Google+ Followers

Pages

Friday, December 14, 2012

சிங்கப்பூர் 9

அடுத்த நாள் மகன் ஆபீசிலிருந்து வந்ததும் அம்மா கிளம்பு, கிளம்பு இன்னிக்கு
உனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்கு கூட்டிண்டு போரேன்னான்.இந்த ஊர்ல
எனக்கு என்ன இடம் பிடிக்கும்னு இவன் சொல்ரான்னு நினச்சுண்டே கிளம்பினேன். நடந்தே செங்காங்க் ஸ்டேஷன் போனோம். ரயில் ஏறி எங்கியானும் கூட்டிண்டு போகப்போரானோன்னு நினைச்சேன். ஸ்டேஷனில் கிறிஸ்மசை முன்னிட்டு திரும்பின பக்கமெல்லாம் அமர்க்களமாக அலங்காரங்கள் செய்திருக்கா. பழைய மாடல் பாய் மரக்கப்பல் ஒன்றை மேலேந்து தொங்க விட்டிருந்தா. போட்டோவில் சரியா கவர் பண்ண
                           
             
முடியல்லே ரொம்ப உசரத்ல இருந்தது.ஏறி இறங்க லிப்டும், எஸ்கலேட்டரும்தான். 4-வது மாடிக்கு கூட்டிண்டு போனான். ப்ளாட்பாரத்துக்கு போகாம 4-வது மாடிக்கு எங்க போரான்னு யோசிண்டே பின்னால போனேன். எல்ல ஸ்டேஷன்களுமே பெரிய ஷாப்பிங்க் மால்கள் போலவே சகலவிதமான சாமான்களும் கிடைக்கின்றன.வித விதமான கடைகளை வேடிக்கை பாத்துண்டே போனேன். சடன்னா ஒரு இடத்துக்குள்ள கூட்டிண்டு போனான். நிமிந்து பாத்தா. திரும்பின பக்கமெல்லாம் புத்தக கடல்தான். எனக்கு லைப்ரரி போயி புக் பார்க்க படிக்க ரொம்ப பிடிக்கும். பசங்கல்லாம் வேடிக்கையா இப்பவும் சொல்லுவாங்க
                                 
அம்மாவை ஒரு ரூமுக்குள்ள அடச்சு சுத்திவர நிறையபுக்சும் கொடுதுட்டா சோருதண்ணிகூட இல்லாம எவ்வளவு நேரம்னாலும் படிச்சுண்டே இருப்பான்னு. அது என்னமோ உண்மைதான் புக் படிக்க ஆரம்பிச்சா உலகமே மறந்துடும் எனக்கு.பிரும்மாண்டமான லைப்ரரிஅது. நுழைந்ததும் நிறையா ஆங்கில புத்தகங்களிருந்தது, இன்னும் கொஞ்சம் உள்ளே போனா மற்ற மொழி புத்தகங்கள் குழந்தைகளுக்கு காமிக்ஸ் முதலான புக்ஸ் பெண்களுக்கு சமையல்குறிப்பு அழகு குறிப்பு, ஹெல்த் கேர்னு பலவிதபுக் நடுப்பகுதிக்கு
                       
போனதும் தமிழ் புத்தகங்கள் 10 ஷெல்புகளில் வகை பிரித்து அடுக்கி அழகாக வைத்திருந்தார்கள். தமிழ் புக்ஸ் பாத்ததுமே என் முகமெல்லாம் சந்தோஷ சிரிப்பு பார்த்து மகன் என்னம்மா உனக்கு பிடிச்ச இடம்தானேன்னு கேக்கரான் ஆமான்னு சொல்லி என்னலாம் புக் இருக்குன்னு சுத்தி சுத்திவந்து பாத்துண்டே இருந்தேன். இல்லாத  புக்கே இல்லே என்னும்படி, டெய்லி
                   

பேப்பர், வாராந்திரிகள், மாசாந்திரிகள் , நாவல்கள்,  நாவல்களில் பலவகைகள் அங்கே இல்லாத ஆசிரியர்களே இல்லே. எதை எடுக்க எதை விடன்னே புரியாம எல்லாபுக்கையும் மேலோட்டமா பாத்துண்டே இருந்தேன். சுத்திவர நிறைய குஷன் சேர்கள் டேபிள் சேர்கள் என்று அங்கெயெ உக்காந்து படிப்பவர்களுக்கு வசதிகள் செய்திருக்காங்க. நிசப்தமாக சுத்தமாக இருந்தது லைப்ரரி.
                               
