Google+ Followers

Pages

Monday, April 16, 2012

விவாஹம்

 நான் குடி இருக்கும் பில்டிங்கில் கீழ் வீட்டில் வசிப்பவர்களின் பெண்ணுக்கு கல்யாணம் என்று பத்திரிக்கை கொடுத்து வீட்டுக்கு வந்து அழைத்தார்கள். ஏப்ரல் 15- சண்டே கல்யாணம். நான் எவ்வள்வோ கல்யாணங்களில் கலந்துகொண்டிருக்கேன். ஆனா மலயாளி நாயர்குடும்பத்து கல்யாணத்தில் இப்பதான் முதல் முறையாக கல்ந்துக்கப்போரேன் ஒவ்வொரு பிரிவினரின் கல்யாணமும் ஒவ்வொரு விதம் இல்லியா? இதுவும் ஆரம்பத்திலிருந்து  பார்க்கணும் என்று கிளம்பினேன். காலை 10. 15-க்கு முஹூர்த்தம் என்று கார்டில் போட்டிருந்தது. நான் இருந்தது அம்பர் நாத். கல்யாணம் உல்லாஸ் நகர் என்னும் இடத்தில். ஒரு ஹோட்டலில் இருந்தது. 10-மணிக்கு கிளம்பி உல்லாஸ்னகர்போனேன். அம்பர் நாத் டு உல்லாஸ் நகர் 7-கிலோ மீட்டரில் இருந்தது.  ஆட்டோவில் இடம் தேடிப்போகும்போதே 10. 30 -ஆனது. ஹோட்டல் வாசலில் போர்ட் எதுவும் வைக்கலே. வாச்மேனிடம் விசாரித்துக்கொடு மாடியில் ஹால் போனேன். ஒரே ஆச்சர்யமா போச்சு.ஹால்லாம் நல்லா பெரிசா, நிறையா சேர்லாம் போட்டு நல்லாதான் இருந்தது. ஆனா பேருக்கு கூட ஒரு ஈ காக்கா இல்லே. எனக்கு டௌட் ஆச்சு இங்கதான் , இன்னிக்குதான் கல்யாணம் இருக்கா, இல்லேன்னா நாமதான் இடம் மாறி வந்துட்டோமான்னு ஒரே குழப்பம். சரின்னு முன்னாடிபோய்ப்பார்க்கலாம்னு போனேன். மேடைமட்டும் நல்லா லைட் எல்லம் போட்டு அலங்காரமாக
                                            
இருந்தது. மலையாள முறைப்படி  பெரிய, பெரிய 10- பித்தளை விளக்குகள் எண்ணை திரி போட்டு, மல்லிகை மலர்மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது.ஒரு தட்டு நிறையா எலுமிச்சம் பழங்கள். ஆரஞ்ச், சாத்துகுடி ஆப்பிள் பழங்கள் இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கும்போதே11- மணிக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். அப்புரம் போட்டோ கிராபர்கள் வந்து அவர்களின்ஸ்டாண்ட், குடைஎல்லாம் ரெடி பண்ணினார்கள்.
                                          
பண்டிதர் என்று யாரும் இல்லே. பெரியவங்களே 10- குழந்தைகளிடம் ஒரு தட்டு கொடுத்தாங்க. அந்த தட்டில் கொஞ்சமாக அரிசி பரப்பி அதன் மேல் சின்ன பித்தளை விளக்கும் ஏற்றி இருந்தது. 10 பெண் குட்டிகளுடன் கல்யாணப்பெண்ணின் அம்மா, உறவினர் சிலரும்  அதே போல கையில் ஒரு தட்டில் சின்னபித்தளை விளக்கு ஏற்றி மாப்பிள்ளை அழைக்க சென்றனர். மேளம் நாதஸ்வரக்காரா அப்பதான் வந்தா. அந்த சத்தம் காதில் கேட்டதும் தான் இங்க இன்னிக்கு கல்யாணம் நடக்கப்போரதுன்னே நினைக்கமுடிந்தது. வாசல்பக்கம் போய் மேளதாள்த்துடன் மாப்பிள்ளையை அழைத்து வந்தனர். மணையில் மாப்பிள்ளை அமர்ந்ததும், பெண்ரூமிலிருந்து பெண்ணையும் அழைத்து வந்தனர். பெண்ணையும் பிள்ளையும் தனிதனியாக மேடையை இருமுரை சுற்றி வர சொன்னார்கள். பிறகு மாப்பிள்ளை கையில் தாலி செயினைக்கொடுத்து பெண்கழுத்தில் கட்ட சொன்னார்கள். ஒரே நிமிஷத்தில் தாலிகட்டி கல்யாணம் நடந்தது. மேடையில் உள்ள சொந்தக்காரர்கள்மட்டுமே பூபோட்டூ ஆச்சிர்வாதம் செய்தார்கள். தாலிகட்டினபிறகுதான் பெண் மாப்பிள்ளை கழுத்தில் பூமாலை போட்டா, மாப்பிள்ளை பெண் கழுத்தில் பூமாலை போட்டார்.
                                                                                            
                       பிறகு பெண் தன் ரூமுக்குள்ளும் மாப்பிள்ளை தன் ரூமுக்குள்ளும் போய்விட்டார்கள்.   ஹால் இன் ஜார்ஜ் காரா உடனே மேடையில் சேர்ந்திருக்கும் பூக்களை வாரி குப்பையில் போட்டு மேடையை 4- சோபா செட் போட்டு ரிசெப்ஷனுக்கு த்யாராக செய்தர்கள்.12-மணிக்கு பெண்ணும் பிள்ளையும் ரிசெப்ஷன் ட்ரெசில் மேடைக்கு வந்தார்கள்.கோட் சூட்போட்டு மாப்பிள்ளையும் டிசைனர் சாரியில் பெண்ணும் இருந்தார்கள். வரிசையா மொய் எழுதுபவர்கள் போய் கிப்ட் கொடுத்து போட்டோவும் எடுத்துண்டு லஞ்சுக்கு போனோம்
                                            
\பஃபே லஞ்ச். வரிசையில் நின்னு ப்ளேட் கப், ஸ்பூன் எல்லாம் எடுத்துண்டு போனோம் முதலில் சாட் ஐட்டமும், அடுத்து நார்த்த் இண்டியன் டிஷும் வரிசையா இருந்தது. குலோப்ஜாமுன் ஒன்னு, ருமாலி ரொட்டி ஒன்னு ஒரு கரண்டி  பச்சைப்பட்டாணி புலாவ், பூந்தி ராய்த்தா, ஒரு பாஜி எடுதுண்டு உக்கார சேர் ஏதானும் காலி இருக்கான்னு கையில் ப்ளேட்டுடன் நடக்கும்போதே எதிரில் வந்த சின்ன பொடியன் வேகமா வந்து மோதியதில் ப்ளேட்டில் உள்ள் ஐட்டம் எல்லாம் ஒன்னுடன் ஒன்னுகலந்துபோயிடுத்து. புலாவ்கூட குலாப் ஜாமுனின் ஜீரகலந்து அசட்டு டேஸ்ட் ஆச்சு. ருமாலி ரொட்டியும் பூந்தி ராய்த்தாவும் ஜோடி சேர்ந்துச்சு. எப்படியோ சாப்பிட்டு முடிச்சேன் வேஸ்ட் பண்ண முடியுமா. கை அலம்ப போகும்போதுதான் பாத்தேன் லாஸ்ட் டேபிளில் பூராவும் மலயாள சமையல் ஐட்டங்கள் நிறம்பி இருந்தது. அவியல், ஓலன் காளன் மாம்பழ மோர்கூட்டான் புழுங்கல் அரிசி சோருன்னு

 பாக்க பாக்க கோவமா வந்தது. முதல் டேபிளில் இதெல்லாம் வைக்கமாட்டாளோ ? இந்த லஞ்ச் டைம்ல நம்ம வழ்க்கம்படி ஒரு சாப்பார், ரசம் மோருடன் சாப்பிடாதானே சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும். சாட் ஐட்டம் எனக்கு அவ்வளவா பிடிக்காது. முதல்லயே என்கண்ல இதெல்லாம் படாமபோச்சேன்னு நினைச்சுண்டேன். எவ்வளவு தேடியும் தயிரோ மோரோ கண்லயே காணலே. எனக்கு மோர்சாதம் ஒருவாயாவது சப்பிட்டாதான் சாப்பிட்ட திருப்த்தியே இருக்கும். ஐஸ் கிரீம் இருந்தது அது கொஞ்சம் சாப்பிட்டு  கிளம்பினேன். எல்லாரிடமும் சொல்லிண்டு வாசலில் வந்தேன். பொதுவா கல்யாணங்களில் தாம்பூல பை கொடுப்பது வழக்கம் உண்டு. இங்கு அதுவும் இல்லே. எண்ட்ரன்சில் ஒரு தட்டு நிறையா எலுமிச்சம்பழம் வச்சிருந்தா. ஆளுக்கொரு எலுமிச்சம் பழம் கொடுத்தா. லஞ்சில்கூட பாயாசமே இல்லே.

