வெங்காய சாம்பாரின் வாசனை அந்த சாப்பாட்டு அறையையும் தாண்டி தெருவில் போவோர் வருவோரின் நாசியையும் கவர்ந்தது.
டாடி, நம்ம தாமு பண்ற சமையல் மாதிரி வேர யாராலயுமே பண்ணமுடியாது
நீங்க என்ன சொல்ரீங்க டாடி?
அதில் என்ன சந்தேகம் அம்மா?அதிலயும் நீ பாசானசந்தோஷத்தில் ஜமாய்ச்சுட்டான். என்று அப்பாவு மகளும் மாறி, மாறி சமையல் கார தாமுவை புகழ்ந்து தள்ளினார்கள்.
தாமு சங்கோசத்தில் நெளிந்தவனாக என்ன குழந்தே,என்னப்போயி இப்படில்லாம் புகழரே. நா எப்பவும் போலத்தான் செய்ஞ்சிருக்கேன். என்றான்
தாமு உனக்கு என்ன வேனும்னு கேளேன். உனக்கு ஏதானும் தரனும்போல இருக்குன்னு நித்யா கேட்டாள்.
குழந்தே நீ பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய கைராசிக்கார டாக்டரா ஆக்னும்மா.உன் குழந்தைக்கும் என்கையால் தான் முதல் சோறு ஊட்டனும்
எனக்கு வேர என்னவேனும் சொல்லும்மா?
உடனே நித்யாவின் அப்பா ,னித்யா பாத்தியா ஒன்னு சொல்லவே மறந்துட்டேன் நல்ல வேளை தாமு நினைவு படுத்தினான். உனக்காக மெடிக்கல் ஸீட்டுக்கு நிறைய டொனேஷன்லாம் கொடுத்து ஏற்பாடு செய்திருக்கேன் பலத்த சிபாரிசிக்கும் தெரிந்தவர்களிடம் சொல்லி வச்சிருக்கேன்.ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு ஸீட் வாங்கி இருக்கேன்மா தாமுச் சொல்ராப்ல நீ கைராசியான பெரிய டாக்டரா வரனும்மா. நல்லா பேரும் புகழும் வாங்கனும்மா. என்றார்.
இதைக்கேட்டதும் நித்யாவின் முகம் வாடி விட்டது. பதில் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு எழுந்துபோனாள்.
நித்யாவின் தகப்பனார் வரதன் நல்ல பணவசதி படைத்தவர்தான். ஒரே செல்லமகள் நித்யா.அவள் 10-வயதில் அவ அம்மா இறந்தபிறகு அப்பாதான் அவளுக்கு எல்லாமாக இருந்தார். வீட்டில் அப்பா, மகளைத்தவிர சமையலுக்கு தாமு, அவனை வீட்டில் ஒருவனாகவே நடத்தி வந்தார்கள். இது தவிர தோட்டக்காரன், கார் ட்ரைவர், வாச்மேன், வேலைக்காரிகளாலேயே வீட்டில் சிறிது நடமாட்டம் இருக்கும். நித்யாவுக்கு மனம் விட்டு பேசு ஒரே தோழியாக எதிர் வீட்டு கன்யா இருந்தாள். இருவரும் ஒன்றாம் வகுப்புமுதல் சேர்ந்தே படித்து இன்று காலேஜ் படிப்புவரை தொடரும் நெருங்கிய தோழியாக இருந்து வந்தார்கள் இருவருமே போட்டி போட்டு நன்றாக படிப்பவர்கள் எப்பவும் முதல் ரெண்டாம் இடம் இவர்களுக்குத்தான்,
கன்யாவின் அம்மா 4- வீடுகளில் சமையல் வேலைகள் செய்து, அப்பளாம் வடாம் செய்துவிற்று பெண்ணை இவ்வள்வுதூரம் கஷ்ட்டப்பட்டு படிக்கவைத்தாள். நித்யா கன்யாவைதேடி வந்தசமயம் அம்மாவு பெண்ணும் வடாம் தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். நித்யாவைப்பார்த்ததும் வாடி வா
நானே உன் வீட்டுக்கு வரனும்னு இருந்தேன் நீயே வந்துட்டே. பாத்தியா நாம இருவருமே 95% எடுத்து பாசாகி விட்டோம். கங்க்ராட்ஸ். மேல என்ன செய்யப்போரே?ரொம்ப சந்தோஷமா இருக்கில்லியாடின்னு கன்யா கேக்கவும் ஆமாடி ஒருபக்கம் சந்தோஷம் தான். ஒருபக்கம் ஒரே யோசனையாவும் இருக்குடீ. என்றாள். நித்யா
உடனே கன்யா என்னடி எவ்வளவுசந்தோஷமான விஷயம் நீ சுரத்தே இல்லாம இருக்கியே என்னாச்சு என்கிட்ட சொல்லமாட்டியா? என்றாள்
அதெல்லாம் ஒன்னுமில்லே, நீ மேற்கொண்டு என்னபடிக்கப்போரே அதைச்சொல்லு முதல்ல என்றாள் நித்யா.
நானா, என்ன சொல்ல இவ்வளு படிக்க வைக்கவே என் அம்மா ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டா. இதுக்கும் மேல அவங்களை கஷ்ட்டப்படுத்த விரும்பலே.
டைப் ஷார்ட் ஹாண்ட் படிச்சு ஏதானும் கம்பெனில ஒரு வேலைல சேரவேண்டியதுதான். என்று கன்யாவும் சுரத்தில்லாமலே பதில் சொன்னாள் (தொடரும்)
Tweet | |||||
19 comments:
எவ்வளவுசந்தோஷமான விஷயம் நீ சுரத்தே இல்லாம இருக்கியே என்னாச்சு /
இருவர் நட்பும் அருமை.
அருமையான கதை.. பகிர்வுக்கு நன்றிகள் ..
நிறைய கதை எழுதிட்டீங்க படிக்க தான் நேரம் கிடைக்க மாட்டுங்கிரது, கண்டிபா அனைத்தையும் ஒரு நாள் உடகார்ந்து படித்துடுவேன்,
நான் சென்னை தான் , இப்ப துபாயில் இருக்கேன் சமீபத்ஹ்டில் தான் அப்பா உடல் நிலை சரியைல்லாத போது ம் அடுத்து அவர் இறந்த போதும் வந்து சென்றேன்.
பிறகு மெயில் ப்னறேன்
இரண்டு எதிர் எதிர் நிலைகளில்
உள்ளவர்களை வைத்து மிகப் பிரமாதமாக
கதை துவங்கியிருப்பது அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
ரொம்ப நல்ல இருக்கு!
ரொம்ப நல்ல இருக்கு!
அழகான ,அருமையான கதை,சுவாரசியமான ஆரம்பம், அம்மா.
இன்றும் வறுமையில் இருப்பவர்களை நேர்மையாக பார்க்கும் சமூகம் இருந்தால் மட்டுமே ஏழ்மையிலும் திறமை உள்ளவர்களுக்கும் மேற்படிப்பு சரியாக அமையும்... நித்யாவுக்கு ரெக்கமண்ட் ஓகே கன்யா என்ன செய்வாள் .. இங்கே ஏற்ற தாழ்வு உள்ள சமூகம் தானே என்ன சொல்வது... கதை அருமையம்மா
அருமை. தொடருங்கள்.
படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நடுவில் வறுமை வந்து வாட்டத்தான் செய்கிறது.
வசதியிருந்தும் சிலர் பிறருக்காக தனக்குப் பிடித்தமில்லாத படிப்பில் சேர வேண்டியதாகப் போகிறது.
இரண்டிலும் உண்மையான மகிழ்ச்சிகள் இருப்பதில்லை தான்.
நல்ல துவக்கம். தொடருங்கள்.
தொடர்கிறேன். vgk
குழந்தே நீ பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய கைராசிக்கார டாக்டரா ஆக்னும்மா.உன் குழந்தைக்கும் என்கையால் தான் முதல் சோறு ஊட்டனும்
எனக்கு வேர என்னவேனும் சொல்லும்மா?
//
வெள்ளந்தி மனிதர்களின் குணாதிசயம்!
நானா, என்ன சொல்ல இவ்வளு படிக்க வைக்கவே என் அம்மா ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டா. இதுக்கும் மேல அவங்களை கஷ்ட்டப்படுத்த விரும்பலே.
டைப் ஷார்ட் ஹாண்ட் படிச்சு ஏதானும் கம்பெனில ஒரு வேலைல சேரவேண்டியதுதான். என்று கன்யாவும் சுரத்தில்லாமலே பதில்
சொன்னாள்.
//
காலத்தின் கட்டாயம்!
சிறுகதை நன்றாகத் தொடங்கி இருக்கிறது... தொடரட்டும்....
நட்பை அடிப்படையாக வைத்து ஆரம்பித்த கதை அழகாக செல்கிறது!
ஒரே மதிப்பெண். ஒருவர் வசதியான நிலையில். மற்றவர் ஏழ்மையில். தோழிகள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.
நிகழ்சிகளை நிதர்சனமாக்கி
அப்படியே கதையாக்கித் தருவதில்
வல்லவர் அம்மா நீங்கள்..
அருமையான கதை அம்மா...
அருமையான பதிவு...தொடருங்கள்
http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html?showComment=1320681793472#c7169129423929897141
கதை நல்லா இருக்கும்மா,தொடருங்க!
வளமையும் வறுமையும் கைகோர்த்திருக்கும் நட்பு நல்ல தொடக்கம்.
Post a Comment