Pages

Saturday, December 29, 2012

சிங்கப்பூர் 12

இந்த வாரம் சிங்கப்பூரின் பிரபல  செந்தோஸா கார்டன் பற்றி.
சிங்கப்பூர் பதிவு போட்டவங்க எல்லாருமே இதைப்பற்றி நிறைய
                           
சொல்லிட்டாங்க. நானும் திரும்ப அதையே சொல்லி போரடிக்க
 விரும்பலே. நான் சில விஷயங்கள் மட்டுமே பகிர்ந்துக்கரேன்.
                     
காலை கிளம்பி போனோம். முதலில் கேபிள் கார் பயணம் செய்து
               
       
நேரே செந்தோஸா போனோம்.ப்ரௌன் கலரில் சிங்கம் இருக்கும்
                           
 பகுதிக்கு முதலில் போனோம்.கேபிள்காரிலிருந்து கீழேபார்க்கும் போது கடலில் நின்றுகொண்டிருக்கும் கப்பல், வேகமாக சென்று கொண்டிருக்கும்
                       
               
ஃபெர்ரிபோட் எல்லாம் பார்க்க பார்க்க  சுகமான அனுபவம். லீவு நாள் ஆதலால் நிறைய சுற்றுலா பயணிகள் கூட்டம்.. எல்லார் கைகளிலும் கேமர க்ளிக்குகள் தான்நாங்களும் போட்டோல்லாம் எடுத்துண்டோம். இங்கயும் கிரிஸ்மஸ்
                       
               
அலங்காரங்கள் அமர்க்களமாக இருந்தது. அங்கேந்துபலவன் பீச் போனோம்
ரொம்ப சின்ன பீச் தான் குழ்ந்தைகள் நிறைய பேரு குளிச்சு கும்மாளமிட்டு
               
கொண்டிருந்தார்கள். கடலில் அலை கூட இல்லாமல் அமைதியாக இருந்தது
 குழந்தைகளுக்காக கரையில் சின்ன சின்ன பௌண்டன்களில் தண்ணீர்
                   
விழுந்துகொண்டே இருக்கு. அதில் வாண்டுகள் ஜாலியா
குளித்துக்கொண்டு இருந்தார்கள்.கொஞ்ச நேரம் அங்கே வேடிக்கை பார்த்தோம் சுற்றிவர   ரெஸ்டாரெண்ட் அதைச்சுற்றி விசிறி வாழை
 மரங்கள் நிறையா இருந்தது.
                             
                     
வெளியே வந்து ஓபன் பஸ்ஸில் கார்டன் பூராவும் சுத்திக்காட்டுராங்க அதில்
 போனோம். திரும்பிய இடம் எல்லாமே பெரிய , சிறிய பச்சை பசேல் மரங்கள்
அடர்ந்து பசுமையாக வளர்ந்திருந்து பெரிய தோப்புக்குள்ள சுத்துவது போலவே இருந்தது. இடை, இடையில் மழையும் சேர்ந்துண்டது. இங்க எப்ப
மழை பெய்யுனே சொல்ல முடியல்லே. எல்லாருமே கையில் குடையுடந்தான் வெளியே கிளம்புராங்க.அப்புரம் பறக்கும் ரயிலில் சுத்தினோம் அங்கே ரயில்வே ஸ்டேஷனில்  10 இறக்கைகளுடன் கூடிய ஒரு
                             

ஃபேன் சுத்திண்டு இருந்தது. ஒரு வீட்டிலும் சீலிங்க் ஃப்னே கிடையாது ஆனா இங்க இவ்வளவு பெரிய ஃபேன் இருந்தது.டூரிஸ்டுகளை எப்படில்லாம் கவர்ந்து இழுக்கலாம்னு
யோசிச்சு ,யோசிச்சு எல்லாமே சிறப்பாக வடிவமைதிருக்காங்க. ஆனாகூட
 இவ்வளவு கூட்டம் சேர்ந்தாலும் துலிகூட தூசியோ குப்பையோ இல்லாம
எல்லா இடங்களும் அவ்வளவு சுத்தமாக பராமறிக்குராங்க.அது நல்லா இருக்கு.அடிக்கடி மழை வேறு பெய்யுதா ஊரே அலம்பி விட்டதுபோல பளிச்சுனு இருக்கு. மரங்களும் தினமும் மழையில் குளிப்பதால் பசுமை
மாறாமல் கண்ணைப்பறிக்குது.

இரவு கடற்கரையில்  ஸாங்க்ஸ் ஆஃப்த ஸீன்னு ஒரு நிகழ்ச்சிக்கு போனோம்.
                     
கடற்கரை  மணலில் சுமாராக 3000 சேர்கள் போட்டிருந்தார்கள்.அத்தனை சேர்களுமே ஃபுல்லாயிட்டு. நம்ம சீட் எதுன்னு சைனீஸ்பெண்கள் வழி காட்டி
அழைத்து செல்கிரார்கள். டிக்கட் விலை எல்லாமே ஆனை விலை குதிரை
                           
விலயில் தான் இருக்கு. முதலில் 7,8 சின்ன பசங்களும் பெண்களுமாக அந்த
 நிகழ்ச்சி பற்றி சின்ன நாட்டிய நாடகம் மூலமாக விளக்குகிரார்கள். சைனீஸ்
பாட்டுக்கள் இருந்ததால எதுமே புரியல்லே. அது முடிந்ததும் லேசர் மூலமாக
கலர் கலராக உருவங்கள் வர வழைக்கிராங்க. மழை பெய்யுரமாதிரி, நெருப்பு
                               
               
எரியுரமாதிரி, வாணவேடிக்கைகள் எல்லாம் காட்டுராங்க. ரொம்ப நல்லா இருந்தது.2,3 வருஷம் முன்ன இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் காட்டுனாங்களாம். இப்ப அரைமணி நேரம்தான் காட்டுராங்க. நாட் பேட். நல்லாவே இருந்தது. 9 மணிக்கு ஷோ முடிஞ்சது.  இதற்கு இடையில் ஒரு ஃப்ரெண்ட் வீடு போனோ.ம் அவங்க பழைய சிங்கப்பூர் பகுதியில் இருந்தாங்க.
                   
நல்ல உபசரிப்பு.கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பினோம்.    மறுபடி ட்ரெயின் பயணம் வீடு போக 10 மணி ஆச்சு. எந்த நேரமானாலும் ட்ராவல்  பண்ணுவது  இங்கசுகமான அனுபவமாகவே இருக்கு. நான் பார்த்து ரசித்த காட்சிகள் எல்லாம் நீங்களும் பார்த்து ரசிக்கனும்னு ஒரு ஆர்வக்கோளாறினால் இந்த தடவை படங்கள் கொஞ்சம் அதிகப்படியா இணைச்சுட்டேன்


32 comments:

இராஜராஜேஸ்வரி said...

கண்கொள்ளாக்காட்சிகள்..
மனம் நிறைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள் அம்மா...!

துளசி கோபால் said...

அருமை!

பழைய நினைவுகளைக் கொண்டு வந்துருச்சு:-))))

Unknown said...

நான் சிங்கபூரை நேரில் ரசித்தது போன்று உள்ளது உங்களது பதிவு,தொடர வாழ்த்துக்கள் அம்மா

சேக்கனா M. நிஜாம் said...

அனுபவங்கள் அனைத்தும் வழக்கம் போல் அருமை !

தொடர வாழ்த்துகள்...

இளமதி said...

அப்பப்பா...அழகினை அள்ளிப்பருகிட ஆயிரம் கைகளும் கண்களும் வேண்டும்....

நன்றாக இருக்கிறது....
தொடருங்கள்.....

ஸாதிகா said...

லக்ஷ்மிம்மா,செந்தோஸாவுக்கு கூட்டிட்டே போய் காட்டினார்ப்பொன்ற உணர்வு.ரொம்ப நல்லா இருந்தது பகிர்வும்,படங்களும்.இப்பவும் சிங்கையில்தானா?இல்லை மும்பை திரும்பி விட்டிர்களா?

Asiya Omar said...

பகிர்வு அருமை.லஷ்மீமா நாங்கள் எல்லாம் ஒரு வாரம் தான், நீங்க ஒரு மாதம்,இன்னும் நல்ல பல விஷயங்களைப் பகிருங்க.

சாந்தி மாரியப்பன் said...

பகிர்வும் படங்களும் அருமை லக்ஷ்மிம்மா..

குறையொன்றுமில்லை. said...

ராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்ரிம்மா

குறையொன்றுமில்லை. said...

துளசி கோபால் வருகைக்கு நன்றிம்மா

குறையொன்றுமில்லை. said...

வேல் குமார் வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

சேக்கனா எம். நிஜாம். வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

இளமதி வருகைக்கு நன்ரிம்மா

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா மும்பை வந்துட்டேன்மா.

குறையொன்றுமில்லை. said...

ஆசியா வருகைக்கு நன்ரிம்மா

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்ரிம்மா

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்ந்த விதமும் அருமை.

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

கே. பி. ஜனா... said...

படங்கள் அழகு!

கோமதி அரசு said...

நான் பார்த்து ரசித்த காட்சிகள் எல்லாம் நீங்களும் பார்த்து ரசிக்கனும்னு ஒரு ஆர்வக்கோளாறினால் இந்த தடவை படங்கள் கொஞ்சம் அதிகப்படியா இணைச்சுட்டேன்//


படங்கள் எல்லாம் இணைத்து சிங்கப்பூர் அனுபவங்களை மிக அருமையாக சொல்லி நாங்களும் உங்கள் கூட வந்த அனுபவத்தை தந்தீர்கள்.

Jaleela Kamal said...

மிக அருமையாக எழுதி இருக்கீங்க லஷ்மி அக்கா.
பேச்சுலர் ஈவண்டுக்கு அனுப்பிய குறிப்புகளை ஒரு பதிவா போட்டு என் லின்க் கொடுத்துடுங்க.

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2012/12/blog-post_30.html

Jaleela Kamal said...

நாங்களும் 14 வருடம் முன் போயிருக்கோம்,. கேபிள் காரில் போனது ரொம்ப பிடிச்சி இருந்தது.
நீங்க போட்டுள்ள படங்கள் பார்கக் பார்க்க மறுபடி போகனும் போல் இருக்கு

Jaleela Kamal said...

நாங்களும் 14 வருடம் முன் போயிருக்கோம்,. கேபிள் காரில் போனது ரொம்ப பிடிச்சி இருந்தது.
நீங்க போட்டுள்ள படங்கள் பார்கக் பார்க்க மறுபடி போகனும் போல் இருக்கு

Jaleela Kamal said...

நாங்களும் 14 வருடம் முன் போயிருக்கோம்,. கேபிள் காரில் போனது ரொம்ப பிடிச்சி இருந்தது.
நீங்க போட்டுள்ள படங்கள் பார்கக் பார்க்க மறுபடி போகனும் போல் இருக்கு

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிம்மா.

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

இப்னு அப்துல் ரஜாக் said...

நான் சிங்கபூரை நேரில் ரசித்தது போன்று உள்ளது உங்களது பதிவு,தொடர வாழ்த்துக்கள் அம்மா

மாதேவி said...

இனிய பயணத் தொடர்.

தொடர முடியாமல் விட்டதை படிக்கின்றேன்.

RAMA RAVI (RAMVI) said...

அம்மா, உங்களை ரொம்ப நாட்களாக பதிவுலகம் பக்கம் பார்க்க முடியவில்லையே. நலமாக இருக்கீங்களா?

அமுதா கிருஷ்ணா said...

அம்மா..கிட்டதட்ட 9 மாதங்களாக பதிவுலகம் பக்கம் உங்களை காண முடியவில்லை.என்னாச்சு??

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

தாங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியபோது, என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தினைப்பற்றியும் பாராட்டி சிறப்பித்து அறிமுகம் செய்து எழுதியிருந்தீர்கள்.

என்னைப்பற்றிய இவ்வாறான வலைச்சர அறிமுகங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டதனால், இப்போது என் வலைத்தளத்தினில் அவற்றைபற்றிக் குறிப்பிட்டும், என்னை அறிமுகம் செய்துள்ள வலைச்சர ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறியும் ஒருசில தொடர்பதிவுகளாக இப்போது வெளியிட்டு வருகிறேன்.

இன்றைய பதிவினில் தங்களின் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/01/2-of-16-2-6.html

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in

என்னை ஆதரிப்பவர்கள் . .