 எங்க பக்கம் கல்யாணம் என்றால் தாம்பூல பையில் வெத்திலைபாக்கு தேங்காயுடன் பெரிய முறுக்கும் லட்டுவும் கண்டிப்பா இடம்பெற்றிருக்கும். மேடையிலும் பட்சணங்களின் அணீவகுப்பும் கண்டிப்பா இருக்கும். வைதீக சடங்குகளும் நிறையா இருக்கும். அப்படி பார்க்கும்போது இந்தகல்யாணம் எனக்கு வித்யாசமாதோனுச்சு. இதை நான் குத்தமா சொல்லல்லே ஒவ்வொருவர் பழக்கவழக்கங்கள் ஒவ்வொருமாதிரிதானே இருக்கும் ஒரு அனுபவமாக சொன்னேன் அவ்வளவுதான். டேக் இட் ஈசி..
 வீடு வந்ததும் ப்ரிட்ஜிலேந்து ஜில்லுனு ஒருக்ளாஸ் மோர் குடிச்சேன். அப்பதான் அப்பாடானு இருந்தது..

46 comments:

பழனி.கந்தசாமி said...

டைமிங்க் கரெக்ட். நீங்கதான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால போனா கல்யாண்க்காரங்க என்ன பண்ணுவாங்க.

இங்க கோவையிலும் அப்படித்தான் ஒரு நாயர் கல்யாணத்துக்கு அவங்க சொன்ன டைமுக்கு போனா, மண்டபத்துல ஈ, காக்கா இல்லை. நீங்க எழுதின மாதிரியேதான் எல்லாம் மெதுவா நடந்தது.

உங்க பதிவப் பார்த்ததும் நாயர் கல்யாணம் எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

மகேந்திரன் said...

நான் சில கேரள திருமணங்களை பார்த்திருக்கிறேன் அம்மா...
திருவனந்தபுரம், பாலக்காடு... போன்ற தமிழக எல்லைகளை
ஒட்டியுள்ள ஊர்களில் தான் கொஞ்சம் தமிழக முறைப்படி
திருமணங்கள் நடக்கின்றன.. பொதுவாக நீங்கள் கூறியபடிதான்
கேரளா திருமணங்கள் நடக்கின்றன..

sury said...

//இதை நான் குத்தமா சொல்லல்லே ஒவ்வொருவர் பழக்கவழக்கங்கள் ஒவ்வொருமாதிரிதானே இருக்கும் ஒரு அனுபவமாக சொன்னேன் அவ்வளவுதான். டேக் இட் ஈசி//

That's fine.

subburathna sharma.
http://pureaanmeekam.blogspot.in

Avargal Unmaigal said...

எனக்கும் கடந்த மாதம் இதே அனுபவம் பக்கத்து வீட்டுகாரரின் 40 வது பிறந்த நாள் விழாவில் ஏற்பட்டது

இராஜராஜேஸ்வரி said...

நாயர் வீட்டு கல்யாணம்.

வித்தியாசமான கல்யாணம்...

ஸாதிகா said...

நாயர் வீட்டு கல்யாணத்துக்கே அழைத்துகொண்டு போனாற்போல் பதிவு யதார்த்தமாக இருந்த்து.

கோமதி அரசு said...

கல்யாண வீட்டு அனுபவம் நன்றாக இருக்கிறது.

Mahi said...

வித்யாசமான விவாஹமாகத்தான் இருக்கு லஷ்மிம்மா! :)

கணேஷ் said...

அட... இந்தக் கல்யாண அனுபவம் வித்தியாசமா இருந்ததோட என்னால ரொம்பவே ரசிக்க முடிஞ்சது. மலையாள சாப்பாட்டு ஐட்டங்களை ருசி பாக்கணும்னு எனக்கும் ரொம்ப நாள் ஆசை. சான்ஸை இதுல மிஸ் பண்ணிட்டிங்களேம்மா...

நிரஞ்சனா said...

நான்லாம் Marriage attend பண்ணினா.. ரெகுலரா வீட்ல சாப்பிடற ஐட்டம் இலலாம புதுசா என்ன கிடைக்குமனு தான் பாப்பேன்... உங்களுக்கு தயிர் சாதம் இல்லாட்டி சரியா வராதா Aunty? டயத்துக்கு மண்டபத்துக்குப் போயி நீங்க Wait பண்ணினது நல்ல அனுபவம். நல்லா இருந்துச்சு உங்க Sharing!

வல்லிசிம்ஹன் said...

லக்ஷ்மி மா. பாவமே. இப்படிக்கூட யாராவது ஏமாறுவார்களா.
நானும் பசி அவசரத்திலும் நிறைய சாப்பாடு ஐட்டம்களை மிஸ் செய்திருக்கிறேன். அப்படியே இனிமே எங்கயும் போவதற்கு முன்னால் வீட்டில் சாதம் செய்து வைத்துவிடுங்கோ!! சூப்பர் வர்ணனை.

கோவை2தில்லி said...

நானும் கோவையில் இருந்த போது இந்த மாதிரி ஒரு நாயர் கல்யாணத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். ரொம்ப சிம்பிள்.....

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி தில்லியில் ஒரு ரிசப்ஷனுக்கு சென்றோம். பஃபேயில் நார்த் இண்டியன் ஐட்டம், கேரள ஐட்டங்கள் என்று எல்லாமே கலந்து இருந்தது.

தாம்பூல பையெல்லாம் யாரும் இப்போது குடுப்பது இல்லைமா. வாசலிலும் வரவேற்புக்கு என யாரும் நிற்பதுமில்லை.

radhakrishnan said...

நம் திருமணங்கள் போல விரிவான சடங்குகள் பிற திருமணங்களில் இல்லை போலும். நான் குருவாயூர் கோயிலில்
நாயர் திருமணம் போயிருந்தேன்.பல திருமணங்கள் வரிசையாக ஒன்றனபின் ஒன்றாக கோயில் எதிரே உள்ள சிறு மேடையில்நடந்ததுஅரைமணிநேரத்துக்குள்தான்.பிறகு ஹோட்டலில் தயார் நிலையில் வைக்கப் பட்ட மலயாளச்சாப்பாடு.நீங்கள் சென்ற

திருமணத்தில் அவரவருக்கு
வேண்டியபடி
-சாப்பிடுவதறகாகஇரண்டுமே
இருந்திருக்கிறது.


மதியம் சாப்பிட்டபின்ஹோட்டலில் ரூமகளைக் குறைத்து மாற்றிக் கொடுத்துவிட்டார்கள்.ரூமையெல்லாம் குறைத்து மாற்றிக் கொடுத்துவிட்டார்கள் உடனே கிளம்பலாம் என்று அர்த்தம் போலும்.
நம் திருமணங்கள் தினுசே வேறு.
இதில் முன்பு 5 நாள் கலயாணம் வேறு.
இப்போதெல்லாம் பெருநகரங்களில் நடக்கும் நம் திருமணங்களிலும் மதியமேஎல்லாம் முடித்துக் கிளம்பிவிடுகிறார்கள். மண்டபமே காலி.வெளியூர்கார்ரஃகள் பாடு திண்டாட்டம்தான்.காலமாற்றம்
நல்ல மலயாளச்சாப்பாட்டை மிஸ் பண்ணிவிட்டீர்களே.
பகிர்தலுக்கு நன்றி அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அனுபவம்....

ராஜி said...

வித்தியாசமான ஒரு கல்யாணத்தை கண்முன் நிறுத்தியிருக்கீங்க. அலங்காரம் சும்மா ஜம்ம்னு இருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு அனுபவத்தை நயம் பட எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Lakshmi said...

பழனி கந்தசாமி சார் வருகைக்கு நன்றி. பொதுவாகல்யாணங்களுக்கு முஹூர்த்த நேரத்துக்கு 10- நிமிடங்களுக்கு முன்பு தானே செல்வோம். நான் போனதோ 15 நிமிடங்களுக்கு பிறகுதானே.

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி. ஜனங்களில் எத்தனை பிரிவு? எத்தனை சம்ப்ராதாயங்கள்பார்க்கும்போதுதானே புரிகிரது இல்லியா?

Lakshmi said...

சூரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கு நன்றி
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவங்கள்.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி
ஆமா வித்யாசமாதான் இருந்தது.

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமா கணேஷ் நல்ல சாப்பாடை மிஸ்பண்ணிட்டேன். இனிமேல இந்தமாதிரி பஃபே விருந்துகளில் முதலில் என்னல்லாம் ஐட்டம் இருக்குன்னு ஒரு ரவுண்ட் அடிச்சுட்டுதான் ப்ளேட்டில் ரொப்பிக்கனும். வருகைக்கு நன்றி.

Lakshmi said...

நிரஞ்சனா முதல் முறையா உங்கள இங்க பாக்குரேன். அடிக்கடி வாங்க ரசனைக்கும் வருகைக்கும் நன்றி.

Lakshmi said...

வல்லிம்மா, நீங்களும் நல்லா ரசிச்சீங்களா சந்தோஷமா இருக்கு. நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி எந்த வீட்டு கல்யாணமோ அவங்க வீட்டு முறைப்படியான சாப்பாட்டை முத்லில் வச்சிருக்கலாமில்லே. வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராதாகிருஷ்னன் சார் அடிக்கடி காணாம போயிடுரீங்க. என் கல்யாணமே 4- நாள் கல்யாணமாதான் நடந்தது 54-வருடங்களுக்குமுன்பு. ஹா ஹா. அந்தக்காலத்தை நினைச்சு இந்தக்காலத்தை ஒப்பீடு செய்யக்கூடாதுதான். ஒரு புது அனுபவமாக எடுத்துக்கலாம் அவ்வளவுதான்.

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்ரி ஆமா அலங்காரம்லாம் ரொம்ப சூப்பராதான் இருந்தது.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

ஸ்ரீராம். said...

படிக்க சுவாரஸ்யமாக இருந்தது கிட்டத்தட்ட இதே போன்ற எங்கள் அனுபவத்தை எங்கள் ப்ளாக்கில் ஒன்றரை வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தோம்.நாங்கள் சென்ற கல்யாணத்திலும் எ. பழம் தான் இருந்தது. சில அலங்காரங்கள் மிக அழகாக, ஸ்பெஷலாக இருந்தன. படங்களுடன் பதிவிட்டிருந்தோம் !

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி உங்க லிங்க் கொடுத்திருக்கலாமே.

தமிழ்தோட்டம் said...

கலக்குறீங்க

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Lakshmi said...

தமிழ் தோட்டம் அப்படியா சொல்லுரீங்க நன்றி

Nambi said...

Dear Amma,

UngaLai appadi kooppidaNumnu thonuchchu...

Naan ungaLoda regular vaasagan. Ennoda favourites-la KuRai ondRumillai irukku. KuRippaa, ungaLoda Thirunelveli ninaivuGal, thorumaNamaanadhum Poona vandhu pugundha veettin anubavangaL ellaam romba rasichchu padichchirukkaen. Ennoda kuzhandhaigaLukkum adhaiyellaam solli irukkaen. AvvaLavu arumaiyaa pagirndhu irundheenga...

En muzhupeyar M.A.Arulnambi... Sondha oor Thirunelveliyo Kanniyakumariyo illa... Madras thaan... Manaivi Velur... 2 kuzhandhagaL... Magal Architecture 2nd year... Son 7th poRaan... Naan Infosys-il Regional Manager aaga Chennai and Chandigarh paarththu kondu irukkiraen.

Yen email ID arulnambima@gmail.com. ThangaL mugavariyai theriya paduththavum.

Nandri...

Lakshmi said...

அருள் நம்பி வருகைக்கு நன்றி என் பதிவெல்லாம் படிச்சிருக்கீங்கன்னு சொல்ரிங்க ஏன் பின்னூட்டமே போடலே? நீங்கல்லாம் என் எழுத்தை ரசிச்சு படிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் மெயில் முகவரி echumi@gmail.com
நீங்க மெயில் அனுப்புங்க நானும் பதில் அனுப்புரேன்.

ஸ்ரீராம். said...

http://engalblog.blogspot.in/2010/03/blog-post_12.html

கொடுத்துட்டாப் போச்சு....! இதோ லிங்க்!

Lakshmi said...

ஸ்ரீ ராம் லிங்க் கொடுத்தத்ற்கு நன்றி இப்பவே வரேன்.

Lakshmi said...

ஸ்ரீராம் கேரள கல்யாணம் பாத்து ரசித்துவந்தேன். பின்னூட்டம் போட ஓபனே ஆக மாட்டேங்குது. அதான் இங்க சொல்ரேன். நான் பார்த்தகல்யாணத்தில் இவ்வளவு பூ அலங்காரங்கள் எல்லாம் இல்லே (இது பாம்பே ஆச்சே).உங்க பதிவும் சூப்பரா இருந்துச்சு,

ஸ்ரீராம். said...

நன்றி லக்ஷ்மிம்மா....

Asiya Omar said...

சிம்பிள் விவாஹம்.நீங்க திருப்தியாக சாப்பிடலையேன்னு இருக்கு.

Lakshmi said...

ஆமா ஆஸியா இனிமேல எங்க என்ன இருக்குன்னு பாத்துட்டுதான் சாப்பிடவே ஆரம்பிக்கலாம்னு தோனுச்சு. வருகைக்கு நன்றி

மாதேவி said...

வித்தியாசமான கல்யாணம்.

என்னை ஆதரிப்பவர்கள் . .