Pages

Friday, May 18, 2012

காத்திருப்பு.

கொட்டு மேளம் முழங்க சங்கர் சவிதாவின் கழுத்தில் தாலி கட்டினான். கல்யாணமண்டபம் முழுவதும் நிறைந்திருந்த உறவினர்கள் பூவும் அட்சதையும் தூவி மணமக்களை ஆசீர்வத்தனர். திரும்பினபக்கம் எல்லாம் ச்ந்தோஷம் உற்சாகம். பெண்ணின் கல்யாணம் ன்எபது பெற்றவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமான விஷயம். பெண்ணின் பெற்றோருக்கு சவிதா ஒருபெண் வெங்கட் ஒரு பையன் என்று அளவான குடும்பம்தான். பெண்ணின் கல்யாணம்கூட சொந்தக்காரர்களின் பண உதவியாலும் பொருள் உதவியாலும் தான் சிறப்பாக நடந்தது.பெண்ணின் அப்பா குறைந்த சம்பளக்காரர். அவர்மனைவியும் குடும்பத்தலைவிதான் . சொந்த பந்தங்கள்தான் எல்லா பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர்.



    கல்யாணம் முடிந்து பெண்ணை புகுந்தவீட்டில் கொண்டு விட்டுவிட்டு அனைவரும் அவரவர் வீடு திரும்பினார்கள்.முதல் இரவுக்கு பையனின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்கள். சங்கரும் அவ அம்மாவும் மட்டும்தான் அவர்கள் வீட்டில். சங்கர் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தான் சவிதாவும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துவந்தாள். திருமணத்திர்காக இருவருமே ஒரு வார விடுப்பில் இருந்தார்கள். இரவு மணமக்களை தனி அறைக்கு அனுப்பியதும் சவிதா மிகுந்த எதிர்பார்ப்புடன் சங்கரை வணங்கினாள். சங்கர் அவளிடம் சவி இன்னிக்கு ஓமப்புகை, கல்யாண களைப்பில் ரொம்ப டயர்டா இருக்கு. தூக்கமா வருது. நான் தூங்கப்போரேம்மானு சொல்லிட்டு படுத்து குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்துவிட்டான்.

சவிதா எதேதோ கற்பனையில் இருந்தவள் கணவனின் இந்தப்போக்கால் திகைத்துப்போனாள். சரி அவர் சொல்வது போல இன்னிக்கு ரொம்ப களைப்பாதான் இருக்கார் போல இருக்குன்னு நினைத்து அவளும் மறுபுறமாக படுத்து தூங்க முயற்சி செய்தாள். மறு நாள் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வேலைகள் எல்லாம் அவளே மாமியாரிடம் கேட்டு கேட்டு செய்தாள்.எதையும் வெளிக்காட்டிக்கலை. சங்கரும் எதுவுமே நடக்காததுபோல சவிதாவுக்கு குட் மார்னிங்க் சொல்லி அவள் செய்துவைத்திருந்த காபி, டிபனை ரசித்து சாப்பிட்டான். பகலில் சொந்தக்காரங்க ஒவ்வொருவர் வீடுகளிலும் புதுமணதம்பதிகளுக்கு விருந்துக்கு அழைதார்கள். சந்தோஷமாக போய் வந்தார்கள்.பகலில் சந்தோஷமாக இருப்பவன் இரவில் தனி ரூம் போனதும் சவிதாவை விட்டு விலகியே இருந்தான். அவளிடம் நெருங்கவே இல்லை. அவளுக்கோ எதுமே புரியல்லே. என்ன பிரச்சினை இவருக்கு. எப்படி கேட்பதுன்னு ரொம்பவே குழம்பினாள்.

இப்படியே ஒருமாதமும் கழிந்தது. அன்று ஆபீசிலிருந்து வரும்போதே சங்கருக்கு உடம்பெல்லாம் நெருப்பாக கொதிதது.அவன் அம்மாவும் சவிதாவும் கைமருந்து குரோசின் எல்லாம் கொடுத்துப்பார்த்தும் இரண்டு நாட்களுக்கு ஜுரம் குரைவதாகவே இல்லை. அவ அம்மா, சவிதா அவனை டாக்டர்கிட்ட க்கூட்டிண்டு போயிடலாம். ஏதாவ்து விஷ ஜுரமா இருக்கப்போகுது. ராமமூர்த்தின்னு நம்ம குடும்ப டாக்டர் இருக்கார் அவர்கிட்ட கூட்டிப்போ என்று சொல்லவும் சங்கர் திடுக்கிட்டு அம்மா டாக்டர்லாம் வேனாம் எல்லாம் சரி ஆகிடும். இதுக்கெல்லாம் எதுக்கு குடும்ப டாக்டர்கிட்ட போகணும் அதெல்லாம் ஒன்னும் வேனாம்னு பிடிவாதம் பிடித்தான். அம்மாவும் பிடிவாதமாக அவன் அப்படித்தான் சொல்லுவன். சவிதா நான் ஆட்டோ கூட்டிண்டு வரேன் நீங்க இருவரும் ரெடியா இருங்கன்னு சொல்லி ஆட்டோகூட்டி வந்தாள். வேறு வழி இல்லாமல் சங்கரும் சவிதாகூட கிளம்பி போனான்

கிளினிக்கில் கூட்டம் இல்லை. நேராகவே டாக்டரிடம் போனார்கள். சங்கரை பார்த்ததும் டாக்டர் அட சங்கர் வாப்பா, பாத்தே ரொம்ப நாள் ஆச்சே. என்ன இந்தப்பக்கம் என்று அன்பாக விசாரித்தார். சவிதா உடனே டாக்டர் இவருக்கு 2. 3 நாட்களாக நல்ல ஜுரம் இருக்கு கைமருந்துக்கு கேக்கவே இல்லே. அதான் உங்க கிட்ட வந்தோம். என்னாச்சுன்னு பாருங்க என்றாள். அவனை செக் செய்துபார்த்த டாக்டர் இப்ப இந்த ஊரு பூராவும் ஒரு வைரல் ஃபீவர் பரவி இருக்கும்மா, அதான் இவனுக்கும் வந்திருக்கு. பயப்பட ஒன்னுமில்லே. மருந்து எழுதி தரேன் சாப்பாடு கஞ்சி போல லைட்டா கொடுங்க சரி ஆயிடும் என்று சொன்னார். சவிதாவிடம் நீங்கயாரு இதுவரை உங்களை இங்க பாத்ததே இல்லியெ என்றார். நான் இவரோட ஒய்ஃப். என்றாள் சவிதா. வாட்!!!!!!  ஒய்ஃபா? சங்கர் என்ன இது என்று டாக்டர் சங்கரிடம் கோபமாக கேட்டார். சவிதாவுக்கொ ஏன் டாக்டர் இப்படி கோபப்படரார்னு புரியவே இல்லே. சங்கர் தர்ம சங்கடத்துடன் ஆமா டாக்டர் கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது. எல்லா வேலைகளும் நானே கவனிக்க வேண்டி இருந்துச்சு. முதல்லியே உங்க கிட்ட சொல்ல முடியல்லே சாரின்னான்.

 டாக்டர் சவிதாவைப்பார்த்து பாத்தியாமா இவன் சொல்வதை ஒரு இன்விடேஷன் கொடுக்கனும்னு கூட தோனலே. சொல்லாம கொள்ளாம கல்யானம் முடிச்சிருக்கான். என்று டாக்டர் ஆதங்கமாக சொல்லவும்  ஓ, பத்திரிக்கை கொடுத்து அழைக்கலைன்னு டாக்டருக்கு கோபம் போல இருக்குன்னு சவிதா நினைத்தாள். சரி சங்கர் நீ கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணு நான் மருந்து எழுதிக்கொடுத்து விவரம்  சவிதாவிடம் சொல்லிக்கரேன் என்றார். நானும் இங்கியே இருக்கேனே டாக்டர் என்று சங்கர் சொல்லவும் இல்லே நீ வெளியே வெயிட் பண்ணு என்று வலுக்கட்டாயமாக அவனை வெளியே அனுப்பிய டாக்டர் சவிதாவிடம் பரிவாக அவள் குடும்பத்தைப்பற்றி கல்யானம் முடிந்ததுபற்றி எல்லாம் விவரமாக கெட்டுக்கொண்டார். சவிதா
உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லியே ஆகணும்மா.இது உன் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம். அதனால சொல்லாம இருக்க முடியல்லே. சங்கரைப்பற்றி நன்கு விசாரித்துதானே நிச்சயம் பண்ணினீங்க? என்று ஒரு தந்தைக்குறிய பாசத்துடன் கேட்டார். சவிதாவுக்கு ஏதோ பெரிய விஷயம் இருக்குபோலன்னு மனசு படபடப்பாக இருந்தது.

