Google+ Followers

Pages

Thursday, December 27, 2012

சிங்கப்பூர் 11

இங்க அன்னலக்‌ஷ்மி ட்ரஸ்ட் பத்தி கொஞ்சம் சொல்லலாம்னு  நினைக்கிரேன். ரிஷிகேசத்திலிருந்து வந்த ஸ்வாமி சிவானந்தா
என்பவர்தான் இந்த அமைப்பை ஆரம்பித்து வைத்தவர். இவருக்கு
உறுதுணையாக இருந்தவர் டாக்டர் குப்புஸ்வாமி என்பவர். இந்த
அமைப்புக்கு டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்னு பெயர். இன்றுவரை
                                     
 சிற்ப்பாக செயல் படுத்தி வருகிரார்கள்.அன்னதானத்திற்கு மிகவும்
முக்கியத்துவம் கொடுத்து வருகிரார்கள். ஏன் தெரியுமா? அதிதி தேவோபவ என்பதற்கு விருந்தாளிகள் நமக்கு கடவுள் போல என்று அர்த்தம்  தானத்தில்
 சிறந்தது அன்ன தானம்னு சொல்வாங்க இல்லியா? வாழ்க்கையில்
யாருக்கு எவ்வளவு பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்தாலும்
 இன்னும் இன்னும்னு மனசு எதிர்பார்க்கும். அதுதான் மனுஷா சுபாவம்.
ஆனா சாப்பாடு விஷயத்தில் வயிறு நிறம்பிவிட்டால் அதற்கு மேல ஒரு
 வாய் சாதம் கூட சாப்பிட முடியாது. வயிறு நிறைந்து, மனசு நிறைந்து
சந்தோஷமா திருப்தியா போதும், போதும்னுசொல்லுவாங்க உண்டா
 இல்லியா. அவங்க திருப்தியா சாப்பிட்டு பொதும்னு சந்தோஷமா சொல்லுரதை பார்த்து அன்னம் அளிப்பவர்களுக்கும் சந்தோஷமாகவும்
திருப்தியாகவும் இருக்கும். தானம் அளிப்பவர் , பெறுபவர் இருவருக்குமே
 திருப்தி சந்தோஷம் தருவது அன்னதானத்தில் மட்டும் தான். அதனாலதான்
 இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிரார்கள்.
                             
ஃப்ரீயாதானே சாப்படு போடுரோம்னு அலட்சியம் காட்டாம , மிகுந்த பரிவுடன் ஒவ்வொருவரையும் கவனித்து உபசரிக்கும் பாங்கும் நல்லா கடைப்பிடிக்கராங்க.ருசியும் ரொம்ப நல்லாவே இருக்கு. ஆரோக்கியமா சுத்தமாகவும் இருக்கு. மெனு கார்டோ விலைப்பட்டியல் என்ற பேச்சுக்கே இடம்இல்லே.இதோடமட்டுமில்லாம, கலைகளில் ஆர்வம் உள்ளவங்களுக்கு
சிறப்பான பயிற்சியும் அளிக்கிராங்க. வாய்ப்பாட்டு நாட்டியம், நாடகம் வாத்தி
யங்களில் பயிற்சி என்று அளித்து வருகிரார்கள். என்னை எல்லா இடங்களும்
கூட்டிண்டு போயி சுத்தி காட்டினார்கள். ஆதரவில்லாத பெண்களுக்கு ஏதானும் கை வேலைகளில் பயிற்சி அளித்து வேலைக்கும் ஏற்பாடு செய்து
அவர்களின் வருமானத்திற்கும் வழி வகை செய்து வருகிரார்கள்.மெடிகல் அட்வைஸ், வசதி இல்லாதவங்களுக்கு இலவசமருத்துவ வசதி செய்து
கொடுக்கிரார்கள்.வாலண்டியராக அங்கு வந்து வேலை செய்பவர்களும்
டாக்டர், ப்ரொபசர், மைக்ரோஸாஃப்ட் ஆபீசர்னு பெரிய பெரிய ஆட்கள்தான்
 எந்தவித ஈகோவும் பார்க்காமல் சேவை மனப்பான்மை ஒன்றையே எண்ணி
செயல் பட்டு வருகிரார்கள்.

கலைக்கூடம் மிகப்பெரியதாக இருக்கு. ஒரு புறம் ஸ்வாமிசிவானந்தாவின்
உருவச்சிலைக்கு மாலை போட்டு நடுவில் வைத்திருக்கிரார்கள். பக்கத்தில்
                         
தினசரி கொலு போல படிக்கட்டுகளில் எல்லா கடவுள்களின் விக்ரகங்களும்
                           
                         
வச்சிருக்காங்க.னடராஜர் சிலையும் ஒரு புறம் இருக்கு. பார்த்து பார்த்து
    எல்லாம் சிறப்பாக செய்து வருகிரார்கள்.பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு.  இந்த அமைப்பின் கிளைகள் உலகில் பல இடங்களிலும் செயல் பட்டு வருகிரது.தமிழ் நாட்டில் சென்னை
கோவையிலும்,மலேஷியா,சிங்கபூர்,ஆஸ்ட்ரேலியா,இன்னும் பல இடங்களிலும் சிறப்பக செயல் பட்டு வருகிரது.கோவையில் சிவாஞ்சலி என்னும் அமைப்பில் செயல் பட்டு வருகிரார்கள். இவர்களை எவ்வளவு
 பாராட்டினாலும் தகும். 

24 comments:

துளசி கோபால் said...

தகவல் பகிர்வு அருமை!

இராஜராஜேஸ்வரி said...

எந்தவித ஈகோவும் பார்க்காமல் சேவை மனப்பான்மை ஒன்றையே எண்ணி
செயல் பட்டு வருகிரார்கள்.

கோவை சிவாஞ்சலி நிறைய முறை சென்று வியந்திருக்கிறோம் ...

இராஜராஜேஸ்வரி said...

நாம் சாப்பிட்டபிறகு நம்க்கு விருப்பமான தொகையை ஒரு அட்டிக்குள் வைத்து தரலாம் ...

அந்தப்பணம் தர்ம காரியங்களுக்குச் செல்வதால் மனம் உவந்து அதிகமாக நன்கொடையாக அளித்து வருவோம் ...

பிறந்த நாள் , திருமணம் , சிறிய விஷேசங்கள் போன்றவற்றிற்கும் முன் கூட்டியே ஆட்களின் எண்ணிக்கையை சொல்லி விருந்து ஏற்பாடு செய்கிறார்கள்..

விருப்பமான தொகை அளிக்கலாம் ..
அதிகமான தொகை அளிப்பதே வழக்கம் ..

அமைதிச்சாரல் said...

நல்லதொரு தகவல் பகிர்விற்கு நன்றி லக்ஷ்மிம்மா.

ஊருக்கு வந்தாச்சா?

moe said...

It doesnt look like it's meant for the needy. those with money go here and eat here. instead of bill, they pay what they think is worth. its more of a honor system. where is the anna dhanam for the needy here?

ஸாதிகா said...

சாப்பாடு விஷயத்தில் வயிறு நிறம்பிவிட்டால் அதற்கு மேல ஒரு
வாய் சாதம் கூட சாப்பிட முடியாது. வயிறு நிறைந்து, மனசு நிறைந்து
சந்தோஷமா திருப்தியா போதும், போதும்னுசொல்லுவாங்க உண்டா
இல்லியா. //கண்டிப்பாக லக்‌ஷ்மிம்மா.தர்மம் என்பது செலவே இல்லை.இன்வெஸ்ட்மெண்ட்.இறைவன் தர்மம் செய்பவர்களை ஒரு போதும் ஏழையாக்க மாட்டான்.

ராமலக்ஷ்மி said...

அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

இளமதி said...

அன்னதானத்திற்கு அருமையாக விளக்கம் தந்திருக்கிறீங்கம்மா...

பெரிய பெரிய ஆபீசர்களெல்லாம் சேவை மனப்பாங்குடன் அங்கு செயல்படுவது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் அன்பை விதைத்து அன்பை வளர்த்து அன்பினை அறுவடை செய்கின்றார்கள்.
அழகாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்....

Rathnavel Natarajan said...

சிங்கப்பூர் அன்னலட்சுமி டிரஸ்ட் பற்றிய அருமையான தகவல். நன்றி.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

Lakshmi said...

துள்சி கோபால் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜராஜெஸ்வரி வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

Lakshmi said...

சாந்தி மும்பை வந்துட்டேம்மா.

Lakshmi said...

moe அவங்க யாரையும் பணம்கொடுத்துதான் ஆகனும்னு கட்டயப்படுத்துவதே இல்லியே. நமக்கு என்ன அனுபவம் கிடைக்கிரதோ அதை வைத்துதானே நாம சொல்ல முடியும்.

Lakshmi said...

ஆமா ஸாதிகா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

இளமதி நாம பாக்குர கேக்குர நல்ல விஷயங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது நல்லதுதானே இல்லியா

Lakshmi said...

ரத்னவேல் ஐயா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

பால கணேஷ் said...

அட... சிங்கப்பூர் பயணம் சென்று வந்த அனுபவங்களை தொடரா வந்துட்டு இருக்கா? கொஞ்ச நாள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டதால தெரியாமப் போய்டுச்சு. இன்றிரவு எல்லாப் பகுதியையும் படிச்சு அப்டேட் பண்ணிக்கிட்டு வந்துடுறேன்.

moe said...

Madam,

"அவங்க யாரையும் பணம்கொடுத்துதான் ஆகனும்னு கட்டயப்படுத்துவதே இல்லியே."
True.But those who are helpless or hungry with out money are normally not seen there. This is a place where rich or affluent can self satisfy by doing some manual labor. While upper, middle/lower middle class eat out and still feel that they had done some thing good. If the money paid is used for charity besides the cost of food. It's in no way helping those in dire need.

நமக்கு என்ன அனுபவம் கிடைக்கிரதோ அதை வைத்துதானே நாம சொல்ல முடியும்.
Your observation is true and it's anyway a good thing.


regards.

Lakshmi said...

moe மறுபடி வந்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க். யாருகிட்டயும் எது நல்லது இருக்கோ அதை மட்டும் பாக்கலாமே என்பது என் எண்ணம்.

Lakshmi said...

கணேஷ் வாங்க எல்லாபதிவும் மெதுவா படிச்சுட்டு வாங்க.

கோமதி அரசு said...

அருமையான தகவல்.
பகிர்வுக்கு நன்றி.

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றிம்மா.

Avargal Unmaigal said...

அம்மா தாங்கள் நலமா? நலமாக இருக்க எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் அம்மா. உங்கள் பதிவுகள் ஏதும் வெளி வருவதே இல்லையே ஏன் அம்மா?

என்னை ஆதரிப்பவர்கள் . .