மகனிடம் கேட்டேன் வீட்டுக்கு புக் எடுத்துண்டு போலாமான்னு . ஓ, எஸ் தாராளமா எடுதுட்டு போலாம் 3- வாரம் கழிச்சு திரும்ப கொண்டு வச்சுட்டு வேர புக்  எடுத்துண்டு போலாம்னான். ஒரு நேரத்ல எவ்வளவு புக் எடுக்கலாம்னு கேட்டேன் எவ்வளவு வேனாலும் எடுக்கலாம் 3- வாரத்ல திரும்ப கொண்டுவரனும் அவ்வளவுதான்னு சொன்னான். என்ன சார்ஜ் பண்ணுவான்னு கேட்டேன் சிரிக்கரான். காசெல்லாம் கிடையாது எல்லாமே ஃப்ரீசர்வீஸ்தான்.  ஃப்ரீ சர்வீசென்றாலும் ஏனோ தானோ என்று இல்லாமல் மிகவும் அருமையாக பரமரித்துவருகிறார்கள். ஒரு வெளி நாட்டில் நம் தமிழுக்கு செய்யும் பெருமையும் மறியாதையும் பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு. அங்கேந்து இன்னொரு கௌண்டர் கிட்ட போனோம்
                               
கம்ப்யூட்டர் மாதிரி ஒரு மிஷின் இருக்கு அதில் எவ்வளவு புக் எடுத்துட்டு போரோமோ அதை வைக்கனும் என்னிக்கு என்ன தேதில எவ்வளவு புக்  எடுதுண்டு போரோம், என்னிக்கு திரும்ப கொண்டு கொடுக்கணும்னு விவரம் எல்லாம் அதில் பதிவாகிரது. ஏ. டி. எம் .கார்ட்போல இங்கியும் லைப்ரரி

                       
மெம்பர்ஷிப் கார்ட் தான் அதையும் மிஷினில் வைத்தா என்ன கார்ட் ஹோல்டர்ஸ் புக் எடுத்துட்டு போராங்கன்னும் காட்டுது, என்ன ஸிஸ்டமேடிக் நடவடிக்கைகள். நல்ல விஷயம்  எங்க இருந்தாலும் யாரு பண்ணீனாலும் அதிலிருந்து நாமும் கத்துக்கலாம்.
இதுபோல எல்லாஸ்டேஷன்களிலுமே லைப்ரரி இருக்கு எங்கேந்துவேணாலும் புக் எடுத்துக்கலாம் எங்கவேணும்னாலும் கொண்டு வைக்கலாம்.தமிழுக்கு எவ்வளவு சிற்ப்பான சேவை செய்கிறார்கள் இல்லியா?  நானும் சுஜாதா, பாலகுமாரன்,இந்திராசௌந்திரராஜன்,ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை நாவல்களில் 5,6 எடுத்துண்டேன் , மகன் கேட்டான் இது நீ ஒரு வாரத்துக்குள்ள படிச்சுமுடிச்சிடுவே இன்னம் எடுத்துக்கோன்னான். இல்லே இதெல்லாம் படிச்சுட்டு இத கொண்டு வச்சுட்டு வேற எடுக்கலாம்னு சொன்னேன்.லைப்ரரி விட்டு வெளியே வரவே மனசு வல்லே. அங்கியே குட்டி போட்ட பூனை போல சுத்தி சுத்தி வந்துண்டே இருந்தேன்.

35 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பாக இருந்தது நூலகம் மற்றும் உங்கள் பகிர்வு.

நூலகத்தில் எதை எடுப்பது எதை விடுவது என்ற குழப்பம் இருப்பது எனக்கும் உண்டு..... :)

பழனி.கந்தசாமி said...

ரசித்தேன்.

துளசி கோபால் said...

சிங்கை லைப்ரரி ஒன்னில் தமிழ்ப்புத்தகம் பார்த்ததும் முதல்முறை ரொம்பவே மகிழ்ந்துபோயிட்டேன்!

இங்கே எங்கூரிலும் செல்ஃப் செக்கவுட் தான். லிமிட்டேஷனும் இல்லை. காசும் இல்லை.

கணினிகூட (இண்டர்நெட்) ஃப்ரீதான்.

அமைதிச்சாரல் said...

ஹைய்யோ.. எவ்ளோ தமிழ்ப்புத்தகங்கள். அங்கியே குடியிருக்கலாமான்னு இருக்கு :-)

சேக்கனா M. நிஜாம் said...

அனுபவங்கள் அனைத்தும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றன !

தொடர வாழ்த்துகள்...

வல்லிசிம்ஹன் said...

பிரமாதமா இருக்கே லைப்ரரி. வேற நாடுகளில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காது.
நல்ல அனுபவம்.

| * | அறிவன்#11802717200764379909 | * | said...

பொதுவாக சிங்கப்பூரும் சிங்கப்பூர் அரசும், ஒரு நாடும், நாட்டின் அரசும் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற மாதிரி' என்று நான் நினைப்பதுண்டு.

நூலகத்தில் சிங்கப்பூர் இன் ஃபோட்டோஸ் என்ற ஒரு புத்தகம் இருக்கும். அதில் 1950 களில் இருந்த சிங்கப்பூரின் படங்கள் பல இருக்கும்;அவற்றையும் இன்றைய சிங்கப்பூரையும் பாருங்கள்..எவ்வளவு சாதித்திருக்கிறார்கள் என்பது புரியம்.

முடிந்தால் தி சிங்கப்பூர் ஸ்டோரி மற்றும் ஃபரம் தேர்ட் வேர்ல்ட் டு ஃபர்ஸ்ட் என்ற திரு.லீ க்வான் யூ அவர்களின் இரு புத்தங்களையும் இந்தியா திரும்பவதற்குள் படித்துவிட்டுச் செல்லுங்கள்.(நூலகத்தில் இந்த இரு புத்தகங்களும் சிங்கப்பூர் கலெக்ஷன்ஸ் என்ற பிரிவில் கட்டாயம் இருக்கும்).சுஜாதா, பாலகுமாரனெல்லாம் எப்போதும் படிக்கலாம்.

சிங்கையின் பல அற்புதங்களில் நூலக வசதியும் ஒன்று;சிங்கை நூலகங்களுக்கு சுமார் 550 புத்தகங்களைப் பரிந்துரைத்தவன் என்ற வகையில் எனக்குப் பெருமையும் உண்டு.(வாசகர்கள் நாம் படித்த மிக நல்ல புத்தகங்களை நூலகத்தில் வாங்கி வைக்கும் படி சிங்கையில் பரிந்துரைக்கலாம்!)

கோமதி அரசு said...

வெளி நாடுகளில் நூலகங்கள் நன்கு பராமரிக்க படுகிறது .

என் மகன் நியூஜெர்சியில் நூலகம் அழைத்து சென்றான்.
அங்கு புத்தகங்கள் சி.டி இவை எல்லாம் நாம் எத்தனை வேண்டும் என்றாலும் எடுத்து செல்லலாம். நாம் கேட்பது இல்லை என்றால் அவர்களின் மற்ற நூலகத்திலிருந்து நமக்கு கேட்டு வாங்கி தருகிறார்கள்.


உங்களுக்கு புத்தங்களுடன் நல்ல பொழுது போகும்.
உங்கள் அனுபவங்களை அழகாய் பகிர்ந்தீர்கள்.

ஸாதிகா said...

அட..அங்கேயும் போய் புத்தகங்களை விடலியா?ரயில்வே ஸ்டேஷனில் ஷப்பிங்க் மாலா?புதுசா இப்பதான் கேள்விப்படுகிறேன்.

மனோ சாமிநாதன் said...

சிங்கை நூலகம் பற்றியும் படிப்பதில் உங்களுக்கிருக்கும் ஆர்வம் பற்றியும் படித்தபோது மகிழ்வாக இருந்தது. புத்தகங்கள் தான் மனிதனின் மிக‌ நெருங்கிய சினேகிதன் என்பதில் வேறொரு கருத்திற்கே இடமில்லை!

வடுவூர் குமார் said...

