Pages

Monday, July 30, 2012

ஆலு ஹல்வா

 ஆலுன்னா உருளைக்கிழங்கு. சிரிக்காதீங்க. உருளைக்கிழங்கில் அல்வாவா?  ஆமாங்க செய்து பாருங்க. புதுசா சாப்பிடுரவங்க பாதாம் அல்வான்னே நினைப்பாங்க.
 தேவையான பொருட்கள்
 உருளைக்கிழங்கு--------------  1/2 கிலோ
ஜீனி-------------------------------- 1/4 கிலோ
 நெய்------------------------------  100 மில்லி
 பால்------------------------------ 150 மில்லி
 முந்திரி பருப்பு---------------- 10-
 ஏலப்பொடி--------------------  ஒருஸ்பூன்
                                           
 செய் முறை

 உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் நீக்கி மையாக
                                       
மசித்துக்கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி மசித்த கிழங்கை நன்கு வதக்கவும். பச்சை வாசனை போக நன்கு வதக்கனும். இது ரொம்ப அடி பிடிச்சுக்கும். நான் ஸ்டிக் கடாயில் கிளறினால் சரியா இருக்கும். பிறகு பால் ஊற்றி வேக விடவும் .கொஞ்சம் கெட்டி ஆனதும் ஜீனி சேர்த்து கை விடாமல் கிளறவும்.பாக்கி நெய்யும் ஊற்றி சுருள கிளறி இறக்கவும். நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கவும். ஏலப்பொடியும் சேர்க்கவும்.
                                         

28 comments:

ஸாதிகா said...

எங்கள் வீட்டில் உருளைக்கிழங்கில் பாயசமும் செய்வோம்.சுவையாக இருக்கும்.அதே போல் நீங்கள் அல்வா செய்துள்ளீர்கள் கண்டிப்பாக சுவையாக இருக்கும்

சாந்தி மாரியப்பன் said...

வித்தியாசமா இருக்கே. செஞ்சுரலாம்..

கோமதி அரசு said...

என் அம்மா, அக்கா இருவரும் இந்த உருளை கிழங்கு அல்வா நன்றாக செய்வார்கள்.

நான் செய்து வெகு காலம் ஆகி விட்டது. உங்கள் செய்முறை விளக்கம் கேட்டவுடன் செய்ய ஆசை.

உங்கள் செய்முறை விளக்கம், படங்கள் எல்லாம் அருமை.

ஸாதிகா சொன்ன மாதிரி இதையே பாயசம் செய்து பார்க்க வேண்டும்.

Mahi said...

வட இந்திய இனிப்பு இது என நினைக்கிறேன். இனிப்பாச்சே, எப்படின்னாலும் ஒரு கை பார்த்துருவோம்! :)

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் இதுவரை செய்ததில்லை...
விளக்கமான செய்முறை பதிவிற்கு நன்றி அம்மா...

(த.ம. 3)

பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

மகேந்திரன் said...

வித்தியாசமான உணவு அம்மா..
பகிர்வுக்கு நன்றி...

ராமலக்ஷ்மி said...

நான் மும்பையில் இருந்தபோது கற்றுக் கொண்டது. ஆம். எல்லோரும் பாதாம் அல்வா என்றே நினைப்பார்கள்:)! ஊறவைத்த பாதாமை கொஞ்சமாய் பால் விட்டு மைய அரைத்தும் இதனோடு சேர்ப்பதுண்டு.

நல்ல குறிப்பு.

MARI The Great said...

உருளை கிழங்கு அல்வா....!!! வித்தியாசம்!!!

ஸாதிகா said...

கோமதிம்மா..உருளைக்கிழங்கை தோலுறித்து கேரட் துருவியில் மெலிதாக துருவி சிறிது நெய் விட்டு பச்சை வாசனை போக நான்ஸ்டிக் கடாயில் வறுத்து,வழக்கம் போல் பால் சேர்த்து பாயஸம் கிளறிப்பாருங்கள்.அப்புறம் ஸாதிகாவையும் லக்ஷ்மிம்மாமாவையும் மறக்கவே மாட்டீர்கள்.

நிரஞ்சனா said...

OOPS! உருளைக்கிழங்கை வைத்து அல்வாகூட செய்ய முடியும் என்பதே வியக்க வைக்கிறது... வித்தியாசமான இந்த விஷயத்தை முயன்று பார்க்கிறேன் கட்டாயமா.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான சுவையான அல்வா பகிர்வுக்குப் பாராட்டுக்கள் அம்மா !

அம்பாளடியாள் said...

மிக்க நன்றி அம்மா பயனுள்ள தகவலுக்கு .

ராஜி said...

சின்ன பிள்ளைல எங்க பக்கத்து வீட்டு மாமி செஞ்சு குடுப்பாங்க. அப்போ சாப்பிட்டது. அடிக்கடி நினைச்சுப்பேன். ஆனா, செய்யத்தெரியாது. குறிப்ப்புகளை நீங்க குடுத்துட்டீங்க. இனி நானே செஞ்சு சாப்பிடுவேன். டிப்ஸுக்கு நன்றிங்க அம்மா

குறையொன்றுமில்லை. said...

ஆமா ஸாதிகா பாயசமும் நல்லா இருக்கும். வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமா சாந்தி ரொம்ப நல்லா இருக்கும் செய்துபாரு

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு நீங்களும் செய்து பாருங்க சாதிகா சொன்ன மாதிரி எங்களை மறக்கவே முடியாது. இந்த ஸ்வீட் செய்யும் போதெல்லாம் எங்க நினைவு வந்துகிட்டே இருக்கும்

குறையொன்றுமில்லை. said...

மஹி வட இந்திய இனிப்புதான் செய்து பாரு நல்லா வரும்

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் சீக்கிரமே வீட்ல செய்து பாருங்க எல்லாருக்கும் பிடிக்கும்

குறையொன்றுமில்லை. said...

ஆம மகேந்திரன். கொஞ்சம் வித்யாசமானதுதான்

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள் உருளைக்கிழங்கில் இன்னும் என்னல்லாமோ செய்யலாம்

குறையொன்றுமில்லை. said...

நிரஞ்சனா செய்து பாரு ரொம்ப நல்லா வரும்

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜி செய்து பாருங்க ஈசிதான்

Yaathoramani.blogspot.com said...

ஒரு தேனம்மை மேடத்துக்குரிய
பின்னூட்டம் தங்கள் பதிவில் நுழைந்துவிட்டது
என நினைக்கிறென்
தயவுசெய்து டெலீட் செய்துவிடவும்
தவறு நேர்ந்தமைக்கு மன்னிக்கவும்

மாதேவி said...

உருளை கிழங்கு அல்வா சுவையாக இருக்கின்றது.

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .