Google+ Followers

Pages

Wednesday, April 11, 2012

அட்வைஸ்

ஏன் மீனா, நீயாவது சொல்லக்கூடாதா?
 என்னத்தை ச்சொல்ல சொல்ரே? நான் ஒன்னு சொல்லி உடனே கேட்டிருக்கார்னு உண்டா? நா வாயத்தொறந்தாலே, உனக்கு ஒன்னும் தெரியாது, வாய மூடிண்டு இருன்னுதானே அவர்கிட்டேந்து பதில் வரும். சொல்லி சொல்லி  எனக்கே பொறு மை போயாச்சு,இனி அவர் என்ன செய்தாலும் நா ஏதுமே சொல்லப்பொரதில்லேங்குர முடிவுக்கே வந்துட்டேன்மா. அவர் இஷ்ட்டப்படியே நடக்கட்டும்.
இப்படி ,அப்பவும் சொன்னாப்ல ஆயிடுத்தா?.குடும்பம்னா அப்படி இப்படி இருக்கு ம் தான்.அதுக்காக எப்படியோ போகட்டும்னு விட்டுட முடியுமா?குடும்பத்லஒரு புருஷனுக்கு எவ்வளவு பொறுப்புகள் இருக்கோ, அதேபோல மனைவிக்கும் இருக்கு. ஒரு புருஷன் பொறுப்பாகவும் பதவிசாகவும் நடந்துகொண்டால் அவன்பொண்டாட்டி கெட்டிக்காரின்னும், அதே அவன் பொறுப்பில்லாமல் நடந்துண்டா அவன் பொண்டாட்டிக்கு சாமர்த்தியமே போராதுன்னும்தானேசொல்லுவா? அவன் எப்படி இருந்தாலும் பெத்த பேரு என்னமோ மனைவியைத்தான் சேரும் . அதனால நீ தான் கொஞ்சம் அனு சரிச்சுண்டு போகனும். மீனாவுக்கு திருமணம் முடிந்து ஒருவருடம் தான் ஆகி இருந்தது. அதற்குள் கணவன் மனைவிக்கிடையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் அடிக்கடி வந்தது. அப்படி ஒரு சமயம் அம்மா வீடு வந்த மகளிடம் தாய் நல்ல புத்தி சொல்லிக்கொண்டிருந்தாள்.அவங்க இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சினை என்று அந்த தாய்க்கு புரிந்துகொள்ளவே முடியல்லே.

இத்தனைக்கும் மீனாவும், சங்கரும் 3- வருடங்களாக காதலித்து பெரியவர்களின் சம்மதத்துடன் தான் திருமணமும் செய்துகொண்டனர். அப்படி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டபிறகும் என்ன பிரச்சினைக்காக இப்படி அடிக்கடி தகராறு பண்ணிக்கரான்னு அந்த அம்மாவுக்கு புரியல்லே. இதை இப்படியே விட்டுட்டுடக்கூடாதுன்னு நினைச்சா. என்ன இருந்தாலும் அம்மா விடம் மனம் விட்டு பேச தயக்கமா இருக்
கு போன் பண்ணி வர்ச்சொல்லி இருந்தாள்.

புஷ்பாவும் அன்று மாலையே வந்தாள். தோழிகள் இருவரும் மனசு விட்டு பேசட்டும் என்று அம்மா அவர்களுக்கு காபியும் தின்பண்டங்களும் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டாள். புஷ்பாவும் ஆர்வமாக மீனாவிடம்
 ஏய் மீனு எப்படி இருக்கே? திடீர்னு அம்மா வீடு வந்திருக்கே ஏதும் குட் நியூசாடீ? என்று கேலி பேசி மீனாவை கல கலப்பாக்கினாள். போடி அப்படில்லாம் ஏதுமில்லே நான் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கேன். அம்மாகிட்டகூட மனம் விட்டு பேசமுடியல்லேடி நல்ல வேளை நீ வந்தே. வா நாம எங்கானும் வெளியே போயி பேசலாம் என்றாள் . ஏண்டி வெளியே போகணும்/ இங்கதான் யாருமில்லியே நீயும் நானும் மட்டும்தானே. சும்ம சொல்லு ஏதானும் பிரச்சனையாடி என்ராள்புஷ்பா. இல்லெடி,  வீட்டுக்குள்ள வச்சு என்னால பேசமுடியல்லே. நாம டெரசுக்கு போயிடலாம் என்றாள். இருவரும் டெரசில்போய் கைப்பிடி சுவர்மேல் அமர்ந்து கொண்டார்கள்.மேலே டெரசில்

சின்ன சின்ன மண் தொட்டிகளில் ரோஜா, மல்லி, முல்லை பிச்சி பூக்கள் போட்டிருந்தார்கள். சுகமான காற்றில் அந்தமலர்களின் வாசம் சுகமாக இருந்தது.ஏன் மீனு நீயும் சங்கரும் எவ்வளவு நாள் இந்த டெரசில் உக்காந்து மணிக்கணக்கில் பேசிட்டு இருப்பீங்க எவ்வளவு சந்தோஷமான  நாட்கள் இல்லியா? ஆமா அங்க உங்க வீட்ல டெரஸ் இருக்கா? என்றாள் புஷ்பா.
மீனாவோ வெறுப்பான குரலில் போடி வீடே புறாக்கூண்டு சைசில்தான் இருக்கு இதில் டெரசாவது ஒன்னாவது?.ஏய் புஷ் நானும் சங்கரும் லவ் பண்ணின நாள் தொடங்கி நான் எல்லா விஷயமும் உன் கிட்ட சொல்லி இருக்கேன் இல்லியா?

அப்பல்லாம் சங்கர் என் மனதில் ரொம்ப எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திட்டார்டி.
 என்கூட பேசும்போதும் எனக்கு எழுதும் லெட்டர்களிலும் என்னை உயரே உயரே பறக்கவச்சிருந்தார். மீனு என்மஹாராணிக்காக ஒருமாளிகை கட்டி  அதில் என் ராணியை சொகுசாக வைத்திருப்பேன். எல்லா வேலைகளுக்கும் வேலை ஆட்கள் வச்சு உன்னை ஒரு வேலையும் பண்ண விடமாட்டேன் என்னைமட்டும் நல்லா கவனிச்சிண்டா போதும்.
 ஊரில் இருக்கும் அப்பா அம்மா,தங்கை தம்பிகளுக்கு தேவையான பணம் அனுப்பிடலாம். நம்ம தனி வீட்டில் நாம இருவர்மட்டுமே சந்தோஷமா இருக்கலாம் வருடம் ஒருமுறை எங்காவது ஹில் ஸ்டேஷனுக்கு பிக்னிக் போய் வரலாம் மொத்தத்தி லைஃபை நல்லா எஞ்சாய் பண்ணலாம்னு எனக்கு ஆசை வார்த்தைகள் பேசி என் எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் ஏற்றி விட்டார்.

நானும் அவர் சொன்ன கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனா அவர் எதிர்பார்த்தமாதிரி வேலையில் பிரமோஷன் கிடைக்கலே.  ஆகவே போதிய வருமானம் இல்லாததால் ஊரில் ஒரு குடும்பம் இங்க நாங்க இருவர் மட்டும் என்பதெல்லாம் நடை முறையில் சாத்தியப்படல்லே. எனக்காக மாளிகையே கட்டித்தரேன்னு ஆசை ஆசையா சொன்னவரால மாளிகையின் அவுட் ஹவுஸ் அளவுக்கு ஒரு சிறு ரூம்தான் வாங்க முடிந்தது. அதுவும் அவரின் பெற்றோர் உடன் பிறந்தவங்க எல்லாருமே இங்கயே வந்துட்டாங்க. குடும்பம் பெரிசானதால் செலவை சமாளிக்க நானும் வேலைக்கு போகனும் என்கிர நிலமை.எனக்கும் சங்கருக்கும் தனியே பேசிக்கொள்ளகூட முடியாம போச்சு.
அவங்க அம்மா அப்பா, தம்பி தங்கைகள் என்மேல பிரியமாதான் நடந்துக்கராங்க. சங்கரும் அதே அன்புடந்தான் இருக்கார். என் கற்பனை வாழ்க்கை என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. லவ் பண்ணும்போது சங்கர்பேசிய ஆசை வார்த்தைகளில் நான் மனக்கோட்டையை மிகப்பெரிதாக கட்டிக்கொண்டு இறங்கி வரமுடியாம  தவிக்கிரேண்டி.இது தான் என் பிரச்சனையே அம்மாவோ நானும் சங்கரும் சண்டை போட்டுக்கொள்வதாக எண்ணி எனக்கு அட்வைஸ் பன்ராங்க. அதான் எல்லாம் உன்கிட்ட சொன்னேன்
 டியர் மீனு இதெல்லாம் ஒரு பிரச்சனையா? நீ புத்திசாலி பொண்ணு நன்னா யோசிச்சு பாரு இதில்சங்கர் மேல எந்த தவறும் இல்லே. அவன் எதிர் பார்த்தபடி எதுவும் நடக்கலே. அவனின் வயதான பெற்றோர் எங்க போவாங்க சொல்லு.

காதலிக்கும்போது காதலிக்காக வானத்தையே வில்லாக வளைப்பேன் என்று வசனம்லாம் பேசலாம். ஆனா நிஜத்தில் அதெல்லாம் முடியுமா சொல்லு.
நீயே நிதானமா யோசித்து இந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ப உன்னை தயார் செய்துக்கோ உன்னால முடியும். காலம் இப்படியே இருந்துடாது. வயசு இருக்கு சந்தோஷமான வாழ்க்கை இருக்கு. மனசை லேசாக்கி கொண்டு சங்கர் வீட்டுக்கு கிளம்பி போ அவன் நீ இல்லாம தவிச்சு போயிடுவான். மீனாவும் தோழியைகட்டிக்கொண்டு நான் ரொம்ப குழம்பிட்டேண்டி. நீ சரியான  சமயத்தில் வந்து யோசனை சொன்னே. இதுக்குதான் நல்ல நட்பு வேணும்.
அம்மாவிடமும் விரமாக சொல்லிட்டு நாளையே கிளம்புரேன் புஷ்பா தேங்க்ஸ்

38 comments:

sasi said...

lakshmi amma !! nice blog ,, good advice to the youngsters !! :) :)

sasi said...

lakshmi amma !! nice one.. good advice to the youngsters !! :) :)

Asiya Omar said...

நல்லாயிருக்கு லஷ்மிமா.

கோமதி அரசு said...

அருமையான கதை.

நல்ல நட்பு வாழ்க!

Mahi said...

நல்ல அட்வைஸ்!:)

கணேஷ் said...

அவரவருக்கும ஆசை நிறைய உண்டுதான். எல்லாம் நிறைவேறக் கொடுப்பினை வேண்டுமே... கணவன் அன்பாய் இருப்பதே பெரிய வரம்தான். அதை கதாநாயகிக்கு அழகான அட்வைசின் மூலம் புரிய வைத்து விட்டீர்கள். எங்களுக்கும் தான்...

Avargal Unmaigal said...

காலத்திற்கு ஏற்ற தரமான அட்வைஸ். அருமையான கதை அம்மா

ஸ்ரீராம். said...

ஆசைகளுக்கும் நிதர்சனங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் பிரச்னை இல்லை என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

கோவை2தில்லி said...

அழகான கதை.

அமைதிச்சாரல் said...

கதை ரொம்ப அழகாருக்கு லக்ஷ்மிம்மா..

கனவுகளுக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் நிறையவே வித்தியாசமிருக்கு.

vanathy said...

nice story.

raji said...

gud one.thanks for sharing

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதைம்மா.... தேவையான அறிவுரை....

Lakshmi said...

sasi வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றீ

Lakshmi said...

கணேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2 தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வானதி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

கே. பி. ஜனா... said...

வாழ்க்கைக்குத் தேவையான அட்வைஸ்!

வல்லிசிம்ஹன் said...

மிகவும் தேவையான பதிவு. யதார்த்த வாழ்வை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் லக்ஷ்மி.

மகேந்திரன் said...

தகுந்த நேரத்தில்
சரியான புத்திமதி...

ஸாதிகா said...

அருமையான கதை லக்‌ஷ்மிம்மா.உங்களுக்கே உரித்தான அழகிய எழுத்து நடையில் அமைத்து இருப்பது அருமையிலும் அருமை.

Lakshmi said...

கே. பி ஜனா வருகைக்கு நன்றி

Lakshmi said...

வல்லி சிம்ஹன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Ramani said...

இன்றைக்கு அனைவருக்குமான
அருமையான விஷயத்தை
அழகான கதையாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

Ramani said...

tha.ma 7

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

துரைடேனியல் said...

மனக்கோட்டைகள் கட்டுவது தவறல்ல. ஆனால் யதார்த்த உலகையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான கதை. அழகு.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. வாழ்வு சொர்க்கமாவதும் நரகமாவதும் பணத்தால் அல்ல. மனத்தால்.

radhakrishnan said...

எளிதில் நடக்க முடியாதவற்றைச் சொல்லி நம்ப வைத்து ஏமாற்றுவதும்
தவறுதான்.அதறகாக என்ன செய்ய முடியும்?பிரத்யட்சநிலையைப் புரிந்து
கொண்டு வாழ்வதுதான் நல்லது.
நல்ல அட்வைஸ்,நல்ல கதை
நன்றி அம்மா

என்னை ஆதரிப்பவர்கள் . .