நொறுக்ஸ்.(3)
எங்க முதல்பெண்ணை 5 வயதில் கான்வெண்டில் சேர்த்தோம். அப்பல்லாம் கே. ஜி யு.கே, ஜி எல்லாம் கிடையாது. நேரா ஒன்னாம் வகுப்புதான். மௌண்ட் கார்மெல்என்று பூனாவில் பிரபலமான கான்வெண்ட். யூனிஃபார்மில் பட்டாம் பூச்சி மா த்ரி ஸ்கூல் போய்வரும்பெண்ணைப்பார்க்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கும்.அவளுக்கு ஹோம் ஒர்க் எல்லாம் சொல்லிக்கொடுக்க எனக்கு இங்க்லீஷே தெரியாதே?அதனால ஒரு ஆங்கிலோஇண்டியன் லேடி கிட்ட ட்யூஷன் அனுப்பினோம். ரொம்ப ஆர்வமாக போய்வந்தா. அந்த ஆங்கிலோ இண்டியன் லேடி ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஒன்றாம்
வகுப்புக்குழந்தைகள்ஆரம்பத்திலேயேநோட்,பெனயூஸ்பண்ணக்கூடாது.ஸ்லேட் குச்சிதான் யூஸ் பண்ணனும்னும் ஆனாதான் ஹேண்ட் ரைட்டிங்க் நல்லா இம்ப்ரூவ் ஆகும்னும்சொல்லி ட்யூஷன் ஹோம் ஒர்க் எல்லாம் ஸ்லேட்டில் தான் எழுதிக்கொடுப்பா.ஒரு நாள் 1 ,2, 3, 4, 5 எல்லாம் ஸ்பெல்லிங்க் ல 10-வரை எழுதிக்கொடுத்து எல்லாத்தையும்5, 5 தடவை எழுதிண்டு வரச்சொன்னா.
என்பெண்ணும் படிப்புல நல்லா சுட்டியாவேஇருந்தா. வீட்ல வந்தோடனே ஹோம் ஒர்க்எல்லாம் உடனே பண்ணிடுவா. அன்றும் அப்படி, ஹோம் ஒர்க் பண்ண உக்காந்தா.வரிசைய1, 2, 3 வரை ஸ்பெல்லிங்க் எல்லாம் கரெக்டா எழுதினா. 4 வரும்போது அதோடு ஸ்பெல்லிங்கபூரா அவ கை பட்டு அழிஞ்ச போச்சு. அம்மா நாலுக்கு இங்க்லீஷ்ல என்ன ஸ்பெல்லிங்க்னு
என்கிட்ட கேட்டா. எனக்கு ஏ,பி, சி, டி யே தெரியாது. நான் எப்படி சொல்லுவேன். தெரியலைன்னாபொண்ணு கேலி செய்வாளே, என்று எஃப், ஒ, ஆர், ஈ(F O R E) எழுது என்ரேன். இல்லைமாடீச்சர் இப்படி சொல்லித்தரலை, வேர என்னமோ சொன்னாங்க, நீங்க ராங்கா சொல்ரீங்கன்னா.
அம்மா சொன்னா சரியாதானே இருக்கும் எழுதுன்னு சொல்லி அதையே எழுதினா. மறுனாஸ்கூல் லீவா இருந்தது. அதனால டியூஷன் காலைலயே இருந்தது. கொண்டு விட்டுட்டு வந்தேன்திரும்ப கூட்டி வரப்போனேன். வெளில வரப்போ அழுது, அழுது சிவந்தகண்ணோட வந்தா.
என்னம்மா ஆச்சுன்னேன். வழி பூரா எதுவுமே பேசலை. வீட்டுக்குள்ள நுழைஞ்சோடனே, அம்மாநான் ராங்க் ஸ்பெல்லிங்க்னு சொன்னேன் தானே.தெரியலைன்னா தெரியாதுன்னு சொல்ல வேண்டி
யதுதானே. தப்பா சொல்லிக்கொடுத்து எனக்கு பனிஷ்மெண்ட் வாங்கி கொடுதுட்டே. எனக்கு ரொம்பஷேமா ஆச்சு. இனிமேல உன் கிட்ட ஒன்னுமே கேக்கமாட்டேன் போ ந்னு அழுது ஆர்பாட்டம்பண்ணிட்டா. எனக்கும் என்ன சொல்வதுன்னு தெரியலை ஒரு சாரி சொல்லிட்டு உள்ள போனேன்.
இப்ப நினைச்சுப்பார்க்கிரேன். அந்த மகளுக்கு இப்ப 50 வயசு. 20 ப்ளஸ் வயசுல A, B, C, D யேதெரியாம பச்சை மண்ணா இருந்த நான் அனுபவங்கள் தந்தபாடங்களால் இப்ப இந்த 60 ப்ளஸ்வயசுல கம்யூட்டர் பற்றி ஓரளவு தெரிஞ்சுண்டு ப்ளாக் எல்லாம் எழுதும் அளவுக்கு வள்ந்திருக்கேன்,
என்னை நானே பாராட்டிக்கலாம் இல்லியா?
Tweet | |||||
46 comments:
நல்ல பகிர்வும்மா. உங்கள் வாழ்க்கையிலிருந்து நாங்களும் நிரைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம். நல்ல விஷயம் இது. தொடருங்கள்மா!
நானே பாராட்டிக்கலாம் இல்லியா///
கண்டிப்பா...இது பெரிய விசயம்..
நான் படிக்கும்போது அரை கிளாஸ் என்ற ஒன்று இருந்தது...நான் பொய் இருக்கேன்..
வெங்கட் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. நீங்கல்லாம் தரும் ஊக்கத்தில்தான் என் அனுபவம் ஒன்னொன்னா வெளில வருது. இவ்வளவு நாளா மனசுக்குள் தூங்கிய விஷயங்கள் எல்லாம் வெளில வருது.
அதையும் ரசிக்க நீங்கல்லாம் இருக்கும்போது இன்னும் எழுதலாம்னுதான் தோனுது.
கணேஷ் நீங்க எங்க படிச்சீங்க. அது என்ன அரை க்ளாஸ். புதுசா இருக்கே.
எந்தவருஷம்?
அது எங்க ஊருல இருந்துச்சி...ஒன்றாம் வகுப்புக்கு முன்னாடி இதை கண்டிப்பா படிக்கனுமாம்)))
பொதுவா எல்லா இடத்துலேயும் இருக்குமே...ஆறு மாதம் வரைதான் காலம்...
சும்மா போய் தூங்கிட்டு வருவோம்)) கொஞ்ச நேரம் விளையாட்டு அவ்வளவுதான்...
அதுக்குபோகவே நான் பட்டபாடு படிப்புனலே அலர்ஜி))) இப்பவும் நல்லா நினைவு இருக்கு..
//நானே பாராட்டிக்கலாம் இல்லியா//
அப்ப நாங்கலாம் என்னம்மா பண்ணனும். அதனால் நாங்க பாராட்டுறோம் நீங்கள் இதே மாதிரி எங்களுக்கு தன்னம்பிக்கை வரவைக்கும் நல்ல பதிவுகளை எழுதுங்கள்.
ஆங்கிலம் உங்களுக்கு தெரியவில்லை விடுங்கள் அது அந்நிய மொழி தமிழ் எந்த அளவுக்கு தெரியும் உங்களுக்கு அதாவது தாய்மொழி
@லக்ஷ்மி
இதுல ரெண்டு விஷயம் இருக்கு
தெரியாத விஷயத்த தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது
இன்னொன்னு கத்துக்க வயசு தடை இல்லை :)
வெங்கட் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. நீங்கல்லாம் தரும் ஊக்கத்தில்தான் என் அனுபவம் ஒன்னொன்னா வெளில வருது. இவ்வளவு நாளா மனசுக்குள் தூங்கிய விஷயங்கள் எல்லாம் வெளில வருது.
அதையும் ரசிக்க நீங்கல்லாம் இருக்கும்போது இன்னும் எழுதலாம்னுதான் தோனுது//
கண்டிப்பாக அம்மா! உங்களைப் போன்றவர்களின் அனுபவங்கள்தான் எமக்கெல்லாம் பாடமாக இருக்கும்
//அது என்ன அரை க்ளாஸ். புதுசா இருக்கே.
எந்தவருஷம்? //
1997 ல நானும் அரை க்ளாஸ் படிச்சேன் லெட்சுமிம்மா. நகராட்சி பகுதிகளிலும் கிராமங்களிலும் மெட்ரிக் மோகம் வருவதற்கு முன்பு இப்படியொரு க்லாஸ் இருந்தது. அங்கன் வாடியில் 3 வயதில் ஒரு வருடம் முடித்துவிட்டு 4 வயதில் அரை க்ளாஸில் சேர்ப்பார்கள். 5 வயதில் 1 வதுக்கு போக வேண்டியது தான். அப்பறம் எல்.கே.ஜின்னு கொண்டு வந்ததும்(பிரபலமானதும்) அரை க்ளாஸ் டீச்சர்லாம் ஈ ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ப்ரீ கே ஜி வந்ததும் அங்கன்வாடி ஆயாக்கள் காலையில் வந்து மதியம் வரை வீட்டுக்கதை பேசும் இடமாக மாற்றப்பட்டது
வாவ். பெருமையாக இருக்கு பாட்டிம்மா. Hats off to you.
