Pages

Friday, April 20, 2012

தண்ணீர் தண்ணீர்.



அப்பா, எதிர் வீட்டு அங்கிள் உங்கள கூப்பிடராங்க என்று மகன் சொன்னதும் வெளியே வந்தான் வாசு. வெளியே பக்க்த்து வீட்டு பெங்காலிகாரன் பட்டாச்சாரியா கோபமாக நின்றுகொண்டிருந்தான். ஆயியே பட்டசார்ஜி . என்றான் வாசு. உள்ள வரதெல்லாம் இருக்கட்டும். என் கூட கீழ வாங்க. நீங்க மேல டாங்க் குழாயை மூடிவக்கிரீங்க கீழ் வீட்டுக்காரங்க எம்மேல கத்துராங்க. நீங்களும் வாங்க என்ன ஏதுன்னு கேளுங்க. நீங்களும் மதராசி, அவங்களும் மதராசி. சரியா பேசி புரியவைக்கமுடியும் பட்டா தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனார்.



சரிப்பா உங்க கூட அவங்க சண்டை போட்டா அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும் ? என்ன ஏன் உங்க கூட கூப்பிடுரீங்க?

பின்ன என்ன பாசு சார் நீங்க பண்ணுர தப்புக்கு நான் வார்த்தைக்கேக்கனுமா? என்ரார் விடாபிடியாக பட்டா. இந்தபெங்காலிக்காரங்க  வியை பி ஆக்கிடுவாங்க அதான் விசு, அவர் வார்த்தையில் பாசு ஆனார். வைத்திய நாதன் பெயரை பைத்திய நாதன்னு சொல்லுவாங்க.

என்ன சார் பெரிய தப்பு? அவங்களுக்கு பூரா நாளும் கீழே தண்ணி வந்துகிட்டுதானே இருக்கு மாடில இருக்குர நமக்குதானே பிரச்சினையே. அப்படியும் அவங்க கார்டனுக்கு டாங்க் தண்ணி பூரா ஊத்தி காலி பண்ணுராங்கன்னுதானே மேல குழாயை மூடி வச்சேன்.

அதான் பாசு அதைத்தான் நீங்க கீழே வந்து அவங்க கிட்ட சொல்லுங்க. என்ரார்பட்டா. சரின்னு வாசுவும் பட்டாசாரியாவும் கீழே போனாங்க.அந்தகுடி இருப்பு பகுதியில் ஒவ்வொரு பில்டிங்கிலும் 4, 4 வீடுகள் இருக்கும் கீழரெண்டு வீடும் மாடியில் ரெண்டுவீடுமாக மொத்தம் 4 வீடுகள் இருக்கும்.


இந்தபில்டிங்கிலும் அப்படியே. கீழே ஒரு வீட்டில் தமிழ் குடும்பம் ஒன்றும், இன்னொரு வீட்டில் பெங்காலி குடும்பம் ஒன்றும் வசித்தார்கள். மாடியிலும் அதே போல ஒரு தமிழ்காரா, ஒரு பெங்காலிக்காரா இருந்தா.கீழே உள்ளவங்களுக்கு மெயின் வாட்டர் எப்பவும் வரும் மாடியில் இருப்பவர்களுக்கு ப்ரெஷர் கம்மி இருப்பதால் மெயின் வாட்டர் பூரா நாளும் வராது. அவங்க டாங்க் வாட்டரை நம்பித்தான் இருப்பாங்க. கீழ் வீட்டு காரங்க அந்த டேங்க் வாட்டரை அவங்க கார்டனுக்கு விட்டு வேஸ்ட் பண்ணுவாங்க. மேல இருப்பவங்க எப்படி சும்மா இருப்பாங்க. முதல்ல எவ்வளவோ சொல்லி பாத்தாங்க கீழ் வீட்டுக்காரங்க கேக்குர வழியா இல்லே. அதான் மேல குழாயை மூடி அவங்களுக்கு தேவைப்பட்டப்போ மட்டும் குழாய் தொரந்துப்பாங்க.

அதுதான் இப்போ பெரிய தகராராக வெடித்துவிட்டது. கீழ் போனதுமே பெங்காலிக்காரன் கத்த ஆரம்பித்துவிட்டான். கீழ் வீட்டு தமிழ் மாமியும் சளைக்காமல் ஆமா நீங்களும் தான் உங்க வீட்டு பால்கனிலேந்து எங்க வீட்டு கார்டனில் தினமும் குப்பை போடுரீங்க.கீழே வரும் பிச்சைக்காரனுக்கு காசு மாடிலேந்தே வீசுரீங்க அதுவும் எங்க கார்டனுக்குள்ள தான் விழுது உங்க வீட்டு குழந்தைகள் தினமும் என்னை மத்யானம் தூங்க விடாம தொம் தொம்னு குதிக்கிராங்க. நாங்க தினமும் வந்து சண்டையா போடுரோம்னு அவள் பாட்டுக்கு கத்தி ஊரைக்கூட்டிவிட்டாள். அக்கம் பக்கம் எல்லாருமே வேடிக்கைபாக்க கூடி விட்டார்கள்.

மாடி வீட்டு தமிழ் காரர் சாந்தமாக இங்க பாருங்கம்மா நாங்க சண்டை போடல்லாம் வரல்லே.டாங்க் நம்ம நாலு வீட்டுக்கும் பொதுவானதுதான்.மேல இருக்கும் டாங்க், மாடி வீட்டுக்காரங்களுக்கு தண்ணிக்கு எவ்வளவுகஷ்டம்னு உங்களுக்கே தெரியுமே அதனாலதானே மாடில இருந்த நீங்க கீழே குடிவந்தீங்க. உங்களுக்குதான் மெயின் வாட்டர் தாராளமா கிடைக்குது இல்லியா அப்புரம் ஏன் டாங்க் வாட்டரை வேஸ்ட் பன்ரீங்க.? எங்களுக்கு அதானே யூஸ்பண்ணி ஆகணும். தண்ணிக்காக நாம ப்வீணாக சண்டை போடவேனாம். என்று வாசு சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட பாட்டா அப்படி உங்க கார்டனுக்கெல்லாம் தனியா தண்ணி வேணுனா சொந்தவீடு கட்டிட்டு போங்க. எங்களை ஏன் கஷ்ட்டப்படுத்துரீங்கன்னு கத்த ஆரம்பித்துவிட்டான். வாசு பாட்டாச்சாரியாவை சமாதானம் செய்து பட்டா நாந்தான் பேசிகிட்டு இருக்கேல நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க என்று சொன்னான்.

பொதுவாக அந்தகுடி இருப்பு பகுதியில் யாருமே அனாவசியமாக சண்டையெல்லாம் போடாமல் சமாதானமாகவே இருப்பவர்கள் தான். இப்ப இந்த தண்ணி பிரச்சினையால மேல இருப்பவங்களுக்கும் கீழே இருப்பவங்களுக்கும் மனவேறுபாடு வந்ததுதான் மிச்சம். பெங்காலி காரன் துணைக்கு கூப்பிட்டதால வாசு கூடப்போக வேண்டி வந்தது.வாசுவிமனைவியோ ரெண்டு தமிழ் காரா ஒத்துமையா இருந்தாலே இவன்களுக்கு கண்ணை உறுத்துமே. நீங்க ஏன் அவன்கூட போனீங்கன்னு வாசுவிடம் கோபப்பட்டாள். தண்ணீர் பிரச்சனையால் ஒற்றுமயாக இருந்த குடும்பங்களுக்குள் மனவேற்றுமை வளர்ந்ததுதான் மிச்சம். இதில் யாருமேல குத்தம் சொல்ல முடியும். சரியான புரிந்து கொள்ளல் இல்லாததால வந்த வினையாகத்தான் இதைப்பார்க்க வேண்டி இருக்கு.

பட்டாச்சார்யாவோ, விடாமல் பாசு நீங்க காரமா அவங்களுக்கு உறைக்கும்படி பேசுவீங்கன்னுதானே உங்களைக்கூப்பிட்டேன். ஆனா உங்க ஆளுங்கன்னதும் நீங்க சமாதானம் பேச ஆரம்பிச்சுட்டிங்க. சே இந்த மதராசிகளே இப்படித்தான்பா நம்பவே கூடாதுன்னு புலம்பிண்டே போனான். வாசுவும் பட்டா கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாருங்க. ஒட்டு மொத்தமா எல்லா மதராசிகளையும் நீங்க இப்படி நினைக்கலாமா? நாம எல்லாருமே வேர வேர ஊரு, வேர வேர பாஷைக்காரங்கதான், வயத்துப்பாட்டுக்காக ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கிரவங்கதான். 15-வருஷமா நாம எதிர் எதிர் வீடுகளில் வசித்துவரோம். ஒத்துமையாதானே இருக்கோம். பார்க்கப்போனா ஒருத்தருக்கொருத்தர் உதவியாதான் இருக்கோம். இப்படி வாசு சொல்லிக்கொண்டிருக்கும் போதே பட்டாவின் 3- வயது பையன் ஆண்டி சாம்பார் சாதம் கொடுன்னு ஆசையாக ஓடிவந்தான் பாசுவின் மனைவியிடம். பட்டா கோபமாக குழந்தையின் முதுகில் 4- அடி போட்டு சம்பார் சாதமாவது ஒன்னாவ்து நம்ம வீட்டுக்குள்ள போடான்னுவிரட்டினான்.  பட்டா குழந்தையை ஏன் கோபிக்கரே

குழந்தையும்தெய்வமும் கொண்டாடும் இடத்திலேன்னு சொல்வாங்க. நாங்க பொல்லாதவங்களா இருந்தா உன் பிள்ளை இப்படி எங்க கிட்ட ஆசையா ஓடிவருவானா சொல்லு. கோபப்படாதே நிதானமா யோசிச்சுபாரு வீணா வேண்டாததெல்லாம் யோசிச்சி குழப்பிக்காதே. வா உள்ள வந்து ஒரு காபி குடிச்சுட்டுபோன்னு சமாதானப்படுத்தினான் வாசு. அரைமனதாக பட்டாவும்  வாசு வீட்டினுள் வந்து சூடாக பில்டர்காபி குடித்ததும் அவன் கோபம்லாம் போன இடம் தெரியல்லே. ஆமா பாசு நீங்க சொல்வது சரிதான். எனக்கு முன் கோபம் ஜாஸ்திதான் சாரிப்பான்னு சொல்லவும் வாசுவும் சிரித்தவாரே அவனை அணைத்துக்கொண்டான்.

35 comments:

பால கணேஷ் said...

பிடிகாலையில உஙக சிறுகதையப் படிச்சதும் அதுல உள்ள பிஷயம் என்னைக் கவர்ந்தது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துலன்னு கதைய முடிச்சது எனக்கு மிகபும் பிடிச்சிருந்தது.

Avargal Unmaigal said...

இந்த தண்ணிக்கா பாவி பசங்க அடிச்சுகிட்டாங்க? நான் வேற ஏதோ தண்ணி என்று நினைத்துவிட்டேன். ஹீ..ஹீ

கோபபட்டவருக்கு காபி கொடுத்து உபசரித்த அந்த தமிழன் பாரட்டுகுரியவர். அவருக்கு எனது வாழ்த்தை சொல்லுங்கள் அம்மா

கோமதி அரசு said...

தண்ணீர் பிரச்சனையால் ஒற்றுமயாக இருந்த குடும்பங்களுக்குள் மனவேற்றுமை வளர்ந்ததுதான் மிச்சம். இதில் யாருமேல குத்தம் சொல்ல முடியும். சரியான புரிந்து கொள்ளல் இல்லாததால வந்த வினையாகத்தான் இதைப்பார்க்க வேண்டி இருக்கு.//

பில்டர் காப்பி குடித்து புரிதலுடன் சந்தோஷமாகி விட்டரே!
புரிதல் இருந்தால் எல்லாம் நலமே.
கதையை அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

நிரஞ்சனா said...

வீட்ல ஏற்படற தண்ணீர்ப் பிரச்னைய சுலபமாத் தீத்துக்க முடிஞ்சது. மாநிலங்களுக்குள்ள ஏற்படற தண்ணீர்ப் பிரச்னையையும் இப்டித் தீர்த்து வைக்க முடிஞ்சுட்டா எவ்வளவு நல்லா இருக்கும்..? ஹூம்...! நல்லா இருந்ததும்மா கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கோபப்படாதே நிதானமா யோசிச்சுபாரு வீணா வேண்டாததெல்லாம் யோசிச்சி குழப்பிக்காதே. வா உள்ள வந்து ஒரு காபி குடிச்சுட்டுபோன்னு சமாதானப்படுத்தினான் வாசு.//

வாசு அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

பொறுமையாகப் பேசித்தான் பிரச்சனைகளை சுமுக்மாகத் தீர்க்க வேண்டும்.

இருப்பினும் முன்கோபம் சிலரால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

கோபம் இருக்கும் இடத்தில் குணமும் இருக்கும்.

நல்ல பதிவு. நன்றி.

GEETHA ACHAL said...

இந்த தண்ணீர் பிரச்சனை எல்லா இடத்திலும் இருக்கின்றது...மிகவும் அழகாக எழுதி இருக்கின்றிங்க..கடைசியில் சுட்டி பையனை வைத்து முடித்தவிதம் அழகு...

ஹேமா said...

முன்கோபம் எத்தனை மனவேதனையைத் தருகிறது.கோபங்கள் குறையும்போது சந்தோஷங்கள் நிறையும்.அருமையான கதை லஷ்மிஅம்மா !

சசிகலா said...

இந்த தண்ணீர் பிரச்சனை எங்கு தான் இல்லை எனினும் அதே தண்ணீர் கலந்த பாலில் காப்பி போட்டு முடித்த விதம அருமைங்க.

ADHI VENKAT said...

தண்ணீரால் இப்படி சண்டையாயிடுத்தே......

குழந்தைகள் தான் முதல்ல சமாதானத்துக்கு கொடி பிடிச்சிட்டு வருவாங்க...

நல்லதொரு கதை.

தாமரைக்குட்டி said...

காரணத்தோடு கதையை முடித்து இருக்கிங்க அம்மா.... முன்கோபம் எனக்கும் கொஞ்சம் இருக்கு....

Akila said...

arumayana kathai... happily following you...

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்மா கதை.

தண்ணீரால் நிறைய பிரச்சனைகள் வரத்தான் போகிறது...

ராஜி said...

மூன்றாம் உலகப்போர் தண்ணிக்குதான் என்பது நடந்துடும் போல இருக்கே

குறையொன்றுமில்லை. said...

ஹா ஹா கணேஷ் நீங்களும் வியை பி ஆக்கிட்டீங்களா? வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அவர்கள் உண்மைகள் என்னங்க நீங்க நம்ம பக்கம்லாம் தண்ணீலாம் கிடையாதுங்க தன்னீர் தண்ணீர்தான் ஹா ஹா

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு நம்ம பில்டர் காபிக்குள்ள திறமையைப்பாத்தீங்கள? வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நிரஞ்சனா வீட்டு அளவுக்குதானே நம்மளால பிரச்சனைகள் தீத்துக்க முடியும் இல்லியா? வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நமக்குள்ள எவ்வளவு பொறுமை சாலிகள் இருக்காங்களோ அந்தளவுக்கு முன் கோபக்காரங்களும் இருக்கத்தானே செய்யுராங்க.

குறையொன்றுமில்லை. said...

கீதா வருகைக்கு நன்றி சுட்டி பையன்கள் ஒவ்வொரு வீட்டிலும் தேவைதான்.

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றிம்மா.சாந்த சொரூபிகளையும் சில விஷயங்கள் முன்கோபக்காரங்களா ஆக்கிடுதே.

குறையொன்றுமில்லை. said...

சசி கலா வருகைக்கு நன்றி அது தண்ணிகலக்காத திக் பாலில் கலந்த டிகிரி காப்பியாக்கும்.அதுதான் கோபம் காணாம போச்சு ஹா ஹா

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அதேதான் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்லதானே.

குறையொன்றுமில்லை. said...

தாமரைக்குட்டி முதல் முறையா என் பக்கம் வரீங்க போல இருக்கு அடிக்கடி வாங்க முன்கோபம் ஒரு குணம் கிடையாதுங்க அதைக்குறைச்சுக்கலாம் ட்ரை பண்ணுங்க . நன்றி

குறையொன்றுமில்லை. said...

அகிலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லா இடத்திலும் தண்ணீர் பிரச்சினை இருக்குபோலத்தான் இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

ராஜி வருகைக்கு நன்றி இனி போரே வேனாம்மா.தாங்காதுபூமி

radhakrishnan said...

அபார்ட்மெண்டஃ வீடுகளில் இதுபோல பிரச்சனைகள் சகஜம். பொறுமையாககஃ கலந்துபேசி தீர்த்துக் கொளவது விவேகம்.அனுபவம் பேசுகிறது போலும்
பகிர்வுக்கு நன்றி அம்மா

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

குழந்தையும்தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

முன்கோபமும் குழந்தையால் தீர்ந்ததே..

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

ஆத்மா said...

நல்ல ஒரு பகிர்வு......

குறையொன்றுமில்லை. said...

சிட்டுக்குருவி வருகைக்கு நன்ரி

ஸ்ரீராம். said...

இந்தத் தண்ணிப் பிரச்னைல நாங்க பட்ட கஷ்டம்லாம் நினைவுக்கு வந்தது....!

மாதேவி said...

நல்ல பகிர்வு.
தண்ணீர் தட்டுப்பாடே பலஇடங்களில் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.

அனைவருக்கும் அன்பு  said...

கோபம் அறிவிற்கு சத்துரு என்பது உண்மைதான் தேவையான விடயம் கூட வாழ்த்துக்கள்

என்னை ஆதரிப்பவர்கள் . .