Pages

Monday, May 21, 2012

காத்திருப்பு. 2

சவிதாவைப்பார்த்ததும் பெற்றவர்களுக்கு சந்தோஷம். வாம்மா வா. மாப்பிள்ளை வரலியா? என்றார்கள். இல்லேம்மா, நா மட்டும்தான் வந்தேன். கல்யாணமாகி முத முதல்லா பிறந்தவீடு வரும்போது மாப்பிள்ளையுடன் வரனும்மா. என்று  வாஞ்சையுடன் சொன்ன பெற்றவர்களை அன்பாகப்பார்த்தாள் சவிதா. பெண் கல்யாணம் நல்லபடியாக முடிந்தது என்று எவ்வள்வு நிம்மதியாக இருக்காங்க. இவங்ககிட்ட நான் எப்படி விஷயத்தைச்சொல்லப்போரேனோ தெரியல்லியே என்று சவிதா யோசனையில் ஆழ்ந்தாள் ஆனாலும் சொல்லித்தானே ஆகனும். அம்மா தந்த காபியை குடித்துவிட்டு பெற்றவர்களை ஆழமாகப்பார்த்த சவிதா அம்மா, அப்பா இங்க வாங்க இப்படி உக்காருங்க உங்க கிட்ட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் பற்றி பேசனும். என்ராள் அம்மா பதறிப்போயி என்னடி ஏதானும் பிரச்சினையா என்றாள். ஆமம்மா. வாங்க சொல்ரேன் என்று அவர்களிடம் எல்லா விஷயங்களும் எடுத்து சொன்னாள்.



 கேட்டதுமே பெற்றவர்கள் என்னடி இது இவ்வள்வுதூரம் நடந்திருக்கு ஒரு போன் பண்ணியாவது சொல்லி இருக்கலாமில்லே? என்றார்கள். இல்லேம்மா போன்ல சொன்னா சரி வராதுன்னுதானே நானே நேரில் வந்தேன் இப்ப சொல்லுங்க என்னபண்ணலாம். நீ சொல்ரதைக்கேட்டா மன்செல்லாம் கலங்கி போரது சட்னு எந்தமுடிவும் எடுக்க முடியல்லியே இது உன் வாழ்க்கை பிரச்சினை. யோசித்துதான் முடிவெடுக்கனும். சரி அப்பா, உங்களுக்கு முடிவெடுப்பதில் குழப்பம் என்றால் பெரிப்பா மாமா என்று குடும்ப பெரியவர்களைக்கூப்பிட்டு பேசிப்பாக்கலாம். என்று அவர்களுக்குபோன்போட்டு உடனே வர்ச்சொன்னார்கள். அவர்களும் என்னமோ ஏதோன்னு உடனடியாக கிளம்பி வந்தார்கள்.எல்லா விவரங்களும் அவர்களுக்கும் சொல்லப்பட்டது. சற்று முன் கோபியான மா மா,  நம்ம பொண்ணோடு வாழ்க்கையோடு விளையாடி இருக்காங்க எவ்வளவு பெரிய உண்மையை மறைத்துதைரியமாக கல்யாணம் பண்ணி இருக்காங்க இவங்களை கோர்ட்ல இழுத்து மான நஷ்ட்ட வழ்க்குபோட்டு சந்தி சிரிக்க வைக்கனும்.என்று கோபத்தில் குதிக்க ஆரம்பித்தார்.

மாமா இந்த விஷயத்தில் எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு செய்யமுடியது. நம்ம பொண்ணோட வாழ்க்கையாக்கும் நிதானமாக யோசித்து முடிவெடுக்கனும். என்று குடும்ப பெரியவர்கள் இரவு பூரவும் உக்காந்து யோசித்து பேசினார்கள். சரி நாளை ஞாயிற்றுக்கிழமையா இருக்கு. அவனுக்கு லீவுதானே. நாம்  எல்லாரும் அவ வீட்டில் போயி பேசி  நம்மபொண்ணுக்கு இந்த திருமண பந்தத்திலிருந்து ஒரு விடுதலைபாத்திரம் எழுதி தரச்சொல்லுவோம். நாம கொடுத்த சீர் செனத்தி எல்லாம் திருப்பி தரச்சொல்லி கேப்போம் அவா என்ன சொல்ரான்னு பாப்போம் என்று எண்ணி மறு நாள் காலை சங்கர் வீடு கிளம்பி போனர்கள்.இவர்களை எல்லாம் கும்பலாக பார்த்த சங்கரின் அம்மா வாங்கோ சம்மந்தி என்று வாய் நிறைய வரவேற்றாள். என் மருமக எங்கஅ வ வல்லியா நீங்கல்லாம் வந்திருப்பது சந்தோஷம் உக்காருங்க். காபி டிபன் கொண்டுவரேன்னு சொல்லி உள்ளே போக திரும்பினாள் இருக்கோம்மா. நாங்க காபி டிபன் சாப்பிட வரல்லே. எங்க உங்க மகன் அவரை கூப்பிடுங்க என்றார்கள். அந்த அம்மாவுக்கு ஏதுமே புரியல்லே. உள்ளே போய் சங்கர எழுப்பினாள். சங்கரா எழுந்துவாடா. சம்ம்ந்தி வீட்லேந்து எல்லாரும் உன்ன பாக்க வந்திருக்காங்க என்றாள்.

 எதுக்கு இப்படி கலங்காத்தால எல்லாரும் இப்படி கும்பலாக வந்திருக்காங்க என்று யோசித்தவாரே முகம் அலம்பி சங்கர் ஹாலுக்குவந்தான். வாங்க என்றான்.கோவக்கார மாமா , வரதெல்லாம் இருக்கட்டும் எவ்வளவு பெரிய உண்மையை மறைத்து எங்க பொண்ணூ வாழ்க்கையோடு விளயாட்டிடியே. அதுக்கு பதில் சொல்லு முதல்ல என்றார். மற்றவர்கள் மாமாவிடம் மாமா நாம சண்டை போட இங்க வல்லே. கொஞ்சம் பொறுமையா இருங்கோன்னு அவரை சமாதானப்படுத்திவிட்டு சங்கரிடம் தம்பி நீங்க செய்தது சரியா ஏன் இப்படி செய்தீங்க. சரி எங்க பொண்ணுக்கு ஒரு விடுதலைப்பத்திரம் எழுதிதந்து, நாங்க கொடுத்த சீர் செனத்தி எல்லம் திருப்பதந்திடுங்க என்று பொறுமையாக சொன்னார் சவிதாவின் அப்பா. சங்கருக்கு டாக்டர் சவிதாவிடம் எல்லா உண்மையும் சொல்லியிருப்பார் என்று தெளிவாகி விட்டது. அவனின் அம்மாவுக்கோ எதுவுமே புரியல்லே. என்ன சொல்ரீங்க நீங்கல்லாம் நாங்க எதை மறைச்சோம் எனக்கு ஒன்னுமே புரியல்லியே என்றாள்.

 அம்மா உங்களிடமே உங்க பையன் உண்மையை சொல்லலியா ரொம்ப நன்னா இருக்கு. என்று சங்கரின் குறையை அவ அம்மாவிடம் சொன்னார்கள் .திகைத்துப்போன அந்த அம்மாள் அடபாவி என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டியே. இந்த விஷயம் எனக்கு முதல்லியே தெரிஞ்சிருந்தா இந்தக்கல்யானத்துக்கு நான் சம்மதித்தே இருக்கமாட்டேனே என்றாள். ஒரு பொண்ணொட்டு வாழ்க்கையை கெடுப்பது மஹா பாவம்டா. ஏன் இப்படி செய்தே என்று சங்கரிடம் ஆற்றாமையுடன் கேட்டாள். இப்படி எல்லாரும் சங்கரைகுற்றம் சொல்வது சங்கருக்கு வெறுப்பை கிளறி விட்டது.சாந்தமான சங்கர் திமிர் தலைக்கேர ஆமா இப்ப என்ன நடந்துடுச்சு. ஆளாளுக்கு என்னையே குத்தம் சொல்ரீங்க. நான் விடுதலைப்பத்திரமும் தரமாட்டேன் சீர்செனத்தியும் திரும்ப தரமாட்டேன் உங்களால முடிஞ்சதை செய்துக்கோங்க என்று திமிர்தனமாக பேசினான் அந்தப்பேச்சைக்கேட்ட மாமாவுக்கும் கோபம் தலைக்கேற, அப்படியா உங்களை கோர்ட்டுவாசப்படி ஏற்வச்சு சந்தி சிரிக்க வக்கிரேனா இல்லியா பாரு .கோர்ட்டுக்குபோனா உன்மானம்தான் கப்பலேரும் உன் குறை வெளியே எல்லாருக்கும் தெரிந்து உன்னைத்தான் கேவலமாகபாப்பாங்க அதெல்லாம் வேண்டாம் சமாதனமாகபோயிடலாம்னுதான் நாங்க இத்தனை நேரம் பொறுமையாக பேசினோம். நீ எப்போ திமிர்த் தனமாக பேசினயோ அப்போ சமாதானத்துக்கே இடமில்லே. கோர்ட்டுல சந்திக்கலாம் என்று கோவமாக எல்லாரும் கிளம்பி போனார்கள்.

                                                                 (த்

20 comments:

Akila said...

Waiting fur the next edition... Going interestingly...

சாந்தி மாரியப்பன் said...

இப்படியும் மனிதர்கள்...

கதை அருமையாப் போகுது லக்ஷ்மிம்மா..

ஆத்மா said...

படிச்சிட்டு வாரன் நல்ல பதிவாத்தான் இருக்கு போல

ராமலக்ஷ்மி said...

அடுத்த என்னவாயிற்று என அறியக் காத்திருக்கிறோம். நிஜத்தில் நடந்ததையொட்டி எழுதியது என்றும் சொல்லியிருந்தீர்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா லக்ஸ்மி அக்கா... அழகாகப் போகுது.....

///நீ எப்போ திமிர்த் தனமாக பேசினயோ அப்போ சமாதானத்துக்கே இடமில்லே. கோர்ட்டுல சந்திக்கலாம் என்று கோவமாக எல்லாரும் கிளம்பி போனார்கள்.////

இதுதான் இதுதான்.. இந்த திமிர் இருக்கவே கூடாது ஆருக்கும்....

முற்றும் அறிந்த அதிரா said...

சவிதாவின் முடிவு என்னாச்சு என அக்கறையாக ஆரோ.. கடை ஓனராம் கேட்டமாதிரி இருந்துதே.. ஆனா இப்போ ஆளைக் காணல்ல:))

Yaathoramani.blogspot.com said...

சுவாரஸ்யம் கூட்டிப் போகிறது இரண்டாம் பதிவும்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 3

Madhavan Srinivasagopalan said...

எனது தெரிந்து ஒரு பெண்ணிற்கு இப்படி நடந்து.. பின்னர் டைவர்ஸ் ஆகி.. பிறகு மறுமணம் ஆகிவிட்டது.

அப்படிப் பட்ட ஆண்கள் எதற்கு திருமணம் செய்து கொள்கிறார்களோ...? சுய புத்தி இருக்காதா என்ன ?

குறையொன்றுமில்லை. said...

அகிலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சிட்டுக்குருவி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி ஆமா நிஜத்தில் நடந்ததுதான். வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமா அதிரா இந்த திமிர் இருக்கே என்ன பண்ண? வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

ஆமா அதீஸ் கடை ஓனரைக்காணோம்.

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கும் ஒட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதவன் இங்கயும் அதே கதைதான் ஆகுது. வருகைக்கு நன்றி

K said...

வணக்கம் அக்கா! கதை இன்று அடுத்த திருப்பத்துக்குப் போயிருக்கு! சங்கர் தப்பு பண்ணினதும் இல்லாமல் திமிராகவும் பேசியிருக்கார்! பார்க்கலாம் அடுத்த பகுதி எப்புடிப் போகுதுன்னு!

கதை விறூவிறுப்பா இருக்கு அக்கா! சின்னச் சின்ன எழுத்துப் பிழைகளைச் சரி பாருங்கோ!

அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க அக்கா !

K said...

மற்றது அக்கா “ திமிரா பேசக்கூடாது” என்று “ மின்னல் வெட்டுவது போல” :-)) தெளிவாகவும் ஆணித்தரமாகவும், “ பெரியவர்கள்”:-)) சொல்லியிருக்கினம்!

அவர்கள் சொல்படியே நடப்பேனாம் எண்டு சொல்லிவிடுங்கோ லக்ஸ்மி அக்கா :-)))

குறையொன்றுமில்லை. said...

மணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எழுத்து பிழைகள் சரி செய்துக்கரேன் நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .