Google+ Followers

Pages

Monday, October 17, 2011

அவசரம்

கிருஷ்னன் செண்ட்ரல் கவர்மெண்டில் வடக்கே வேலை பார்ப்பவர். ஒவ்வொரு வ ருடமும் ஆபீசில்  L.T.C. போட்டு மனைவி இரண்டு குழந்தைகளுடன் தமிழ் நாட்டில் முக்கிய இடங்களுக்கு போய் சுற்றிப்பார்த்து வருவார். அதுபோல இந்த வருடமும் கன்யாகுமாரி, மற்றும் பக்கத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கும் கிளம்பிபோனார்கள். மனைவி மீரா, பையன் ரவி 10- வயது, பெண் வாசவி,15 வயது. எல்லாஇடங்களும் சுற்றிவிட்டு கடைசியாக கன்னியாகுமாரியில் இரண்டு நாட்கள் தங்கி விவேகானந்தாராக்ஸ், காந்தி மண்டபம் குமரி அம்மன் கோவில் எல்லாம் சுற்றி, கடைகளில் கொஞ்சமாக பர்ச்சேசும் முடிந்து அன்று சாயங்காலம் கிளம்பினார்கள். முதலில் கேரளாவில் பார்க்கவேண்டிய இடங்கள் எல்லாம் பார்த்ததிலேயே எல்லாருக்குமே மனசு பூராவும் உற்சாகமா இருந்தது. வடக்கே ஏதோ ஒரு மூலையில் அதிக வெப்பம் மிகுந்த ஊரிலேயே இருப்பவர்களுக்கு இந்த இடங்களின் குளுமை மனதுக்கு மிகவும் பிடித்தது. இயற்கை காட்சிகள் ஒவ்வொன்றையும் மனம் குளிர ரசித்தார்கள். சமுத்ர ஸ்னானம் வேரு அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.  நன்கு எஞ்சாய் பண்ணி இன்று கிளம்பணும்னு நினைக்கும்போதே கலக்கமாக இருந்தது. ரூம் காலி பண்ணிட்டு பஸ்  ஸ்டாண்ட் வந்தார்கள். பெட்டி படுக்கை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு ஆளுக்கொரு இளனீர் குடித்தவாறே பேசிக்கொண்டிருந்தார்கள்.எங்கெல்லாம் போனார்கள் என்னல்லாம் பார்த்தார்கள் என்று சதோஷமாக பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்களின் பஸ்வர இன்னும் நேரம் இருந்தது.

 கிருஷ்னனுக்கு அவசரமாக நம்பர்2 பாத்ரூம் போக வேண்டி இருந்தது. வாச் பர்ஸ் பென் எல்லாம் கழட்டி மனைவியிடம் கொடுத்துவிட்டு ஒதுக்குப்புறமாக இருந்த கழிவறை நோக்கி போனான்.அங்கு துவார பாலகா போல இருவர் நின்றுகொண்டிருந்தார்கள். கிருஷ்னனுக்கோ அவசரம் அவர்களைத்தாண்டி கழிவறைக்குள் நுழையப்போனான்.  அந்தகாவல்காரர் இருவரும் கிருஷ்னனிடம் என்ன சாரு பாத்தா பேண்ட் சூட்டெல்லாம் போட்டு படிச்சவரு போல இருக்கீங்க. போர்ட் போட்டிருக்கு இல்லே அதைப்படிக்கலியான்னு மிரட்டலாக கேட்டார்கள். இருப்பா எனக்கு ரொம்ப அவசரம் போயிட்டு வந்து பிறகு போர்டெல்லாம் படிச்சுக்கரேன் என்றான். என்னசாரு காசு கொடுத்தாதான் உள்ளாற் ப்போகலாம்ன்னுதான் அதுல தெளிவா எளுதி இருக்கில்லே? முதல்ல காசுகொடு அப்புரமா உள்ளாற்போய்க்கோன்னு சொல்ரான்.

 அடகஷ்டகாலமே எதுக்குத்தான் காசு வசூல்பன்ரதுங்கர்தே இல்லியா? இதுக்குமா? சரி எவ்வளவு காசு? என்று பேண்ட்பாக்கெட்டில் கைவிட்டான் கிருஷ்னன். ஐயோ பர்ஸ் பென், வாச் எல்லாம் மனைவியிடம் கொடுத்தது அப்பத்தான் நினைவுக்கே வந்தது.கையில் ஒரு பைசாகூட இல்லே. அவனுக்கோ அவசர்ம் உந்தித்தள்ளியது.இங்க பாருப்பா முதல்ல என்ன உள்ள போகவிடு. என்மனைவி குழந்தைகள் அதோ பஸ்ஸ்டாண்ட்லதான் நிக்குராங்க. நான் காசு கொடுக்காமல்லாம் ஏமாத்தமாட்டேன் முதல்ல என்னை உள்ள விடுப்பான்னு எவ்வளவோ சொல்லியும் அவர்கள் காசு பிடுங்குவதிலேயே குறியா இருந்தார்கள். சுற்றிவர கூட்டம் வேரு கூடிவிட்டது. கிருஷ்னனுக்கோ அவமானமா ஆச்சு. ஓடிப்போயி மனைவியிடம் விவரம் சொல்லி காசு வாங்கி காவலரிடம் கொடுத்துவிட்டு அவசரமாக உள்ளஓடி பாரத்தை இற்க்கினான்.  அப்பாடா என்னடா இது கொடுமை என்று எண்ணீய வாரே மனைவி குழந்தைகளிடம் போயி விவரம் சொன்னான். பசங்க இருவரும் வாயைமூடிக்கொண்டு சிரித்தவாரே அப்பா கன்யாகுமாரில எதை மறந்தாலும் இந்த காமெடியை எப்பவுமே மறக்கமுடியாதுல்லன்னு? கேட்டுக், கேட்டு சிரிப்புவேறு.

38 comments:

specialshowtoday said...

please click download all movies here

ஸ்ரீராம். said...

:))

வை.கோபாலகிருஷ்ணன் said...

அவரவர்கள் அவசரம் அவரவர்களுக்கு!
நல்ல நகைச்சுவை.

Anonymous said...

அவஸ்தை அனுபவம்...-:)

Madhavan Srinivasagopalan said...

பசிக்குற வயத்துக்கு உணவும்,
வலிக்குற வயத்துக்கு டாய்லெட்டும், கொடுத்தா புண்ணியமாப் போகும்..

raji said...

எப்பவும் கைல பணம் இருக்கறது நல்லது.

போத்தி said...

LOL. Even if we were such a "Krishnan", we can still laugh remembering those incidents.

Mahi said...

:)

அமைதிச்சாரல் said...

:-)))))

மகேந்திரன் said...

அவசரத்தின் இயல்புகளை அழகாய்
சொல்லியிருகீங்க அம்மா...

athira said...

வேகமான உலகில் அனைத்துக்கும் பணம்தான் முக்கியம். ஆனால் பணம் வாங்குவதில் தப்பில்லை, அதற்கேற்றபடி நல்ல கிளீனாக இருப்பின் நல்ல விஷயமே.

கே. பி. ஜனா... said...

நல்ல தமாஷ்!

கே. பி. ஜனா... said...

நல்ல தமாஷ்!

வெங்கட் நாகராஜ் said...

:))) எப்பவும் காசு இருக்கணும்னு புரியுது....

நல்ல சிறுகதைம்மா...

sury said...

சூபர் காமெடி.

உள்ளே போய், அங்கு கண்ட கண்ட்ராவியைப் பார்த்து, கண் கலங்கி,
திரும்பி ஓடி வந்த கதைகளையும் கேட்டிருக்கிறேன்.


சுப்பு ரத்த்தினம்.
http://Sury-healthiswealth.blogspot.com

RAMVI said...

நல்ல வேடிக்கைதான்.

radhakrishnan said...

எங்கு சென்றாலும் இந்த வசதியைப்
பார்த்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்
இல்லாவிட்டால் அவஸ்தைதான்.
சில டூர்களில் சென்ற போது இதற்கு
சரியான ஏற்பாடு செய்து கொள்ளவில்லை என்பதால்,
மந்திராலயம், சிருங்கேரிஆகிய இடங்களில் அதிகாலையில் கஷ்டப்பட்டோம் .டூர் ஏற்பாடு செய்தவர்
களுடன் மனஸ்தாபத்துடன்சண்டை
போடும்படி ஆயிற்று.

ரசிகன் said...

விக்கிரமாதித்யன் அவர்களின் கவிதை நினைவுக்கு வருகிறது,

ராமருக்கு வேண்டும் கோவில்,
பாபருக்கு வேண்டும் மசூதி,
ஜனங்களுக்கு வேண்டும்
நல்ல கழிப்பறைகள்.

Lakshmi said...

ஸ்ரீ ராம் நன்றி

Lakshmi said...

கோபால் சார் நன்றி

Lakshmi said...

ரெவரி நன்றி

Lakshmi said...

மாதவன் நன்றி

Lakshmi said...

ராஜி நன்றி

Lakshmi said...

போத்தி நன்றி

Lakshmi said...

சாந்தி நன்றி

Lakshmi said...

மகேந்திரன் நன்றி

Lakshmi said...

அதிரா நன்றி

Lakshmi said...

கே. பி. ஜனா நன்றி

Lakshmi said...

வெங்கட் நன்றி

Lakshmi said...

சூரி நன்றி

Lakshmi said...

ரமா நன்றி

Lakshmi said...

ராதாகிருஷ்னன் நன்றி

Lakshmi said...

ரசிகன் நன்றி

Lakshmi said...

மஹி நன்றி

ஷைலஜா said...

அவசரம்..நல்ல பதிவு ரசித்தேன்

Lakshmi said...

ஷைலஜா வருகைக்கு நன்றி

• » мσнαη « • said...

அவருடைய வேதனை அடுத்தவருக்கு கேலியும் சந்தோசமும் !!!

வல்லிசிம்ஹன் said...

அடப் பாவமே.:))))

என்னை ஆதரிப்பவர்கள் . .