 டாக்டரென்ன பிரச்சனை சங்கருக்கு ப்ளீஸ் ஓபனா சொல்லுங்க என்றாள். சரி இந்த ஒரு மாசமும் நீங்க இருவரும் புருஷன் பொண்சாதியா சந்தோஷமா இருந்தீங்களா என்றார். அப்படி அவர் கேட்கவும் மளுக்கென்று கண்களில் கண்ணீர் தளும்ப இல்லெ டாக்டர் அவர் நகம் கூட என் மேல படலே. இதையெல்லாம் ஒரு பொண்ணு யாரிடம் சொல்லமுடியும்? வெளியே சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிச்சுகிட்டு இருக்கேன். நீங்க அப்பா மாதிரி அன்பா கேக்கவும் தாங்க முடியாம சொல்லிட்டேன். அவருக்கு என்ன ப்ராப்லம் டாக்டர். என்றாள். ஆமாம்மா 5, 6, வருடம் முன்பு நடந்த ஸ்கூட்டர் விபத்தில் சங்கர் ஆண்மைத்தன்மையை இழந்துட்டான்மா. அவனால ஒருபெண்ணை சந்தோஷப்படுத்தவோ ஒரு குழந்தைக்கு தகப்பனாகவோ முடியாதும்மா. நான் அவன் கிட்ட அப்பவே சொன்னேன் நீ கல்யாணமே பண்ணிக்க கூடாது.ஒருபொன்ணு வாழ்க்கையை கெடுக்கக்கூடாதுன்னு படிச்சு படிச்சு சொல்லி இருந்தேன் அப்படியும் கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையோடு விளையாடி இருக்கானே எனக்கு கோவம் வருமா இல்லியா நீயே சொல்லும்மா. அதனாலதான் எனக்கு அழைப்பு அனுப்பாம இருந்திருக்கான்  டாக்டர் இப்ப நான் என்ன செய்யனும்? அழுகையுடன் கேட்ட சவிதாவிடம் உன் வீட்டு பெரியவங்க கிட்ட பேசு. நீ சின்ன பொண்ணும்மா. உனக்கு இன்னும் வயசு இருக்கு வாழ்க்கை இருக்கும்மா. வீட்டு பெரியவங்க கல்யானம் பேசும் போது குலம் கோத்திரம்னு பையன் வேலை  குடும்பம் குணம் பத்தி எல்லாம் விசாரிக்கராங்க ஹெல்த் பற்றி யாருமே அக்கரை காட்டவே மாட்டேங்குராங்களே.என்று மிகுந்த மன வருத்ததுடன் டாக்டர் சொன்னார்

உங்களை ஏமாத்தி கல்யாணம் கட்டி இருக்காங்க. உங்க வீட்டு பெரியவங்கதான் இதுபத்தி ஒரு முடிவு எடுக்கணும்மா. நான் வேர என்ன சொல்ல. சரி தைரியமா பிரச்சினையை எதிர் கொள்ளனும்மா. போயிட்டுவா. என்று அவளை அனுப்பி வைத்தார். வெளியே வந்த சவிதா சங்கரிடம் வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூட்டி போனாள் வழி பூராவும் டாக்டர் என்ன சொன்னார் எனறு கேட்டுக்கொண்டே வந்தான் சங்கர் சவிதா பதிலெதுவுமே சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள்..  வீட்டுக்கு வந்தபிறகும் மாமியாரிடமோ சங்கரிடமோ எதுமே பேசாமல் மௌனமாகவே இருந்தாள்.  மாமியார் விடாமல் டாக்டர் என்னம்மா சொன்னார் என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் ஒன்னுமில்லே வெரும் வைரல் ஃபீவர்தான் 4 நாளில் சரியாகிடும்னு மருந்து கொடுத்திருக்கார் என்று மட்டும் சொல்லி விட்டு வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தினாள். சங்கருக்கு உடம்பு குணமானதும் மாமியாரிடமும் சங்கரிடமும் சொல்லி விட்டு நான் அம்மாவீட்டுக்குபோயிட்டுவரேன்னு கிளம்பினாள்.

                                                                                         (தொடரும்.)

26 comments:

Akila said...

Waiting for the continuation....

பால கணேஷ் said...

பெண்ணால் என்ன செய்துவிட முடியும் என்கிற ஆண்களின் திமிர்... சங்கர் மாதிரி நபர்களையெல்லாம் ஒடவிட்டு உதைக்கணும். சவிதா என்ன முடிவெடுத்தாள்... இப்டி சஸ்பென்ஸ்ல விட்டுட்டிங்களேம்மா... ஆவலோட வெயிட்டிங்.

இராஜராஜேஸ்வரி said...

சங்கருக்கு உடம்பு குணமானதும் மாமியாரிடமும் சங்கரிடமும் சொல்லி விட்டு நான் அம்மாவீட்டுக்குபோயிட்டுவரேன்னு கிளம்பினாள்.

சவிதாவுக்கு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் !

நிரஞ்சனா said...

அச்சச்சோ... இவ்வளவு சஸ்பென்ஸ்லாம் எனக்குத் தாங்காதும்மா.. சீஈஈஈஈக்கிரம் அடுத்த பதிவைப் போட்றுங்கோ....

Yaathoramani.blogspot.com said...

கதையின் துவக்கமே பச்சை மிளகாயைக்
கடித்தது போல் சுரீர் என்கிறது
அருமையான நடை
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

தொடருங்கள். காத்திருக்கிறோம்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

நெஞ்சித்தொடும் கதை... முடிவு நல்லதாகவே இருக்கட்டும்...

//அவருக்கு என்ன ப்ராப்லம் டாக்டர். என்றாள். ஆமாம்மா 5, 6, வருடம் முன்பு நடந்த ஸ்கூட்டர் விபத்தில் சங்கர் ஆண்மைத்தன்மையை இழந்துட்டான்மா. அவனால ஒருபெண்ணை சந்தோஷப்படுத்தவோ ஒரு குழந்தைக்கு தகப்பனாகவோ முடியாதும்மா. //

நான் படித்தபோது என் நண்பியின் நெருங்கிய உறவினர் ஒருவரை ஆமி பிடித்துச் சென்று நடாத்திய சித்திரவதையில்.... பின்னாளில் அவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டதாம் என நண்பி வந்து சொன்னபோது.... மிகவும் மனம் வருந்தினேன்.. இயற்கையாக ஏதும் நடப்பது வேறு மனிதனே மனிதனுக்கு இப்படிச் செய்கிறார்களே!!!!

வல்லிசிம்ஹன் said...

அட்ப்பாவமே. இப்படியெல்லாம் கூட நடக்கிறதா. கதைதானே மா?பாவம் அந்தப் பெண்.

Madhavan Srinivasagopalan said...

OMGod.. what a start..
waiting for the 2nd episode.. :-)

சாந்தி மாரியப்பன் said...

அடப்பாவமே.. தீர விசாரிக்காமல் அவசரமா முடிவெடுத்துட்டு அப்றம் நிதானமா வருத்தப்படற நிலை எப்பத்தான் மாறுமோ..

குறையொன்றுமில்லை. said...

அகிலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நிரஞ்சனா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமனிசார் வருகைக்கும் தமிழ் மண ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வல்லிம்மா வருகைக்கு நன்றி. இது உண்மையில் நடந்த சம்பவம்தான் கதை வடிவில் கொடுத்திருக்கேன்.

குறையொன்றுமில்லை. said...

மாதவன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமாசாந்தி தீர விசாரிக்காமல் செய்த விஷயம்தான்.

ஸாதிகா said...

அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் லக்‌ஷ்மிம்மா.

குறையொன்றுமில்லை. said...

சாதிகா வருகைக்கு நன்றி

K said...

சபிதாவை நினைக்க பரிதாபமாக இருக்கு லக்ஸ்மி அக்கா! சங்கர் தன் நிலைமையை முன்னாடியே சொல்லியிருக்கலாம்! முடிவு எப்படி இருக்குமோ என்று எண்ண வைக்கிறது கதை!!!

குறையொன்றுமில்லை. said...

வாங்க வாங்க ரொம்ப நாள் கழிச்சு நம்மபக்கம் வந்திருக்கீங்க. நன்றி

ராஜி said...

ஷங்கர் போன்ற ஆட்கள் கதையில் மட்டுமில்லாம, நம்மை சுற்றியும் நமக்கு தெரியாம நிறைய இருக்காங்க அம்மா.

குறையொன்றுமில்லை. said...

ராஜி வருகைக்கு நன்றி

மாதேவி said...

கதை நெஞ்சைத் தொட்டு செல்கின்றது தொடர்கின்றேன்.....

என்னை ஆதரிப்பவர்கள் . .