Google+ Followers

Pages

Wednesday, October 19, 2011

திருட்டு 1

லஞ்சுக்கான சைரன் ஒலி கேட்டதும் அவரவர்கள் கொண்டுவந்தடிபன் கேரியரை திறந்தனர். மதராஸி, பெங்காலி, மராட்டி, பஞ்சாபி சாப்பாடு ஐட்டங்களின் வாசனை மூக்கைத்துளைத்தது.பேசிக்கொண்டே எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அது ஒரு பெரிய தொழிற்சாலை.வெடிமருந்துகள் தயார்பண்ணும் தொழிற்சாலை ஆதலால் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது. நிறையபேரு அங்கு வேலை பார்த்துவந்தனர். சிலர் ஆபீஸ் குடியிருப்பிலும் சிலர் நகரத்தில் சொந்தவீடு கட்டிக்கொண்டும் வேலைக்கு வந்துபோய்க்கொண்டு இருந்தனர். காலை 9மணிமுதல் மாலை 5 மணிவரை வேலை நேரம். மதிய லஞ்ச் 1-மணி நேரம். லஞ்ச் நேரம் ஸ்டாஃப் ரூமில் ஜெனரல் மேனேஜர் புதிதாக வந்திருக்கும் ஸ்பெஷல் செக்யூரிட்டி ஆபீசரிடம் பேசிக்கொண்டிருந்தார். மிஸ்டர் ரமணன் நம்ம பேக்டரில திருட்டுப்போகும் சாமான்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிக்கொண்டே போகிரது.அதைக்கண்டுபிடிக்கத்தான் உங்களை ஸ்பெஷலாக வரவழைச்சிருக்கேன். செக்‌ஷன் செக்யூரிட்டி ஆபீசர் மாதவ்னும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணூவார்.  நீங்க கொஞ்சம் பொறுப்பெடுத்து திருட்டைத்தடுக்கனும். என்றார்.

 தெரியும் சார், நானும் ஏற்கனவே இங்க டூட்டியில் இருந்திருக்கேன். காப்பர், மெட்டல்ராட், லினன்க்ளாத் எல்லாம் சைக்கிள் சீட்டுக்கடியில் ஒளித்து எடுத்துசெல்பவர்களை எத்தனையோ முறை பிடிச்சிருக்கேனே?உங்களுக்கும் தெரியுமே சார். என்றார் ரமணன். ஜி. எம். ஆமா மிஸ்டர் ரமணன் உங்க திறமைமேல நம்பிக்கைவச்சுத்தான் திரும்ப திரும்ப உங்களையே கூப்பிடரேன் என்றார். உடனே ரமணன் இப்ப என்ன சார் காணாம ப்போகுது? என்றார்.சீக்ரெட் ரெயிட் செக்கிங்க் பண்ணனுமா என்றார். ஜி. எம். இந்த தடவை கொஞ்சம் வித்யாசமான பொருள் காணாமப்போகுது ரம்ணன். மெர்க்குரி,  பாதரசம் நம்ம பேக்டரிக்கு ரொம்ப தேவையான மிக விலை உயர்ந்தபொருள் இல்லியா? அது எப்பவும் ஸ்டாக்கில் வச்சிருப்போமே. அது குறையுது.அதுதான் கண்டு பிடிக்கனும் என்றார் ஜி. எம்.

 சார் பாதரசத்தையா திருடராங்க? சரி நான் கண்காணிக்கரேன் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் ஆனா ஒரு விஷயம் சார் ஆபீஸ்முடிஞ்சதும் வெளியே போர ஒர்க்கர்ஸைத்தான் தலைலேந்து கால்வரை தொட்டுத்தடவி செக்பண்ணமுடியும். ஆனா பெரிய ஸ்டாபையோ ஆபீச்ர்சயோ அப்படி பண்ணமுடியாதேன்னு பாக்கிரேன் என்றார் ரமணன். ஜி. எம் . என்னபண்ணுவீங்களோ உங்களுக்கு முழு அதிகாரம் தரேன் ஆளைப்பிடிச்சு என்முன்னே கொண்டு நிறுத்துங்க என்றார். சரிசார் நான் தீவிரமா முயற்சி செய்யுரேன் என்றார் ரமணன். அவங்க கொண்டுவரும் சாப்பாட்டு டப்பா முதக்கொண்டு எல்லாத்தையும் தரோவா செக்பண்ணுங்க என்றார் ஜி. எம்.

 மற்று நாள் முதல் ரமணன் வேலையில் இறங்கிவிட்டார். செக்‌ஷன் செக்யூரிட்டி ஆபீசர் மாதவன் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருடன் கூடவே கேட்டில் நின்று கொண்டார். மாதவன் ரமணனிட என்ன சார் திடீர் செக்கிங்க் என்றார். மேலிடத்து உத்த்ரவு மாதவன் ஆபீசில் திருட்டு போகுதாம் நிறைய. அதான் கண்டு பிடிக்க என்னை வரவழைச்சிருக்காங்க. ஒவ்வொருவரையும் நல்லா செக்பண்ணி வெளில அனுப்பனும் என்றார் ரமணன். உடனே மாதவன் அது இங்க ரொம்ப சகஜம்தான் ஒவ்வொருவன் ஒவ்வொரு சாமானை அமுக்கிடரான் சாமர்த்தியமா. கண்டுபிடிச்சா உடனே யூனியன் போயி பிரச்சனை பண்ணிடரான் என்ன செய்ய? என்று மாதவன் அலுத்துக்கொண்டார்.

 சரி சார் இப்ப என்ன காணாமப்போகுது? பெயிண்ட் திருட்டா என்று மாதவன் கேக்கவும்  ரமணன் நீங்க ஒவ்வொருவரையா செக்பண்ணிட்டே அந்தப்க்கமா பாருங்க நான் இந்தபக்கம் பாத்துக்கரேன். இப்ப எல்லாரும் வெளில வர நேரம் பிறகு சொல்ரேன் என்றார் ரமணன்.என்னன்னு தெரியாம எப்படி சார் செக் பண்ண என்றார் மாதவன்.மாதவனுக்கு ஏதும் பதில் சொல்லாமல் ரமணன் தன் வேலையில் தீவிரமாக இறங்கி விட்டார். அன்றும் யாரிடமும் எதுவும் சிக்கலை. இருவரும் சோர்ந்துபோனார்கள் ஸ்டாஃப் ரூம்போய் டீ ஆர்டர் பண்ணிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தனர்.

 மாதவன் ரமணனிடம் அவர்குடும்ப விஷயம் பேசினார். சார்ஃபேமிலிலாம் எங்க இருக்காங்க நீங்க எங்க தங்கி இருக்கீங்க எங்க சாப்புடுரீங்கன்னு கேட்டார். ரமணனும் டீயைஉறிஞ்சியவாரே அவங்கல்லாம் வேர ஊர்லதான் இருக்காங்க எனக்குஇப்படிஸ்பெஷல்டூட்டியில் அடிக்கடி போக வேண்டி வருவதால் தனியாதான் வர வேண்டி இருக்கு. நம்ம ஆபீஸ்கெஸ்ட் ஹவுசில் தான் தங்கி இருக்கேன். சார் அங்கதான் சாப்பாடுமாஎன்றார் மாதவன் ஆமா என்றார் ரமணன். அப்போ இன்னிக்கு நைட் டின்னருக்கு எங்க வீட்டுக்கு வாங்க  ஒரு நாளைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலாமே என்றார் மாதவன். இல்லை மாதவன் இன்னிக்கு பூரா நாளும் ரொம்ப பிசியா இருந்தது இல்லியா ரூம்போயி குளிச்சு எப்படாப்பா படுப்போம்னுதான் இருக்குஎன்றார் ரமணன். சரி சார் இப்போ போயி ரெஸ்ட் எடுங்க நானே 8 மணிக்கு  வந்துஉங்களை என்வீட்டுக்கு கூட்டிண்டுபோரேன் என்றார். மாதவன் நீங்க இவ்வளவு கம்ப்பெல் பன்ரீங்க தட்டமுடியல்லே வரேன் என்றார் ரமணன்.

42 comments:

மகேந்திரன் said...

ரொம்ப இயல்பா போகுது
சுவாரஸ்யமா....

• » мσнαη « • said...

வணக்கம் !!! அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன் !!!

அம்பலத்தார் said...

super.திரில்லாக எழுதுவதில் நீங்க கில்லாடிதான்.

விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றி அம்மா!

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

♔ℜockzs ℜajesℌ♔™ said...

oh my god , இது தொடர் கதையா ? தெரியாம படிச்சுடேனே , இப்போ அடுத்து என்ன நடக்கும்? யாரு திருடினா? இதெல்லாம் தெரியிற வரைக்கும் மண்டை வெடிச்சுடுமே , என்னம்மா இப்படி டப்புன்னு நிறுத்திபுட்டிங்கா? சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க அம்மா , காத்து இருக்கிறேன் . .

RAMVI said...

அருமையான ஆரம்பம்.அடுத்த பகுதியை விரைவில் எதிர்பார்கிறேன் அம்மா.

Madhavan Srinivasagopalan said...

தொடருமா .. தொடரும் போடுங்க ..

மாய உலகம் said...

பாதரசங்களை யார் திருடிப்போவது... படபடப்பை உண்டாக்கிவிட்டீர்களே.. தொடருமா?

M.R said...

கதை சுவாரஸ்யம் ,அந்த மாதவன் தான் திருடனா ? தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

Interesting. Thanks for sharing. vgk

ஸாதிகா said...

அருமையான சிறுகதை.

Ramani said...

சுவாரஸ்யமான ஆரம்பம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

இராஜராஜேஸ்வரி said...

அருமையான ஆரம்பம்

வெங்கட் நாகராஜ் said...

சிறுகதை நல்லா ஆரம்பிச்சு இருக்கு. தொடரும்-னு வேற போட்டுட்டீங்க... காத்திருக்கிறேன்... :))))

அமைதிச்சாரல் said...

சுவாரஸ்யமா ஆரம்பிச்சிருக்கு..

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மோஹன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அம்பலத்தார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

விக்கி உலகம் நன்றி

Lakshmi said...

அருள் நன்றி

Lakshmi said...

ராஜா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ரமா நன்றிம்மா.

Lakshmi said...

மாதவன் நன்றி

Lakshmi said...

மாய உலகம் நன்றி

Lakshmi said...

m. r. வெரி ஸ்மார்ட்.

Lakshmi said...

கோபால் சார் நன்றி

Lakshmi said...

ஸாதிகா நன்றி

Lakshmi said...

ரமணி சார் நன்றி

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி நன்றி

Lakshmi said...

வெங்கட் நன்றி

Lakshmi said...

சாந்தி நன்றி

radhakrishnan said...

எது கிடைத்தாலும்திருடுவதா?என்ன
உலகம் இது!

radhakrishnan said...

எது கிடைத்தாலும்திருடுவதா?என்ன
உலகம் இது!

நிரூபன் said...

வணக்கம் அம்மா,
நலமா?
கதை விறுப்பினைக் கூட்டி, அடுத்தது என்ன எனும் ஆவலைத் தூண்டியவாறு நகர்கிறது.

ரசிகன் said...

தொடர்கதையா இது?

என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? ரெண்டாவது பாகம் எப்போ எழுதுவீங்க?

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான சம்பவம். நல்ல இடத்தில் வழக்கம் போல நிறுத்தி விட்டீர்கள். மாதவன்தான் தப்பா....ரமணனே தப்பா....! இதுவும் எங்கோ அனுபவத்தில் நடந்தது என்று சொல்லப் போகிறீர்கள்!

சம்பத்குமார் said...

சுவாரஸ்யமாய் கொண்டு சென்று முடிவு சொல்லவில்லையே அம்மா ?

தொடர் பதிவா ?

கம்பெனியில் நடப்பது போன்றே இயல்பாய் செல்கிறது..

பாசத்துடன்
சம்பத்குமார்

Lakshmi said...

ராதா கிருஷ்னன் நன்றி

Lakshmi said...

நிரூபன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரசிகன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சம்பத் குமார் நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .