அந்த அமர்க்களமெல்லாம் ஒருமாதத்தில் ஓய்ந்தது. இவரும் புது வேலையில்சேர்ந்துபோஆரம்பித்தஅடுத்தவருடம்மாமியாரும்போயிட்டாங்க. ஒருதீபாவளி நாளில். அதுபற்றி விவரமாக ”காஃபி” என்றபதிவில் ஏற்கனவேபோட்டிருக்கேன்.அதுக்கும்( கடைசி காரியங்களுக்கு) ஏகச்செலவு ஆனது.இவ்ரோட ஒரு சம்பளத்தில் குடும்பம் நடத்தி ஆகணும்.என்வரை வரவு செலவுசொல்லமாட்டார். என்னை வெளியிலேயே அனுப்பமாட்டார். எல்லா சாமான்களும் காய்கறிகளும்பாலும் அவரேதான் வாங்குவார். என்ன வரவு என்ன செலவுன்னு அப்பவும் எனக்கு தெரியலை.குழந்தைகளை ஸ்கூலில் சேர்த்தோம். 5 குழந்தைகளை படிக்கவைத்து, துனிமணி எடுத்துக்கொடுத்துசாப்பாடு போட்டு வளர்ப்பது அவ்வளவு ஈசியான வேலை இல்லைதான். நானும் குழந்தைகள்படிக்கும்போது கூடவே உக்காந்து படிக்க ஆரம்பித்தேன்.மராட்டி, ஹிந்தி, இங்க்லீஷ் எல்லாம் ஆரம்பத்லேந்து படித்தேன். தமிழ் படிக்கத்தான் வாய்ப்பே கிடைக்கலை.5 வயசுல படிக்கவேண்டிய பாடங்கள் எல்லாம் 25 வயசில் படிக்க ஆரம்பிச்சேன். ஒன்னொன்னா தெரிய, தெரிய எனக்கே ரொம்ப சந்தோஷ்மா இருந்தது.கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் என்று எல்லாம் குழந்தைகள் மூலமாகதெரிஞ்சுண்டேன். நயாபைசா பற்றியும் ஓரளவு தெரிஞ்சுண்டேன். இவர் கடையில் இருந்து சாமான்வங்கிவந்ததும் இது என்ன விலை இது என்ன விலைன்னு கேட்டு தெரிஞ்சுப்பேன். மூடு இருந்தாசொல்வார். இல்லனா இதெல்லாம் தெரிஞ்சு என்னபண்ணப்போரேன்னுடுவர்.
ஸ்டவ்வுக்காக ஒரு சீல் டின் கெரசின் வாங்கி வருவார்.அப்ப லூசா கிடைக்காது. சீல்பண்ணினடின்னில்தான் கிடைக்கும். சுமார்16 லிட்டர் இருக்கும் . அதுவிலைகேப்பேன். 6ரூபா என்பர். மனசில்வச்சுப்பேன்பாலொருலிட்டர் 25 பைசா. அரிசி ஒருகிலோ65 பைசா.புழுங்கல் அரிசி ஒருகிலோ 45பைசாகாய்கறி ஒரு ரூபாய்க்கு ரெண்டு பிக் ஷாப்பர் பை நிறையா கிடைக்கும். இதுபோல பருப்பு பலசரக்கு எல்லாமே இந்தமாதிரி விலைகளில் தான் இருந்தது. ( நம்ப முடியலியா)? எல்லா சாமானும் அவ்வளவுசுத்தமாகவும் இருக்கும். வீட்டில் ஒருபண்டிகயையும் விடாமல் கொண்டாடுவோம். இவருக்கு பக்திரொம்ப அதிகம் எல்லாபண்டிகைகளும் நல்ல கொண்டாடனும் நிறைஞ்ச் வீடு குறை வைக்கக்கூடாதுஎன்று சொல்வார்.சுற்றிவர ராஸ்தாபெட்டில் பூராவும் தமிழர்கள்தான் இருந்தார்கள். எல்லாருக்கும்டிஸ்ட்ரிபியூஷனும் பண்ணனும் என்று எல்லாமே நிறையாவே பண்ண வேண்டி இருக்கும்.எல்லாம் நல்லபடியாவே போய்க்கொண்டிருந்தது.
இந்த காலகட்டத்தில் என் வீட்டிலும் கிராமத்தில் தாத்தா, பாட்டி எல்லாரும் மேலே போய்ச்ச்சேர்ந்தார்கள் பெரியப்பா, சித்தப்பா, அத்தைகள் அவரவர்கள் பிள்ளை, பெண்கள் வெளி ஊர்களில். வேலையில் சேர்ந்ததால் கூட்டுக்குடும்பமும் சிதறி தனித்தனி ஆச்சு. கிராமத்தில்அப்பா, அம்மா எந்தங்கைகள், தம்பிகள் மட்டுமே. எனக்கு 5 தங்கைகள் 2 தம்பிகள்.ஒவ்வொருவருக்காகல்யாணம் செய்ததிலே பூர்வீக சொத்துக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் கரைந்ததுஒவ்வொரு வீட்டையும் வித்தார்கள். 7 மாடியுடன் இருந்தஒரே வீடுதான் மிச்சம். தாத்தாபோலஅப்பாவுக்கு வியாபார நுணுக்கங்கள் தெரிதிருக்கவில்லை. இளகிய சுபாவம் வேறு.எங்ககடையில் வேலை பாத்தபசங்களே அப்பாவிடம் பணம் வாங்கிண்டு தெருவுக்குத்தெரு அப்பளக்கடைஆரம்பித்து விட்டார்கள். அவர்களுடன் போட்டிபோட்டு அப்பாவுக்கு வியாபாரம் செய்யத்தெரியலை. வியாபாரமும் நொடித்துப்போனது. தம்பிகளும் வசதியிலேயே வளர்ந்துட்டதால படிச்சுயாரு கீழயும் வேலைக்குபோகமாட்டோம்னு வறட்டு கௌரவம் பேசிக்கொண்டு பி, யு, சி.க்கு மேல படிக்க மாட்டேன்னுட்டா. நல்லா செழிப்பா இருந்துட்டு கீழ வந்துட்டா ஊரிலும் செல்வாக்குமறியாதை குறைந்துவிடும்.
பூனாவில் 5 குழந்தைகளும் நன்றாகவே படித்தார்கள். ட்யூஷ்னுக்கொ வேரு எதுவுமேபோகாமல்நல்ல மார்க் எடுத்து வந்தார்கள். ஒரு நாள் இவர் நல்ல மூடில் இருக்கும்போது தாத்தா, அம்மாகடைசி காரியங்களுக்கு பணத்துக்கு என்ன செய்தீர்கள் என்று பயந்துகொண்டே கேட்டேன்.இவர் முன்கோபக்காரர். முனுக்னா கோபம் மூக்குக்குமேல வந்துடும். பாத்துதான் பேசணும்.ஏன் தெரிஞ்சு நீ என்ன பண்ணப்போரே என்றார். தெரிஞ்சு ஒன்னும் பண்ண போரதில்லைஉங்களுக்கு வரும் கஷ்ட நஷ்டத்தில் எனக்கும் பங்கிருக்குதானே. எனக்குதெர்யனும் தானேஎன்று ஒருவழியா அவரை சொல்ல வச்சுட்டேன். லஷ்மி உனக்கே தெரியும் நம்ம குடும்பநிலமை .முதல்ல எனக்கு கடக் வாசலாவில் 100 ரூபாதான் சம்பளம் இருந்தது. அப்போ அப்பாவிடம் கொடுத்துடுவேன். இப்ப எல்லாம் நானே சமாளிக்கணும் எனக்கும் வரவு செலவெல்லாமேபுதுசாவும் ,புரியாமலும் தான் இருந்தது. போகப்போக புரிஞ்சுது இப்ப இந்தபுது ஆபீசில 500 ரூபாவருது. அது நாம 7-பேருக்கு போரமாட்டேங்குது. இதுல பெரிய செலவெல்லாம் நான் எப்படிசமாளிச்சிருப்பேன் கொஞ்சம் யோசிச்சுப்பாரு.தாத்தா அம்மா கடைசி செலவுக்கு மொத்தமாஅம்பதாயிரம் செலவு ஆயிருக்கு தெரியுமா. அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்?அதான் மார்வாடி கிட்ட வட்டிக்கு வாங்கினேன். இப்ப மாசா மாசம் வட்டிகட்டவே முடியலை.அதான் நானே குழம்பிண்டு இருக்கேன் உன்னையும்கவலைப்படுத்தவேண்டாம்னுதான் உன்கிட்ட சொல்லலை என்கிரார். ஐயோ மார்வாடி கிட்ட கடனா?/
Tweet | |||||
41 comments:
மலரும் நினைவுகள்....
வாழ்க்கையில் வசதி வாய்ப்பு இல்லையென்றாலும் விலைக் குறைந்து காணப்பட்டது....
அந்தக்காலம் இப்போது திரும்பாது...
வாழ்க்கையில் விடுபட்ட ஏக்கங்கள் தற்போது நினைவுகளாய் மலர்ந்திருக்கிறது...
பகிர்வுக்கு நன்றி..
wow சூப்பர் அனுபவங்கள் , ஆனா எப்படிமா உங்களுக்கு இவ்வளவு மொழிகள் படிக்க ஆர்வம் வந்தது? எனக்கு எல்லாம் தமிழ்லே தாதாக்க புதக்காதான் . ஒழுங்கா தமிழ் லே எழுத வர மாடிங்குது , நீ சும்மா கலக்குறிங்க போங்க . . .
////எல்லாம் 25 வயசில் படிக்க ஆரம்பிச்சேன்.///
ஹி ஹி ஹி போங்க மா எனக்கு வெக்க வெக்கமா வருது . . எப்படியோ நீங்க 25 வயசுல படிக்க ஆரம்பிசுடிங்க , ஆனா நான்தான் எப்ப ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கேன் , ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்களே ஹி ஹி ஹி
"கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்.."
'கடன்' சுமை அவ்வளவு கொடியது..
கதையில இங்கயாவது டிவிஸ்டு வருதான்னு பாக்கலாம்..
வெயிட்டிங்..
இந்தத் தொடரைப் படிக்கும்போது உங்கள் வலைப்பூவின் தலைப்பு கண்ணில் படுகிறது..
அதுதான் வாழ்வில் வெற்றிபெற தாரக மந்திரமோ ?
--- 'குறையொன்றுமில்லை'
அந்த விலைவாசிகள் உங்களை மாதிரி பெரியவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம் அவ்வளவே. திரும்பவும் வர வாய்ப்பு இல்லை
அச்சச்சோ! மார்வாடி கிட்ட கடன் வாங்கினாரா?
நீங்களும் நல்லபடியா படிச்சு கொஞ்சம் கொஞ்சமா விஷயங்கள் தெரிந்து கொண்டது நல்லதாயிற்று.
தொடரட்டும் மலரும் நினைவுகள்..
படிப்பு மேல் உங்களுக்கு இருந்த ஆர்வம் நினைச்சு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு,வாழ்க்கையை எதார்த்தமாக எடுத்துண்டு வாழப்பழகி இருக்கீங்க.அருமை.
கவிதை வீதி ஸௌந்தர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ராஜேஷ் இங்கயும் வர நேரம் கிடைச்சுதா? நன்றி.
ஏன் ராஜேஷ் இப்பகூட ஆரம்பிக்கலாமே?
மாதவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமாகார்த்தி, பெரியவங்க மூலம் தெரிஞ்சுக்க நிறையவே விஷயங்கள் இருக்குதான்.
வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆஸியா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அந்த கால விலைவாசியை நீங்கள் குறிப்பிட்டதை விட, காரிய செலவுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவு என்பது தான் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆமாங்க நாக சுப்ரமனியன் நாம்ளும்
பிதுர் காரியம் என்று முறையாக செய்ய வேண்டி வந்ததே.
உங்களின் நினைவுகள் எங்களுக்கு பாடங்கள் ...
நன்றிங்க அம்மா
அரசன் வருகைக்கு நன்றி
வாழ்க்கையில் விடுபட்ட ஏக்கங்கள் தற்போது நினைவுகளாய் மலர்ந்திருக்கிறது...
நினைவுகள் என்றுமே சுகம்தான் ..சோகமாக இருந்தால்கூட...
//இவர் முன்கோபக்காரர். முனுக்னா கோபம் மூக்குக்குமேல வந்துடும். பாத்துதான் பேசணும்.//
//இப்ப மாசா மாசம் வட்டிகட்டவே முடியலை.அதான் நானே குழம்பிண்டு இருக்கேன் உன்னையும் கவலைப்படுத்தவேண்டாம்னுதான் உன்கிட்ட சொல்லலை என்கிரார்.//
என்ன ஒரு அனுசரனையான, அன்னியோன்யமான வாழ்க்கை...! படிக்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...! ஓர் பாடம் போல வாழ்க்கை...!
வேடந்தாங்கல் கருன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமா சதீஷ் இந்த அண்டர்ஸ்டாண்டிங்க்லதான் வாழ்க்கை சுமையாதெரியலை.
//ஐயோ மார்வாடி கிட்ட கடனா?//
கடைசி அருமையான ட்விஸ்ட். (எல்லா தேர்வுகளும் முடிந்தது அம்மா. இனி வேலை கிடைக்கும் வரை வலைப்பூ தான்.)
பிரபு தேர்வெல்லாம் நல்லா பண்ணியிருக்கியா? எப்ப பாம்பே வரே?
வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பதில் நமக்கு நினைவுகளும் மற்றவர்களுக்கு அனுபவ பாடமும் கிடைக்கிறது.
மார்வாடிகிட்ட வாங்கின கடனை எப்படி சமாளிச்சீங்களோ?
நீங்க படிக்க ஆரம்பித்த விஷயங்கள் நல்லா இருக்கும்மா.
மலரும் நினைவுகள் தொடரட்டும்.
பல்வேறு அனுபவங்கள் வாழ்க்கைப்பாதையில்....
komathy arasu nanri.
kovai2thilli nanri.
mathevi nanri
/////தாத்தாபோலஅப்பாவுக்கு வியாபார நுணுக்கங்கள் தெரிதிருக்கவில்லை. ////
ஆம் அம்ம அடுத்த ஜெனறேசனுக்கு சில விடயங்கள் கடத்தப்படுவதில்லை... நல்ல உறவுப் பகிர்வு..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
அந்தக்காலத்துல விலைவாசி எவ்ளோ குறைச்சலா இருந்ததோ, அதுக்கு தகுந்தாப்ல சம்பளமும் குறைவாத்தானே இருந்துருக்கும். ஆகக்கூடி, பற்றாக்குறைங்கறது எல்லாக்காலத்துலயும் இருக்கக்கூடியதுதானோன்னு தோணுது..
லக்ஷ்மி அம்மா நீஙக சொன்னமாதிரியே தமிழ் ட்ய்ப் கற்றுகொண்டு விட்டேன்.இப்பொழு practice சைதுகொண்டு இருக்கிறேன். நன்றி அம்மா.
5 பிள்ளைகளுக்கு செய்து வெளியில் வருது பெரிய விஷியம்,
மார்வாடி கடன் அதிலிருந்து எழுந்திருக்கவே முடியாதே.
எல்லா மொழிகளும் ஆர்வமா கத்து கொண்டது ரொம்ப பிடித்து இருந்தது,
நான் ஹிந்தியைமிக ஆர்வமா எழுத படிக்க கற்று கொண்டேன் , அந்த சந்தோஷம் இங்கு தெரியுது.
ம.தி சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்குமநன்றி
ராம்வி வெரி குட்
ஜலீலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அருமையான பதிவு!
சீனு வாசன், இந்தப்பதிவு எழுதி இவ்வளவு மாசங்களுக்குப்பிறகும் படிச்சு பின்னூட்டம் போட்டிருக்கீங்க. வருகைக்கு நன்றி
Post a Comment