அறிவன் சொன்னது அப்பட்டமான மெய்.இவர்கள் நடத்துவது ஒரு மாதிரி அரசாங்கம் தான்.
நூலகம் மூலமாகத்தான் என்னுடைய கணினி(லினக்ஸ்) அறிவு மேம்பட்டது.
சென்னையில் நடக்கும் பல நிகழ்வுகளை பார்க்கும் போது இதெல்லாம் எப்போது திருந்தும் என்ற கேள்வி வந்து வந்து அலைமோதுகிறது தினமும்.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும்ம் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

பழனி கந்தசாமி சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

துளசி கோபால் உங்க ஊரிலும் அப்படித் தனா? கேக்கவே சந்தோஷமா இருக்கு.

Lakshmi said...

ஆமா சாந்தி அங்கயே குடி இருக்கலாஃம் போலத்தான் இருந்தது, ஹ ஹ ஹ

Lakshmi said...

சேக்கனா. நிஜாம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

வல்லிம்மா வருகைக்கு நன்றி

Lakshmi said...

அறிவன் நீங்க சொன்னதும் தானே இது பத்தி தெரிய வருது. நானும் நல்ல புக் எங்கே இருந்தாலும் தேடித்தேடி படிக்கும் பழக்கம் உள்ளவ தான்.வெரும் நாவல் அளவோட நிறுத்துவதில்லே.னீங்க சொல்லி இருக்கும் புக் படிக்க ஆசைதான் ஆனா நான் நாளை இந்தியா திரும்பரேனே. அடுத்தவாட்டி வரும்போது கண்டிப்பா தேடி பிடிச்சு படிக்கிரேன் தகவலுக்கு நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெளி நாட்டில் கிடைக்கும் புத்தகங்கள் கூட உள் நாட்டில் கிடைக்கமாட்டேங்குதே

Lakshmi said...

ஆமா ஸாதிகா சிங்கப்பூர் பத்தி நாம புதுசா ஏதானும் சொல்லனும்னுதானிதெல்லாம் சொல்லி கிட்டு இருக்கேன்.

Lakshmi said...

மனோ மேடம் ரொம்ப சரியா சொன்னீங்க புத்தகம் தான் மனிதனின் நெருங்கிய நண்பன்.

Lakshmi said...

நல்ல விஷயங்களையாவது இங்கேந்து கதுண்டு நடைமுறைப்படுத்தலாம் நம் நாட்டில் ஆனா அவர்களுக்கு இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு?

இளமதி said...

ஆகா..அருமை..சிங்கை நகரில் தமிழின்மேல் இத்தனை ஆர்வமாக... அதுவும் எத்தனை புத்தகம் வேணும்னாலும் இலவசமாக எடுத்துப்போய் படித்துக் கொடுக்க நல்ல வசதி செய்து.... மக்களை தம் தாய்மொழி மறந்திடாமல் காத்திடும் அற்புத பணியைச் செய்கின்றனரே...

தலைவணங்கி மதிக்கப்பட வேண்டிய விடயம்...

athira said...

ஆஹா..ஆஹா.. சிங்கப்பூரும் படங்களும் அருமை.. எத்தனையவது அங்கத்தோடு லக்ஸ்மியக்கா சென்னை திரும்புவா என நினைச்சுப் பார்க்கிறேன்:))

Lakshmi said...

இளமதி உண்மையிலேயே இது ரொம்ப நல்ல விஷயம் இல்லியா

Lakshmi said...

அதீஸ் நான் மும்பைக்காரிம்மா. ஆச்சு இதோ ரெண்டு நாளில் கிளம்புரேன்.

மாதேவி said...

சந்தோசமாக இருக்கின்றது.

சத்ரியன் said...

வணக்கம் லச்சுமி அம்மா.

இன்றைக்கு உங்களுடன் சிங்கப்பூர் வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பதாக ஏற்பாடு நேற்றிலிருந்து உங்களைத் தொடர்புக் கொள்ள முயன்று தோற்றுக்கொண்டே இருக்கிறேன்.

நீங்கள் என்னை அழைக்கவும். 96235852.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Lakshmi said...

சத்ரியன் மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்க.

ராமலக்ஷ்மி said...

இத்தனை தமிழ் புத்தகங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Asiya Omar said...

லைப்ரரி பற்றிய பகிர்வு மனசுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது..லஷ்மீமா.

Lakshmi said...

ஆஸியா வருகைக்கு நன்ரிம்மா

yathavan nambi said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (08/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

குறையொன்றுமில்லை. said...

Thx

என்னை ஆதரிப்பவர்கள் . .