Pages

Wednesday, August 1, 2012

அரைச்சு கலக்கி

தேவையான பொருட்கள்.

த்யிர்----------------------   2 கப்(புளிப்பில்லாதது)
துருவிய தேங்காய்---------- ஒரு மூடி
ஊற வைத்திருக்கும் வடு மாங்காய்கள் -----------   8
பச்ச மிளகாய்-------------------------    2   (நான் 4 சேர்த்திருக்கேன்)
உப்பு-------------------  ரொம்ப கொஞ்சம்.
                                         
 தாளிக்க
தேங்கா எண்ணை---------   1 ஸ்பூன்
கடுகு----------------------  1 ஸ்பூன்
 வெந்தயம்---------------- 1/2 ஸ்பூன்
 கறி வேப்பிலை --------- ஒரு ஆர்க்.
 சிவப்பு மிளகாவத்தல்---------- 2
செய் முறை
                                                           
தேங்கா, மாங்கா பச்சை மிளகாயை மிக்சியில் நைசாக அரைத்து தயிரில் கலக்கவும். எண்ணையில் கடுகு வெந்தயம், கருவேப்பிலை 2 சிவப்பு மிளகா தாளிக்கவும். சூடு பண்ண தேவையில்லே. அப்படியே உபயோகப்படுத்தலாம்.
                                                 
இந்தக்குழம்பு நாங்க அரைச்சு கலக்கின்னுதான் சொல்வோம். ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு பேர் சொல்வாங்க அதில் வேடிக்கையா அம்மாஞ்சி குழம்புன்னும் சொல்வாங்க ஏன் அந்தப்பெயர் வந்ததோ தெரியாது.மாங்காயில் ஏற்கனவே உப்பு இருப்பதால் உப்பு குறைவாக சேர்க்கவும்.
                                                             

27 comments:

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by a blog administrator.
Yaathoramani.blogspot.com said...

நாங்களும் அரைச்சுவிட்ட குழம்புன்னுதான் சொல்வோம்
அதன் சுவையேதனிதான்
படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
(

Yaathoramani.blogspot.com said...

tha.ma2

ஸாதிகா said...

பெயரே வித்தியாசமாக இருக்கு லக்ஷ்மிம்மா

Mahi said...

New recipe to me..tangy n delicious!

Anonymous said...

குழம்பு சூப்பரா இருக்கும்னு படமே சொல்லுது...

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான குறிப்பு லக்ஷ்மிம்மா! நீங்கள் சொன்னது மாதிரி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்கிறார்கள். வீட்டில் மாவடு இருக்கிறது. செய்து பார்த்து சொல்லுகிறேன்.

MARI The Great said...

படம் பார்த்ததே சுவை உணர்கிறேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்க வேண்டும்...

நன்றி அம்மா...
(த.ம. 3)

Angel said...

ரொம்ப நன்றிம்மா .எங்க வீட்டில் நானும் மாவடு போட்டிருக்கேன் இன்னிக்கு உடனே செய்யப்போறேன்

குறையொன்றுமில்லை. said...

ரமணிசார் வருகைக்கும் த்.ம. ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாதிகா இந்தக்குழம்பு பேரே இதுதான். நல்லா இருக்கும்

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

தமிழ்திரட்டி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ம்னோ மேடம் செய்து பாருங்க எல்லாருக்கும் பிடிக்கும்

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஏஞ்சலின் செய்து பாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லு

Angel said...

செய்தாச்சு ,ருசிச்சாச்சு...மிக மிக ருசி .கைவசம் மாவடு இருந்ததால் ஈசியா இருந்தது ..இனி மாவடு நிறைய போடுவேன் இந்த குழம்பு செய்யவே .மிக்க நன்றிம்மா

மாதேவி said...

அரைத்துவிட்ட குழம்பு வித்தியாசமாக இருக்கின்றது.

குறையொன்றுமில்லை. said...

ஏஞ்சலின் குட் உடனே செய்துட்டியா எல்லா சாமான் களும் வீட்டில் இருந்தா சுலபமா நிஷத்தில் செய்துடலாம்

குறையொன்றுமில்லை. said...

மாதேவி ஆமா செய்து பாத்துட்டு சொல்லுங்க

இராஜராஜேஸ்வரி said...

சீக்கிரம் செய்துவிட முடியும்
சிறப்பான குறிப்பு.. பாராட்டுக்கள் !

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Geetha Sambasivam said...

வருஷங்கள் ஆறது இதெல்லாம் சாப்பிட்டு. பகிர்வுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ஹை.. ரொம்ப நல்லா சுலபமாச் செய்யக்கூடியதா இருக்குதே.. ஜூப்பர் :-)

நெல்லைத் தமிழன் said...

ஏஞ்சலின் அவங்க சொல்லி இந்தக் குழம்பு செய்முறையைத் தேடினேன். இந்த வாரம் செய்கிறேன். கொதிக்கவிடவேண்டாம்னு (புளிசேரி மாதிரி) சொல்லியிருக்கீங்க. செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .