Pages

Friday, November 25, 2011

கண்ணாடி

உலகில் கண்ணாடிகள் தோன்றி இராத காலம் அது. யாருமே தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததில்லை. அப்போது முதன் முதலாக முகம் பார்க்கும் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவனுக்கு அந்தக்கண்ணாடி கிடைத்தது.அதை வீட்டுக்கு கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்டுக்கொண்டு பின் அதை திறந்து பார்த்தான். அதில் அவன் முகம் தெரிகிரது. அது தன் முகம் தான் என்று அவனுக்குத்தெரியவில்லை.இதற்குள் ஒரு மனிதன் இருக்கிரான்.இதற்குள்ளே ஆனந்தமாக வசிக்கும் அவன் ஒரு தேவனாகத்தான் இருக்கவேண்டும், என்று எண்ணினான். உடனே கண்ணாடியை பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டான்.



 தினமும் காலையில் எழுந்ததும் தன் மனைவிக்குத்தெரியாமல் தன் அறைக்குள் நுழைந்துபெட்டியைத்திறந்து கண்ணாடியைப்பார்ப்பான். மனைவி வந்துவிட்டால் பெட்டியை மூடி விடுவான்.அவன் செய்கைகளைப்பார்த்தமனைவிக்கு சந்தேகம் வந்தது. ஒரு நாள் கணவன் இல்லாத சமயம்  அவன் ரூமிற்குள் போய் பெட்டியை வேறு சாவி போட்டுத்திரந்து பார்த்தாள். கண்ணாடியில் அவள் முகம் தெரிந்தது. அதுவரை கண்ணாடியை பார்த்திராததால் அது அவள் முகம்தான் என்று அவளுக்கும் தெரிந்திருக்கவில்லை. தன் கணவன் யாரோ ஒருத்தியை பெட்டியில் ஒளித்து வைத்திருக்கிரான் என்று எண்ணி கோபம் கொண்டாள்.கணவனின் வருகைக்காக கோபத்துடன் அவள் காத்திருந்தபோது கனவன் ஒரு புத்தபிட்சுவை உடன் அழைத்து வந்தான். கணவனுடன் மனைவி சண்டை போடத்தொடங்கியதும் ஏன் இப்படி கோபிக்கிராய் என்று புத்தபிட்சு  அமைதியாகக்கேட்டார்.

 சுவாமி இவர் எனக்குத்தெரியாமல் வேரு ஒரு பெண்ணை அழைத்துவந்து தன் அறையில் உள்ள பெட்டியில் ஒளித்து வைத்திருக்கிரார் என்றாள். பிட்சுவும் கணவனிடம் ஏனப்பா இப்படி செய்கிராய் என்றார். ஐயோ, இவளைத்தவிர வேறு பெண்ணையே நான் பார்த்ததில்லை என்றார்  பரிதாபமாக அந்தக்கணவர். இவர் பொய் சொல்கிரார் சுவாமி, இதோ உங்களுக்கு நிரூபிக்கிரேன்  என்று சொல்லி கண்ணாடி வைத்திருக்கும் பெட்டியை திறந்து பார்க்கும்படி பிட்சு விடம் சொன்னாள் அவள். பிட்சு அதைத் திறந்து பார்த்தார். கண்ணாடியில் அவர்முகம் தெரிந்தது. இதுவரை அவரும் கண்ணாடியில் தன் முகத்தைப்பார்த்ததில்லை. அவர் உடனே, அட, இதோ பாரம்மா, எல்லோருக்கும் தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று எண்ணி இப்பெண் வெட்கிப்போய் தன் தலையை மொட்டை அடித்துக்கொண்டுவிட்டாள். இனிமேல் இங்கிருந்தால் அவமானம் தாங்காது அவள் போய் விடுவாள் என்றார் ஆறுதலாக. உண்மையில் பிட்சு பார்த்தது அவருடைய உருவத்தைத்தான்.

 ( நன்றி ராமகிருஷ்ன விஜயம்)

45 comments:

பால கணேஷ் said...

நகைச்சுவையுடன் கூடிய இந்தக் கதையை மிக ரசித்துப் படித்தேன். அருமை...

RAMA RAVI (RAMVI) said...

அருமையாக இருக்கிறது அம்மா,கதை.

rajamelaiyur said...

அருமையான கதை ..
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

raji said...

ரசிக்கும்படியான நல்ல கதை.பகிர்விற்கு நன்றிம்மா!

Yaathoramani.blogspot.com said...

அருமையான தத்துவக் கதை
விரிந்த பொருளை உணரவைத்துப் போகிறது
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான கதை..
நகைச்சுவையுடன்...

arasan said...

சிரிப்பாக சிந்தனை தூண்டும் ஒரு பதிவு ..
வாழ்த்துக்கள் அம்மா

Madhavan Srinivasagopalan said...

நல்லாருக்கு..

Unknown said...

நன்றி..
அப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க
http://mydreamonhome.blogspot.com

ADHI VENKAT said...

ரசித்துப் படித்தேன். :)))

ராமலக்ஷ்மி said...

அருமைங்க:)! நல்லதொரு பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கும்மா... ராமகிருஷ்ண விஜயம் முன்பெல்லாம் தொடர்ந்து படித்து வந்தேன்.. இப்போது இங்கே கிடைப்பதில்லை..

Mahi said...

ஹாஹா!சூப்பர் கதை போங்க!:)

இராஜராஜேஸ்வரி said...

அருமையான வித்தியாசமான தத்துவக் கதை!!

குறையொன்றுமில்லை. said...

ரமா நன்றி

குறையொன்றுமில்லை. said...

என் ராஜ பாட்டை ராஜா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கவிதை வீதி சௌந்தர் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அரசன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதவன் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வினோத் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

ஸாதிகா said...

கண்ணாடி மறக்கமுடியாத கதை.

அம்பாளடியாள் said...

எப்பவும் போன்று கதை அருமை வாழ்த்துக்கள் அம்மா ....
மிக்க நன்றி பகிர்வுக்கு .என் தளத்தில் கவிதை காத்திருக்கின்றது .
அதற்கு உங்கள் ஊக்குவிப்பையும் வழங்குங்கள் .

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா நன்றி.

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்ரி

மகேந்திரன் said...

நகைச்சுவையுடன் கூடிய கதையை மிக ரசித்துப் படித்தேன் அம்மா. அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

விரும்பிப் படித்தேன் அம்மா... நன்றி!

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வாங்க வருகைக்கு நன்றி

மாய உலகம் said...

இனி கண்ணாடியில் முகத்தை பார்க்கும்பொழுதெல்லாம் உங்களது இந்த பதிவு தான் ஞாபகத்திற்கு வரும் ஹா ஹா அருமை

radhakrishnan said...

வேடிக்கையாகவும், கருத்து பொதிந்தும்
உள்ளது.பகிர்வுக்கு நன்றி அம்மா

குறையொன்றுமில்லை. said...

மாய உலகம் வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராதகிருஷ்னன் சார் வருகைக்கு நன்றி

G.M Balasubramaniam said...

இதைப் படித்தவுடன் எனக்கு ரயிலில் பயணம் செய்த ஒரு சர்தார்ஜி, பாத்ரூமில் கண்ணாடியில் தன்னைப் பார்த்து உள்ளே ஆள் இருக்கிறார் என்று உடனே கதவை மூடி, உள்ளிருப்பவர் வெளியே வரக் காத்துக்கொண்டிருந்த கதை நினைவுக்கு வந்தது.

சாந்தி மாரியப்பன் said...

கதை அருமையாயிருக்கு லஷ்மிம்மா..

நம் பார்வையின் கோணத்தைப் பொறுத்து காட்சிகளும் வித்தியாசப்பட்டு அமையுதுன்னும் இந்தக் கதை சொல்ல வர்றதா எனக்குத்தோணுது..

குறையொன்றுமில்லை. said...

பாலசுப்ரமனியம் சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

ரசிகன் said...

நல்ல கதை. சிறு வயதில் என் அம்மா எனக்கு தூக்கம் வர சொன்ன கதைகளில் ஒன்று. நினைவு படுத்தியதற்கு நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .