Google+ Followers

Pages

Wednesday, October 12, 2011

தவிப்பு 3

ரெண்டுமாசம் இப்படியே போச்சு. பிறகு பெண்ணுமாப்பிள்ளையும் வந்து அந்தப்பையனை டாக்டரிடம் கூட்டிப்போனார்கள். எல்லா டெஸ்ட்டும் பண்ணிப்பார்த்ததில் ஹெல்த் எல்லாம் சரியாகவே இருந்தது. மெண்டலி கொஞசம் ப்ராப்லம் தெரிந்தது. டாக்டர் அந்த மாப்பிள்ளை பையனிடம் நீங்க ஒரிஸ்ஸாவில் இந்தப்பையனை பாத்துக்கொண்டிருந்தவா கிட்ட விவரம் ஒன்னுமே கேக்கலியான்னார். ஐயோ அதையேன் கேக்குரீங்க அவங்க பேசுர பாஷையே புரியல்லே. அவங்களுக்கோ நான் பேசுவதே புரியல்லே. என்ன கேக்க ?  அப்போ இந்தபையனுக்கு என்ன தான் ஆச்சுன்னு ஒன்னுமேதெரியல்லியான்னார். டாக்டர். அவங்க யாரு இந்த அட்ரெஸ் எப்படிஅவங்களுக்குத்தெரிஞ்சது எப்படி தகவல் அனுப்பினாங்கன்னே இன்னிக்கு வரை தெரியல்லே. ஆண்டவன் கருணைன்னுதான் நினைக்கனும். இந்த 5 வருஷ்மா இந்தப்பையன் எங்க இருந்தான் எப்படி இருந்தான்னு ஒன்னுமே தெரியவே இல்லை. என்று மாப்பிள்ளைப்பையன் டாக்டரிடம் சொல்லவும் அவர் சரி அது தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப்போரீங்க அதைபத்தி எந்த ஆராய்ச்சியும் பண்ண வேண்டாம் அதை அப்படியே விட்டுடலாம்.


அந்தப்பையனாலயும் எதுவும் சொல்ல் முடியல்லே . இப்ப கிடைச்சுட்டானே . நடந்தவை நடந்தவையாக வே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று டாக்டர் சொல்லவும் ஆமா அதுவும் சரிதான்னு இவங்களும் அதுபத்தி அதிகம் அலட்டிக்காம விட்டுட்டாங்க. ஆமா அதுக்குத்தானே உங்க கிட்ட கூட்டிவந்திருக்கோம் என்று சொன்னான்.மாப்பிள்ளைப்பையன்.டாக்டராலயும் எதுவும் சரியா சொல்ல முடியல்லே. மருந்து மாத்திரை எழுதிக்கொடுத்தார் அரைகுறைமனதுடனே வீடு வந்தார்கள்.அந்தப்பையனின் அக்காவும் மாப்பிள்ளையும் அந்தப்பையனிடம் அன்பாக பக்குவமாக பேசினார்கள். மாப்பிள்ளைப்பையன் ஆபீசிலேயே ஒரு வேலையும் போட்டுக்கொடுத்தான். வேலைக்கு போய்வந்தாலாவது அவனிடம் நல்ல மாற்றம் தெரியுதான்னு பாக்கலாமேன்னு. அதுக்கு நல்ல சம்பளமும் கொடுத்தான். அந்தப்பையனும் எந்த தகறாறும் செய்யாமல் வேலைக்கு ஒழுங்கா போயி வந்தான். அவனின் சம்பளம் அந்தக்குடும்பத்துக்கு ரொம்பவே தேவையாக இருந்தது. வாராவாரம் அந்த அக்கா வந்து அவனிடம் மெள்ள் மெள்ள பேச்சுக்கொடுத்து அவனை டிஸ்ட்டர்ப்பண்ணாத விதத்தில் அவனுக்கு என்ன நடந்ததுன்னு பக்குவமா சொன்னா. இந்த 6வருஷம் நீ எங்க போனே என்ன பண்ணினேன்னு உனக்கு ஏதானும் நினைவில் இருக்கான்னு கேட்டா. ஆனா அவனுக்கு எதுவும் நினைவில் கொண்டு வர முடியல்லே. ஒழுங்கா வேலைக்கு போய் அங்கு வேலையும் கற்றுக்கொண்டு வந்தான். அதில் எந்தக்குழப்பமும் இல்லை.இப்படி ஒருவருஷம் ஓடியது.அதற்குள் அந்த ப்பையனின் அக்கா அவனிடம் அவ்ன் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையுமே பக்குவமா சொல்லி அப்பா, அம்மா என்று அவன் கூப்பிடும் வரை  அவனைத்தயார்பண்ணினா. அதேபோல அவனுக்கு கல்யாணம் ஆன விபரமும் சொன்னா. அவனுக்கு ஒரு விஷயம் கூட நினைவில் வரவே இல்லே. அப்புரம் மகளும் மாப்பிள்ளையும் பேசி அந்தப்பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு அப்பா அம்மாவிடம் கேட்டு யோசனை பண்ணினா.


அந்தப்பையனிடமும் கேட்டா. நீங்கல்லாம் இதுவரை எனக்காக நல்லதுதான் செய்திருக்கீங்க. நீங்களாக பார்த்து எது செய்தாலும் சரிதான்னு சொல்லிட்டான். நெட்ல தேடினதில் ஒரு பெண் கிடைத்தாள் அவளுக்கும் கணவன் இல்லை. கல்யாணமாகி ஒரேவருடத்தில் கணவனை பறி கொடுத்திருந்தாள் சின்ன வயதும்கூட. அந்தப்பெண்வீட்டுக்காரர்களிடம் இந்தப்பையனைபற்றிய எல்லா  உண்மைகளையும் சொல்லியே பெண்கேட்டார்கள். அந்தப்பெண்ணும் இவர்கள் ஜாதியோ, பாஷையோ இல்லை. இப்போ அந்த அப்பா வாயே தொறக்கலே.இருவீட்டு சம்மதத்தின் பேரில் பெண்ணுக்கும் பையனுக்கும் விருப்பம்கேட்டு சுருக்கமாக கல்யாணமும் நடந்தது.

 அந்தப்பையனின் சம்பாத்தியத்தில் அவர்கள் நாலு பேரும் வாழ்க்கை நடத்திக்கொண்டு அமைதியாக வாழ்கிறார்கள் மனைவியிடமு அன்பாகவே பழகி வருகிரான் அந்தப்பையன். இதெல்லாம் நடந்து இன்று5, 6 வருடங்கள் ஓடிவிட்டது. அந்தப்பையனின் அப்பா என்னை வெளியில் எங்காவது சந்திக்கும் போதெல்லாம்  ஆண்டி அன்னிக்கு இந்தமாப்பிள்ளைப்பையனை என் பெண் கல்யானமே பண்ணிக்க க்கூடாதுன்னு பிடிவாதமா மறுத்தேன். அதுக்கு இப்போ வெக்கப்படுரேன் ரொம்ப சாரி. இன்னிக்கு நாங்க கௌரவமா தலை நிமிர்ந்து வாழரோம்னா அந்த மாப்பிள்ளையால்தான்.இன்னிக்கு  நாங்க சாப்பிடும் சாப்பாடு அந்த மாப்பிள்ளைப்பையன் போட்ட சாப்பாடுதான்.அவரில்லைனா நாங்க இல்லே அதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்றார். ஆமா என்கிட்ட எதுக்கு ஸாரி,  தேங்க்செல்லாம் சொல்ரீங்கன்னேன். ஏனா?? நீங்க தானே அந்தப்பையனின் அம்மா உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல? என்கிரார்.  ( இது எப்படி இருக்கு?!!!!!!!!!!!!!!!)

52 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

மாய உலகம் said...

அவருக்கு என்ன நடந்துச்சுன்னு இன்னும் சொல்லவே இல்லையே...!

//இது எப்படி இருக்கு?!!!!!!!!!//

சூப்பர்...........

அம்பலத்தார் said...

நல்ல கதை சந்தோசமான நிறைவு மனதிற்கு இதமாக உள்ளது.

விக்கியுலகம் said...

அம்மா கடைசியில் வைத்த செக்...சட்டென்று என்னமோ பண்ணியது என்னை...பகிர்வுக்கு நன்றி!

RAMVI said...

//ஏனா?? நீங்க தானே அந்தப்பையனின் அம்மா உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல? என்கிரார். ( இது எப்படி இருக்கு?!!!!!!!!!!!!!!!)//

அம்மா. எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியவில்லை.எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமா சொல்லியிருக்கீங்க? உங்க பெருந்தன்மை யாருக்கு வரும்?
வாழ்த்துக்கள் உங்க மகனுக்கு.

Maya said...

amma kathai super.
unmaiya?

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல விறுவிறுப்பு. தொடருங்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

( இது எப்படி இருக்கு?!!!!!!!!!!!!!!!)

சூப்பர்.,

கோவை2தில்லி said...

மூன்று பகுதிகளையும் இப்போ தான் படித்தேன். உங்க மகனுக்கு நல்ல மனது.

அந்த பையனுக்கு என்ன நடந்ததுன்னு தெரியலியா???

போத்தி said...

வாழ்த்துக்கள் உங்க மகனுக்கும், உங்களுக்கும்.

M.R said...

அட இன்னிக்கும் முடியலையே !

ஆர்வம் அதிகரிக்கிறது

அவனுக்கு சரியாச்சா ,பழைய நினைவு வந்துச்சா ,தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன் அம்மா

ரெவெரி said...

இது நல்லாத்தான் இருக்கு...

Madhavan Srinivasagopalan said...

ஏற்கனவே உங்கள் மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது.. உங்களுக்கு ஒரு சல்யூட்.

ஸாதிகா said...

//நீங்க தானே அந்தப்பையனின் அம்மா உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல? என்கிரார். ( இது எப்படி இருக்கு?!!!!!!!!!!!!!!!)//சூப்பர்

athira said...

லக்ஸ்மி அக்கா கலக்கிட்டீங்க போங்க. ஆரம்பம் எனக்கு சந்தேகமாகவே இருந்துது.... உங்கட குடும்பக் கதையோ என....:).

நடந்தவை யாவும் நடந்தவைதானே... அதை விடுத்து, இப்போ அவர்கள் குடும்பம் சந்தோசமாகத்தானே இருக்கிறார்கள்... அது போதுமே.

மகேந்திரன் said...

விறுவிறுப்பா இருக்கு
நீங்கள் சொல்லும் விதம் அழகா இருக்கும்மா

தொடருங்கள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனது கொண்ட உங்கள் மகனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்...

Lakshmi said...

நண்டு நொரண்டு, வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாய உலகம் அவருக்கு இன்னமும் பழசெல்லாம் நினைவுக்கே வரலே.

Lakshmi said...

அம்பலத்தார் எல்லாருமே இதைக்கதைன்னே நினைச்சீங்களா உண்மைங்க.

Lakshmi said...

விக்கி உலகம் வருகைக்கு நன்றீ

Lakshmi said...

ரமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

மாயா இது உண்மையில் நடந்தததான். ஆமா நீங்க பதிவு எதுவும் எழுதலியா?

Lakshmi said...

கோபால்சார் இந்தப்பகுதில இந்தப்பதிவு முடிஞ்சு போச்சே.

Lakshmi said...

கருன் நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி என்னாச்சுன்னு இன்னிக்குவரையும் எதுமே தெரியல்லே.

Lakshmi said...

போத்தி, தொடர்ந்த வருகைக்கு நன்றி

Lakshmi said...

M. R. அவனுக்கு இன்னமும் பழசெல்லாம் நினைவுல வரல்லே. இனி இந்தப்பதிவு தொடராதே.

Lakshmi said...

ரெவரி நன்றி

Lakshmi said...

மாதவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஸாதிகா நன்றி

Lakshmi said...

அதிரா ஆமா இப்போ அவங்க எல்லாரும் எந்த பிரச்சினையும் இல்லாமதான் இருக்காங்க அதுவே போதும்தானே.

Lakshmi said...

மகேந்திரன் இனி இது தொடராது,

Lakshmi said...

வெங்கட் நன்றி

radhakrishnan said...

என்னம்மா.,நீங்கள்எழுத்தாளர்
சுஜாதாவிடம் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள்
போலும்.கடைசி வரியில் அழகாக
எதிர்பாராத வகையில் பன்ச் வைக்கிறீர்களே.பதிவு மிக நன்றாக இருக்கிறது.
நீங்கள் நிறைய கதைகள்,நாவல்கள்
படிப்பீர்களா.பிடித்த எழுத்தாளதகள்
ப ற்றி கூறுவீர்களா.தி.ஜானகிராமன்
படித்திருக்கிறீர்களா?

Lakshmi said...

ராதாகிருஷ்னன், நான் பள்ளி சென்று படித்ததே இல்லே நம்புவது கஷ்ட்டம்தான் எல்லாமே அனுபவபாடம் தான். குழந்தைகள் ச்கூல் போக ஆரம்பித்தபிறகுதான் அ ஆ, இ ஈ
ஏ, பி, சி டி எல்லாமே கத்துகிட்டேன். 50 வருடமா வடனாடுகளில் வசிப்பதால ஹிந்தி மராட்டி இங்க்லீஷ் தெரின்சுகிட்ட அளவுக்கு தமிழ் வரல்லே. இப்பகூட நிறைய மிஸ்டேக் ஆகும். தி ஜானகிராமன் நாவல் மரப்பசு அம்மா வந்தாள் எல்லாமே படிச்சிருக்கேன்.

அமைதிச்சாரல் said...

ஆஹா.. லஷ்மிம்மா,.. வெச்சீங்களே ஒரு ட்விஸ்ட். சூப்பர் போங்க.. உங்க மகன் நிஜமாவே பாராட்டப் பட வேண்டியவர்தான்..

பழசு பழசாவே இருக்கட்டுமே.. ஞாபகத்துக்கு வந்து இன்னும் கஷ்டப்பட வேணாமே.. ஆனாலும், அந்தப்பையனின் நிலையும் பெத்தவங்களின் நிலையும் நினைக்கறச்சே கஷ்டமாருக்கு.

முதல் பகுதியை அன்னிக்கு வாசிச்சுட்டு போயிட்டேன். மீதி ரெண்டு பகுதிகளையும் இன்னிக்கு சேர்த்து வெச்சு வாசிச்சிட்டேன் :-))

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

KANA VARO said...

அடடே மூன்று பாகத்தையும் படிக்க கொஞ்ச டைம் வேணுமே!

Lakshmi said...

கானா வரொ மெதுவா படிங்க என்ன அவசரம்.

இராஜராஜேஸ்வரி said...

நீங்க தானே அந்தப்பையனின் அம்மா உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல? என்கிரார். ( இது எப்படி இருக்கு?!!!!!!!!!!!!!!!)/

பெற்ற தாயை வணங்குகிறேன்.

அஸ்மா said...

இப்பதான் லஷ்மிம்மா 3 பாகத்தையும் ஒண்ணா உட்கார்ந்து படித்தேன்.

// என்கிட்ட எதுக்கு ஸாரி, தேங்க்செல்லாம் சொல்ரீங்கன்னேன். ஏனா?? நீங்க தானே அந்தப்பையனின் அம்மா உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல? என்கிரார்//

இதைப் பார்த்து ரொம்ப சந்தோஷம் லஷ்மிம்மா! நல்ல மனம் கொண்ட உங்க மகனுக்கும், அவங்களை அதுபோன்று வளர்த்தெடுத்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

//( இது எப்படி இருக்கு?!!!!!!!!!!!!!!!)//

ரொம்ப அருமையா இருக்கு! :)

Lakshmi said...

இராஜேஸ்வரி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

அஸ்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

ஸ்ரீராம். said...

கடைசியில் நீங்கள் வைத்த ட்விஸ்ட் ஒரு இன்ப அதிர்ச்சி. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்....தாயாக நீங்கள். பாராட்டுகள். சம்பவத்தின் நாயகனுக்கு சீக்கிரம் பழைய நினைவுகள் திரும்ப எங்கள் பிரார்த்தனை. அபபடி திரும்பும் பட்சத்தில் இப்போதைய மனைவியை மறந்து விட்டால் என்ன செய்வது? திருமண வீடியோ இருக்கும்தான். இருந்தாலும் இப்போதே சிலபல வீடியோக்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் தரும்.

Lakshmi said...

ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அந்தப்பையன் இப்படியே இருப்பதே நல்லதுதான்.

மாதேவி said...

ஆஹா....மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

Lakshmi said...

மாதேவி நன்றி

Mahi said...

உண்மைக்கதைன்னு தெரியும், உங்க வீட்டுக்கதையும்தான் என்று கடைசிவரியில்தான் தெரிந்தது! :)

நல்ல மனசும்மா உங்களுக்கும், உங்க மகனுக்கும்!

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Ramani said...

தங்கள் எழுத்தில் உள்ள முதிர்சிக்குக் காரணமே
இப்படி பல அதிர்சிகளத் தாங்கி
பக்குவப் பட்டதாகத் தான் என் நினைக்கிறேன்
இல்லையெனில் இவ்வளவு பெரிய விஷயத்தை
இப்படி சாதாரணமாகச் சொல்லிச் செல்ல முடியுமா
அதுவும் அந்தக் கடைசி சொற்றொடர் கொஞ்சம்
கண் கலங்கச் செய்துவிட்டது
பொறுமைக்கு என்றும் ஜெயமுண்டு என்பதைவிட
நல்ல மனதிற்கு என்றும் ஜெயமுண்டு எனச் சொல்லலாம்
வாழ்க வளமுடன் த.ம 9

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .