Google+ Followers

Pages

Monday, August 29, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (5)

 நங்க நல்லூர் உறவுக்காரா கொஞ்சம் நெருங்கின சொந்தம். அதனால என்னை
யும் அத்தையையும் இரவு அங்கே தங்கிட்டு போச்சொன்னா. மறுக்க முடிலே.
மத்தவங்க தாம்பரம் கிளம்பிட்டாங்க.இரவு என்ன சாப்பிடரீங்கன்னு கேட்டா.
 அப்பவே மணி 8- ஆச்சு. அத்தை எப்பவுமே இரவு2 சப்பாத்திதான் சாப்பிடுவா.
 நான் தினமுமே இரவு ஒரு கிண்ணம் சாதம் கொஞ்சம் நிறையா மோர் விட்டு
 கரைச்சமதிரி 2 க்ளாஸ் குடிப்பேன் அவ்வளவுதான்.காலையும்பிஸ்கெட்டும் இரவு கரைச்ச மோர் சாதமும்தான் எப்பவுமே. அதுரொம்ப வருஷமாவே இப்படித்தான்.அதுதான் வயத்துக்கு ஈசியா இருக்கு. அந்த வீட்டு மாமி என்கிட்ட வந்து நீங்க
மோர்சாதம்தான்னுசொன்னேளே,மத்யானம்பண்ணினசாதம்இருக்கு அதுபோருமா, இல்லைனா சூடா  சாதம் வைக்கவான்னா, மோர் சாதத்துக்கு சூடு
 சாதம் எதுக்கு. ஆறின சாதம் போரும்னேன். கிச்சன்ல போயிட்டு திரும்ப வந்து
 சாதம் குழைவா இருக்கனுமா உதிர் உதிரா இருக்கனுமான்னா. எனக்கு எப்பவுமேகுழைஞ்ச  சாதம் பிடிக்காது. உதிரா இருக்கட்டுமேன்னேன். உள்ள போ
 யிட்டு மறு படியும் வந்து தயிர் வெனுமாமோரான்னா,நீர்க்கமோர்போரும்னேன்.
திரும்ப வந்து ஜில்லுனு வெனுமாசாதாவான்னா. எனக்கு ஒரே கடுப்பு, எனக்கு
 ஒன்னுமே வேனாம்மா, வெரும் சோத்தபோட்டு துளி உப்புகல்லு போட்டு
 ரெண்டு க்ளாஸ் தண்ணியை ஊத்து அது போதும்னேன்.

அத்தைதான் என்னை கூல் பண்ணினா, அவா நம்மளை நன்னா கவனிக்கனு
 மேன்னு ஓவரா ட்ரீட் பன்ரா. எதுக்கு கோவப்படரே.அன்பு தொல்லடி இதுன்னா
 ஆமா, அப்படிதான் இருக்கனும். ஒரு வழியா சாப்பிட்டு படுக்க பெட் ரூம் போனா
 கட்டிலே இல்லே. எனக்கோ கீழ படுக்க முடியாது. அத்தை அவா கிட்ட சொன்னா
டைனிங் டேபிள் மேலெந்து பலகையை எடுத்து ரெண்டு குட்டிஸ்டூல்போட்டு
 அதன்மேல பலகையை போட்டு போர்வை விரிச்சு படுன்னா. நான் ஒன்னும்
 அதிக உயரம் கிடையாது. எனக்கே அந்தபலகை சின்னதா இருந்தது. தலையும்
 காலும் வெளில நீட்டிண்டு இருந்தது. நான் ரொம்ப வருஷமா த்லகானியும்
 வச்சுக்கரதில்லே.அந்த வீட்டு மாமா இந்தா இந்த தலகாணி வச்சுக்கோன்னு
 தலைக்கு கீழ வச்சுட்டுபோனார். அத்தை 9- மணிக்குள்ள நல்லா அசந்து தூங்கி
 டுவா, காலை 4.30-க்கு எழுந்துடுவா, நான் நேர் மாரா, 12-மணிக்கு தூங்கி 9மணி
 எழுவேன்.வழக்கம் போல மொபைல் பாட்டு கேட்டு12-மணி வரை கொட்ட
கொட்ட முழிச்சுண்டு இருந்துட்டு அப்புரமா தூங்கினேன்.2-மணிக்கு அந்தவீட்டு
 மாமா வந்து என்னை எழுப்பி வடக்கு தெக்கா தலை வச்சு படுதிருக்கே எழுந்து
 கிழக்கு மேர்க்கா தலை வச்சு படுன்னு உலுக்கி எழுப்பிட்டார்.கடவுளே என்ன
 இது இவங்க  உழக்குலயேகிழக்கு மேற்கு பாக்குரவங்களா இருக்காங்களேன்னு நினைச்சேன்.  ஹி,ஹி இதுவும் அந்த பாட்டிம்மா சொன்ன பழமொழிதான் அப்புரம் எஙக தூங்க. சிவராத்ரிதான்

அடுத்த நாளே காலை கிளம்பி தாம்பரம் போயிட்டோம்.அன்னிக்கு சாயங்காலம்
 எல்லாரும் கல்லிடை கிளம்பனும். பெட்டில்லாம் பேக் பண்ணிட்டு குளியல்
 சாப்பாடு அரட்டை எல்லாம் வழக்கம்போல .எலிகளும் அதுபாட்டுக்கு ஓட்டம்
 பிடிச்சுண்டு இருக்கு.இடை இடையே அத்தை குழந்தைகளும் என் குழந்தைகளும் போன் பண்ணி எங்க இருக்கேள் எப்படி இருக்கேள்னு விசாரிப்பு
 கள். என்னோட ப்ளாக் ஃப்ரெண்ட்ஸ் கொஞ்சம் பேரு என்ன பாக்க வந்தா. அத்
தையின் ஃப்ரெண்டும் பெங்களூர்லேந்து அத்தையை பாக்கவந்தா, அந்தவீட்டு
 மனுஷா, எல்லாரையும்ரொம்ப நா பழகினவா மாதிரி காபி டிபன் கொடுத்து
 உபசரித்து கல கலப்பாபேசிண்டு இருந்தா. இவர்களின் விருந்து உபசரிப்பு
 சூப்பரா இருக்கு.புது ஆட்களாகவே நினைக்காம அத்தனை சகஜமா பழகிடரா.
 அது எல்லாருக்கும் வந்துடாது, பாக்கவே சந்தோஷமாவும் நன்னாவும் இருக்கு.


சாயன்காலம் 6மணிக்கு தாம்பரத்லேந்து வண்டி இருந்தது. கன்யா குமரி எக்ஸ்
பிரஸ். நங்க 5 மணிக்கு ஸ்டேஷன் போனோம். கரெக்ட் டைம் வண்டி வந்தது,
 நாங்க எப்ப பாத்தாலும் ஃப்ளைட்லயும் ஏ.சி. கார், ஏ.சி கோச்லயுமெ ட்ராவல்
 ப்ண்ணி ,பண்ணி அலுத்து போயிருந்தோம். அதனால சாதா 3-டயர் ஸ்லீப்பரில்
 புக் பண்ணி இருந்தோம்.எனக்கு எப்பவுமெ ட்ராவல் பண்ண ரொம்பவே பிடிக்கும்
 வ,ண்டி கிளம்பினதுமே இயற்கை காட்சிகளை ரசிக்க்க ஆரம்பிச்சேன். வெளில
அடிக்கும் சுகமான ஜில் காத்து,வண்டியின் டக, டகன்னு தாலாட்டும் இனிமையா
ந சப்தங்கள்.வேகமாக ஒடும் மரங்கள், பில்டிங்குகள் வயல் வெளிகள் என்று
 கண் நிறைந்த அருமையான இயற்கையை ரசித்தவாரே, அடுதடுத்து வந்த
வண்டலூர், ஊரப்பாக்கம்,பொத்தேரி,சிங்க பெரும கோவில்,பரனூர், செங்கல்
பட்டுஒத்திவாக்கம்,மதுராந்தகம், மேல்மருவத்தூர்,திண்டி வனம் வரை எல்லா
 ஸ் டேஷன்களையும் கணிமைக்காமல் பாத்து ரசிச்சுண்டே வந்தேன். 7.30-
க்கு இருட்டாயிடுத்து. பிறகு வெளிலஒன்னுமே பாக்கமுடியல்லே.ஏன் இரவு
 வண்டில புக் பண்ணினான்னு தோணித்து.கையில் இட்லி, தயிர் சாதம் கொண்டு
போயிருந்தோம். 8.30-க்கு சாப்பிட்டு முடித்து வண்டியில் அக்கம் பக்கம் இருப்ப
வர்களை கவனித்தேன். எல்லாருமே உற்சாகமாக அரட்டையில் இருந்தா.
 நான் எழுதிண்டு இருந்தேன். 9 மணிக்கு எல்ல லைட்டு அணைச்சுட்டு எல்லா
ரும் தூங்க ஆரம்பிச்சுட்டா. அந்த  டிம் நீல லைட்டு வெளிச்சத்தில் என்னால
 புக் கூட படிக்க முடியல்லே.ஜன்னலில் காத்துவாங்கிண்டு மொபைலில்பாட்டு
கேட்டுண்டு இருந்தேன்.மதுரையில ரெண்டு நண்பர்கள் சந்திக்க வருவதா சொல்
 லி இருந்தா. இரவு 3- மணிக்கு தான் மதுரை வரும். அதுவரை எப்படி முழிச்சுண்டு இருக்கன்னு நினைச்சேன். ஜன்னலில்காத்துவாங்கிண்டு உக்கான்
தேனில்லியா காத்து சுகமா வந்தது. தூக்கம் 11 மணிக்கே கண்ணை சுழட்டுது.
42 comments:

விக்கியுலகம் said...

உங்க பயணப்பதிவு அருமையா இருக்கு அம்மா...அதுவும் நமக்காக பாத்து பாத்து கவனிக்கரவங்க அதிகமா நடந்துக்கும் போது வரும் இயல்பான கோவத்தை நீங்க வெளிப்படுத்தி இருக்க விதம் அதை பகின்ற விதம் அருமை நன்றி!

Jaleela Kamal said...

அப்படி கிட்ட உக்காத்தி வச்சி சொல்வது போல இருக்கு.
தொடருஙக்ள்

http://samaiyalattakaasam.blogspot.com/2011/08/blog-post_28.html

RAMVI said...

அருமையா இருக்கும்மா உங்க அனுபவம்.மதுரை பதிவர்களை சந்திசீங்களான்னு தெரிஞ்சுக்க அடுத்த பதிவு வரை காத்திருக்கணுமே!!

நிரூபன் said...

வணக்கம் அம்மா,

எல்லாப் பாகங்களையும் ஒழுங்கு வரிசையாகப் படித்தேன்,

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து எனும் கூற்றுக்கு அமைவாக இருக்கின்ற உணவுகளை காலத்திற்கேற்ற மாதிரி Adjust பண்ணி உண்ட உங்களின் பண்பு வியப்பளிக்கிறது,.

மதுரைச் சந்திப்பு...பதிவர் சந்திப்புத் தானே..

அவ்..

அனுபவப் பகிர்வினை அசத்தலாக எழுதியிருக்கிறீங்க.

கோகுல் said...

பயணம் சுவாரஸ்யமா நகருது,
மதுரையில் நண்பர்களோடு சந்திப்போம்!

மகேந்திரன் said...

//புது ஆட்களாகவே நினைக்காம அத்தனை சகஜமா பழகிடரா.
அது எல்லாருக்கும் வந்துடாது, பாக்கவே சந்தோஷமாவும் நன்னாவும் இருக்கு.///

இந்தப் பண்பு எல்லோரிடமும் எதிர்பார்க்கமுடியாத ஒன்று.
அது கிடைக்கும் போது வரும் சந்தோசத்திற்கு அளவே இல்லை

அனுபவப் பகிர்வு நல்லா இருக்கு அம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பயணம் அருமையாகச் செல்கிறது. நாங்களும் உங்களுடன் வருவது போலவே ஓர் உணர்வு ஏற்படுகிறது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

அமுதா கிருஷ்ணா said...

எனக்கும் ட்ரையின் பயணம் மிகவும் பிடிக்கும்.கூடல்(குருவாயூர்) எக்பிரஸில் போயிருந்தா பகல் முழுவதும் பயணித்து இருக்கலாம்.அதில் பெர்த் வசதியும் உண்டு.

கோவை2தில்லி said...

பயணங்களில் ஜன்னலோரம் உட்கார்ந்து இயற்கை காட்சிகளை ரசிப்பது ஆனந்தம்.

நல்ல பகிர்வும்மா.

அந்நியன் 2 said...

ரொம்ப பொருமை உங்களுக்கு இல்லையென்றால் எபீசோட் 5 வந்திருக்காது.

வாழ்த்துக்கள் அம்மா தொடருங்கள் உங்கள் பயணத்தை நாங்கள் இருக்கின்றோம்.....

தமிழ் மானம் ஓட்டும் போட்டாச்சு.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் பயணம்... அதுவும் ஜன்னலோர பயணம்... இரவு நேரத்தில் அந்த இருட்டில் அவ்வப்போது மினுமினுக்கும் வெளிச்சத்தில் பயணம் செய்வது எனக்குப் பிடித்த விஷயம்....

தொடருங்கள்.... மதுரையில் சந்தித்தவர்களைப் பற்றி அடுத்த பகிர்வில் படிக்கிறேன்...

Anonymous said...

அனுபவப் பகிர்வு நல்லா இருக்கு அம்மா...தொடருங்கள் உங்கள் பயணத்தை ...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சென்னை ....சீர்மிகு சென்னை ...

மாய உலகம் said...

கிழக்கு மேற்கு பாக்குரவங்களா இருக்காங்களேன்னு நினைச்சேன். //

உண்மை தாம்மா... விஞ்ஞான பூர்வமாகவே வடக்கு தெற்கு காந்த விசை அதிகமா இருக்குறதால தூக்கம் விழித்து எழும்பொழுது உற்சாகமின்மை ஏற்படும் etc., ஹி ஹி ஹி

மாய உலகம் said...

மதுரை நண்பர்களில் ஒருவர் தமிழ்வாசி பிரகாஷ் தானேம்மா ஹா ஹா ஐ ஐ கண்டுபிடிச்சுட்டேன் ஹி ஹி

மாய உலகம் said...

தமிழ் மணம் 9

தமிழ்வாசி - Prakash said...

பகிர்வு அருமை... அடுத்த பாகத்தில் சிந்திப்போம்...

அப்பாவி தங்கமணி said...

நேர்ல கதை கேக்கறாப்ல இருக்கு... சூப்பர்

Lakshmi said...

விக்கி உலகம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஜலீலா கமல் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ரமா, நன்றிம்மா.

Lakshmi said...

நிரூபன், வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிங்க.

Lakshmi said...

கோகுல் நன்றி

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்குக்கருத்துக்கும்
நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அமுதா, நீ சொல்வதுபோல பகல் நேர ரயில் பயணம் நல்லாஇருக்கும்.

Lakshmi said...

கோ2தில்லி, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

அந்நியன்2, வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி. சிலபேரு பதிவு நீஈஈஈளமா
போறமாதிரி ஃபீல் பண்ணு ராங்கதான்
நான் ரசித்த விதததில் படிக்கறவங்களும்
உணரனும்னு கொஞ்சம் விஸ்தாரமா
எழுதரேன். அதீத ஆர்வக்கோளாறுதான்

இன்னும் கொஞ்ச நாளில் முடிச்சுடரேன். ஓக்கேவா.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி சில விஷயங்கள் சின சின்னதாக
இருந்தாலும் கூட மறக்கவே முடியாமல் அமைந்து விடும் இல்லியா?

Lakshmi said...

ரெவரி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

நண்டு, நொரண்டு ஈரோடு வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாய உலகம் வருகைக்கு நன்றி.ஆஹா
உலக மஹா ரகசியம் கண்டு பிடிச்சூட்டே. வாழ்த்துக்கள்.

Lakshmi said...

பிரகாஷ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அப்பாவி தங்கமணீ வாங்க. நன்றி

ஸ்ரீராம். said...

ஐந்து பாகமும் தொடர்ந்து படித்து வருகிறேன். எல்லோரும் சொல்வது போல அருகே அமர்ந்து கேட்பது போலத்தான் இருக்கிறது. கொஞ்சம் அசந்தால் கை நீட்டி கையில் மோர் சாதம் வாங்கிக் குழைத்து வத்தக்குழம்பு நடுவிலிட்டு சாப்பிட்டுக் கொண்டே கேட்பது போல பிரமை. மதுரைப் பதிவர் சந்திப்பு வேறு ப்ளாக்கில் படித்த ஞாபகம். (அதைப் படித்துதான் முதலில் இங்கு வந்தேன்!)

Lakshmi said...

ஸ்ரீராம் உங்க, அழகான பின்னூட்டம் பாத்து சிரிப்பு வந்துடுத்து. ஏன் தெரியுமா அந்த மெட்ராஸ் வீட்டு பாட்டிம்மா ஒரு நாள் இப்படி தான் கிணத்தடில எங்க எல்லாருக்கும் கையில் சாதம் பிசைந்து உருட்டி உருட்டி போட்டாங்க. நீங்க வடீஅகடி வந்து பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துவதற்கு நன்றி

M.R said...

அருமையா கொண்டு போறீங்க தொடரை தொடர்கிறேன் அம்மா பகிர்வுக்கு நன்றி

Lakshmi said...

M.R. வருகைக்கு நன்றி

ronald said...

பகிர்வுக்கு நன்றி

Lakshmi said...

ronald thanks.

Seshadri e.s. said...

பயணப்பதிவு அருமை! பகிர்விற்கு நன்றி!

என்னை ஆதரிப்பவர்கள் . .