Google+ Followers

Pages

Saturday, October 22, 2011

திருட்டு 2

சொன்னபடியே மாதவன் காரில் வந்து ரமணனை தன் வீட்டுக்கு கூட்டிப்போனார்.ஆபீசிலிருந்து கொஞ்சம் தள்ளியேதான் அவர் வீடு இருந்தது. வீடு நல்ல விஸ்தாரமாக சுத்தமாக இருந்தது. மாதவனின் மனைவியும் வாசலில் வந்து வாங்கோன்னுஅன்பாக அழைத்தாள்.15-வயதில் ஒரு பெண் குழந்தையும் வந்து ஹாய் அங்கிள் என்றுதன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.மூவர் அடங்கிய சின்ன குடும்பம்தான். ரமணன்
மாதவனிடம் எந்த ஊரு அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்கன்னு சாதாரணமாகப்பேசிவிட்டு ஆமா மாதவன் வீடு நல்ல பெரிசா இருக்கே வாடகை அதிகமிருக்குமே என்றார்.மாதவன் பதில் சொல்ல வாய் திறக்கும் முன்பாகவே நல்லா சொன்னீங்க நாங்க எதுக்குவாடகை வீட்ல இருக்கனும்? இது சொந்தவீடுதான். போனவருஷம்தான் கட்டிமுடிச்சோம்.
எல்லாமே இவரின் சம்பாத்த்யம்தான்.என்று மாதவனின் மனைவி பெருமையாகச்சொன்னாள்.வீட்டிலும் எல்லாவிதமான விலை உயர்ந்த சாமான்களும் இருந்தன.மாதவன் மனைவியும்காதிலும் மூக்கிலும் வைரம் டாலடிக்க செழிப்பாகவே இருந்தாள். சரி வருமானத்தில் மிச்சம்
பிடித்து கட்டும் செட்டுமாக குடித்தனம் செய்து வாங்கி சேர்த்திருப்பாங்க போல இருக்குன்னு ரமணன் மனதில் நினைத்துக்கொண்டார்.அதேசமயம் மாதவனின் மூடும் மாறிவிட்டதையும்மனதில் குறித்துக்கொண்டார்.


மறு நாள் செக்‌ஷன் செக்யூரிட்டி வேலை முடிந்து ஸ்டாஃப் ரூம் வந்து சூடாக ஒருடீ குடித்த மாதவன், நேத்து நம்ம மனைவி பேச்சைக்கேட்டு ரமணன் நம்மைத்தப்பாக நினைத்திருப்பாரோ என்று எண்ணீய வாரே அன்றைய ரிப்போர்ட் எழுத உட்கார்ந்தார்.பேனாவில் இங்க் இல்லை. அந்தவழியாக ப்போன ப்யூன் திரு வேங்கடத்தைக்கூப்பிட்டுஏய்  திருஎன் பேனாவில் இங்க் போட்டுட்டுவா. என்றார். திருவேங்கடமும் ஸ்டோர் ரூம் போயி
பேனாவில் இங்க் நிறப்பிக்கொடுத்தான்.விறு, விறுவென்று ரிப்போர்ட்ஸை எழுதி முடித்தார்மாதவன். எழுதி முடிக்கவும் லஞ்ச் சைரன் ஒலி கேட்க்கவும் சரியாக இருந்தது. லஞ்ச் நேரம்யாரும் இந்தப்பக்கம் வரமாட்டார்கள் . மாதவன் அக்கம் பக்கம் திரும்பி, திரும்பி பார்த்துக்கொண்டே ஸ்டோர் ரூம் நோக்கி அவசரமாகப்போனார்.கதவைசாத்திக்கொண்டார். ஸ்டோர்
ரூமில்தான் பாஸ்பரஸ், மெர்க்குரி, எல்லாம் ஸ்டாக்கில் வைத்திருப்பார்கள். அங்குபோன மாதவன்பேனாவைத்திறந்து இங்கைஎல்லாம் ஜன்னல் வழியே வெளியே கொட்டினார். அந்தப்பென்னில்மெர்க்குரியை நிரப்பிக்கொண்டார். பேனாவை டைட்டாக மூடி சட்டைப்பாக்கெட்டில் சொருகவும்
கதவை திற்ந்துகொண்டு ப்யூன் திருவேங்கடம் அங்கு வரவும் என்னடா இப்ப எதுக்கு இங்க வந்தேசாப்பிடபோலியா போ,போ என்று அவனை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார். திருவேங்கடமோ
எதுக்கு இவரு இப்படி வெடு வெடுன்னுகோவப்படராருன்னு யோசித்தவாரே. ஒன்னுமில்லே சார் ஜன்னல்வழியே இங்கெல்லாம் யாரோ வெளில கொட்டிகிட்டு இருந்தாங்க அதான் பாத்துட்டுப்போலாம்னு
வந்தா இங்க நீங்கதான் இருக்கீங்க என்றான்.


சரி சரி வா போலாம்னு அவனையும் இழுத்துக்கொண்டு ஸ்டோர் ரூமை பூட்டிவிட்டு இருவரும்வெளியே வந்தார்கள்.அங்கு லஞ்சுக்கு வெளியில் போகிரவர்களை ரமணன் செக் பண்ணிக்கொண்டிருந்தார்
நல்ல வேளை மாதவன் நீங்க வந்தீங்க. நான் என் பேனாவை மறந்துட்டேன். உங்க பென் கொடுங்கசெக் பண்ணி அனுப்புரவங்க பேரை ரிஜிஸ்டரில் குறிக்கனுமில்லையா கொடுங்கபென் என்றார்.
ஒரு நிமிஷம் திடுக்கிட்ட மாதவன் ப்யூன் திருவேங்கடத்திடம் திரும்பி ஏய் திரு உன்பேனாவைசாரிடம் கொடு என்பேனாவில் இங்க் இல்லேன்னார் மாதவன். என்னாசாரு இப்பதானே நான் இங்க்போட்டுக்கொடுத்தேன் உங்க பேனால என்றுசொல்லவும் மாதவன் திரு வள வளன்னு பேசாதே என்பென்
லீ க் அடிக்குது அதான் உன்பென் கொடு என்றார். திருவோ சாரு என்கிட்ட பேனால்லாம் கிடையாதுபென்சில் தான் இருக்கு என்றான். ரமணன் என்ன ப்ராப்லம் மாதவன் உங்க பென்னையே கொடுங்கன்னு
என்றார். மிகுந்த தயக்கத்துடன் பயந்தவாரே பேனாவை எடுத்து நீட்டினார் மாதவன். என்ன மாதவன் பேனாலஇங்க் இல்லைன்னீங்க். ஆனா கனமாத்தானே இருக்குன்னு எழுத ஆரம்பித்தார் ஆன எழுதமுடியல்லே
உடனே ரமணன் பேனாவின் நிப், நெக்கைத்திருகி பார்த்தார் உள்ளே பள பளன்னு பாதரசம் மினுக்குது.ரமணனுக்கோ மிகப்பெரிய அதிர்ச்சி, பொறுப்பான பதவில இருக்கும் இவரா இப்படி திருட்டுவேலைல
இறங்கராரு கள்ளனை பக்கத்திலேயே வச்சுண்டு அப்பாவி ஒர்க்கர்ஸை செக் பன்ரோமே என்னமடத்தனம்தில்லிமுல்லு பன்ரதெல்லாம் இதுபோல முதலைகள், ஆனா சந்தேகமோ அப்பாவிகள் மேல் என்று
நினைத்தவாரே மாதவனை ஜி. எம். முன்பு கொண்டு நிறுத்தினார் ரமணன்.ஜி. எம். மாலும் நம்பவேமுடியல்லே. அப்புரம் கடுமையாக எச்சரித்து சஸ்பெண்டும் பண்ணினார். இந்த மெர்க்குரியை கையால் அள்ளவே முடியாதே? நாக்கில் பட்டாலும்கூட்  உடனே ஆள் அவுட்தான் எப்படி இதத்திருடினான் இவன்என்று  ஜி. எம். முக்கு ஒரேகுழப்பம்தான்.வீட்டில் திருவேங்கடம் மனைவியிடம் அன்று ஆபீசில் நடந்ததையெல்லாம் சொல்லி. போனமாசம் வாசு மறந்துபோயி ஆபீசில் போடர ஷூ வீட்டுக்குபோட்டுட்டு போயிட்டான் ஆபீஸ் சொத்தையே
கொள்ளை அடிச்சுட்டான் என்று ரிப்போட் எழுதி அவனை சஸ்பெண்ட்பண்ணிட்டான். அடுத்து சீனுமறந்துபோயி முகம் துடைக்கும் நாப்கினை தோளில் போட்டுண்டு போயிட்டான் அவனையும் சஸ்பெண்ட்
பண்ணினான். இப்பதானே இவனோட வண்டவாளம் தெரியுது சே, சே, மனுஷங்க எப்படில்லாம்பணத்துக்கு ஆலாப்பறக்குராங்க இந்த வரும்படிலதான் சொகுசு பங்களா காரு எல்லாம் வாங்கி இருக்காரு
சாதாரண கவர்மெண்ட் ஆபீசராலே இப்படில்லாம் முடியுமா. .என்று மனது தாளாமல் புலம்பினான்

46 comments:

ஸ்ரீராம். said...

நினைத்த மாதிரியே மாதவன்தானா.... இப்படியும் மனிதர்கள்..

அம்பலத்தார் said...

இப்படியுமா?

RAMVI said...

எனக்கும் மாதவன் மேல்தான் சந்தேகமாக இருந்தது.

//மனுஷங்க எப்படில்லாம்பணத்துக்கு ஆலாப்பறக்குராங்க //

ஆம் நிறைய பேர்கள் இப்படித்தான் இருக்காங்க..

மாய உலகம் said...

இந்த மெர்க்குரியை கையால் அள்ளவே முடியாதே? நாக்கில் பட்டாலும்கூட் உடனே ஆள் அவுட்தான் //

என்ன பாதரசம் நாக்கில பட்டா உடனே ஆள் அவுட்டா.... உடம்பு சரியில்லன்னா thermometer ஐ வாயில் வைக்கிறார்களே.. ஒரு வேளை உடைந்துவிட்டால் அவ்வளவு தானா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

மாதவனின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது.. ஹா ஹா கதை சூப்பர்ம்மா

மகேந்திரன் said...

///எதுக்கு இவரு இப்படி வெடு வெடுன்னுகோவப்படராருன்னு யோசித்தவாரே///

தேவையில்லாததுக்கு கோவப்படுபவர்கள்
நிச்சயம் ஏதோ தவறு செய்திருக்கார் ....

கதையின் போக்கு மிகவும் அருமை அம்மா..

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... இப்படிப் போச்சா கதை... உயர்பதவியில் இருப்பவர்கள் தான் அதிகம் இப்படி இருக்கிறார்கள்...

Madhavan Srinivasagopalan said...

மீ... நோ. நோ.. நா நல்லவன்..

//ஸ்ரீராம். said...

நினைத்த மாதிரியே மாதவன்தானா.... இப்படியும் மனிதர்கள்..//

நீங்களுமா.. ?

M.R said...

ஹா ஹா நான் நினைத்த மாதிரியே அவன் தான் திருடன் .பகிர்வுக்கு நன்றி அம்மா .

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாதரஸம் திருடிய பாக்தாத் திருடன் கதை அருமையே!

அமைதிச்சாரல் said...

கதை ரொம்ப நல்லாருந்தது லஷ்மிம்மா..

நூதனமான திருட்டு!!

இராஜராஜேஸ்வரி said...

தில்லிமுல்லு பன்ரதெல்லாம் இதுபோல முதலைகள், ஆனா சந்தேகமோ அப்பாவிகள் மேல்

இப்படியும் நட்க்குதே!

கவி அழகன் said...

அடப்பாவி

ஸாதிகா said...

கதை சுவாரஸ்யம்

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அம்பலத்தார், வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாய உலகம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதவன் சாரி நீங்க ரொம்ப நல்லவர்தான்.

Lakshmi said...

M.R. வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி நன்றிம்மா.

Lakshmi said...

இராஜராஜேச்வரி நன்றி

Lakshmi said...

கவி அழகன் நன்றி

Lakshmi said...

சாதிகா நன்றி

athira said...

கதை வித்தியாசமாக, நன்றாக இருக்கு.

Ramani said...

அட ..மேல்மட்டத் திருட்டு
மிக அருமையான கதை
சொல்லிச் சென்றவிதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Lakshmi said...

அதிரா நன்றி

Lakshmi said...

ரமணி சார் நன்றி

RAMVI said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள், அம்மா.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தீபாவளி வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல கதை. விறுவிறுப்பாக் கொண்டு போயிட்டீங்க.

ரசிகன் said...

ஹா ஹா, எப்போதுமே பேனா தான் தவறுகளை காட்டிக் கொடுக்கிறது.

Lakshmi said...

ரமா தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Lakshmi said...

வல்லி சிம்ஹன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரசிகன் வருகைக்கு நன்றி

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

அம்பாளடியாள் said...

வணக்கம் அம்மா என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .
மிக்க நன்றி பகிர்வுக்கு ....

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி

Thanai thalaivi said...

அருமையான கதை ! உங்களுக்கு எங்கள் தீபாவளி நமஸ்காரங்கள்.

சீராசை சேதுபாலா said...

சம்பளம் குறைத்து வாங்கினாலும், வகிக்கும் பதவியின் தரம் குறைந்திருந்தாலும் நேர்மையிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்பதை தங்களது உண்மை நிகழ்வு உணர்த்தியது. கல்லிடைக் குறிச்சி அருகில் ஒரு சின்னச்சங்கரன் கோவிலும், இராஜபாளையத்திற்கும் திருநெல்வேலிக்கும் இடையில் ஒரு சங்கரன்கோவிலும் இருக்கின்றது. எந்த ஊர் கோமதி அம்மன் பெயரை தங்கள வலைபூவிற்கு பெயராக வைத்திருக்கின்றீஈர்கள் ? நன்றியுடன்

Lakshmi said...

சீராசை சேதுபாலா முதல் முறையா வரீங்களா? இனி அடிக்கடி வாங்க

சீராசை சேதுபாலா said...

ஆம்! தொடர்ந்து படிப்பேன். குறை ஒன்றுமில்லை என்று துவங்கும் பாடல். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, ஐ.நா.வில் பாடுவதற்காக மூதறிஞர் இராஜாஜி எழுதிய பாடல். அதனைத் தலைப்பாக வைத்துள்ளதே பாராட்டற்குரியது.

Lakshmi said...

சீராசை சேதுபாலா தொடர் வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .