த சனிக்கிழமை மகனின் பர்த் டே இருந்தது. ராஜலஷ்மி அம்மா
வீட்லேந்து எல்லாரையும்  லஞ்சுக்கு கூட்டிண்டு வெளில போனோம்.
 அன்னலஷ்மின்னு ஒரு இடம்.லிட்டில் இண்டியா, சைனாடவுன் எல்லாம்
 தண்டி க்ளர்க்கீன்னு ஒரு அமைதியான சூழ் நிலை உள்ள இடத்தில் இருந்தது.
அதை ஹோட்டல்னு சொல்லமுடியாது. ரெஸ்டாரெண்டுன்னு வேணா
சொல்லலாம். வெளிப்புற சூழலே மன்சுக்கு ரொம்ப ரம்யமாக இருந்தது.
                     
மெலிதாக பூந்தூறலாக மழைவேறு பன்னீர்தெளித்ததுபோல வரவேற்றது.
வெளிப்புற கதவில் அழகான வேலைப்பாடுகள்.உள்ளே நுழைந்ததும் இனிமை
யான வயலின் இசை காதுக்கு விருந்தாக இருந்தது. பெரிய ஹால் சுமாராக
                     
 50, 60 டேபிள். சேர்கள் போட்டிருந்தது. நிறையா பேரு உக்காந்து சாப்பிட்டுக்
 கொண்டிருந்தார்கள். ஒரு புறம் சின்ன ஸ்டவ்வின் மேல் சூடு சூடாக சாப்பாடு
இருந்தது. யாருக்கு என்ன வேனுமோ எடுத்துக்கலாம் நோ லிமிடேஷன்.சுத்த
மான சுகாதாரமான முறையில் எல்லாமே ரெடியாக இருந்தது.
                       
 ஸெல்ஃப் ஸர்வீஸ் எல்லாரும் ப்ளேட், கிண்ணம், ஸ்பூன் எடுத்துண்டு யாருக்கு என்ன வேனுமோ எடுத்துண்டு டேபிளில் வந்து உக்காந்தோம்
 புடவைகட்டிண்டு பாந்தமாக சில பெண்மணிகள் ஒவ்வொரு டேபிளாக
 வந்து நல்லா சாப்பிடுங்க. சங்கோசப்படாதீங்க. வயிறு ஃபுல்லா சாப்பிடுங்க
 சாப்பாட்டுக்கு பிறகு குடிக்க என்ன வேனும்? லஸ்ஸி, கரைத்தமோர், லெமன்
ஜூஸ் எல்லாம் இருக்கு என்ன வேனும் சொல்லுங்க என்று பார்த்து பார்த்து
 உபசரிதது மனதுக்கு நிறைவாக இருந்தது.அன்று சனிக்கிழமையாக இருந்ததால் ஸ்பெஷலாக எள்ளு சாதமும் பண்ணி இருந்தாங்க. பாலக் புலாவ்
சாம்பார், ரசம், ரெண்டு பொரியல், ரெண்டு கூட்டு, சப்பாத்தி, ராய்த்தா பாதாம்
கேக் என்று அமர்க்களமான விருந்து சாப்பாடுதான். சுவையும் ரொம்பவே
 நன்றாக இருந்ததுகூடவே வடாம் வத்தல் வகைகள். பேசிக்கொண்டே ரசித்து
ருசித்து சாப்பிட்டோம். லஸ்ஸி கரைத்தமோர் கொண்டு தந்தா. ரொம்ப டேஸ்டா இருந்தது.
                                         
ராஜலஷ்மி அம்மாவின் மருமகள் அங்கே வீணை கத்துக்கராங்க. அவங்ககிட்ட இந்த அமைப்பை பற்றி கேட்டேன். அவங்க நேரே உள்ளயே
கூட்டிட்டு போனாங்க.உள்ள போனதுமே பிரமிப்பாக இருந்தது. அந்த அமைப்பை பற்றி சொன்னாங்க.இங்க சாப்பாட்டுக்கு காசே வாங்கறதில்லே
அவங்களாக இஷ்டப்பட்டா உண்டியலில் அவங்களால இயன்ற காசு போடலாம் அதுவும் கட்டாயமில்லே. அந்தப்பணமும் ஒரு ட்ரஸ்ட்டுக்கு சேவை செய்யதான் போயிச்சேருது. இங்க வேலை செய்கிரவர்களும் காசு
   வாங்காம சேவை மனப்பான்மையில் வாலண்டியரக வந்துதான் வேலை
 செய்யுராங்க.அன்னதானம் தினசரி சேவை. அது தவிர கலைச்சேவைகள்
பரதம் பாட்டு, இன்ஸ்ட்ருமெண்ட் பயிற்சி எல்லாம் ஆர்வமுள்ளவங்களுக்கு
கத்து கொடுக்கராங்க.அதுக்கு மட்டும் கொஞ்சம் பணம் வாங்குராங்க. இது
போல அன்னலஷ்மி க்ரூப் உலகின் பல இடங்கலளில் செயல்பட்டு வருவதாக
 சொன்னாங்க. அது பத்தி இன்னமும் நிறையா சொன்னாங்க. மிகவும் நல்ல
விஷயமாக இருந்தது.

46 comments:

Mahi said...

We have this Annalakshmi restaurant near our house in CBE Lakshmi-ma!

Nice post!

பழனி.கந்தசாமி said...

எங்க ஊர்லதான் (கோயமுத்தூர்) அவங்க மிஷன் தலைமை அமைப்பு இருக்கிறது. சிவாஞ்சலி என்று பெயர்.

இராஜராஜேஸ்வரி said...

சிங்கப்பூரில் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் அம்மா .

இனிய் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

இளமதி said...

பிரம்மிப்பா இருக்கு அம்மா..:)

இவ்வளவும் செய்கிறாங்க பில்லு பணம் வசூல்ன்னு எதுவுமில்லாம.. அருமை...
இப்படியும் இருக்கிரதினால்தானோ என்னவொ உலகம் இன்னும் நம்மளையும் தாங்கிக்கிது...:)

அழகான படங்களுடன் வழமைபோல அருமையான தொடர்...

எல்லாருக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் அம்மா!

முடிந்தால் என் ப்ளாக்கிற்கும் வந்து பாருங்கோ..உங்க ஆசியை விரும்பி வேண்டுகிறேன்....
http://ilayanila16.blogspot.de/

மிக்க நன்றி அம்மா!

சேக்கனா M. நிஜாம் said...

வழக்கம் போல் பதிவு அருமை !

சேவை நிறுவனத்தைப் பற்றிய குறிப்புகள் அருமை

தொடர வாழ்த்துகள்...

desiyam Divyamohan said...

மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

மனோ சாமிநாதன் said...

தொடர்ந்து சிங்கப்பூர் பதிவு சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது!
சென்னையில் இந்த 'அன்னலக்ஷ்மி' உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டிருக்கிறேன் 7 வருட்த்திற்கு முன்னால். அப்போது ஒரு சாப்பாடு 165 ரூ ஆனது!

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

பழனி கந்தசாமி சார் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி அடுத்த பதிவுல அது பத்தி சொல்லி இருக்கேன்

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்ரிம்மா

Lakshmi said...

இளமதி நன்ரிம்மா உன்பக்கமும் வந்தாச்சு

Lakshmi said...

சேக்கனா எம். நிஜாம் வருகைக்கு நன்ரிங்க

Lakshmi said...

திவ்யா வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

மனோ மேடம் சென்னைல பணம் வாங்குராங்களா சாப்பாட்டுக்கு?. ஆனா இங்க வாங்கலியே

Avargal Unmaigal said...

அன்னலஷ்மி அமெரிக்காவில் ஒப்பன் பண்ணினாங்கன்னா ஒரே மாதத்தில் இழுத்து மூடிவிடுவாங்க

துளசி கோபால் said...

சென்னை அன்னலக்ஷ்மிக்கு ஒருமுறை நம்ம நாச்சியார் வல்லியம்மா கூட்டிக்கிட்டு போனாங்க.

நல்ல உபசரிப்பு. அதனால் காஸ்ட்லியாகவும் இருந்துச்சு. பில்லை வல்லி கொடுத்த்தால் நான் எவ்ளோன்னு கவனிக்கலை:-)

புலவர் சா இராமாநுசம் said...

சிங்கையில் இப்படி ஒரு உணவு விடுதியா நான் மூன்றுமுறை சென்றேன் தெரியாதே! பதிவு அருமை!

ஸாதிகா said...

இங்க சாப்பாட்டுக்கு காசே வாங்கறதில்லே
அவங்களாக இஷ்டப்பட்டா உண்டியலில் அவங்களால இயன்ற காசு போடலாம் அதுவும் கட்டாயமில்லே. அந்தப்பணமும் ஒரு ட்ரஸ்ட்டுக்கு சேவை செய்யதான் போயிச்சேருது. இங்க வேலை செய்கிரவர்களும் காசு
வாங்காம சேவை மனப்பான்மையில் வாலண்டியரக வந்துதான் வேலை
செய்யுராங்க.//

ரொம்ப ஆச்சரியமாக உள்ளது லக்ஷ்மிம்மா.இங்கே சென்னையில் ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்காக ஒரு ஹோட்டலில் சாப்பாடு ஃபிரீயாக கொடுப்பார்கள்.

Advocate P.R.Jayarajan said...

//பாலக் புலாவ் சாம்பார், ரசம், ரெண்டு பொரியல், ரெண்டு கூட்டு, சப்பாத்தி, ராய்த்தா பாதாம் கேக் என்று அமர்க்களமான விருந்து சாப்பாடுதான். சுவையும் ரொம்பவே நன்றாக இருந்தது//

இருக்காதா பின்னே..?

Lakshmi said...

அவர்கள் உண்மைகள், அது என்னமோ உண்மைதான்

Lakshmi said...

துளசி கோபால் சிங்கப்பூரில் ஃப்ரீயாதானே போடுராங்க.

Lakshmi said...

துளசி கோபால் ஆனா நாம ஒரு கல்யாணத்துக்கு போனா கூட மொய் எழுதாம வரமாட்டோமே அதனால நம்மால இயன்ற பணத்தை உண்டியலில் போட்டுட்டுதான் வந்தோம்

Lakshmi said...

புலவர் ரமானுசம் ஐயா இன்னொரு முறை சிங்கை சென்றால் பார்த்துட்டு வாங்க.

Lakshmi said...

ஸாதிகா ஆமாம்மா எப்படி டெய்லி ஃப்ரியா சாப்பாடு போடமுடியுதோ. நாம மனது பிரியப்பட்டு என்ன கொடுத்தாலும் ஓக்கேதான். ஆனா நாம எங்கயுமே கைவீசிண்டு போகமாட்டோமே. நம்மல முடிந்த அளவு பணம் உண்டியலில் போட்டுட்டுதான் வந்தோம்.

Lakshmi said...

அட்வகேட் ஜெய ராமன் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க நன்றி

Advocate P.R.Jayarajan said...

Please visit ...

http://sattaparvai.blogspot.in/2012/12/blog-post_26.html

panasai said...

அன்னலஷ்மியில் பில் கொடுப்பதில்லை என்றாலும், உண்டவர்கள் பணம் கொடுக்காமல் வருவதில்லை. (நான் போகும் போதெல்லாம் 10S$ கொடுத்து விடுவேன்). அருமையான பதிவு.

panasai said...

அன்னலஷ்மியில் பில் கொடுப்பதில்லை என்றாலும், சாப்பிட்டவர்கள் பணம் கொடுக்கத் தவறுவதில்லை. (நான் போகும் போதெல்லாம் 10 சிங்கப்பூர் டாலர் கொடுத்திருக்கிறேன்). நீங்கள் சொன்னது போல கனிவான சேவை.

துளசி கோபால் said...

உண்மைதான் . அவுங்க பணம் கொடுன்னு கண்டிப்பாக் கேட்காததாலேயே நாம் கொஞ்சம் கூடுதல் காசுதான் தருவோம். தரும காரியங்களுக்குப் போகட்டுமேன்னுதான்.

Lakshmi said...

pasanasai ஆமாங்க நாமளாக என்ன கொடுக்குரோமோ அதான் பில்

Lakshmi said...

அட்வகேட் ஜெய ராஜன் உங்க பக்கம் இதோ வரேங்க,

Lakshmi said...

ஆமாங்க துளசி கோபால் அதேதான்.

Advocate P.R.Jayarajan said...

உங்கள் வருகைக்கு நன்றி
லக்ஷ்மியம்மா....

Lakshmi said...

அட்வகேட் நீங்களும் அடிக்கடி வாங்க.

Asiya Omar said...

வழக்கம் போல் நல்ல பகிர்வு.அன்னலஷ்மி பற்றி இப்ப தான் கேள்விப்படுகிறேன்..

Lakshmi said...

வாங்க ஆஸியா வருகைக்கு நன்றி. சிங்கப்பூர் பத்தி யாரும் இதுவரை சொல்லாத புது விஷயமா சொல்லனும்னு நினச்சேன். அதான்.

ராமலக்ஷ்மி said...

பகிர்வு அருமை.

athira said...

ஆஹா சூப்பர்.. அந்த அன்ன லக்ஸ்மி கதவு.. எங்கட ஊர் வீட்டிலிருக்கும் கதவுகள்போல இருக்கே...

வல்லிசிம்ஹன் said...

லக்ஷ்மி , சென்னை அன்னலக்ஷ்மி ஒரு மீல் என்று பர்த்தால் இருவருக்கே ஆயிரக்கணக்கில் ஆகும் .
நாங்களும் அங்கே போவது சிவானந்தா ஆஸ்ரமதுக்குப் பணம் போகிறது என்கிற ஒரே காரணத்துக்காகத் தான்.
சிங்கப்பூர் விஷயம் அதிசயமாக இருக்கிறது.

இருந்தாலும் தாங்களாகவே உண்டியலில் பணம் போடுவதால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமா அதிரா கதவு போலவே உள் அலங்கரங்களும் ரொம்ப நல்லா இருந்தது.

Lakshmi said...

ஆமா வல்லிம்மா நல்ல விஷயத்துக்கு நாம எவ்வளவு கொடுத்தாலும் நல்லதுதானே?

அமைதிச்சாரல் said...

பகிர்விற்கு நன்றி லக்ஷ்மிம்மா..

Lakshmi said...

வருகைக்கு நன்றி சாந்தி

கோமதி அரசு said...

அன்னலஷ்மி க்ரூப் பற்றிய செய்திகள் புது செய்தி. பகிர்வு அருமை.

Lakshmi said...

கோமதி அரசு தொடர் வருகைக்கு நன்றிம்மா.

என்னை ஆதரிப்பவர்கள் . .