Pages

Friday, May 25, 2012

7- கப் கேக்

தேவையான பொருட்கள்.
 கடலை மாவு------------------  ஒரு கப்.
துருவிய தேங்காய் ----------  ஒரு கப்.
பால்------------------------------  ஒரு கப்.
 நெய்-----------------------------   ஒரு கப்.
 ஜீனி-----------------------------   3 கப்.
 முந்திரி பருப்பு-------------- 50 கிராம்.(பொடித்துக்கொள்ளவும்.)
       
                           
                                             
செய் முறை.
 மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் ஒரு
அடி கனமான வாயகன்ற கடாயில் போட்டு அடுப்பை
 நிதான அளவில் வைத்து கை விடாமல் கிளறவும்.
                                                 
20- நிமிடங்களில் எல்லா பொருட்களும் சேர்ந்து கொதித்து
 நுரைத்து பூத்து வரும் சமயம் நெய் தடவிய தட்டில் கொட்டி
 துண்டுகள் போடவும்.
                                             
                                           
                                                 
முதலில் எல்லாம் முந்திரிபருப்பு சேர்க்காமல் செய்தேன். அது கொஞ்சம் ஹார்டா இருப்பதுபோல இருந்தது. பிறகுதான் கொஞ்சம் முந்திரி பொடித்து சேர்த்து செய்து பார்த்தேன். பிறகு நல்ல ஸாஃப்டாக வந்தது.

21 comments:

Mahi said...

நல்லா இருக்கும்மா 7கப் கேக்! :P

காத்திருப்பு கதைக்கு பின்னூட்டம் போட வந்த பொழுதெல்லாம் என் கம்ப்யூட்டர் எதோ சண்டித்தனம் செய்துவிட்டது. உண்மைக்கதைதான் எழுதிருக்கீங்கனு நினைக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு என் ப்ரார்த்தனைகள் நிச்சயம் உண்டு! :)

ராமலக்ஷ்மி said...

அருமையாக விளக்கியுள்ளீர்கள் படங்களுடன். நான் அடிக்கடி செய்கிற ஒன்று. முந்திரி பொடிக்கு பதிலாக முந்திரி பாதாம் இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் மையாக அரைத்துச் செய்தாலும் சாஃப்டாக வரும்.

Reva said...

Arumaiyaana cake..Nallaa irukku..
Reva

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்கும்மா..

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

இது சூப்பர் லக்ஸ்மி அக்கா.

சில வருடங்களுக்கு முன், ஒரு குறிப்புப் பார்த்து இக்கேக் செய்தேன், களியாக வந்தது இறுகவில்லை.. அத்தோடு விட்டுவிட்டேன்.

Akila said...

Wow ippave seithu paakanum pola iruku....

Akila said...

But ithuku en 7 cup cakenu per vanthathu?

மகேந்திரன் said...

இப்பவே சாப்பிடனும் போல இருக்குது..

இராஜராஜேஸ்வரி said...

ருசியான பகிர்வு.. இனிப்பான பாராட்டுக்கள்..

ஸாதிகா said...

அருமையான கேக்.

குறையொன்றுமில்லை. said...

மஹி ரெண்டு பகுதிக்கும் இங்கியே பின்னூட்டம் கொடுதிருக்கியே. நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி இந்த கேக் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி செய்யுராங்க.

குறையொன்றுமில்லை. said...

வலைஞன் வருகைக்கு நன்றி உங்க பக்கம் உள்ள் நுழையவே முடியல்லே. எத்தனைதரம் ட்ரைபன்னினேன்

குறையொன்றுமில்லை. said...

ரேவா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிரா இந்தக்குறிப்பு படி செய்துபாரு களியாக வராது நல்லாவே வரும்

குறையொன்றுமில்லை. said...

அகிலா 4 கப் பொருட்கள் ப்ளஸ் 3 கப் ஜீனி போடுரோம் இல்லியா அதான் 7-கப்

குறையொன்றுமில்லை. said...

மஹேந்திரன் வருகைக்கு நன்றி வாங்க உங்களுக்காக தனியே 4 பீஸ் எடுத்து வச்சிருக்கேன்

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் நல்லாருக்கு லக்ஷ்மிம்மா! இதுவரை இந்த 7 கப் கேக் செய்து பார்த்ததில்லை. சீக்கிரம் செய்து பார்க்கணும்!

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .