Google+ Followers

Pages

Friday, October 7, 2011

தவிப்பு.

கொஞ்சம் வருஷம் முன்பு எனக்குத்தெரிந்தவர் வீட்டி நடந்த சம்பவம் இது.
 கணவன், மனைவி வயதுக்குவந்த பெண் ஒன்று, ஆண் ஒன்று என்று சின்னக்குடும்பம் அது. பெண்ணும் பையனும் ஒரு தனியார்  நிறுவனத்தில் வேலை பார்த்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் அவர்கள் குடும்பவாழ்க்கை நடந்து வந்தது. பையன் 21, வயது, பெண் 23 வயது.குடும்பத்தலைவர் வெலைக்கு ஏதும் செல்வதில்லை.ஆரம்பத்தில் மஸ்கட்டில் நல்ல வேலையில் இருந்து நன்கு சம்பாதித்தவர்தான். அவரின் போதாத வேளை அந்தவேலை போய்விட்டது. 4-பேர் இருக்கும் சிறு குடும்பத்துக்கு பையன், பெண்ணின் சம்பளம் போதுமானதாக இருக்கவே அவர் வேலைக்கு போக எந்தமுயற்சியும் எடுக்கவே இல்லை. வாடகை வீடுதான். ஒண்டிக்குடுத்தனம் தான். அமைதியாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் பெண்ணால் சிறு குழப்பம். வேறு பாஷைப்பையனை லவ் பண்ணி அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டா. அவர்களிடமோ பெண்கல்யாணத்திற்கென்று ஒருபைசா கூட சேமிப்பு கிடையாது அந்தப்பெண்ணின் அப்பா இதுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. அதெல்லாம் சரிப்படாதுன்னு கறாறாக சொன்னார். நாம வேர ஜாதி, வேர பாஷை அதெல்லாம் சரிவராது.இந்தப்பையைனைக்கட்டிக்க நான் சம்மதிக்கவே மாட்டேன்னு ரொம்பவே பிடிவாதமாக மறுத்துவந்தார்.பிறகு அந்தபையனே அவரைப்பார்த்துப்பேசி தன் பெற்றோர்களையும் கூட்டிண்டுபோய் அவர்களிடம் பேசினான். நீங்க உங்க பெண்ணுக்காக எதுவுமே செலவுபண்ண வேண்டாம். எல்லா செலவும் நாங்களே செய்துக்கரோம். பெண்ணை மட்டும் எங்க வீட்டுக்கு அனுப்பினா போதும்னு சொல்லி அவரை சம்மதிக்க வச்சுட்டா. பிள்ளை வீட்டுக்காராளே தாலி முதக்கொண்டு கல்யாணச்செலவு பூராவும் ஏத்துண்டு அவங்க குடும்ப வழக்கப்படி பெரிய ஹாலில் க்ராண்டாக கல்யாணமும் நடத்தினார்கள். பெண்ண்வீட்டுக்கராளுக்கு ஒரு பைசா கூட செலவு பண்ணாமல் பெண்கல்யாணம் நடந்து முடிந்ததை நம்பவே முடியல்லே.  அந்தப்பெற்றோரால்.அந்த்ப்பையனும் அவங்க வீட்டுக்காரர்களும் ரொம்பவே நல்ல மனுஷாளா இருக்காளேன்னு சொல்லிண்டே இருந்தா.

 அந்தப்பையனும் நல்ல பொறுப்பான உத்யோகத்தில் கை நிறைய சம்பாத்தித்து மனைவி குழந்தைகளுக்கு வசதியான வாழ்க்கை கொடுத்திருக்கான்.பெண் வாழ்க்கை நல்லபடியா அமைந்ததில் அதுபோல பையனுக்கும் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டார்கள் . அந்தப்பிள்ளைக்கோ சொற்ப வருமானம் தான் வசதின்னு சொல்லும்படி எதுவுமில்லை அன்றாடம் செலவுகளுக்கு போதுமான வரும்படிதான். அப்படியும் ஒரு தூரத்து சொந்தக்காரப்பொண்ணு பார்த்து அவனுக்கு கல்யானம் செய்து வைத்தார்கள்.அந்தப்பெண்வீட்டுக்காரா  ந்ல்ல வசதி உள்ளவங்க. பெண்ணுக்கு சீர் செனத்தின்னு நிறைய செய்தா. ஃப்ரிட்ஜ், வாஷிங்க் மிஷின், கேஸ் அடுப்பு டி. வி. சோபா செட் என்று தாராளமாகச்செலவு செய்திருந்தார்கள். வவர்கள் கொடுத்த சாமான்களை வைக்கவே இவர்கள் வீட்டில் இடம் போரலை பையனுக்கு நிலை யான வேலைகூட இல்லாம இருந்தும் அவஙக் பெண் நல்லா இருக்கனும்னு அவங்க சீர் எல்லாம் நிறையவே ச்ய்தாங்க. இதுக்கு முழு முயற்சி செய்ததே அந்த மாப்பிள்ளைப்பையந்தான்.

 2 மாதம் அந்தப்பெண் புருஷன் வீட்டில் சந்தோஷமாகவே இருந்தாள். அவள் தங்கைக்கு கல்யானம் என்று ஒருமாதம் முன்பே பிறந்தவீடு சென்றாள். அப்போது இந்தப்பையனின் ஃப்ரெண்டுக்கு வேர ஊரில் கல்யாணம் என்று அந்தப்பையனும் 4- நாளுக்கு ஆபீசில் லீவு சொல்லிட்டு கிளம்பி போனான். 4 நாளில் வரேன்னு சொல்லி போனவன் வரவே இல்லை. அப்போல்லாம் செல் போன் வசதி வந்திருக்கவில்லை. எங்க போக யாரைக்கேட்கன்னு அந்த அப்பா அம்மாவுக்கு புரியல்லே. ஆபீசிலிருந்து ஏன் வேலைக்கு வல்லே ஒருமாசம் வல்லைனா வேலைவிட்டு எடுத்துடுவோம்னுவேர சொல்லிட்டுப்போனா  எங்க கல்யாணம் எங்கபோனான்னு அந்தப்பையனும் சரியா விவரம் சொல்லிட்டுப்போகலை. ஒருமாசம் ஆச்சு 6மாசம் ஆச்சு ஒரு வருஷம் ஆச்சு போனவன் போனவந்தான். என்ன ஆனான்னே ஒன்னுமே தெரியல்லை. அந்தவீட்டு மருமகப்பொண்ணு திரும்பிவந்து அவனை எங்கேன்னு கேக்கரா. இவர்களால பதில் சொல்லமுடியல்லே2, 3, 4 என்று வருஷம் தான் ஓடியது. போனவன் என்ன ஆனான்னு எந்த தகவலுமே தெரியல்லே. அந்தமறுமகளின் பெற்றோர் வந்து அவன் வரப்போ வரட்டும் அதுவரை எங்க பொண்ணு எங்கவீட்லயே இருக்கட்டுனு பொண்ணையும் அவளுக்காககொடுத்த சீர் சாமான்களையும் திரும்ப கொண்டு போனார்கள்.

 இந்தவீட்டில் பெற்றவர்களுக்கோ பிள்ளையைக்காணலையேன்னு ஒருபுறம் துக்கம் மறுமகளின் பெற்றோரும் இப்படி பண்ணிட்டாளேன்னு வருத்தம் என்று ரொம்பவே நொந்து போனார்கள். அவர்களின் மாப்பிள்ளை டி.வி, விளம்பரம், நியூஸ்பேப்பரி விளம்பரம் ரயிவேஸ்டேஷன் பஸ்டேண்ட் எல்லா இடங்களிலும் அந்தப்பையனின் போட்டோ போட்டு விளம்பரம் பண்ண ஏற்பாடு செய்தான். இந்தப்பையனைகண்டால் தகவல் கொடுக்கும் படியும் சொன்னான் தெரிந்தஎல்லாரிடமும் சொல்லி அந்தப்பையனைத்தேட எல்லா முயற்சிகளும் மேற்கொண்டான்.என்ன செய்தும் 5-வருடங்களாக அந்தப்பையனைபற்றி எந்த தகவலுமே தெரியல்லே.இருக்கானா இல்லையான்னு கூட தெரியாம அந்த பெத்தவங்க பட்டபாடு கொடுமையிலும் கொடுமை. அந்த பெற்றவர்களின் மாசாந்திர செலவுகளுக்கும் அந்த மாப்பிள்ளைப்பையனே பண உதவி செய்து வந்தான். அந்தமறுமகப்பெண்வீட்டிலோ அந்தப்பையன் இனிமேலயும் திரும்பி வருவான்னு எங்களுக்கு நம்பிக்கை இல்லே. எங்க பெண்ணுக்கு வேர கல்யானம் பண்ணப்போரோம்னு சொல்ரா. அவனைக்காணாம டைவேர்ஸ் வாங்காம வேர கல்யாணம் எப்படி கட்டமுடியும்? 6- வது வருஷம் அந்தப்பையனின் பெற்றோர் அட்ரசிற்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. உங்கமகன் எங்க கூடத்தான் இருக்கான் வந்து கூட்டிப்போங்கன்னு அதில் இருந்தது. ஒரிஸ்ஸாவில் எங்கியோ ஒரு மூலையில் உள்ள அட்ரஸ் அதில் கொடுத்திருந்தது..

52 comments:

விக்கியுலகம் said...

இப்படியும் நடக்குதுங்களா அம்மா...பகிர்வுக்கு நன்றி!

ஸாதிகா said...

ரொனம்ப சுவாரஸ்யமாக இருந்தது லக்ஷ்மியம்மா.சீக்க்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள்.

தமிழ்வாசி - Prakash said...

6- வது வருஷம் அந்தப்பையனின் பெற்றோர் அட்ரசிற்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. உங்கமகன் எங்க கூடத்தான் இருக்கான் வந்து கூட்டிப்போங்கன்னு அதில் இருந்தது. //

அந்த பையன் வந்து சேர்ந்தாரா?

இராஜராஜேஸ்வரி said...

உண்மைச்சமபவம் கலங்கத்தான் வைக்கிறது.

ஸ்ரீராம். said...

இந்த இடத்துல நிறுத்திட்டீங்களே....என்ன ஆச்சாம்? சஸ்பென்சா இருக்கு.

கோகுல் said...

மகனாக வந்த மாப்பிள்ளை!யாருக்கு கொடுத்து வைக்கும்?

சஸ்பென்ஸ்'ஆக முடித்து விட்டீர்கள்?அப்பறம் என்ன ஆச்சு?

அம்பாளடியாள் said...

மிக சுவாரசியமான தொடர்கதைகள் இது உங்களுக்குக் கைவந்த
கலை பெருமைப்படுகின்றேன் வாழ்த்துக்கள் அம்மா தொடர்
கதை தொடர .இன்று என் தளத்தில் ஒரு பக்திப் பாடல் உள்ளது .
அத்துடன் உங்கள் ஆசிபெற ஒரு யீவன் காத்திருக்கின்றது .முடிந்தால்
வாருங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ................

RAMVI said...

அந்த மாதிரி மாப்பிள்ளை எல்லோருக்கும் கிடைக்க மாட்டார்கள் அம்மா.அந்த தம்பதி புண்ணியம் செய்திருக்கிறார்கள்.
அந்த பையன் திரும்பி வந்தானா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் .

அம்பலத்தார் said...

சுவாரசியமாக சொல்லிட்டுவந்து இப்படித் திடீரென நிறுத்திட்டிங்களே சீக்கிரம் மிகுதியையும் எழுதுங்கோ

Powder Star - Dr. ஐடியாமணி said...

மிகவும் அருமையான கதைகள் அம்மா! வாழ்க்கைல எப்ப, எது நடக்கும்னே சொல்லமுடியுறதில்ல!

athira said...

நிறைய சுவாரஸ்யமான கதைகளை நேரில் சொல்வதுபோல சொல்லித்தாறீங்க.

HVL said...

பிறகு என்ன ஆச்சு? அந்த பையனை அழைச்சுட்டு வந்தாங்களா?

அமுதா கிருஷ்ணா said...

சீக்கிரம் அடுத்த பதிவினை போடுங்கள்.சஸ்பென்ஸ் தாங்கலை.என்னவெல்லாம் நடக்குது இந்த உலகத்திலே..

ரெவெரி said...

சுவாரஸ்யமான உண்மைச்சமபவம் ... அந்த பையன் திரும்பி வந்தானா?

வெங்கட் நாகராஜ் said...

உண்மைச் சம்பவம்... அடுத்து என்ன நடந்தது....

வை.கோபாலகிருஷ்ணன் said...

உண்மை சம்பவங்கள் இதுபோலத்தான் படிக்கவும் கேட்கவும் பிறருக்கு மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். பாவம் பாதிக்கப்பட்டு அனுபவிக்கும் குடும்பத்தாருக்குத் தான் அதன் வலி தெரியும். தொடருங்கள்.

Lakshmi said...

விக்கிஉலகம் இப்படில்லாம்கூட நடக்குதுங்க.

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

பிரகாஷ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் ம்ம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோகுல் வெயிட்& ஸீ.

Lakshmi said...

அம்பாளடியாள் இது உண்மையில் என் கண்ணுக்கெதிராக நடந்த உண்மைம்மா.

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

நண்டு நொரண்டு ம்ம்ம்ம்ம் நன்றி.

Lakshmi said...

அம்பலத்தார் வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

மணி இது கதையல்ல நிஜம்.

Lakshmi said...

அதிரா இது நிஜம்மா நடந்தவிஷயம்மா.

Lakshmi said...

அமுதா வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

H.V.L. ரெண்டு நாள் பொருங்க.

Lakshmi said...

வெங்கட் கொஞ்சம் பொறுமை.

Lakshmi said...

ஆமா கோபால் சார் நீங்க சொல்வது உண்மைதான்.

Ramani said...

பையன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது என
சந்தோஷமாகப் பார்க்க அதற்கு மேல்
ஒன்றும் இல்லை .
தொடரும் என்கிற
வார்த்தையும் இல்லையா
ஆர்வம் கூடிவிட்டது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

radhakrishnan said...

என்னம்மா,டி.வி சீரியல் போல சஸ்பென்ஸ்வைக்கிறீர்களே.கதைப்பதில்
நல்ல அனுபவம்பெற்றுவிட்டீல்கள்போலும்.
எல்லோரையும் பதர வைக்கிறீர்களே.நாளைக்காவதுஅடுத்த
பதிவைக்கொடுப்பீர்களா?

Madhavan Srinivasagopalan said...

// அவனைக்காணாம டைவேர்ஸ் வாங்காம வேர கல்யாணம் எப்படி கட்டமுடியும்? //

குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல ஒருவர் கானவில்லைஎன்றால், அதனையே காரணமாக வைத்து, டைவேர்ஸ் கிடைக்கக் கூடுமென்பது எனது புரிதல். சட்ட வல்லுனர்களை அணுகி இருக்கலாமே..?

மாய உலகம் said...

தவிப்பு என்ற தலைப்பை போட்டுவிட்டு அடுத்த பதிவுக்காக தவிக்க வைத்துவிட்டீர்கள்... அந்த பையனைப்பற்றி திடிரென்று சஸ்பென்ஸ் கூடி விட்டது... க்ரைம் லெவலுக்கு இருக்கிறது...

Lakshmi said...

மாதவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

மாய உலகம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ரமணிசார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராதாகிருஷ்னன், வருகைக்கு நன்றி

போத்தி said...

எனது மனமும் தவிக்கிறது. இந்த நிகழ்வு சந்தோஷமாக முடிய வாழ்த்துக்கள்.

Lakshmi said...

போத்தி வருகைக்கு நன்றி

M.R said...

என்னம்மா அடுத்து என்ன நடந்ததுன்னு தெரியலையே ,தொடரும்னு கூட போடலியே !

அடுத்த பாகம் இருந்தால் சீக்கிரம் போடுங்க அம்மா ,தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

M.R said...

தமிழ் மணம் 11

Lakshmi said...

M.R. வருகைக்கு நன்றி. நாளை தொடரும்.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi U have a beautiful blog here.Luv to join U reading ur interesting Tamil Posts.Nalla Blog seithurikeenga.Following U.

Lakshmi said...

மை கிச்சன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா கொஞ்சம் இடம் விட்டு எழுதுங்க்கா , அப்படி எழுதினால் இன்னும் நல்ல இருக்கும்.

மாதேவி said...

மிகுதி அடுத்தபகுதியைப் படிக்கின்றேன்.

Lakshmi said...

மாதேவி வர்கைகு நன்றி

Ramani said...

உண்மையில் நீங்கள் சொல்வது போல டி.வி சீரியல்களில் தான்
இப்படி வரும் .நிஜமாக சந்திக்கையில் பயமாகத்தான் இருக்கு
அவனின் அப்பா அம்மா எத்தனைவேதனைப் பட்டிருப்பார்கள் என
எண்ணிப் பார்க்கவே நடுக்கமாகத்தான் உள்ளது

என்னை ஆதரிப்பவர்கள் . .