Pages

Monday, April 23, 2012

ஸ்டஃப்ட் பிண்டி.

வெண்டைக்காயைத்தான் இங்க பிண்டின்னு சொல்வாங்க.
 தேவையான பொருட்கள்.
                                              
பிஞ்சு வெண்டைக்காய்கள்.--------     10 அல்லது 15.
ஸ்டஃப் பண்ண தேவையான பொருட்கள்.
மஞ்சள் பொடி-------------   ஒரு டீஸ்பூன்.
பெருங்காயப்பொடி------ ஒரு டீஸ்பூன்.
எள்ளு பொடி--------------- ஒரு டேபிள் ஸ்பூன்.
 (எள்ளை வெரும் கடாயில் சிவக்கவறுத்து பொடிக்கவும்.)
 மிளகாய்ப்பொடி-------------    ஒரு ஸ்பூன்.
 கரம் மசாலா பொடி---------  ஒரு ஸ்பூன்
தனியா பொடி----------------  ஒரு ஸ்பூன்.
உப்பு---------------------------- தேவையான அளவு
தாளிக்க எண்ணை--------- 2  ஸ்பூன்
தயிர்-------------------------   ஒரு கரண்டி.
                
                                                         
 செய் முறை
 வெண்டைக்காய்களை நன்கு அலம்பி துணியால் ஈரம் போக துடைத்து
 கொள்ளவும். காம்பையும் நுனியையும் நீக்கிவிட்டு நீளவாக்கில் நடுவில் கீறி
 கொள்ளவும்.
ஸ்டப்பிங்குக்கு சொன்ன பொடி வகைகளை தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட்
போல தயார் செய்து கொள்ளவும். கீறி வைத்துள்ள
 வெண்டைகாய்களில் இந்தபேஸ்டை அடைக்கவும்.
                                                                      
கடாயில் 2- ஸ்பூன் எண்ணை ஊற்றி அடைத்த வெண்டைக்காய்களைப்போடவும்.  கண்ணுள்ள தட்டால் மூடி வைக்கவும்.
2- நிமிடங்களுக்கு ஒருமுரை திறந்து மெதுவாக திருப்பி விடவும்.
 தயிர் சேர்ப்பதால் வெண்டைக்காயில் கொழ கொழப்புதன்மை இருக்காது.
                                                          
ஒரு 15- நிமிடங்களுக்குள் நன்கு வெந்து விடும்.
 இது சப்பாத்தி சாம்பார் சாதமுடன் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
 நம்ம பக்கம் வெண்டைக்காய்களை சின்ன துண்டுகளாக கட் செய்து சாதா
 பொரியல் செய்வாங்க இல்லியா. இங்க வட நாட்டில் இப்படி முழுசாக
                                                  
அடைச்ச பொரியல்தான் செய்யராங்க.
 வெண்டைக்காய்களி மட்டுமில்லே சின்ன கத்தரிக்காய், சின்ன பாவக்காய்
 எல்லாவற்றிலுமே ஸ்டஃப்ட் பொரியல்தான் செய்யுராங்க. நல்லாவும் இருக்கும்
                                    
              நான்ஸ்டிக் கடாயில் செய்யும்போது எண்ணையும் குறைவாக சேர்த்தால் போதும் அடிப்பிடிக்கமலும் இருக்கும்.
 அதுவே சாதா கடாயில் அடிப்பிடிக்க வாய்ப்பு உண்டு, அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டி வரும்.  கொஞ்சம் கவனமாக இருக்கனும்.                                                          




.

31 comments:

கோமதி அரசு said...

வெண்டைக்காய் ஸ்டஃப்ட் பொரியல் செய்முறை நன்றாக இருக்கிறது.
செய்துப்பார்க்கிறேன்.
நன்றி லஷ்மி அக்கா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

செய்முறையை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

Akila said...

Thiught pindi is something new... In what language we call it as pindi? Any how stuffed pindi is awesome.. Coz I love anything with ladies finger...

savitha said...

நானும் இது போல் செய்வது உண்டு ஆனால் எள்ளு சேர்த்தது இல்லை.. இனி சேர்த்து செய்து பார்கிறேன்.. உங்கள் விளக்கம் அருமை...

ஸாதிகா said...

ஆஹா அருமையாக இருக்கு.நான் இன்னிக்கே செய்து பார்த்திடப்போகிறேன் லக்‌ஷ்மிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

பரா ஹூவா பிண்டி.. ஜூப்பரு லக்ஷ்மிம்மா :-)

சசிகலா said...

முயற்சி செய்து பார்கிறேன் . பகிர்ந்தமைக்கு நன்றிங்க .

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. நன்றி.

கே. பி. ஜனா... said...

வெண்டைக்காய் பாஸ்பரஸ் கொண்டது. ஞாபக சக்திக்கு உதவுவது ஆயிற்றே? நல்ல டிஷ்!

Menaga Sathia said...

ஸ்டப்பிங்ல எள் சேர்த்து செய்ததில்லை.ரொம்ப நல்லாயிருக்கு!!

மாதேவி said...

அருமை.
இதேபோல குஜராத்தி செய்முறை ஒன்று செய்திருக்கின்றேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்மா... இங்கே தில்லியிலும் இதே முறைதான்.

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி. செய்து பாருங்க.

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அகிலா வருகைக்கு நன்றி. வெண்டைக்காயை ஹிந்தியில் பிண்டின்னு சொல்வாங்க.

குறையொன்றுமில்லை. said...

சவிதா, வருகைக்கு நன்றி. எள்ளுக்கே ஒரு தனிமணமும் சுவையும் உண்டு.எள்ளுசேர்த்து செய்து பாருங்க.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா, வருகைக்கு நன்றி செய்து பாருங்க.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி ஆமா பராஹுவா பிண்டிதான். பசங்க இப்படி செய்துகொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.

குறையொன்றுமில்லை. said...

சசிகலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கே. பி. ஜனா ஆமாங்க வெண்டைக்காய் ரொம்ப நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

எஸ். மேனகா வருகைக்கு நன்றி. எள் சேர்த்தா நல்ல ஃப்ளேவர் கொடுக்கும்.

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

சூப்பரான ஐட்டம். ரோஷ்ணிக்கு பிண்டி ரொம்ப பிடிக்கும்.

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Mahi said...

Nice recipe lakshmi-ma! Will try it soon n let you know! :)

ஸ்ரீராம். said...

செய்து பார்த்துட வேண்டியதுதான். எனக்கும் வெண்டைக்காயை அரை வேக்காட்டாய் வதக்கி சாப்பிட்டுதான் வழக்கம்!

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .