Pages

Thursday, March 31, 2011

மலரும் நினைவுகள்(6)



விழிப்புமில்லாம, தூக்கமும் இல்லாம இருக்கும்போதே கிணத்துக்குள்ளேந்து
 என்னமோ கினு, கிணுன்னு மணி அடிக்கறமாதிரி சப்தம் கேட்டுது.(பூனா)
இது என்ன பாதி ராத்திரி யாரு பூஜைலாம் பண்ராங்கன்னு நினைச்சேன். அப்பரம்
சமையல் ரூமில் லைட் எரிந்தது. தாத்தா எழுந்து நடமாடும் சப்தம் கேட்டுது.
 நான் இப்ப எழுந்துக்கரதா, என்னபண்ணரதுன்னு தெர்யலை. சரி அவங்க என்ன
 பண்ராங்க்ன்னு போயி பாக்கலாம்னு சமயல்ரூம்கதவு திறந்து அங்க போனேன்.
ரூம்பூரா ஒரே புகை, தாத்தா பாய்லர் பத்தவச்சிருக்காங்க. அது திகு திகுன்னு
 எரிஞ்சு ரூம்பூர புகை.தாத்தா, ஏன் இவ்வளவு சீக்கிரமா எழுந்தீங்க?, தூக்கம் வல்லியான்னேன். இல்லைமா, தினமுமே நாலரைக்கு எழுந்தாதான் வெலை
ஆகும் என்ரார்.இப்போ நாலரை மணியாஎன்ரேன். உனக்கு அலாரம் அடிச்சது
கேக்கலியா? என்ரார். அலாரம்னா என்னதுன்னுதெரியலை. அப்படின்னா என்ன? என்ரேன். சுத்தம். அலாரம்னா தெரியாதா. இதோ பாரு இது அலாரம்
டைம்பீஸ்.என்று குட்டியா ரவுண்டா நம்பர்லாம் போட்டிருந்த ஒரு விளையாட்டு சாமான்(!!!!!!!!!!!!!!1) காட்டினாங்க. இதுல காலேல எவ்வளவுமணிக்குஎழுந்திரிக்கணுமோ அவ்வளவு மணிக்கு அலாரம் ஸெட்
 பண்ணி வச்சோம்னா காலேல மணி அடிச்சு நம்மளை எழுப்பிடும்.என்ரார்.
 எங்க வீட்ல பெ,,,,,,,,ரி,,,,,,,,,சா,,,,,,, சுவர்க்கடிகாரம்தான் பாத்திருக்கேன்.










இது பாக்கவும் கேக்கவும் புதுசா இருந்தது. சரி வள வளன்னு பேசிட்டு நிக்காதே
வாளில தண்ணி எடுத்துண்டு பின்புறம் போயி பல் தேய்ச்சுட்டு,முகம், கை
கால் அலம்பிண்டுவா.அதுக்குள்ள வென்னீர் ரெடி ஆயிடும். நான் முதல்ல
குளிச்சுடரேன். என்ரார். வாளின்னா இப்பமாதிரி ப்ளாஸ்டிக் பக்கெட்லாம்
இல்லை. கனம், கனமா இரும்போ, த்கரமோ வாளிதான். கூடவே ஒரு பித்தளை
செம்பும் கொண்டுபோன்னார்.சரின்னு பின்புறமாக வாளியை தூக்கமுடியாம
தூக்கிண்டு போனேன். பல்தேய்க்கவும் பேஸ்ட் ப்ரெஷ்லாம் இல்லை. உமிக்கரி
தான் பல்தேய்க்கனும். நல்ல வெட,வெடன்னு குளிர் நடுக்கித்து.




எங்க ஊர்ல எப்பவுமே வெக்கைதான். அதனால இந்தக்குளிர் எனக்கு ரொம்ப
கஷ்டமா இருந்தது. நான் நடுங்கிண்டே பல்தேய்ச்சுட்டு இருக்கும் போதே வரிசையா 4, 5 பேர் பக்கத்து குடுத்தனக்காரா சின்ன வாளிலதண்ணி கொண்டு
வந்து லைன்ல க்யூவா நின்னாங்க.(டாய்லெட்டுக்காம்).அட கடவுளே, இது வேரயா? வேக, வேகமா பல்லை விளக்கிட்டு வீட்டுக்கு(!!!!!!!!!!!!!!!) போனேன்.
 அதற்குள்ள தாத்தாகுளித்து 8 முழம் வேஷ்டி கட்டிண்டு என்னமோஸ்லோகம்
 சொல்லிட்டே காய்கறி நறுக்கிண்டு இருந்தார். நான் வந்ததும், முதல்ல சாணி
கரைச்சு வாசல் தெளிச்சு ரெண்டுவாசலிலும்(சமையல்ரூம்,முதரூம்) கோலம்
போடு என்ரார்,ஐயே சாணியா என்று அறுவெருப்பா நினைச்சேன். எனக்கு
 இந்த அசிங்கம், அறுவெருப்பு எல்லாம் கொஞ்ச்ம் அதிகமாவே பிடிக்காது.




சரி வேர வழி இல்லை மூக்கைபொத்திண்டே சாணி கரைத்து வாசலில் தெளித்
து தென்னை விளக்கு மாரால் நன்கு பெருக்கி கோலமும் போட்டேன். நல்ல
வேளை கோலம்போடத்தெரிந்திருந்தது.உள்ளவந்ததும் தாத்தா நான் வாசல்ல
 உக்காந்து காயத்ரி ஜபிச்சுண்டு அடுப்பையெல்லாம் பத்தவைக்கரேன் நீயும்
 வென்னீர் எடுத்துண்டு மோரில(தொட்டி முற்றம்)குளிச்சுட்டு மடி புடவை
போட்டுக்கோ. என்றார்.சமையல் ரூமிலேயே மேல உருட்டு மரக்கம்பால் ரெண்டு கொடி தொங்கிட்டு இருந்தது. அதில் ஒரு கொடியில் தாதாவின் வேஷ்டியும், இன்னொரு கொடியில் என்புடவையும் இரவே காயப்போட்டிருந்தேன். அவர் சொல்லித்தான்.




தொட்டி முற்றம் மிகவும் சின்னது அதில் கஷ்டப்பட்டு குளித்து முடித்துபுடவை
மாற்றினதும் தாத்தா உள்ளே வந்தார். வாலில் வைத்தே நாலு கரி அடுப்பும்
 பத்த வைத்திருந்தார்.கரி அடுப்பே இப்பதான் பாக்கரேன்.கீழேசின்ன வாய் மாதி
ரி இருக்கும் இடத்தில் தேங்கா நார், பேப்பர் மண்ணெண்ணை ஊற்றிமேலே
 நிறைய கரி போட்டு பத்தவைத்திருந்தார். நாலு அடுப்பும் உள்ளே கொண்டு
வந்து வைத்து ஒரு பெரிய நீளமான பித்தளை அடுக்கை கொண்டு வந்தார்.
அதிலுள்ளே தண்ணீர் ஊற்றி, இன்னொரு வெங்கலப்பானையில் அரிசி அலம்பிபோட்டு தண்ணீர் ஊற்றி அந்தபெரிய பாத்திரத்திற்குள் வைத்தார்.
 அதன்மேல் இன்னொரு பாத்திரத்தில் ப்ருப்பும், அதன்மேல் இன்னொரு பாத்தி
ரத்தில் நறுக்கிய காயும் வைத்து டோம் போன்ற மூடியால் மூடி அடுப்பில் வைத்தார்.




அதன்பேரு ருக்மினி குக்கராம். அந்தகாலகட்டத்தில் அதுதான் .என்னிடம் ஒரு
 பனை ஓலை விசிறியைக்கொடுத்து இப்போ நீ நாலு அடுப்பையும் தணல்
குறைய விடாமல் வீசிண்டே இருக்கனும். முதல்லவிளக்கேத்திட்டுவான்னார்.
சமையல் ரூமிலேயே சின்னதா ஒருவிளக்குப்பிறையும்இருந்தது.விளக்கேத்தி
கஜானனம் சொல்லிட்டு(அதுமட்டும்தான் தெரியும்) அடுப்பு வீச ஆரம்பித்தேன்.
தாத்தா, லஷ்மி இந்த மூணு அடுப்பும் பத்து அடுப்பு, கடைசி அடுப்பு பத்தில்லாத
அடுப்பு என்ரார். எனக்கு என்ன சொல்ரார்னே புரியலை. வெருமனே தலையை
ஆட்டிவைத்தேன். எதுக்கு இவ்வளவு சீக்கிரமே சமயல் பன்ரேள். என்றேன்.




நல்லா கேட்டாய்போ,இப்போஆரம்பிச்சாதான்ஆறறைக்குசாப்பாடுரெடிஆகும்
அப்பாவும் பிள்ளையும் காலை ஏழுமணிக்கு வேலைக்கு கிளம்பணும். ஆறறைக்க்கு கரெக்டா சாப்பிட உக்காந்துடுவா.அதுக்குள்ள ரெடி ஆக வேண்டாமா? என்கிறார். காலங்காத்தால 6 மணிக்கு ஃபுல் மீல்ஸா எப்படி
 சாப்பிட முடியும்னு நினைச்சேன். அதுவும் அந்தக்கால மனுஷா, எந்த வியாதி, வெக்கையும் இல்லாதவா, சாப்பாட்டுவிஷயத்தில் வேண்டாங்கர ஐட்டமே
எதுவுமே கிடையாது. சங்கோஜமோ, எதுவுமோபடாம வயறு ஃபுல்லா நல்லாவே சாப்பிடுவா.




நான் அடுப்பு வீசிண்டே தூங்கி வழிஞ்சுண்டே இருப்பேன். இடை,இடையே
தாத்தா குரல் கொடுப்பார்.இன்னம் வேகமா வீசு தணல் குறைஞ்சா சாதம் வேக
 நேரம் எடுக்கும். ஜோரா வீசு என்று சொல்லிண்டே, அடுத்தடுத்த அடுப்புகளில்
சாம்பாரும், பொரியலும் தயார்பண்ணுவார், விசிறின்னா இப்பமாதிரி லைட்
வெயிட் ப்ளாஸ்டிக் விசிறில்லாம் இல்ல. பனை ஓலை விசிறி. கைபிடிக்கும்
கம்பெல்லாம் கையைஅறுக்கும். வீசிண்டே நல்லாதூக்கமா வரும். நான்
வரும் முன்பு என் வீட்டுக்காரர்தான் வீசுவாராம். வீசிண்டே தாத்தாவிடம்
 நல்லா சமையலும் கத்துண்டார். இவர் ஐந்தரைக்கு எழுந்து வந்தார். பின் பக்கம்போய்வந்துட்டு சைக்கிள்எடுத்துண்டுபால்வாங்கப்போனார்.அப்பல்லாம்
பாட்டில்ல பால் வரும். தாத்தா என்னிடம் அவன்பால்வாங்கிண்டுவரதுக்குள்ள
பில்டரில் காபி டிகாக்‌ஷன் போட்டுவை. பத்தில்லாத அடுப்பில் தண்ணீர் கொதிக்கவை என்றார்.




ஓ, சமையல் எல்லாம் பத்து, பால் டிகாஷன்லாம் பத்தில்லை போலன்னு
 நினைச்சுண்டேன்.தாத்தா டிகாஷன் எப்படி போடனும் என்றேன். ஐயோ
 உன் மாமியார் காதுல கேட்டா போறும் வேர வினையே வேண்டாம். தண்ணி
 கொதிக்கவை. பில்டரில் மேபுறம் ஓட்டையா இருக்கு இல்லையா அங்க
ஐந்துஸ்பூன் காபி பொடி போட்டு கொதிக்கர தண்ணி அதன்மேல் விடனும்.
 என்றார். அதற்குள் இவர் பால் வாங்கி வந்தார்.பாலைக்காய்ச்சி காபி ரெடி
பண்ணுனு அடுத்தாஆர்டர்.வேரொரு பாத்திரத்தில் பாலைஊற்றிகாய்ச்சினேன்
அதுபொங்கி வரும்போது என்ன பண்ணனும்னே தெரியலை. அடுப்பை எப்படி
 அணைக்கனும்னு தெரியலை. தாத்தா பால் பொங்கி வழியுது எப்படி அடுப்பை அணைக்கனும் என்ரேன். அடுப்ப அணைக்கரதா,சரியாபோச்சு ஒருதுணி பிடிச்சு பாலைக்கிழே இறக்கிவை.அந்த அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில்
 எல்லாருக்குமாக குடிக்க வென்னீர்வை என்றார்.

33 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said...

பரவால்ல மேடம்.. உங்க வீட்ல சமையல் நீங்க தானா? அய்யோ பாவம்./ ஹா ஹா

Madhavan Srinivasagopalan said...

கண்ணு முனாடி நடப்பதுபோல எழுதி இருக்கிறீர்கள்..
-- சூப்பர்..

// வேரொரு பாத்திரத்தில் பாலைஊற்றிகாய்ச்சினேன்
அதுபொங்கி வரும்போது என்ன பண்ணனும்னே தெரியலை. அடுப்பை எப்படி அணைக்கனும்னு தெரியலை. தாத்தா பால் பொங்கி வழியுது எப்படி அடுப்பை அணைக்கனும் என்ரேன்.//

அஹா.. நல்ல தமாஸ் பண்ணுறீங்களா..?

Asiya Omar said...

லஷ்மிமா வெரி இண்ட்ரெஸ்டிங்,நான் தான் ஆரம்பத்தில் வேலை தெரியாமல் சிரமப்பட்டேன்னு நினைச்சேன்,இதுக்கு அதெல்லாம் சும்மா.ஜோராக போகுது மலரும் நினைவுகள்..

Nagasubramanian said...

அ ஆ ................... ஆறு மணிக்கு குடும்பத்தோட ஜம்போ மீல்ஸ் சாப்டீலா???????

சக்தி கல்வி மையம் said...

ஞாபகங்களை பகிர்வதற்கு நன்றிகள்..

Anonymous said...

சினிமா படம் பாக்கற மாதிரி இருக்கு. அவ்வளவு விபரமாக எழுதி இருக்கிறீர்கள். கண்முன்னே நீங்கள் செய்வது போல இருக்கிறது. இதில் எங்கள் ஊரில் விறகடுப்பு பாவிப்பதால் எவ்வளவு கஷ்டம் என்று விளங்கும். உமி, கரி எல்லாம் பார்த்திருக்கிறேன். ஓரிரண்டு முறை பாவித்தும் இருக்கிறேன். புதுசா ட்ரைபண்ணி பார்க்கறோம்னு பேரு. பனை ஓலை விசிறி எங்கள் ஊரிலும் இருக்கிறது. ஆனால் கறுக்கு மட்டையின் இரு புறமும் கொஞ்சம் மொட்டை ஆக்குவார்கள். அப்படியும் கையை ஓரிருவாட்டி பதம் பார்க்கும். ஆனால், கையடக்கமானது. பால் கொதித்தால் விறகை வெளியே எடுப்பார்கள். பிறகு நுரை கீழே போனபின் விறகை திருப்ப வைத்து எரிப்பார்கள். இதில் என்ன கொடுமை என்றால் குளிர்காலத்தில் விறகு எரியவே மாட்டது. மற்ற நாட்களிலும் தணல்குழல் (என்று தான் பெயர் என்று நினைக்கிறேன். மறந்துவிட்டேன்). என்று ஒரு நீள் இரும்பு குழல் இருக்கிறது. அதனை வைத்து ஊதி ஊதி எரிப்பார்கள். அவசரத்துக்கு டீ வைக்க தண்ணி சுடவைக்க முடியாது. மண்ணெண்ணெய் அடுப்பு என்று ஒன்று இருக்கு. அது கொஞ்சம் வசதி. ஆனால், சரியான செலவு. எங்கள் ஊர் வாழ்க்கை பற்றி ஒரு பதிவு போடறேன். படிச்சு பாருங்க.

சாந்தி மாரியப்பன் said...

தாத்தா ரொம்பவே உதவியாயிருந்திருக்கார் உங்களுக்கு..

ஆச்சி ஸ்ரீதர் said...

ரொம்ப கஷ்டந்தான் போங்க.இந்த காலத்து பிள்ளைகளுக்கு இவ்ளோ வசதி வந்த பிறகும் எல்லாம் கஷ்டமாதானிருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

சிரமம் தான். எல்லாமே பழக்கமில்லாத வேலைகள் அல்லவா??

குறையொன்றுமில்லை. said...

சிபி செந்தில்குமார், பயப்படாதீங்க அவ்வளவு பாடும் பட்டு இப்ப நல்லாவே சமையல் செய்வேங்க.

குறையொன்றுமில்லை. said...

மாதவன் இதுல என்னங்க தமாஷ்.

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

நாக சுப்ரமனியன் நான் இல்லீங்க அவங்க சாப்பிட்டாங்க.

குறையொன்றுமில்லை. said...

வெடந்தாங்கல் கருன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

அனாமிகா நீங்க நல்லாவே ரசிச்சு பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க, நீங்க சொல்வது விறகு அடுப்பு. நான் சொல்வது கரி அடுப்பு அதில்தணலைக்குறைக்கவே முடியாது. ஓமக்குழல்னு சொல்வாங்க ஊதி ஊதி தணலை பெரிசுபண்ணனும்
உட்தும்போது காதெல்லாம் வலிக்கும் கண்ணெல்லாம் எரியும் அது ஒரு கனாக்காலம்.

குறையொன்றுமில்லை. said...

அமைதிச்சாரல் அப்போ தாத்தாமட்டும் அங்கே இல்லைனா என் நிலமை என்னாகி இருக்கும்?

குறையொன்றுமில்லை. said...

திருமதி ஸ்ரீதர் ஆமாங்க வசதி பெருகப்பெருக அதோட அருமையே தெரிவதில்லைதான்.

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

ADHI VENKAT said...

ருக்மினி குக்கர் இப்போ இருக்கற குக்கருக்கு அக்கா போல இருக்கிறது. தாத்தா அழகா சொல்லி கொடுத்திருக்கிறார்.
ஓமக்குழலை ,ஊதாங்குழல் என்றும் சொல்வார்களோ!
எனக்கு கூட என் அம்மா சாஸ்திரத்துக்காக ஊதாங்குழல் கொடுத்துள்ளார்கள். (மூன்று தலைமுறையாக வந்த பித்தளைக்குழல்)

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி சீர்பாத்திரங்கள்ல ஓமக்குழலும் கொடுப்பாங்கதான்.

viji said...

very interesting mam.
viji

குறையொன்றுமில்லை. said...

விஜி வருகைக்கு நன்றி.

மாதேவி said...

தாத்தா நல்ல ரெயினிங் கொடுத்திருக்கிறார்.

குறையொன்றுமில்லை. said...

மாதேவி, ஆமாங்க.

எல் கே said...

நல்ல பயிற்சி கொடுத்து இருக்கார் தாத்தா., என் பாட்டி வீட்டில் இந்த பத்து தெரியாமல் நெறைய திட்டு வாங்கி இருக்கேன் சிறு வயதில்

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி, இப்பல்லாம் பத்துன்னா
என்னான்னு கேக்கராங்க?

நிரூபன் said...

இப்பமாதிரி ப்ளாஸ்டிக் பக்கெட்லாம்
இல்லை. கனம், கனமா இரும்போ, த்கரமோ வாளிதான். கூடவே ஒரு பித்தளை
செம்பும் கொண்டுபோன்னார்.//

வணக்கம் அம்மா,
உங்கள் பதிவினைப் படிக்கையில் எங்களூரின் அன்றாடச் செயற்பாடுகளைப் பதிவினூடாகத் தரிசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அழகான மொழி நடையும், படிப்போரை அப்படியே சுண்டியிழுத்துப் பதிவோடு ஒன்றித்துப் படிக்கும் வண்ணம் எழுதுகிறீர்கள்.

நிரூபன் said...

சரி வேர வழி இல்லை மூக்கைபொத்திண்டே சாணி கரைத்து வாசலில் தெளித்
து தென்னை விளக்கு மாரால் நன்கு பெருக்கி கோலமும் போட்டேன். நல்ல//

மண்வாசனை கலந்த மொழி நடை பதிவிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.

நிரூபன் said...

பனை ஓலை விசிறி. கைபிடிக்கும்//

எங்களூர் கிராமங்களிலும் பனையோலை விசிறியும், புத்தக மட்டையும் தான் காற்று வர விசுக்கும் சாதனங்கள்.
சேம் சேம்...

குறையொன்றுமில்லை. said...

நிரூபன் வருகைக்கும் அழகழகான பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்களூர்
எதுங்க?

நிரூபன் said...

Lakshmi said...
நிரூபன் வருகைக்கும் அழகழகான பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்களூர்
எதுங்க?//

இலங்கை என அழைக்கப்படும் நாட்டின், வடக்குப் பக்கத்தில் உள்ள வன்னி மாவட்டம் தான் என் ஊர். தற் போது நான் இருப்பது யாழ்ப்பாணத்தில்.

குறையொன்றுமில்லை. said...

நிரூபன் தகவல் பகிர்ந்து கொண்டதற்கு
நன்றிங்க.

என்னை ஆதரிப்பவர்கள் . .