கத்துக்கறதுக்கு என்ன வயசு ஒரு பொருட்டாம்மா ?
சாக்ரடீஸ் விஷம் சாப்பிடறதுக்கு முன்னாலகூட எதையோ படிச்சுட்டுத்தான் இருந்தாராம்..
உங்க எழுத்துக்கு இன்னும் இளமை ஊஞ்சலாடிட்டுத்தான் இருக்கு...
ஃபினிசிங் டச் அருமை...
” கல்யாணத்துக்கு ஆயிரம் சொந்தம் வந்திருந்தாலும் வராத அந்த ஒரு சொந்தகாரங்கமேல அதிக கான்செண்ட்ரேசன்(வருத்தம்) இருக்க்றமாதிரி, நமக்கு இங்க்லீஸ் வராததும் ஏக்கம்தான். என்ன செய்ய பொதுஅறிவுத் தேடலுக்கான வளமையான வசதிகள் இன்னும் ஆங்கிலத்துலதான கெடைக்குது !!?
ஆங்கிலம் பேச வராத அறிவு ஜீவிகள் அதை வளமையா பேசறவங்களவிட அதிகம்கிறது நல்ல விஷயம்...
கணேஷ் இந்த அரை க்லாஸ்பத்தியே உங்க மூலமாத்தான் முதன் முதலா கேள்விப்படரேன். ஆமிகூட அரைக் க்ளாஸ் போனதா சொல்ராங்க. பின்ன சிட்டிசைட்லலாம் இருந்ததில்லைபோலருக்கு.
பிரபு, உங்க கிட்டல்லாம் வயசும் இருக்கு, திறமையும் இருக்குப்பா.
யாரு பாராட்டினாலும் இல்லைன்னாலும்
அதையெல்லாம் கண்டுக்காம முன்னேறிக்கொண்டே இருப்பீங்க.என்
இளவயது அப்படி இல்லை. எல்லாத்துக்குமே போராடனும். பாராட்டெல்லாம் எந்தப்பக்கத்லேந்தும்
கிடைக்காது.குடும்ப பொண்ணுக்கு அதெல்லாம் எதுக்குன்னுதான் கேள்விகள்
வரும்.
தினேஷ், என் தமிழ் கூட புகுந்த வீட்டில்
ரொம்ப திட்டு வாங்கி தந்தது. நான் ன்ன பிறந்தப்போ என்னை வளர்க்க ஒரு வேலைக்காரி ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கல்யாணம் ஆகும்வரை அவளைத்தான் ஆத்தா என்று கூப்ப்டூ அவபின்னாடியே
இருப்பென். அப்போ, எங்க பாஷையை
விட அவபாஷைதான் ஈசியா வந்தது.
அதுபுகுந்த வீட்டில் பிரச்சினை ஆச்சு.
அதை எழுதினா தனி பதிவுக்கு மேட்டர்
வரும்.தமிழ் கூட தாளம் தான்.
ஆமாகார்த்தி, தெரியாத விஷயத்தை
தெரிந்ததா காட்டிக்கிட்டதால என்ன நடந்ததுன்னு பாத்தோமே. அதுபோல
கத்துக்க வயசும் ஒருதடையே இல்லைதான். எல்லாத்துக்கும் நானே உதாரணம்.
மாத்தியோசி, இந்தமாதிரி நீங்கல்லாம் பின்னூட்டம் கொடுப்பது ரொம்ப உற்சாகமா இருக்கு. நன்றி.
சூப்பர் அம்மா.அரை கிளாஸ் k.G இரண்டும் சேர்ந்தது.lkg,ukg வரும் முன்னாடி நிறைய ஊர்களில் 1975க்கு முன்னால் இருந்தது.
ஆமி, நீங்க கூட அரை க்லாஸ்போயிருக்கீங்களா? பின்ன சிட்டிசைட்லதான் இதுபத்தி தெரியலைன்னுதோனுது.உங்களால அரை க்லாஸ்னு ஒருவிஷயம் பத்தி தெரிஞ்சுக்கமுடிஞ்சது.
அனாமிகா, எல்லரும் என்னை லஷ்மி அம்மான்னு சொன்னாங்க. நீங்க ஒரு படி மேல போயி பாட்டிம்மான்னுட்டீங்களே. பரவால்லை. இதுவும்கூட நன்னாவே இருக்கு.
ஸ்ரீனி, உங்க கருத்துக்களுக்கு நன்றி.ஏதானாலும் நாலு பாஷைகள் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதான்.
