Google+ Followers

Pages

Wednesday, April 25, 2012

புல்கா ரொட்டி

தேவையான பொருட்கள்.
 கோதுமை மாவு--------------- 3-கரண்டி
 சோயாமாவு------------------ 2-தேக்கரண்டி
 எண்ணை----------------- 2 டீஸ்பூன்
 உப்பு--------------------- ஒரு பிஞ்ச்.
 செய் முறை.
ஒரு பௌலில் மாவுகளைப்போட்டு சிட்டிகை உப்பும் போட்டு
தேவையான தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
 மேலாக 2-டீஸ்பூன் எண்ணை விட்டு கையில் ஒட்டாத பக்குவத்
தில் பிசைந்து கொள்ளவும்.
                                                          
பிசைந்த உடனே ரொட்டிகளாக இடவும். அடுப்பை சிம்மில் வைத்து
 தவாவை சூடு படுத்தவும்.
 சூடான தவாவில் வட்டமாக மெலிதாக இட்டு வைத்திருக்கும்
                                            
ரொட்டிகளைப்போடவும். லேசாக சூடானதும் திருப்பி போடவும்
 பிறகு தவாவில் இருந்து எடுத்து தணலில் வாட்டவும். வாட்டும் போது
                                                        
தணலை அதிகப்படுத்தவும். அப்போதுதான் நன்கு உப்பிக்கொண்டு வரும்.
சூடாகவே ஒரு துணியில் முடிந்து எவர்சில்வர் டப்பாவில் மூடி வைக்கவும்
 இரவு வரை மிருதுவாகவே இருக்கும். எண்ணையோ நெய்யோ தடவாத
 ஆரோக்கிய ரொட்டி ரெடி.
              விருப்பப்பட்டவர்கள் ஜவார் பாஜ்ரா மாவு வகை களையும் சேர்த்துக்
கொள்ளலாம். ஜவார்னா சோளமாவு, பாஜ்ரா கம்பு மாவு. இன்னும் சத்துள்ளதாக இருக்கும்.

  வழக்கம்போல கேமராவில் டைம்&டேட் செட் பண்ண மறந்தேன் சாரி

47 comments:

Mahi said...

சூப்பர் ஸாஃப்ட் புல்கா! :)

Akila said...

Romba nalla vanthu iruku pulka roti

முன்பனிக்காலம் said...

அது சரி ரொட்டிக்கு சைட் டிஷ் ஒண்டும் இல்லையோ?

சசிகலா said...

சூப்பர் அப்படியே சாப்பிடலாம் இல்லங்க .

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரொட்டியின் செய்முறையை அழகாக விளக்கி ‘ரொட்டி’ தட்டி விட்டீர்கள்.

பாராட்டுக்கள்.

HOTLINKSIN தமிழ் திரட்டி said...

சூப்பரான ரொட்டிதான்...

விக்கியுலகம் said...

எனக்கு வேலை குடுத்திட்டீங்களே...இருங்க இன்னைக்கு வீட்ல செய்ஞ்சி பாக்க வேண்டியதுதான்!

கோவை2தில்லி said...

புல்கா பிரமாதம். நான் உப்பு சேர்ப்பதேயில்லை.

சோயா மாவு இனி சேர்த்து செய்கிறேன். பகிர்வுக்கு நன்றிம்மா.

angelin said...

வணக்கம் லக்ஷ்மிம்மா .நலமா .
புல்கா ரொட்டி என்னை இந்த பக்கம் இழுத்து வந்தது .
ரொட்டி இதுவரை தணலில் வாட்டியது இல்லை ,இன்னிக்கு செய்து பாக்கிறேன்.

ஸ்ரீராம். said...

மிக எளிதாக இருக்கிறதே....

Ramani said...

நல்ல ஆரோக்கிய உணவை அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி
படங்களுடன் சொல்லிச் சென்றவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 3

Ramani said...

Tha.ma 3

vanathy said...

பார்க்கவே சுப்பரா இருக்கே. நல்ல ரெசிப்பி, ஆன்டி.

Avargal Unmaigal said...

சோயா மாவு இது வரை புல்கா ரொட்டிக்கு நான் சேர்த்தது இல்லை . அடுத்த தடவை சேர்த்து செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி லக்ஷ்மியம்மா.

வெங்கட் நாகராஜ் said...

நான் தினமும் ஃபுல்கா ரொட்டி தான். செய்வதும் சுலபம் மட்டுமல்லாது உடலுக்கும் நல்லது.

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

அகிலா வருகைக்கு நன்றி

Lakshmi said...

முன் பனிக்காலம், ஹா ஹா போனபதிவு பாக்கலியா ஸ்டப்ட் பிண்டி சைட் டிஷ் போட்டிருக்கெனே. இல்லேன்னா அடுத்து ஒரு ஸைட் டிஷ் வருது பாருங்க. நன்றி

Lakshmi said...

ஆமா சசிகலா அப்படியே சாப்பிடலாம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

தமிழ் திரட்டி வருகைக்கு நன்றி

Lakshmi said...

விக்கி உலகம் உங்க வீட்டிலும் நீங்கதான் சமையலா செய்து பாருங்க. வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி உப்பு சேர்க்காம எதுவும் செய்யக்கூடாது ஒரு பிஞ்ச் சேர்த்தாலே போதும். வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஏஞ்சலின் புல்காரொட்டி யாரையெல்லாம் என் பக்கம் இழுக்குது இல்லியா நன்றி

Lakshmi said...

ஆமாஸ்ரீ ராம் ரொம்ப ஈசிதான் செய்து பாருங்க.

Lakshmi said...

ரமணி சார் தொடர்வருகைக்கும் த ம ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

வானதி வருகைக்கு நன்றி

Lakshmi said...

அவர்கள் உன்மைகள் சோயா மாவு ரொம்ப சத்து நிறைந்தது அது சேத்து செய்து பாருங்க. நன்றி

Lakshmi said...

ஆமா வெங்கட் உடம்புக்கு ரொம்ப நல்லதுதான் வருகைக்கு நன்றீ

Asiya Omar said...

அருமை லஷ்மிமா.

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

ராஜ நடராஜன் said...

சோயா,ஜவார் பாஜ்ரா மாவு போன்றவைகளை கேள்விப்பட்டதில்லையே!

புல்கா வடக்கில் ஏழைகளின் எளிய உணவு என்று நினைக்கின்றேன்.ரோட்டு ஓரத்திலேயே ஊதுகுழலால் நெருப்பை ஊதி புல்கா சுட்டு விட்டு ஒரு பருப்பு மற்றும் வெங்காயத்துடன் உணவை முடித்துக்கொண்டதை டெல்லியில் பார்த்தேன்.

ஸாதிகா said...

அருமையாக செய்துகாட்டி இருக்கீங்க.எனது தினப்படி இரவு உணவு அநேகமாக இதுதான்.எனக்கு ரொம்ப பிடித்த ஐட்டம்.

Lakshmi said...

ராஜ நடராஜன் ஜவார், சோயாபாஜ்ரா மாவெல்லாம் மிகவும் சத்து நிறைந்தது. கோதுமை திரிக்கும்போதே இவைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து திரிக்கலாம். பொதுவாகவே நாம ஏழைகளின் உண்வாக நினைப்பதுதான் சத்துள்ள உணவாகவும் இருக்கு,வடக்க இதெல்லாம் ரொம்ப சகஜம் தமிழிலும் சொல்லி இருக்கேனே.

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

எண்ணையோ நெய்யோ தடவாத
ஆரோக்கிய ரொட்டி ரெடி.

athira said...

ஆஹா லக்ஸ்மி அக்கா... மீ தபி வந்துட்டேன்:))..

புல்கா சூப்பர்.. புதுமுறையாக இருக்கே.. சட்டியில் சுட்டு பின் தணலில் சுடுவது.. அருமை.

கோமதி அரசு said...

புல்கா ரொட்டி செய்முறை அருமை.
செய்ய தூண்டுகிறது.
நன்றி அக்கா.

Lakshmi said...

இராஜராஜேச்வரி வருகைக்கு நன்ரி ஆமா இது ஆரோக்கிய ரொட்டிதான்.

Lakshmi said...

அதிரா வா வா ரொம்ப நா கழிச்சு வந்திருக்கே. புல்கா ரொட்டி சாப்பிடு.

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி செய்து பாருங்க நல்லா இருக்கும்.

அமைதிச்சாரல் said...

எங்கூட்லயும் தினமும் இதான்.. சோயா மாவு எப்பவாவதுதான் சேர்ப்பேன்..

பகிர்வுக்கு நன்றி லக்ஷ்மிம்மா..

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி. நம்ம பக்கம்லாம் எப்பவுமே புல்கா தானே.

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பர்.
என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி செய்வேன்.

Lakshmi said...

ஜலீலா வருகைக்கு நன்றி

arul said...

blog design is nice

என்னை ஆதரிப்பவர்கள் . .