என் குழந்தைகள் சின்னதா இருக்கும்போது, ஒரு புது பாஷையே உண்டாக்கினா. ஒருவார்த்தைதமிழில், அடுத்தவார்த்தைஇங்க்லீஷில், அடுத்து ஹின்தியில் அப்பரமா மராட்டியில் என்று கலந்துகட்டித்தான் பேசுவா. அதுக்குபேருகூட மிக்சர் பாஷைன்னே பேர்கூட வச்சுட்டா. அவங்களுக்குமட்டும்தான் புரியும். வேறு யாரு அவங்க பேச்சைக்கேட்டாக்கூட இது என்னபாஷைன்னு யோசிப்பாங்க.
அமுதா, வருகைக்கு நன்ரிம்மா.
அம்மா, இந்த பளீர் வண்ண பளபளப்பு பிளாஸ்டிக் மலர் பதிவுகளுக்கிடையே, உங்களின் பகட்டில்லா நிஜமான பதிவு ஒரு அபூர்வ காட்டுப் பூவாய் மலர்ந்து மகிழ்விக்கிறது.
நல்ல நல்ல விஷயம் தொடருங்கள் காத்திருக்கோம்
அட... நீங்களே உங்களைப் பாராட்டிக்கிறதாவது.. நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்? இது ரொம்ப பெருமையான விஷயம் இல்லையா?
வாசன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.இப்படி எல்லாம் பாராட்டுக்கள் பாக்கும்போது சங்கோஜமா இருக்கு.
யாதவன் வருகைக்கு நன்றி.
ஆமாங்க ராமமூர்த்திசார், என்னைப்பாராட்ட நீங்கல்லாம் இருக்கும்போது என் முதுகை நானே தட்டிக்கொடுதுக்கலாமோ? கூடாதுதான்.
படிக்கறச்சே மகிழ்ச்சியாக நெகிழ்ச்சியாக இருந்தது லக்ஷ்மியம்மா
ஸாதிகா வருகைக்கு நன்றிம்மா.
/என்னை நானே பாராட்டிக்கலாம் இல்லியா?/ தாரளமா பாராட்டிக்கலாம்! கூடவே உங்களுக்கு எனது பாராட்டுக்களும்! :)
மஹி, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றிம்மா.
நாங்க இத்தனை பேர் எதுக்கு இருக்கோம்?
உங்களைப் போல திறமை உள்ளவங்களை எல்லாம் பாரட்டத்தான்.
நீங்களும் உங்களை பாராட்டிக்கலாம் ஆனா எங்களுக்கும் கொஞ்சம்
பாராட்ட சந்தர்ப்பம் குடுங்க மேலும் உங்கள் எழுத்துக்களால்
ராஜி வருகைக்கு நன்றிம்மா. பாராட்டுகிர வேலையெல்லாம் உங்க எல்லாரிடமும் விட்டுட்டேன்மா.
யதார்த்தமான எழுத்து நடை படிக்க ரசனையா நல்லாருக்கும்மா
உங்க அனுபவங்கள் எங்களுக்கு பாடம். தெரிந்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் அம்மா.
சதீஷ் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.
கோவை2தில்லி மிகவும் நன்றி.
உங்களை நீங்களே மட்டும் இல்ல லக்ஷ்மிம்மா நாங்களும் சேர்ந்து பாராட்டணும். உண்மையில் இவ்வளவு நினைவுடன் எழுதும் உங்களுக்கு என் சல்யூட்ட். நான் பிளாகில் குழந்தைகளின் சுட்டித்தனத்தை பதிவிடுவதே பின்னாடி நான் மறந்திடுவேன்னுதேன். என் ஞாபகமறதி அப்படி. நீங்க கலக்குங்க. :))
அன்னு, வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா.
நல்ல பகிர்வும்மா.எழுத்து நடை படிக்க நல்லாருக்கும்மா.
ஆயிஷா, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா.
மலரும் நினைவுகள் நல்ல இரூக்கு
லக்ஷ்மி அம்மா...,இன்றுதான் உங்கள் பகுதியை நான் பார்வையிடுகின்றேன்.மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருகின்றீர்கள்.இன்னும் பொறுமையாக நான் மற்றவற்றை படிக்க்கணும்.
இதெல்லாம் படிக்கும் போது நீங்கள் எதுவும் தெரியாமல் இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை அம்மா... உண்மையிலேயே உங்களை மிகவும் பாராட்டணும்.கற்றுகொள்ள வயது ஒரு தடையில்லை.... என்பதற்க்கு நீங்கள் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு அம்மா....
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அப்சரா.
அப்சரா, முதல் வருகைக்கு நன்றிம்மா. இனிமேல அடிக்கடி வாங்க.
Post a Comment